Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chinna Mookuthi Poo

சின்ன மூக்குத்தி பூ – 13 (1)

பூ -13 ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. இதற்கிடையில் இருமுறை ஊட்டிக்கு வந்துவிட்டு சென்றிருந்தாள் அபர்னிதா. வந்தவளிடம் சுமூகமாக தான் பேசி அனுப்பினாள் வாசமல்லி. இதோ மூன்றாம் முறை வரவு. இந்த தடவை சித்ராவும் கிளம்பி வரவிருந்தார் அபி வந்திருப்பதை அறிந்து. திடீரென யாரிடமும் சொல்லாமல் ஆதவை கூட்டிக்கொண்டு அவள் வந்துவிட ஷ்ரவனுக்கே அதிர்ச்சி தான். “என்ன அபி ஒரு போன் கூட பண்ணலை…” என கதவை திந்து வைத்திருந்தவன் கேட்க, “என்னை வராதன்னு இங்க யாராலையும் சொல்ல […]


சின்ன மூக்குத்தி பூ – 12

பூ – 12 விடியும் நேரம் தான் வீடு வந்து சேர்ந்தான் ஷ்ரவன். வரும் போதே கோபத்துடன் வந்தவன் வாசமல்லியை எழுப்பவே இல்லை. முதல் நாளை போலவே சோபாவில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள். டிவி ஓடிக்கொண்டு இருந்தது. கிட்சனிலும் விடி விளக்கு போல எரிந்துகொண்டிருந்தது. அவன் வந்ததும் கண்ணை திறந்தவள் ஏதாவது பேசுவான் என்று பார்க்க அவன் அவளை பார்க்கவே இல்லை. தானாக எதுவும் பேசவும் தோன்றாமல் அவள் அமர்ந்திருக்க அவளை முறைத்து பார்த்தவன், “உள்ள வான்னு […]


சின்ன மூக்குத்தி பூ – 11

பூ – 11 காலை எழுந்ததில் இருந்து ஷ்ரவன் ஒவ்வொன்றிற்கும் வாசமல்லியை இங்குமங்குமாக இழுத்தடித்துக்கொண்டே இருந்தான் வேண்டுமென்றே. பொறுத்து பொறுத்து பார்த்தவள், “எதுக்குத்தான் இத்தனைவாட்டி கூட்டிக்கிட்டே இருக்கீங்க? சமைக்க வேண்டாமா?…” என்று பொங்கிவிட, “அதை என் மூஞ்சியை பார்த்து கேளேன். ஏன் யார்ட்டையோ கேட்கற மாதிரி சிலுத்துக்கற?….” என்று புன்னகையை அடக்கிய குரலில் சீண்டலாய் கேட்க, “அதெல்லாம் முடியாது. வேலை இருக்குது…” என்றவளை மறித்துக்கொண்டு நின்றான். “இப்ப என்ன நடந்துருச்சுன்னு ஓடி ஒளிஞ்சிட்டே இருக்க வாசு?…” என […]


சின்ன மூக்குத்தி பூ – 10 (2)

போன் பேசிவிட்டு வைத்த வாசமல்லிக்கு அபர்னிதாவிடம் நேரடியாக கேட்கமுடியவில்லேயே என்ற வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் நாளைக்கு இப்படியே சமாளிப்போம் என நினைத்தாள். அப்படியே மீண்டும் படுத்தவள் உறங்கியும் போக நள்ளிரவு கடந்து ஷ்ரவன் வந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. வந்தவன் சத்தமின்றி உடை மாற்றி முடித்து வந்து வாசுவின் அருகே வந்து அவளை கையில் அள்ளிக்கொண்டான். நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு எங்கோ பறப்பதை போல இருக்க மெல்ல கண்விழித்து பார்த்தவள் தான் அறையில் கட்டிலில் இருப்பது அரை […]


சின்ன மூக்குத்தி பூ – 10 (1)

பூ – 10 கோவை வந்ததும் ஷ்ரவனுக்கு அழைத்து சங்கர் விரவத்தை சொல்லிவிட்டு அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் நீலகண்டனுடன் இருந்துகொண்டான். அவர்களிடமிருந்து போன் வரும் வரை பலதரப்பட்ட யோசனைகளுடன் அங்கேயே அமர்ந்திருந்தவனை வாசுவும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. அவளுமே அபியின் பேச்சில் தானே உழன்றுகொண்டு இருந்தாள். அதனால் வீட்டில் மௌனம் சூழ்ந்துகொள்ள இருவருமே பேசிக்கொள்ளவில்லை. வாசுவிற்கு தான் வருத்தம், ஆற்றாமை எல்லாம மறைந்து கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் தலைக்கேற ஆரம்பித்தது. சங்கரின் மனைவி என்ற காரணம், […]


