இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

Advertisement

சாலாவுக்கும் எனக்கும் பத்து வித்தியாசம் என்று சொல்றானே இந்த அறிவு முதலில் இல்லையா. தீனா சொல்வதுப்போல குடும்பத்தை கட்டி காபாத்த வாய்க்கு ருசியா சமைத்து போட சாலா வேண்டும்.அப்ப இவன் சாலா வை வேலைக்காரியாக வைத்து இருந்து இருக்கான். சில பெண்கள் புருஷன் உடைய வருமானத்தக்கு அதிகமா செலவு பண்ணு வங்க அதுக்கு காரணம் ஏன் இப்ப புரியுது. காசு இருந்தால் தானே நீ கள்ளக்காதலி தேடுவ அவள்க்கு செலவு பண்ணுவ.முதலிலே காசை கரைத்து விட்டால். காசு இல்லை என்றால் எவ வருவா.மனைவி மட்டும் தான் காசு இல்லை என்றாலும் கஷ்டத்தில் கூட இருப்பா.ரசனை ஒத்து போறவங்ககிட்ட எல்லாம் இவன் கள்ளதொடர்பு வைச்சிப்பானா. இது போல சாலாவும் செய்தால் எப்படி இருக்கும்..தாரணிரொம்ப சரியாக பேசுறாள். கங்காக்கு இன்னும் பொண்ணு பண்ண தப்பு புரியவில்லை. பாண்டிம்மா தேவிக்கு பண்ண பாவம் தான் அவங்க இரண்டு பெண்களை தாக்கி இருக்கு. பெண் பாவம் பொல்லாதது சும்மா வா சொன்னாங்க. முதலில் தேவி மட்டும் மனைவி போல காண்பித்து இருப்பிங்க.இரண்டாவது அண்ணி பத்தி எதுவும் சொல்லவில்லை..சாலா மதுரைக்கு வந்தப்பிறகு தான் இரண்டாவது அண்ணிப்பத்தி சொல்லி இருப்பிங்க. இது பாண்டியம்மாவுடைய இரண்டு பெண்கள் கஷ்டப்படுவதற்கு இவங்க பண்ண பாவம் காரணம் என்று காட்டுவதற்கு சேர்த்திங்களா.
இல்லையே ஒரு எபியில் தன் அண்ணனும் இரண்டு மனைவிகள் உள்ளவன் தானே என்று வருமே.
 
ப்ரகாஷ் - மூச்சு....நீ பேச கூடாது. இந்த ஹோட்டல் போயி நம்ம ஒன்ன ஆர்டர் செஞ்சுட்டு , அப்புறம் அடுத்தவங்க ஆர்டர் பண்ணத பார்த்து ஆசைப்படுவோமே அந்த மாதிரி இருக்கு இவன் சொல்றது. சாலாவ கல்யாணம் பண்ணும் போது தெரியாதா? 15 வருஷமா தெரியாத மூச்சு முட்டுதல் ஷாலினி வந்ததுமே தெரிஞ்சுச்சா?திருமண வாழ்க்கைக்கான அழகே ரெண்டு வேறு கருத்து உள்ள நபர்கள் ஒன்றாக இணைந்து செல்வது தான். தம்பதியரின ஒருவர் மிக கஞ்சமாக இருந்தால் ஓருவர் சற்று தாராளமாக செலவழிப்பவராக இருப்பார். ஒருவர் சிடுசிடுவென இருந்தால் மற்றவர் நன்றாக பழகுபவராக இருப்பார். இன்னும் பல வேற்றுமைகள் இருக்கும். எப்படி பாலன்ஸ் செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது தான் சுவாரசியமே. இது கண்டிப்பாக திருமணமான புதிதில் தெரியாது. நிறைய சண்டை,சமாதானம், வருடங்களுக்கு பிறகு தான் தெரியும். திருமண வாழ்க்கை என்ன, நட்பில் இல்லாத வேற்றுமைகளா? அதை தாண்டி நிற்பதற்க்கு காரணம் என்ன? இன்னொருவர் கேள்வி கேட்பதை விரும்பாத நாம் நட்பு சில இடங்களில் காறித்துப்பினால் கூட ஏற்றுக்கொள்கிறோமே? அதிகாரம், போலி மரியாதையை விட தம்பதிகள்க்குள்ள பேஸிக் ஃப்ரண்ட்ஷிப் வாழ்க்கையை காப்பாற்றிவிடும்.சாலா அவ்வளவு பொருப்பாக இருந்ததால் தான் இந்த பணக்கார பவுசு. ப்ரகாஷ்க்கு சாலாவுக்கு தெரிஞ்சுடுச்சோன்னு டவுட் முன்னாடியே வரும். ஆனா சபலமும், சாலா மேல இருந்த அலட்சியமும் உணர்ந்துக்க விரும்பலை அவன். தீனா, அவன் தவிர்க்கனும், தப்புன்ற எண்ணமிருந்தா ஆலோசனை கேட்டுருப்பான்.ஷாலினி நீ அக்கான்னு கூப்பிட்டு சாலாவுக்கு துரோகம் செஞ்ச, அதான் உன் அக்கா உனக்கு ரிவீட்டு அடிக்கறா. தேவியின் கோபம் மிக நியாயம். வாங்கிய அத்தனை பேச்சுக்களும் இவ்வளவு வஞ்சத்தை தந்திருக்கும்.இது கண்டிப்பா பாண்டிமாக்கான தண்டனையும் கூட. ஆனா மடப்புறம் காளி கிட்ட தேவி எனக்கு சந்தோஷத்தை கொடுன்னு கேட்டிருக்கலாம். ஏன்னா கஷ்டபடுறத பார்க்கறத விட வேற என்ன கிடைச்சிடும் இதுல. இவ லைஃப் மாறிடாது. அதுக்கு எனக்கு சந்தோஷத்தைக் கொடுன்னு வேண்டியிருக்கலாம். ஆனா நொந்த மனதிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். யாகாவராயினும நா காக்க தான் நியாபகம் வருது.
Well said ma ❤️❤️❤️
 
