Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kaaval neethaanae kaavalanae

Kaathal Neethaane Kaavalane..! – 12

காதல் 12: அந்த இடத்திலேயே நின்றிருந்த  வருணுக்கு அந்த சில நிமிடங்கள் சில யுகங்களாகவே மனதிற்கு பட்டது. உள்ளுணர்வு ஏதோ உந்தித் தள்ள, தன்னுடைய பார்வையை நாலா புறமும் சுழல விட்டான்.வருணின் பார்வையை அரை மயக்கத்தில் இருந்த சக்தி எப்படி அறிவாள்..? “என்னடா..? அவன் நம்மளையே பார்க்குற மாதிரி இருக்கு..!” என்றான் அந்த ரவுடிகளில் ஒருவன். “நீ கொஞ்சம் வாயை மூடுடா..! நீயே காட்டிக் குடுத்துடுவ போல இருக்கு. எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி நடந்துக்காத..!” என்று […]


Kaathal Neethaane Kaavalane..! – 11(1)

அதே நேரத்தில் அவனுக்கு போன் வர, “சார் அந்த லேடி, ருத்ராவை அரெஸ்ட் பண்ணிச்சியாச்சு சார்..! மங்களூர்ல இருக்குறதா போக்குக் காட்டி, கிருஷ்னகிரில இருந்தா சார். அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு இருக்கோம் சார். இன்னும் திரீ ஆர்ஸ்ல ஸ்டேஷன் வந்துடுவோம் சார்..!” என்றார் இன்ஸ்பெக்டர் எதிர்முனையில். “கொடைக்கானல் ஸ்டேஷன்ல அக்யுஸ்ட்டை ஹேண்ட் ஓவர் பண்ணிடுங்க. ஏன் இந்த கொலையை செஞ்சா..? இதுல அவளுக்கு உதவி செஞ்சது யாரு..? அந்த டிரைவரை அவ கூட அனுப்பினது யாரு..? […]


Kaathal Neethaane Kaavalane..! – 11

காதல் 11:  வருணிடம் இருந்து இப்படி ஒரு கோபத்தை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வீட்டில் இருப்பவர்களிடம் காட்டி வருணுக்கு பழக்கமில்லை. ஆனால் இன்று கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. “சொல்லுங்க அத்தை ஏன் இப்படிப் பண்ணிங்க..? என்கிட்டே கேட்காம உங்களை யாரு அவளை அனுப்ப சொன்னது..?” என்றான் கோபமாய். “என்ன வருணு..? என் தம்பியே என்னை எதிர்த்து இப்படிப் பேச மாட்டான். நீ என்னவோ இந்த குதி குதிக்கிற…?  யாரோ ஒருத்தியைத் […]


Kaathal Neethaane Kaavlane..! – 10

காவல் 10: “உன்னோட மொத்த குடும்பமும் இப்போ வந்தாச்சு…!” என்றான் வருண். அதைகேட்ட சக்திக்கு உடனே அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அண்ணன் இல்லாது போன துக்கத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அப்படி அவள் போனால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று யோசித்தாள். கொடைக்கானலில் இருக்க வேண்டியவளுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்க மாட்டார்களா..? அதுவும் வருணுடன் தனியே பார்த்தால் அவளின் பெரியம்மா யமுனா பேயாட்டம் ஆடித் […]


kaathal neethaane kaavalne..! – 9.1

வருணின் நெஞ்சில் சாய்த்திருக்கிறோம் என்பதை உணர்ந்து விலக எத்தனிக்க, அவனின் இரும்புப் பிடியில் இருந்து விலக முடியவில்லை. “எனக்கு ஒண்ணுமில்லை சார்..!” என்று அவள் விலக எத்தனிக்க, ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், மெதுவாக கைகளின் இறுக்கத்தைத் தளர்த்தினான். “ஆர் யு ஓகே..!” என்றான். “எஸ் சார்..! ஐ ஆம் ஓகே..!” என்றாள். “இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சேன்..!” என்றான் வருண். “இப்பவும் என்னால நம்ப முடியலை சார்..! எங்க அண்ணி அப்படிப் பட்டவங்க […]