சின்ன மூக்குத்தி பூ – 9 (2)

“என்ன நினைச்சு நீ வாசுவை என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்ச அபி? அவளை என்ன சொல்லி என்னை பிடிக்க வச்ச?…” என்று அடுத்ததாக ஷ்ரவன் கேட்டதும், “ஷ்ரவா?…” என்று திகைப்புடன் அவள் பார்க்க, “என்னமோ செஞ்சிருக்க. ஏன் எதுக்குன்னு எனக்கு தெரியலை. தெரிஞ்சுக்கவும் நான் விரும்பலை. கல்யாணம் ஆன இத்தனை நாள்ல ஓரளவு என்னால வாசுவை புரிஞ்சுக்க முடியுது. எதையோ மறைக்கிறா. என்ன பண்ணின? இது எல்லாமே உன்னோட கேம். அவளை ஆட்டிவைக்கிற…” என்று அழுத்தமாய் […]


சின்ன மூக்குத்தி பூ – 9 (1)

பூ  – 9 அனைவரும் கிளம்பி வெளியே சுற்றி பார்க்க செல்ல அபி வாசுவை தன்னருகிலேயே வைத்துக்கொள்ள பார்த்தாள் ஆதவை வைத்து. “ஆதவ் இங்க வா…” என அவனை அழைத்து தூக்கிக்கொண்ட ஷ்ரவன், “அபி, நீ அடிக்கடி வந்திருக்க தானே? அத்தைக்கும் மாமாவுக்கும் பர்ஸ்ட் டைம். சோ கூட்டிட்டு போ. ஆதவை நாங்க பார்த்துக்கறோம்…” என்று சொல்லிவிட்டான். “ஆமா அபி. நாங்களும் வரோம். அவங்களை விடு. பேசிட்டு வரட்டும். நாம முன்னால போவோம்…” என்று அமலா சொல்ல […]


சின்ன மூக்குத்தி பூ – 8 (1)

பூ – 8 அவர்கள் ஊட்டிக்கு வந்து ஒரு வாரம் ஆகிற்று. அந்த வாரம் முழுவதும் வீட்டை அத்தனை தீட்டு தீட்டினாள் வாசமல்லி. ஒவ்வொன்றையும் எடுத்து சுத்தம் செய்து அமைப்பு செய்யவே அந்த வாரம் பிடித்தது. காலை ஷ்ரவன் காவல்நிலையத்திற்கு சென்றதும் மெதுவாய் வேலைகளை தொடங்குபவள் கொஞ்சம் கொஞ்சமாய் அடுக்கி அமைத்து முடிக்க ஊரிலிருந்து வருகிறோம் என்று அழைப்பு. முதலிலேயே நீலகண்டன் வருவதாய் சொல்லி ஷ்ரவனுக்கு அழைக்க அவனோ இன்னும் ஒருவாரம் சென்று வருமாறு சொல்லிவிட்டான். இந்த […]


சின்ன மூக்குத்தி பூ – 8 (2)

“கதவு திறந்திருக்கு. யாராச்சும் வருவாங்க…” என்று அவளின் கையை பிடித்து இழுக்க பார்க்க, “இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோ…” என சொல்லி நிதானமாகவே அவளை விட்டவன், “நான் ரெடி ஆகிட்டு வரேன்…” என அனுப்பி வைத்தான். வாசமல்லிக்கு அங்கிருந்து செல்லவே கால்கள் நகரவில்லை. அவளின் நிலை புரிந்தவன் போல சிரிப்புடன், “போகலையா நீ?…” என்று மீண்டும் கையை பிடிக்க வர, “போய்ட்டேன். போய்ட்டேன்…” என்று வேகமாய் ஓடிவிட்டாள். “கிரேசி…” என்று சிரித்தபடி தானும் கிளம்பி வந்தான். வந்ததும் […]


சின்ன மூக்குத்தி பூ – 7 (1)

பூ – 7 இரவு உணவை முடித்துவிட்டு கிட்சனை ஒழுங்குபடுத்தியவள் வந்து படுக்கும் பொழுது ஷ்ரவன் இன்னும் உறங்காமல் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான். “இன்னும் தூங்கலையா அத்தான்?…” என கேட்க, “ஹ்ம்ம், ஒரு போனுக்காக வெய்ட்டிங்…” என மொபைலில் இருந்து பார்வையை அவளிடம் நிலைக்கவிட்டவன், “புடவை மாத்திக்கலையா?…” என்றான். “உறங்கும் போதுக்குமா வேற மாத்துவாங்க? அதெல்லாம் வேணா. இதே போதும்…” என்று தான் படுக்கும் பக்கம் படுத்துக்கொள்ள ஷ்ரவனின் மனது அல்லாட துவங்கியது. முதல்நாள் களைப்பும், கடுப்புமாய் […]