Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் விமர்சனம்

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடர்கதையை வாசிக்கும் சகோதரிகள் தங்களது விமர்சனங்களை இதில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
அக்னி தீர்த்தம் 😍😍😍😍😍😍.

வீரபாண்டியன் -தேவசேனா
❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️

சந்திரசேனன்-யமுனா
💞💞💞💞💞💞💞💞💞💞💞

விநாயகம் -சகுந்தலா

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

ஸ்ரீநிதி🥰🥰🥰🥰🥰🥰🥰

ஜெயக்குமாரி, விஷ்னுபிரியா, சங்கீதா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

அருணாசலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கதையின் ஆரம்பம் முதலில் இருந்து நிறைவு வரை எங்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி கதையை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள் சகோதரி😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.

வீரபாண்டியன் உண்மையில் ஊர் போற்றும் மன்னன் தான் அவனது சரி பாதி தேவசேனா மகாராணி தான் இருவரும் அவ்வளவு அழகான ஜோடிகள்💞💞💞💞💞💞💞💞💞.

வீராவின் ஒவ்வொரு செயலும் அதில் உள்ள நன்மைகளும் குடும்பம் மட்டுமின்றி சுற்றியுள்ள மக்களையும் செழுமையாக வைத்திருந்தது🙏🙏🙏🙏

வீரபாண்டியன் மனதின் காதல் தேவதையான தேவசேனாவை பல இன்னல்களைக் கடந்து திருமண பந்தத்தில் இணைந்து இன்று மகிழ்ச்சியுடன் வாழ்வதை காணும் பொழுது நெகிழ்ச்சியாக உள்ளது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

யமுனா சந்திரசேனனுடன் இறுக்கமான மனநிலையில் திருமண பந்தத்தில் இணைந்தாலும் பிறகு புரிதலுடன் வாழக்கையை வாழ்வது மகிழ்ச்சி ☺️☺️☺️☺️☺️☺️☺️.

ஜெயகுமாரி பிள்ளைகளை வீரத்துடனும், விவேகத்துடனும், கருணையுடனும் வளர்த்திருக்கிறார்🙏🙏🙏.

விஷ்னுபிரியா தேவசேனாவை நன்முறையில் வளர்த்து அவளுக்கு பக்க பலமாக வாழ்ந்த தெய்வ தாய்🙏🙏.

அருணாச்சலம் என்ன சொல்ல கதையின் ஆரம்பத்தில் இவருடைய போக்கும் செயலும் கோபத்தை ஏற்படுத்தியது ஆனால் நண்பனால் ஏமாற்றப்பட்டு துரோகத்தால் அவருடைய வாழ்க்கையே புயலில் சிக்கியது போல ஆகிவிட்டது😔😔😔😔😔😔😔, மனைவிக்கு தான் செய்தது அநீதி என்று மனம் வருந்தி அவர் கதறிய பொழுது கண்கள் கலங்க செய்தது🥺🥺🥺 அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மகளுடன் இனியாவது நிம்மதியாக வாழட்டும் என்று நினைத்தபோது மகளின் வாரிசாக மகளின் அரவணைப்பில் வாழ ஆசை கொண்டு இறைவனடி சேர்ந்து மனதை கனக்க செய்து விட்டார்🙏🙏🙏.

ஸ்ரீநிதி தங்க குட்டியின் மழலை மொழியும், அழகிய நடனமும், வீரபாண்டியன் மீது இந்த பிஞ்சு கொண்ட பாசமும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது🥰🥰🥰🥰🥰🥰🥰.

கதையின் நிறைவு மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது☺️☺️☺️☺️.