kaaval neethaane kaavalane..! – 9

காவல் 9: கார்த்திக் பேசி முடிப்பதற்கும், வருண் அவனை முறைப்பதற்கும் சரியாக இருந்தது. ஆனால் கார்த்தியோ அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சாவகாசமாக சாதானாவிடம் பேசிவிட்டு வைத்தான். “என்ன? வீம்புக்கு என் முன்னாடி பேசுறியா..? அப்படியே நீ பேசுறதைக் கேட்டு நான் மனசு மாறிடுவேன்னு நினைக்கிறியா..?” என்றான் வருண். “அதுக்கு எந்த அவசியமும் இல்லை..!” என்ற கார்த்தி, தன் கையில் இருந்த ஆதாரங்களை வருணிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த வருணுக்கு குற்றவாளி யார் என்பது தெள்ளத் […]


Kaaval Neethaane Kaavalane..! – 8

காவல் 8:   வருணின் முகத்தை வைத்து சக்தியால் ஒன்றும் கணிக்க முடியவில்லை. நடந்து முடிந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னமும் அவள் வெளி வரவில்லை. வருண் வேறு கோபமாக இருந்தான். சக்திக்கு மனதிற்குள் குளிர் எடுத்தது. “வருண் சார்..!” என்றாள் தயங்கியபடி. “ஸ்டாப் இட்..! இன்னொரு தடவை நீ வாயைத் திறந்து பேசுன..? இன்னொரு வருணை நீ பார்க்க வேண்டி வரும்..?” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, ஜீப்பை நேராக அவன் வீட்டின் முன்பு நிறுத்தினான். “சாவி..!” […]


Kaaval Neethaane Kaavalane..! – 7

காவல் 7:   அந்த போட்டோவைப் பார்த்தவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். அதில் இருந்தவர்களை எங்கோ பார்த்த நியாபகம் அவனுக்கு. ஒரு முக்கியமான கேஸில் அந்த குடும்பத்தைப் பார்த்த நியாபகம். போட்டோவை இருந்த இடத்தில் வைத்து விட்டு, தனது அறைக்கு சென்றவன் ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தான். “எங்க பார்த்தேன்..? எந்த கேஸ்…? வருண்  விடாத யோசி.. யோசி…” என்று தனக்குத் தானே சொன்னவன், மனதை ஒருமைப் படுத்தி யோசித்தான். பல மாதங்கள் பின்னோக்கி செல்ல, ஒரு […]


Kaathal Neethane Kaavalane…! – 6

காவல் 6:   “வாழ்நாளில் நினைக்காத புது நாளிது தானாக கலையாத கலை தான் இது… தேனோடு திணையாக இணையானது மார்போடு மானாக துணையானது… எண்ணம் தான் துள்ளுது…என்னமோ சொல்லுது கண்ணம்மா..வண்ணம்மா இன்பமா பொங்கி வரும்…!”   அந்த இரவு நேர மின்னொளியில் இசைஞானியின் இசையில் உருவான பாடல் வரிகள் செவிகளுக்கு விருந்தாக, அந்த ஏகாந்தம் வருணின் மனநிலையை ரம்யமாக்கியிருந்தது. திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தான் வருண். சக்தியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். “என்ன இவ இன்னும் இப்படி […]


காதல் நீதானே காவலனே..! – 5

காவல் 5:   மீண்டும் ஒரு பயணம் அவனுடன். எப்படி உணர்கிறாள் என்று சக்திக்கே தெரியவில்லை. கொஞ்சம் பாதுகாப்பாகவும் உணர்ந்தாள். அதே சமயம் அதிக பயமாகவும் உணர்ந்தாள். அவளின் எண்ணப் போக்கு எதுவுமே வருணின் கருத்தில் படவில்லை.அவனுக்கு கருத்தில் இருந்தது எல்லாம் வேறு சில சிந்தனைகள் மட்டுமே.  காரில் ஒலித்த இளையராஜா பாடல்களில் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டு வரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள் சக்தி. […]