என் சொந்த அனுபவத்துல சொல்றேங்க சிஸ்டர். ஒரு பொண்ணுக்கு கணவன் இல்லைனா பிறந்த வீட்டில் முழுமனசோட ஆதரவு இருக்கானு பார்க்கனும். அதுக்கு அப்புறம் தான் அவங்க வாசப்படியை மிதிக்கனும். இல்லைனா எதிர்காலத்தை கடத்தறது ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிற்கிற மாதிரி தான் இருக்கும். எத்தனை டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும் பொண்ணுங்க அடிமைத்தனம் மாற இன்னும் இரண்டு நூற்றாண்டுகளாவது ஆகனும். அதுவரைக்கும் இங்க விரல் நீட்டி குறை சொல்லும் கூட்டம் திருத்தவே திருந்தாது. இதுக்கெல்லாம் பயந்து தான் நான் எங்க வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சிட்டு இருக்கேன். இங்கே சுத்தி ஊரும், உறவுகளும் இருக்கும்.. அவங்க நிழலில்.. நிழல் படும் தூரம் வரைக்கும் மட்டுமே சுதந்திரம் இருக்கும் மாதிரி இருக்கும். அந்த நிழல் கோட்டைக் கடக்க ஒரு நிமிஷம் தான் ஆகும். இருந்தாலும் அந்த ஒரு நிமிஷ தூரம் கடந்த பிறகு அங்க நம்ம கொத்திட்டு போக கழுகு இருக்குமா, காலைக் கொத்த பாம்பு இருக்குமானு தெரியாது. அதனால பிரவீணா பயப்படுவது நிதர்சனமான உண்மைஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
பொண்ணுங்களோட நிலைமை சீக்கிரமா மாறனும்