@Anantha jothi சிஸ்டர் உங்கள் கதையை நான் முதன்முதலில் இப்பொழுதுதான் படிக்கிறேன் தெளிவான எழுத்து நடை சுவாரசியம் துளியும் குறையாமல் கதையை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள்🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
தொடர்கதை நிறைவு பெற்றதும் பிரமாதமான விமர்சனம் அளித்து எம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியமைக்கு இதயப்பூர்வமான நன்றிகள்🙏🙏🙏

தொடர்கதையின் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் அளித்த ஆதரவு அளப்பறியாதது. இறைவனின் ஆசிர்வாதம் இருந்தால் மீண்டும் ஒரு முறை சந்திப்போம்.
 
சக எழுத்தாளர் மோகனா சின்னதம்பியின் விமர்சன பதிவு :

மனம் நிறைந்த நன்றிகள் பேபி, தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவில் எப்போதும் என் எழுத்துக்கள் உங்கள் மனதைக் கவரும் விதமாகவே அமையும்.

♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️

#அக்னிதீர்த்தம்

ஒரு நல்ல குடும்ப கதை அதுவும் கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குற கதை 😍

வீரா அத்தானையும் தேவாவையும் அத்தனை பிடித்து இருந்தது..

கதையில் வந்த ஒவ்வொருத்தரும் அத்தனை நேர்த்தியான கதாபாத்திரம்...

எந்த இடத்திலும் கதை தொய்வில்லாமல் நகர்ந்தது 😍

ஜோ வின் எழுத்து மிக அருமை 😍

இந்த கதையின் தலைப்பு ஏன்னு கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்க இந்த கதை படிக்கலாம்...

எழுத்தும், எழுத்து நடையும் உங்களை முழுதாக படிக்காமல் விட முடியாது...

All the best ஜோ 😍

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍
 
@Sallu mishel (SalmaSalu ) சகோதரியின் அருமையான விமர்சனப் பதிவு :

உங்களின் தொடர் ஆதரவிற்கும், அருமையான விமர்சன பதிவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி

❤️❤️❤️❤️❤️

"அக்னி தீர்த்தம்" அருமையான குடும்பக் கதை..

வீரா, தேவசேனா கதையின் நாயகன் ; நாயகி

வீரபாண்டியன் குடும்ப பொறுப்புள்ள ஆளுமையான மகன்...தம்பிக்கு திருமணம் முடித்து தம்பி மகளை தன் மகளாக நினைத்து பாசம் கொட்டி வளர்க்கிறான்.. குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் திருமணத்தை தவிர்த்து குடும்ப நன்மைக்காக வாழ நினைப்பவன் ... ஒரு கட்டத்தில் தேவசேனா மனைவி ஆகிறாள்... ஆனால் இருவரும் சேர்ந்து வாழ நிறைய தடைகள்.

தேவசேனா தன் அண்ணனுக்காக வீரா குடும்பத்தில் நுழைந்து எதிர்பாராமல் வீராவின் மனைவி ஆகிறாள். அவனுடன் சேர்ந்து வாழ முடியாமல் தவித்து, அவனை விட்டு விலகி ஓடுபவள் அவனது அன்பை புரிந்து கொள்கிறாளா? அவளுக்கும் அருணாச்சலத்திற்கும் என்ன சம்மந்தம்? விஷ்ணு யார்? அவன் ஏன் வீராவின் குடும்பத்தில் குழப்பங்களை உண்டாக்குகிறான்? அருணாச்சலத்திற்கும், வீரா குடும்பத்திற்கும் என்ன பகை? இப்படி பல கேள்விகளுக்கான பதில்கள் இறுதியில் தெரிகிறது. எதிரி கும்பலுக்கு எல்லாம் எப்படி தண்டனை கொடுத்தாலும் பத்தாது...

ஜெயக்குமாரி, யமுனா, சந்திரன், விஷ்ணுப்ரியா, விநாயகம் அவன் மனைவி சகுந்தலா, குறிப்பாக ஸ்ரீ குட்டி ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அருமை 👌👌

மொத்தத்தில் அருமையான குடும்ப நாவல் படித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
 
@Mrs beena loganathan (அப்சரஸ் பீனா லோகநாதன்) சகோதரியின் பிரமாதமான கவிதை நடையுடன் கூடிய விமர்சன பதிவு.

