Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒளி சிந்தும் இரவு 15.2

   மாதவன் வீட்டின் முறைப்படி, முல்லை அன்பரசுக்கும், அன்பரசு முல்லைக்கும் சந்தனம் பூசிவிட வேண்டும் என்பதால், “அன்பு கையில சந்தனம் போட்டு விட்டு, குங்குமம் வச்சி விடு முல்லை” என்று சுகந்தி விளக்க, அதிர்ந்து விழித்தாள் முல்லை.    “வேற வழியே இல்ல, கொஞ்சமாவது போட்டுவிட்டுத்தான் ஆகனும்” என்று சுகந்தி சந்தன கின்னத்தை நீட்ட, கின்னத்தையும் அன்பரசு கையையும் மாறி மாறி பார்த்தாள் முல்லை.    “முல்லைதான் சங்கட படுதில்ல? கையை நீட்டேன்டா” என்று சத்யன் அதட்டல் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 15.1

அத்தியாயம் 15    அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, தன்னை சுத்தம் செய்து மேலே ஜிம்மிற்கு சென்றிருந்தான் அன்பரசு. ஒரு மணி நேரம்வரை உடற்பயிற்சி செய்தவனுக்கு, தன்னோடு திருமணம் பிடிக்குமா? இல்லை நேற்று போல் இன்றும் கோவிலுக்கு சென்று அழுவாளா? என்ற கேள்வி எழ, தாமதிக்காமல் வீட்டினுள் வந்து சாவியை எடுத்து பைக்கை கிளப்பினான் கோவிலுக்கு.    கோவிலுக்கு வெளியே அவளின் டியோ இருக்கிறதா என்று ஆராய்ந்தான். அங்கே இரண்டு டியோ இருக்க, வண்டி எண் நியாபகம் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 14..2

   “அவங்க பொண்ணுக்கு விருப்பமா இல்லையானு தெரியும் முன்ன எதுக்குப்பா நாளைக்கே வரேனு சொன்னிங்க?” என்றான் அன்பரசு.   “மனசுலயும் உடம்புலயும் தெம்பில்லைனு வெளிப்படையா சொன்ன பின்ன எப்படி சும்மா இருக்கிறது அன்பு? அதோட நீயும் கிளம்பினா வர ஒரு மாசத்துக்கு மேல ஆகும்ன்ற. ஒரு மாசம் ஆகுதோ அதுக்கு மேல ஆகுதோ.    நிச்சயம் செய்திட்டா அவருக்கு மட்டுமில்ல எனக்கும் நிம்மதியா இருக்கும். நீ இல்லாத நேரம் அவங்க வீட்டுல பிரச்சனைன்னா உரிமையா துணை நிற்கலாம்” […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 14.1

அத்தியாயம்  14    இரண்டு நாளில் இத்தனை வருட மனபாரம் தீரும் என்று நினைத்தே பார்க்கவில்லை மாதவன். சுகந்தி சத்யன் திருமணம் முடிந்ததோடு அன்பரசும் திருமணத்திற்கு சம்மதிக்கவே, மனதின் சந்தோசம் முகத்தில் பிரதிபலிக்க தந்தை அத்தனை அழகாய் தெரிந்தார் அன்பரசு கண்களுக்கு.     “அன்பு, அத்தைக்கு போன் செய்து நாம அங்க போகனுமா? இல்ல அவங்க இங்க வராங்களா கேளு” என்றார்.     “எதுக்குப்பா அலைச்சல்? ஈவ்னிங் அவங்களே வந்துடுவாங்கதானே?”        “வந்துடுவாங்கதான்… அவங்க வரும்வரை முல்லை விசயத்தை […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 13.2

இத்தனை அக்கறை கொள்பவன், தன் மகளை மணக்க சம்மதித்திருந்தால் என்ன என்ற ஆற்றாமை வர, “உங்க அக்கறைக்கு நன்றிங்க தம்பி. ஆனா இனி உதவி செய்யனு வராதிங்க, உங்களை வச்சு என் நாத்தனாரே அன்னைக்கு தப்பா பேசினாங்க. இப்படி அடிக்கடி வந்தா மத்தவங்களும் பேச ஆரம்பிச்சிடுவாங்க. என் மகளும் நாங்களும் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கோம்” என்றார் சோர்வாக.    ரங்கசாமி வெளியே வர, “வணக்கம்ங்க” என்று கை கூப்பினார் மாதவன்.    சற்று முன் உள்ளே […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 13.1

