Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chinna Mookuthi Poo

சின்ன மூக்குத்தி பூ – 7 (2)

“வேணும்னா சொல்லு. நர்சரில போய் வாங்கிட்டு வரலாம். பின்னாடி வளர்த்துக்கோ…” “வளர்க்கலாமா? அப்போ சரி வாங்கி தாங்க. சங்கரண்ணேட்ட தான் கேப்பேன். ஊருக்கு வாரப்பலாம் ரோசாப்பூ கலர் கலரா வாங்கிட்டு வரும். வளக்கத்தான் முடியாது…” மெல்ல மெல்ல பேச்சு ஷ்ரவன் எதிர்பாராத திசைக்கு தானே நகரலானது. வாசுவும் யோசிக்காமல் சொல்ல ஆரம்பித்திருந்தாள். “ஏன்? அங்க வளர்க்கறதுக்கென்ன?…” “வளக்கலாம் தான். ஆனா இல்ல. ஒருவாட்டி அண்ணங்கிட்ட கேட்டதுக்கு பெரிம்மா ரொம்ப பேசிடுச்சு. மூலையில கிடக்கறவளுக்கு இதுக்கொன்னுதேன் கொறச்சலுன்னு. அதுல […]


சின்ன மூக்குத்தி பூ – 6 (2)

“சரி ஜிப் போட்டுக்கோ…” என சொல்ல போடமுடியாமல் திணறினாள். “இது சிக்குது அத்தான்…” என்று அவனிடமே வந்து நிற்க, “வாய் மட்டும் கேளு. டாப்பு டக்கரு…” என்ற கிண்டலுடன் அவள் சிக்க வைத்திருந்ததை நேர் செய்து மீண்டும் ஒன்றுபோல ஜிப்பை மாட்டி போட்டுவிட்டவன் பார்வை அவளின் நெற்றியிலிருந்து கண், மூக்கு, இதழ்கள் என்று வகைதொகையின்றி பார்வையிட, “அத்தான் போட்டாச்சு. போட்டாச்சு…” என அவனுக்கு ஞாபகமூட்டினாள். “ஹாங், என்ன?…” “இல்ல ஜிப்பை போட்டுட்டு என் மூஞ்சியை பாத்துட்டே நின்னீங்க. […]


சின்ன மூக்குத்தி பூ – 6 (1)

பூ – 6 நடு இரவில் முணங்கும் சப்தம் கேட்க சட்டென விழித்துவிட்டான் ஷ்ரவன். திரும்பி பார்க்க வாசமல்லி தான் குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தாள். “வாசு…” என அழைக்க, “அத்தான் ரொம்ப குளிரா இருக்குது…” என்று பற்கள் தந்தியடிக்க அவள் முணங்க, “ஹ்ம்ம், கீழே தான் ரஜாய் இருக்கே. போர்த்திக்கவேண்டியதுதானே? அதையும் சொல்லனுமா?…” என்றவன் காலுக்கு கீழே பார்க்க அங்கே இல்லை. ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று கப்போர்டில் இருந்து ஒன்றை உருவி வந்து அவளுக்கு போர்த்தி […]


சின்ன மூக்குத்தி பூ – 5 (2)

“இருக்கட்டும் நாதன், நாங்க எடுத்து வச்சுக்கறோம். நீங்க கிளம்புங்க…” என சொல்ல, “ஸார் நாளைக்கு லீவுங்களா?…” என்று நின்றார். “ஹ்ம்ம், ஆமா. வெளில போகவேண்டியதிருக்கே…” என்று சொல்லிவிட்டு அவரை அனுப்பியவன் திரும்பி பார்க்க வாசமல்லி அப்படியே தான் நின்றாள். “ஓய் ஆர்வம், எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்க?…” என கேட்க ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள். “சரி வா, சேர்ந்தே போவோம்…” என்று அவளுக்கு கை நீட்ட அதன் மேல் கை வைத்தவள் வளதுகாலை உள்ளே எடுத்துவைத்து […]


சின்ன மூக்குத்தி பூ – 5 (1)

பூ – 5 ஊட்டி மலை பாதை மீது ஏற துவங்கியது ஷ்ரவனின் ஜீப். அவ்வப்போது வாசமல்லியை திரும்பி பார்த்துக்கொண்டே தான் ஓட்டினான். வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவள் மலை மீது ஏற துவங்கவுமே கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இருக்கையில் ஷ்ரவன் பக்கம் பார்த்து சாய்ந்துகொண்டாள். அரைமணி நேரம் பொருத்து பார்த்தவன் அவள் உறங்கவில்லை, வெறுமனே கண்ணை மூடி இருக்கிறாள் என்பதை கண்டுகொண்டான். “வாசு, தூக்கம் வருதா?…” என அவளிடம் கேட்க, “ம்ஹூம் அதெல்லாம் இல்லை அத்தான். […]