தங்களின் அன்பிற்கும், அழகான விமர்சனத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மச்சி🙏🙏

♥️♥️♥️♥️♥️

அக்னி தீர்த்தம்
ஆசிரியர் : ஆனந்த ஜோதி

இரு பெரிய குடும்பம்
இருவருக்குமான பிரச்சனை
இறப்பும் வஞ்சமும்
இரண்டு குடும்பத்தை பகையாக்க
இனி சேராது என பிரியும்
இவர்களை
இணைக்கும் பாலம் எதுவோ????

பழி தீர்க்க நினைக்கும்
பலி எடுக்கும் வஞ்சமும்
பார்த்தாலும் ஒதுங்கி
பிரிந்து செல்லும் நெஞ்சமும்
பகை பிரிக்கும் மனதை
பாசம் சேர்த்து வைக்குமா???

வீரபாண்டியன்...
பெயருக்கு ஏற்றவாறு
வீரமும் விவேகமும் கொண்ட
பாயும் புலி.....
பார்வையில் தெளிவும்
பேச்சில் நிதானத்தையும்
பார்ப்பவர்களுக்கு தானாக
பணிந்து செல்ல வைக்கும்
மரியாதையும்
கம்பீரமும் கொள்ளை அழகு....
தந்தை வார்த்தை மீறாத தனையன்
தாய் மனதை புரிந்தும்
தவிக்க விட்ட போதும்
தவிர்க்க முடியாமல்
தவிக்கும் மகன்...
தன் தங்கைக்கு
தந்தையாக முன் நின்று
திருப்தியாக அனைத்தும் செய்யும் அண்ணனாக
தன் தம்பி மகளை
தன் மகளாக அன்பு செலுத்தும் பாசமான
பெரியப்பாவாக....
அருமையோ அருமை....

துறு துறுப்பான பெண்
தன்னம்பிக்கை கொண்ட
திடமான பெண்...
தன் மாமன் மகனை
தொடர்ந்து வம்பு செய்யும்
தேவதை இவளோ ......
தேவி இவள் யாரோ????

அருணாச்சலம் .....
இவரின் மூலம் தான்
பகைமை தொடங்குகிறது..
இவரின் மூலம் தான்
பகையும் முடிவு பெறுகிறது.....

தன் மகனுக்கு
தன் அண்ணன் மகளை எடுத்து
தன் அண்ணன் வீட்டில்
தன் மகளை வாழ வைக்க
தங்கையாக ஆசை பட...
தங்கை மனம் அறியாது
தன் மகனுக்கு வேறு
தன்னால் காப்பாற்றபட்ட
தங்கசிலையான பெண்ணை முடிக்க
திட்டமிட....
தங்கை அண்ணன் சண்டையில்
திருமண கனவில் இருக்கும்
இரு உள்ளங்கள் பிரிந்து வாட.....
வீராவின் வீர விளையாட்டு ஆரம்பம்....

மான் ஒன்று புலியுடன் மோதும் அதிரடி ஆட்டம்...
மங்கையின் மனதில்
நஞ்சை வளர்க்கும்
பதுங்கி இருந்த நரி ஒன்று
நட்பாய் கரம் நீட்டி
நடுவில் மறைந்து போக...

உண்மை அறிந்த மான்
உள்ளுக்குள் மருகுவதும்
உரிமையில் தவிப்பதும்
உதறி விட்டு விலகிச் செல்லும் நேரம்
உரிமையை நிலைநாட்ட
உடலும் உள்ளமும்
உரியவனிடம் சேர்ந்து விடுகிறது.....