அத்தியாயம் 13    கண்மூடி அமர்ந்திருந்த முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கி கொண்டிருக்க, தாள முடியாமல் அருகே அமர்ந்தவன் “என்னாச்சுமா?” என்றான் கனிவாக.     வெகு அருகிலிருந்து கேட்கும் குரலில் திடுக்கிட்டு விழித்தவள், அன்பரசை கண்டு பிரம்மையோ என மேலும் மலங்க விழித்தாள். “என்னாச்சு? தனியா உக்கார்ந்து அழற அளவுக்கு என்ன பிரச்சனை?” என்றான் மீண்டும்.    முல்லை எழ முற்பட, “உக்காரு” என அதட்டியவன், “அந்த கஜேந்திரன் ஏது பிரச்சனை செய்தானா? இல்ல அன்னைக்கு உன் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 12.2

 நிதீஷ் “நான் எதுக்கு மாமா இவ கல்யாணத்தை கெடுக்கப்போறேன்? நமக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு. அதை ஏன் மாத்துறிங்கனுதான் கேட்டேன். அதோட முல்லையாலையும் அவங்க வீட்டுல ஒரு வாய் சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியாது. இப்படி குடும்பத்துல கட்டிக்கொடுத்தா சம்மந்தி வீடுனு உங்களால ஒரு டம்ளர் தண்ணி குடிக்க முடியுமா?” என்றான் நல்லவனாக.     நிதீஷ் பேசியவை நல்ல எண்ணத்தில் இல்லை எனப்புரிந்த போதும், “எதுக்குப்பா கவலைப்படுறிங்க? அந்த பையனுக்கு என்னை பிடிச்சிருக்கு. ஆனா அவங்கம்மா […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 12.1

அத்தியாயம் 12     சுகந்தி அமைதியாய் அமர்ந்திருக்கவே, “சுகந்திம்மா, உன் கையால பரிமாறுடா” என்றார் மாதவன்.    மாமன் பேச்சை தட்ட முடியாமல் சுகந்தி எழுந்து வர, பரிமாறிய பின்னே தன்னருகே அமர்த்திக்கொண்டவர், “கல்பனா சுகந்திக்கும் வை, என்னோடவே சாப்பிடட்டும், இல்லைனா இந்த பசங்க பிள்ளையை சாப்பிட விடாம வம்பு பண்ணுவானுங்க” என்றார்.     “நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன் மாமா” என சுகந்தி சன்னக்குரலில் சொல்ல, கடந்த ஏழு வருடங்களாகவே திருமணப் பேச்செடுத்தாலே சாப்பிடாமல் தர்கம் செய்வாள் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 11.2

   “நீ என்னடா இப்படி பேக் அடிக்கிற? சுகந்தியைப் பத்தி தெரியாதா? இந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டா ஜென்மத்துக்கும் சம்மதிக்க வைக்கவே முடியாது” என்றான் அன்பரசு.       “அழறாடா. இதுக்கு மேல எப்படி கேட்குறது?” என சத்யன் வருந்த,     “சின்ன குழந்தைகள் எதை கொடுத்தாலும் குடிக்கும். ஆனா கொடுக்குறது மருந்து தெரிஞ்சுடுச்சுனா அம்மாவே கொடுத்தாலும் குடிக்காம அடம் பண்ணும். குடிச்சாதான் உடம்பு சரியாகும்னு குழந்தைகிட்ட லெஸன் எடுத்திட்டிருக்க முடியாது. எடுத்தாலும் அதுக்கு புரியாது. வற்புறுத்தி குடிக்க வச்சுத்தான் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 11.1

அத்தியாயம் 11    காலை ஏழு மணிபோல் தனதறையில் குளித்து வெளியே வந்தவர், பேத்தியிடம் பேசியிருந்து எட்டு மணிக்கு பள்ளிக்கு அனுப்பி, இன்ஸ்டியூட்டிற்கு கிளம்புவதாய் கல்பனாவிடம் சொல்ல, “ஏண்ணா இப்படி பண்ற? பசங்ககிட்ட பேசலாம்ல?” என்றார் ஆதங்கமாக.     “இரண்டு நாள் பேசி என்னாகப்போகுது கல்பனா? ஒரு வாரமோ, பத்து நாளோ இருப்பானுங்க, அதுக்கப்புறம் அவனவன் இஷ்டத்துக்கு கிளம்பப்போறானுங்க. இனி போன்ல கூட தொல்லை பண்ணமாட்டேன்” என்றார் கோபமாக.     “நான் செய்தது தப்புதான்ப்பா, ஆனாலும் நான் தவறான […]

Readmore