சின்ன மூக்குத்தி பூ – 4

பூ – 4 அங்கிருந்த இரண்டு நாட்களும் ஷ்ரவனுக்கு தண்ணிக்காட்டிக்கொண்டே இருந்தாள் வாசமல்லி. வந்த மறுநாளே வாசமல்லி சொல்லியபடி அய்யனாருக்கு வேண்டுதலை நிறைவேற்றி இருந்தாள். அத்தனை தேங்காயையும் யாரையும் உடைக்க விடாமல் தன் கையாலே உடைத்து போட ஷ்ரவன் மிரண்டு தான் நின்றான் அவளின் அன்பில். அதன் பின்பும் ‘கிளம்பு’ என்றால் இதோ அதோ என்று போக்குக்காட்ட பொறுமை இழந்து போனான் அவன். சங்கரிடமும் சொல்லி பார்த்தான். ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று. அவனும் சரி என்று […]


சின்ன மூக்குத்தி பூ – 3

பூ – 3 “உன்னைத்தான்யா இத்தன நாளா தேடிட்டு இருந்தேன். அசிஸ்டன்ட் கமிஷ்னரா உன்னை ப்ரமோட் பன்றேன்…” என அமைச்சர் சொல்ல, “எஸ் ஸார். தேங்க் யூ ஸார்…” என்று ஷ்ரவன் பெருமிதத்துடன் சல்யூட் அடிக்க, “உனக்கு எல்லா பவரையும் தரேன். உன் கையில என் கண்ணையே ஒப்படைக்கிறேன். அதுல இந்த நாட்டு மக்களுக்கு ஆனந்த கண்ணீர் தான் வரனும்…” “எஸ் ஸார், உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். கண்டிப்பா காப்பாத்துவேன்…” “காப்பாத்தறதுக்கு முன்னாடி பல்லை தேச்சுட்டு […]


சின்ன மூக்குத்தி பூ – 2

பூ – 2 சிறிது நேரம் சென்று போர்வையில் இருந்து தலைய உயர்த்தி மெதுவாய் பார்க்க வாசமல்லி கதவை திறந்து வெளியே எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள். மீண்டும் கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்து எதையோ பேசிக்கொண்டே சுற்ற, “வாசு…” என்றவனின் குரலில் திரும்பியவள், “இங்க பாருங்க அத்தான். நான் சொல்றதை கேளுங்க…” என்று அவனருகே வந்து தொப்பென அவள் அமர, “எதே, உன் பேச்சை நான் கேட்கறதா? ரொம்பத்தான் உனக்கு கொழுப்பு. நேத்தே உன்னை…” என ஆவேசம் […]


சின்ன மூக்குத்தி பூ – 1

பூ – 1 கோவை மாநகரின் மத்தியில் அமைந்திருந்தது அந்த திருமண மண்டபம். உறவுகள் சூழ முகூர்த்த நேர பரபரப்பு அப்படியே காணப்பட்டது. வெளியே மேளச்சத்தம் காதை பிளக்க பாத்ரூமிற்குள் காதை பொத்திக்கொண்டு முகம் சிவக்க கண்ணீருடன் கதறிக்கொண்டு இருந்தான் ஷ்ரவன். இன்னும் சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் கணவனாக போகிறான். அதிலும் சுத்தமாக தனக்கு விருப்பமே இல்லாத ஒருவளுக்கு மாலையிட்டு வாழ்வின் சரிபாதிகாக மாற்றிக்கொள்ளவிருக்கிறான். நினைக்க நினைக்க உள்ளமெல்லாம் பற்றி எரிந்தது. இதிலிருந்து தப்புவதற்கும் மார்க்கமில்லை. […]


சின்ன மூக்குத்தி பூ – டீசர்

“ஷ்ரவன், வெளில வா. இன்னும் உள்ள என்னடா பன்ற? முகூர்த்த நேரம் முடிய போகுது…” என்ற அமலாவின் குரலில் பட்டென கதவை திறந்தவன், “முடிஞ்சா மட்டும் போனா போகுதுன்னு என்னை விட்டுடுவீங்களா? புடிச்சு அந்த ஊர்நாட்டானுக்கு கட்டிவைக்க தான போறீங்க?…” என்று கோபத்தில் பொரிய, “ப்ச், அவளை மாதிரி ஒருத்தி இந்த ஜென்மத்துல கிடைப்பாளாடா? அவ அருமை தெரியாம பேசாத…” “சத்தியமா பத்து ஜென்மத்துக்கும் அவ வேண்டாம்னு தான் சொல்றேன்…” என்றவனின் கண்ணில் கண்ணீர் பொங்க, “அழறியா […]