பெற்றவர்களுக்காக திருமணம்
பெண்ணிற்கு பிடிக்காத
பந்தம்
பிரிந்து செல்ல துடிக்கிறது...
கணவன் மனைவிக்குள்
நடக்கும்
ஆடு புலி ஆட்டம் அற்புதம்....
உன்னை நான் அறிவேன் என கணவன்...
உனக்காக தான் நான் விலகுகிறேன் என
மனைவியும்.....
விலகிச் செல்ல விடமாட்டேன்
விரும்பியே உன்னை அழைக்கிறேன் என
விடாப்படியாக மனைவியை தன்னுடன் நிறுத்தும்
தேவியின் தேவன்....

திருமணத்திற்கு முன்
தன் அண்ணனுக்காக பேசும் தங்கை திருமணத்திற்கு பின்
தன் கணவனுக்காக தூக்கி இருந்து பேசும் தங்கை....
சேர்க்கையும் காலமும் சந்தர்ப்பமும் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பூக்களின் நடுவே
புன்னகை பூக்கும்
பெண்ணின் சிரிப்பு
பேரழகு தேவசேனா.....
மல்லியின் வாசத்திலா
மங்கையின் நேசத்திலா
மன்னன் மயங்கும் இடம்
மனதை மயக்குகிறது....
💟💟💟💟💟💟💟💟
குட்டி பெண் ஶ்ரீ
சிரிப்பில் பெரியப்பாவை
கொள்ளை கொள்ளும்
சுட்டி பெண்....
🧚🧚🧚🧚🧚🧚🧚
ஆடல் போட்டி
திருவிழா
விளக்கு பூஜை
ஊர் காரணம்
பெயர்க் காரணம்
தலைப்பு காரணம்
என்று ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களில் கூட
விளக்கும் போது
ஆசிரியரின்
மெனக்கெடல் தெரிகிறது....

( நாயகி மற்றும் உறவுகளின்
பெயர்களை குறிப்பிடாமல் ஒரு விமர்சனம்.... புரிகிறதா என்று தெரியவில்லை ஆனால் படிக்கும் போது புரியும் ஏன் நான் பெயர் குறிப்பிட வில்லை என்பது)

விறுவிறுப்பாகவும்
வித்தியாசமாகவும் இருக்கும்
விரும்பி படிக்கலாம்....
தேடல் பயணம் சுகமாக முடியும்....

( Tamil novel writers site la போட்டி கதை....)

வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻
 
"அக்னி தீர்த்தம்" தொடருக்காக Sengottuvel Nkl சகோதரி அளித்திருக்கும், அருமையான ஏழாவது விமர்சன பதிவு.

மனமார்ந்த நன்றிகள் சகோதரி🙏🙏

❤️❤️❤️❤️❤️

🙏🌹 வணக்கம் சிஸ்டர்.

அக்னி தீர்த்தம் ஒரு அருமையான கதை.

எத்தனை கதாபாத்திரங்கள் எத்தனை வகையான மனிதர்கள். அனைவரும் பல வகையான குணாதிசயங்கள், பிரித்தரிய முடியாத பாசங்கள் என நல்ல கதையம்சம் சிஸ்டர் .

வீராபாண்டின் தேவசேனா இருவரும் அருமையான ஜோடி♥️♥️
😠😡 அருணாச்சலம் அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும் கேரக்டர்.
வீரபாண்டியனின் அலசி ஆராயும் திறனும் பொறுமையும் அருமை. சரியான சமயத்தில் சரியாக நடந்து கொள்ளுகிறார்.

👍👍எது எப்படியோ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப கதை அமைந்துள்ளது 👌👌

நல்ல குடும்பப் பங்கான கதை. தலைப்பு அருமை சிஸ்டர்.

அக்னி தீர்த்தம்

அக்னியில் குளித்தால் தீர்த்தம் குளிர்விக்கும்.
அக்னி தீர்த்தத்தில் குளித்தால் புண்ணியம் சேர்க்கும்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்🙏🙏
 
Top