
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைக்களம் சுவாரஸ்யமாக நகர்ந்து ரசிக்க வைத்தது



.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்து இன்று மக்களுக்கு நீதியையும் நேர்மையையும் கிடைக்க செய்து அரணாக நிற்கும் துறை நம் காவல்துறை. அத்துறையில் முழுமூச்சாக நேர்மையுடன் போராடும் உன்னத மனிதர்கள் ஏராளம். அவர்களால் மட்டுமே முழுமையாக இல்லாவிடிலும் நாம் பாதுகாப்பாக வாழ முடிகிறது. ஒரு சில குற்றத்திற்கு துணை போகும் அதிகாரிகளால் அனைவரையும் குற்றம் சொல்லவும் கூடாது. குடும்பம், உறவுகள், நட்புகள் என அனைவரையும் பிரிந்து பல இடங்களில் மாற்றலாகி சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டு சிரமம் பார்க்காமல் பல அதிகாரிகள் ஊர் ஊராக தமது சேவையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்., அவர்களுக்கும் அத்துறையில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது ஒரு சிக்கலான வழக்கை எடுத்து அதில் அடி ஆழம் முதல் சென்று வழக்கின் உண்மை தன்மையை பல மாதங்கள் ஏன் ஆண்டுகள் கூட கடந்து சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு கூற வேண்டிய நிலையில் பல சூழ்ச்சிகள் நிறைந்து கருமையான இருளுக்குள் சென்று மறைந்து விடுகிறது, இதனால் மன உளைச்சலுக்கு நேர்மையான அதிகாரிகள் உட்ப்படுகின்றனர் என்பதை நம் அறிய வாய்ப்பில்லை
இக்கதையிலும் காவல்துறையின் பணியாற்றும் கதை மாந்தர்களின் வாயிலாக அத்துறையில் சாதக பாதங்கள் குறித்தும் அறியவும் முடிகிறது














அதிரா:




அழகும் அறிவும், நேர்மையும் நிறைந்த காவல்துறையின் உன்னத பணியில் இருக்கும் மங்கை. தன்னுடைய பணிக்கே உரித்தான கர்வமும் இரக்கமும், அலட்டலும் இல்லாத இவளது பாங்கு அழகு
. தான் எடுத்த சிக்கலான வழக்கில் தவித்தாலும் தன்னுடைய விடாமுயற்சியின் பலனை அடைய மர்ம முடிச்சுகளை அவிழ்க்க தீவிரம் காட்டிய நிகழ்வுகள் அருமை. இவளுக்கு உறுதுணையாக இருந்த நட்புக்கள், காவல்துறையினர் இவளது பலம்.
அகிலன்: தனக்கு விருப்பமில்லாத துறையில் திணிக்கப்பட்ட கடமையை கடனே என்று காவல்துறையில் தன்னை புகுத்திக் கொண்டவன். எந்தத் துறையிலும் விருப்பமில்லாமல் பணியாற்றினால் அது பாகற்காயின் கசப்பையே கொடுக்கும், அதுபோன்று தான் நம் நாயகனும் தன் பணியை கசப்புடன் கடந்து வந்தான். தன் உடல் அமைப்பையும் , திறமையையும் மேம்படுத்தாமல் தான்தோன்றியாக எதிலும் ஈடுபாடு இல்லாமல் தன் கடமையாற்றியது கவலையை கொடுத்தது. இருப்பினும் மாற்றங்கள் இவனது வாழ்விலும் மாற்றத்தை கொடுத்தது அந்த மாற்றம் இவனையும் இவனது நிலையையும் உயர்த்தியது


.
அகிலன்

அதிரா
இருவரும் காவல்துறையில் பணியாற்றினாலும் ஏற்ற இறக்கங்கள், முரண்பாடுகள், கருத்தொற்றுமை என அனைத்திலும் வேறுபட்டு இருந்தாலும் காதல் என்ற ஒரு அழகிய பந்தம் இவர்களை திருமண வாழ்வில் அலங்கரித்து வேற்றுமையை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது




.
அகிலன்
அதிராவின் தனிமையையும், ஏக்கத்தையும் புரிந்து அனைத்துமாய் இருக்க வேண்டி துடித்தது நெகிழ்ச்சியை கொடுத்தது. தன்னவளுக்கு இணையாக இல்லாவிடிலும் ஓரளவிற்கு தன் விடாமுயற்சியின் பலனாய் பதவி உயர்வு பெற்று தன்னை மெருகேற்றி கொண்டது அருமை. தன் அன்பை கொடுத்து உண்மையான துணையாய் இவன் நின்ற பாங்கு மனம் கவர்ந்தது.

அதிரா
அனுதாபம் இல்லாமல் தன்னை புரிந்து தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து உண்மையான நேசத்துடன் தனக்காகவே தன் இயல்பை மாற்றிக்கொண்ட உயிரானவனின் உறவுகளுடன் சேர்த்தணைத்த வாழ்க்கையை இவள் வாழ்வது அழகு
.
என்றும் புரிந்துணர்வுடன் கூடிய இதே காதலுடன் வாழ வாழ்த்துக்கள்













.
பார்வதி :மிகவும் மென்மையான அன்புள்ளம் கொண்ட தாய். மகனது எண்ணமும், ஏமாற்றமும் புரிந்தாலும் அவரால் முடிந்த வரை அனுசரித்தும் மகனது பரிவாவான வார்த்தைகளுக்கு தவித்தும் நின்ற இவரது வெகுளிதனம் நெகிழ்வைத்தது.
சந்துரு : உண்மையான நட்புடன் அகிலனுக்கு உறுதுணையாக இருந்ததோடு பல நேரங்களில் அவனது தவறை சுட்டிக்காட்டி வழிநடத்தவும் தவறியது இல்லை.
விஸ்வநாதன் : அதிரா உடனான நட்பு இவனது காதலை விட உயர்ந்தது. தன்னுடைய காதலை ஏற்காவிடிலும் நல்ல நண்பனாக என்றும் மாறாமல் அரவணைத்து தற்போது வரை அழகான உறவாக அலங்கரித்து வாழ்வது அழகு.
கதையின் நிறைவு மனதிற்கு நிறைவை கொடுத்தது.
@இ.பி.கோ. 55 போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி 









Last edited:

