Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்20

“எங்க கூட்டிட்டு போற மாமா” என்ற மகிழின் கேள்விக்கு.. “நீ தானேடி நேத்து நைட் கூட்டிட்டு போ மாமான்னு சொன்ன.. அதான் போறோம்” என பதிலளித்தான் நந்தா. முகிலைப் பதம் பார்த்த அதே குடையால் நந்தாவையும் இரண்டு விளாசியவள் “இந்த வியாக்கியானத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஊருக்குள்ள போகாம காட்டுத் தடத்துல ஏன் போறிங்கன்னு கேட்கறேன்” என மீண்டும் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் வண்டியை நிறுத்து அவளை இறங்கச் சொன்னவன் “நேத்து என்ன சொன்ன மயிலு.. ஏன் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்19

மகிழ் வீட்டிற்குள் நுழையும் போதே கண்ணில் பட்டது காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த முகில் தான்.. அவனை ஒரு பார்வை பார்த்தவள்.. சீரியலுக்காக மாஸ் வெய்ட்டிங்கில் இருந்த அவ்வாவிடம் “உன் பேரனுக்கு பொண்ணுத் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க” என்றாள்.. உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்.. அவளை ஸ்லோ மோஷனில் திரும்பிப் பார்த்த அவ்வா “கிடக்கது கழுதை.. வேற பொண்ணுப் பாப்போம்” என அசால்ட்டாகச் சொல்ல.. முகில் வந்த சிரிப்பை காஃபியை வைத்து உள் தள்ள.. கொதித்துப் போனாள் மகிழ். […]


நாயகனோ நானறியேன் – நாயகன்19

அறிவழகன் ரகுவையும் நந்தாவையும் நெருங்கவும்.. இருவரும் எழுந்து நின்றனர்.. நந்தாவை பள்ளி மூலம் ஏற்கனவே தெரிந்திருக்க.. ரகுவை மகிழின் தாத்தாவை வைத்து அடையாளம் சொன்னவர் “ரொம்ப நன்றி தம்பி.. நீங்க ரெண்டு பேரும் இல்லைனா என் பொண்ணு நடு ரோட்டில தனியா நின்னிருப்பா.. அவளையும் இங்க கூட்டிட்டு வந்து எனக்கும் தகவல் சொன்னிங்க” என நன்றி சொன்னவர் “பாருங்க தம்பி.. பெத்தவங்க வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டுப் போனா.. கோவம் இருந்தாலும் எங்கியாவது போய் நல்லா இருந்தா சரின்னு […]


நாயகனோ நானறியேன் – நாயகன்18

      அத்தனையையும் அவன் தந்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.. மகன் திருந்தியதில் மகிழ்ச்சி தான் என்றாலும்.. இத்தனை வருடங்கள் கழித்து தான் மிகவும் சுயநலமாக நடந்து கொண்டு.. தன் மகன் மகனின் வாழ்வு திசை மாறிப் போக காரணமாகிப் போனோமே என யோசிக்க ஆரம்பித்து இருந்தார்.      பல வருடங்கள் தவமிருந்து பெற்றவன்.. அவன் அன்னை இருக்கும் வரையில் கண்ணில் நீர் வர அவள் அனுமதித்தது இல்லை.. அவள் சென்ற பின்பு […]


நாயகனோ நானறியேன் – நாயகன்18

       “ஏன் மாமா நீ வேற கல்யாணம் பண்ணிக்கலை” என்ற மகிழின் கேள்வியில் இவ்வளவு நேரம் இருந்த இதம் மறைந்து.. ஒரு கணமான மௌனம் பேரிரைச்சலாய் ஒலிக்க.. அவளை விழி திறந்து பார்த்தான் நந்தா.         இத்தனைக்கும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசி விடவில்லை.. வெறும் பார்வைக்கே அவள் கண்கள் கலங்க.. நிமிர்ந்து அமர்ந்தவன்.. தன் நெற்றியில் இருந்த அவள் கரங்களைப் பற்றி அவளை முன்புறம் அழைத்தான்.   […]