இல்லையே ஒரு எபியில் தன் அண்ணனும் இரண்டு மனைவிகள் உள்ளவன் தானே என்று வருமே.
அது தான் சொல்றன் முதலில் மீனாட்சி சீரியஸ் ஆக இருக்கும் போது அண்ணி தேவி சாப்பிட்டுக்கொண்டு இருக்கா என்று வரும்‌. பிறகு தான் பிரகாஷ் விஷயத்திற்கு நியாயம் கேக்ககாமல் என்று நினைககும் போது அண்ணன்க்கே இரண்டு மனைவி என்று வரும் .
 
தீனா நல்ல நண்பன் அவன் பேச்சு சூப்பர். அவனோடு பிரகாசு தொடர்பிலிருந்திருந்தா கொஞ்சம் புத்தி வந்திருக்குமோ.
தேவிக்கு நடந்தது அநியாயம் தான் அதற்காக இரண்டு மகள்கள் வாழ்வும் கெடனும் இப்ப தான் சந்தோசம் என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை. அப்ப தேவியும் கெட்டவதான்னு தோணவைக்கிறது இப்போதைய அவளின் சந்தோசம்.
 
அது தான் சொல்றன் முதலில் மீனாட்சி சீரியஸ் ஆக இருக்கும் போது அண்ணி தேவி சாப்பிட்டுக்கொண்டு இருக்கா என்று வரும்‌. பிறகு தான் பிரகாஷ் விஷயத்திற்கு நியாயம் கேக்ககாமல் என்று நினைககும் போது அண்ணன்க்கே இரண்டு மனைவி என்று வரும் .
அது அப்படி இல்லை சகி. தேவி கதையை கொஞ்சும் கிளிகள் கதையிலே சொல்லி விட்டேன். சாலா பத்தி தான் சொல்ல வில்லை. தேவியே சொல்லி இருப்பாள் சரண்யாவிடம்... குழந்தை இல்லாமல் தங்கையை திருமணம் செய்ததை. நம் வாசகர்கள் நிறைய பேர் கண்டறிந்து போஸ்ட் போட்டாங்களே...
 
தேவி.. 🔥🔥🔥🔥🔥🔥🔥 இத தான் எதிர்ப்பாத்தேன்.. 🤩🤩🤩🤩🤩 சூப்பர் செல்லம்... 😍😍😍😍😍 தப்பு பண்ண ஆன்டி ஹீரோக்கு கூட இந்த ஆத்தர் தண்டனை தருவாங்க ஆனா மாமியாருக்கு மட்டும் எப்பவுமே தண்டனையே கிடையாது 😒😒😒😒 இந்த கதையிலயும் அப்படி தான் கொண்டு போக போறீங்களா ரைட்டரே? ஆத்தர் ஜி மாமியார் ஆர்மி போல.. 😑
என் இனமடா நீ 👌👌👌👌
 
தேவி நீ பேசுறது சரியானு கொஞ்சம் யோசித்துப் பாரு. சாலா அவ வாழ்க்கைக்காக எவ்வளவு போறாடறா.இந்த நிலையில் நீயும் பழிவாங்க நல்ல நேரம் பாத்த. உன் புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்கனா நீ சம்மதம் சொல்லாம நடந்திருக்க வாய்ப்பு இல்ல. சரி அதுக்கு பிறகு அவன் வேற பொண்ணு கூட,அது உன் தங்கையாகவே இருந்தாலும் நீ ஒதுங்கி போயி நின்று நீதி கேட்டு இருக்கலாம். அவங்க கூடவே இவ்வளவு நாளா இவ்வளவு கெட்ட எண்ணத்துல இருந்தது மட்டும் ஞாயமா?
தேவி பற்றி எனக்கும் இதே கருத்து தான் :love: :love: :love: 🙌
 
அது அப்படி இல்லை சகி. தேவி கதையை கொஞ்சும் கிளிகள் கதையிலே சொல்லி விட்டேன். சாலா பத்தி தான் சொல்ல வில்லை. தேவியே சொல்லி இருப்பாள் சரண்யாவிடம்... குழந்தை இல்லாமல் தங்கையை திருமணம் செய்ததை. நம் வாசகர்கள் நிறைய பேர் கண்டறிந்து போஸ்ட் போட்டாங்களே...
ஒகே பா படித்தது ஞாபகம் இல்லை. போய் திருப்பி படித்து பார்க்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top