நாயகனோ நானறியேன் – நாயகன்17

        அடுத்த நாள் பள்ளியில்.. வழக்கம் போல மகிழ் தன் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கவும்.. நந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. ‘அட என்னங்கடா இது.. தினமும் யாராவது ஒருத்தர் பாக்க வராங்க.. இன்னைக்கு இவனா’ என சலித்தபடி அவன் அறை நோக்கிச் செல்ல.. வழியில் குட்டி நந்து காரிடாரில் அமர்ந்து டிராயிங் பண்ணிக் கொண்டிருக்க அவனிடமும் பேசிவிட்டு நந்தாவின் அறைக்குள் நுழைந்தாள்.       அவன் யாரிடமோ படு பவ்யமாக […]


நாயகனோ நானறியேன் – நாயகன்17

   ‘அங்கு என்ன தெரிகிறது’ என நந்தா உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வாய்க்கால் நீரை தானும் உற்றுப் பார்த்தான் ஸ்பாட் என அழைக்கப்படும் பால முருகன்.        நேரம் அதிகாலை.. இடம் வாய்க்கால் ஏரி.. எழுஞாயிறு மலையவன் தோள்களில் ஏறி அகிலத்தைக் காண விழைய.. அதன் பொற்கதிர்கள் பூமியோடு விளையாடினாலும்.. வாய்க்கால் நீரின் குளிர்ச்சி சுற்றி வரும் தென்றலோடு கதை பேச.. பூம்பொழிலின் பொழுது அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது.       ‘அப்படி […]


நாயகனோ நானறியேன் – நாயகன்16

அங்கு மகிழை அழைத்துச் செல்ல முகில் வந்திருக்க.. அப்போது தான் வீட்டிற்கு திரும்பியிருந்ந முத்துவின் அப்பா ராஜவேலு அவனிடம் ஏதோ பேசியபடி இருந்தார். மகிழ் வந்ததும் போகலாமா என அவளிடம் கேட்கவும்.. ராஜவேலு “உள்ள வாங்க மாப்ள” என்க.. அவன் அவ்வா அவசரமாக வரச் சொன்னதாகக் கூறியபடி முத்துவைப் பார்க்க.. அவளோ இவன் பார்வையை சந்திக்க மறுத்து வேறுபுறம் திரும்பியிருக்க.. ‘என்னாச்சு’ என்ற குழப்பத்துடனே மகிழை அழைத்துக் கொண்டு சென்றான். உள்ளே நுழைந்ததும் அவ்வா “நல்லா பாக்கற […]


நாயகனோ நானறியேன் – நாயகன்16

கல்யாணம், இறப்பு என ஒன்றன் பின் ஒன்றாக யாரும் எதிர்பாரா சமயத்தில் எல்லாம் நடந்து முடிந்தும் விட.. அதிலிருந்து மீண்டு வர யாருக்கும் தெம்பு இல்லை. மகிழை சந்தேகப்பட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவளிடம் இருந்து வீட்டினர் ஒதுங்கி நிற்க.. நந்தாவின் தவறுக்காக அவன் வீட்டினர் அவனை ஒதுக்கி வைக்க.. ஆக மொத்தம் யாருக்கும் நிம்மதி இல்லாமல் நாட்கள் நரகமென கழிந்து கொண்டிருந்தது. அதுவும் நந்தாவின் வீட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பு.. சாரதாவிற்கு ஐம்பது, ஐம்பத்து […]


நாயகனோ நானறியேன் – நாயகன்15

ஒரு வாரம் கழித்து.. இருள் பிரியாத அதிகாலையிலேயே நந்தாவின் தாத்தா எழுந்து வெளியே செல்ல வர.. நான்கு நாட்களாய் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்க.. இப்படி நடந்தால் மீண்டும் இளைப்பு வரும் என பயந்து போனவராய்.. “ஏனப்பா.. இன்னைக்குத் தான் மேல் நல்லாருக்கு.. வீட்டுல இல்லாம எங்க போறிங்க” என கேள்வி கேட்டபடியே சாரதா பின்னாலேய வர “நான் போறேன்.. நாலாளுக்கு மேலாளா.. கேட்கறா பாரு.. வீட்லயே இருக்க ஒரு மாதிரி இருக்கு.. அதான்” என தள்ளாடியபடியே படிகளில் […]