Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 110

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்கள் அனைவருடைய பதிலிற்காக காத்திருந்த தன்னைப் புன்னகையுடன் ஏறிட்டதைக் கண்டு குழம்பிப் போனார் கனகரூபிணி.

ஏனென்றால், தனது கேள்வி அவர்களுக்கு முகச் சுருக்கத்தை அளித்திருக்கும் என்று தான் தயங்கிக் கொண்டே அவர்களைப் பார்த்தார்.

ஆனால், அவரது இந்த தயக்கம் எல்லாம் தேவையற்றது என்பதை அவருக்குப் புரிய வைக்கும் நோக்கத்துடன்,”இதை ஏன் இப்படி தயங்கித் தயங்கி கேட்கிறீங்க? உங்களுக்கு எப்போ விருப்பமோ அப்போ ஊருக்குக் கிளம்பலாம்” என்று அவரிடம் சிரித்த முகத்துடன் சொன்னார் கவிபாரதி.

ருத்ராக்ஷியின் வருங்கால மாமியாரான அவர் ஏதாவது நினைத்துக் கொள்வார் என்று தான், இவ்வளவு பார்த்துப் பார்த்துக் கவனமாக விஷயத்தைச் சொல்லிக் கேட்டார் கனகரூபிணி.

அவரோ எதையும் பொருட்படுத்தாமல் இப்படி நிதானமாகப் பதில் சொல்வது அதுவும் தனக்குச் சாதகமாகப் பதிலளிப்பதைக் கண்டு மேலும் வியந்து போய் விட்டார்.

அவரிடம் இருக்கும் சிலப் பிற்போக்குத் தனமான சிந்தனைகளில் இதுவும் ஒன்றாகும்.

தங்களுடைய மாப்பிள்ளையின் தங்கையுடைய திருமண விஷயத்தில் ஏதாவது குளறுபடிகளைச் செய்து விட்டால் அதில் தங்களது மகளான மஹாபத்ராவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ? என்ற பதட்டத்தில் தான் இப்போது வரை சுற்றிக் கொண்டு இருக்கிறார் கனகரூபிணி.

இதையெல்லாம் மருந்துக்கும் யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள் ருத்ராக்ஷியின் வருங்கால கணவனும், மாமியாரும்.

ஆனால், அவருக்குப் பயமாகத் தான் இருந்தது.

அதைத் தான் கண்கள் கலவரம் கொண்டாலும், வாய் தந்தியடித்துக் கொண்டு இருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இவ்வாறு அவர்களிடம் வினவினார் கனகரூபிணி.

அவர்களது மறுமொழியைக் கேட்டப் பிற்பாடு தான், தனக்குள் ஆசுவாச உணர்வு வருவதை உணர்ந்தார்.

“போக விருப்பம்ன்னுச் சொல்ல வரலை ங்க. ஆனால், அங்கே எல்லாம் போட்டது, போட்டப் படியே இருக்கு‌. நாங்க எல்லாரும் நேத்து சொல்லி இன்னைக்குக் கிளம்பி வந்தவங்க இல்லை தான். இதையெல்லாம் முன்னாடியே பேசி வச்சிக்கிட்டது தான்! ஆனாலும்…” என்றவரைத் தடுத்தது ஒரு குரல்.

அது கவிபாரதியுடையது தான்!

“நீங்க இவ்வளவு விளக்கம் கொடுக்கனும்னு இல்லை ங்க. எங்களுக்குப் புரிஞ்சது. நீங்க கேட்டுக்கிட்ட மாதிரியே நாளைக்குக் கிளம்புங்க” என்றார்.

“சரிங்க” என்று கூறி விட்டு அறைக்குப் போனார் கனகரூபிணி.

அவருக்குப் பின்னாலேயே சென்று, தன் அன்னையைக் கட்டிலில் அமர்த்தி,”உங்களுக்குத் திடீர்னு என்ன ஆச்சு ம்மா?” என்று அவரிடம் கனிவுடன் கேட்டாள் மஹாபத்ரா.

அவள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அவளது தந்தையும் அறைக்குள் நுழைந்து விட்டார்.

“ஆமாம் மா. ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்று மனைவியிடம் வினவவும்,

உடனே தன்னுடைய மனதில் இருந்த எண்ணத்தை அவர்களிடம் தயக்கத்துடன் உரைத்தார் கனகரூபிணி.

“ப்ச்! இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு உனக்கு யார் கிளாஸ் எடுக்கிறா ம்மா?” என்று அவரது கணவரான பிரியரஞ்சன் கேட்டு விட,

“அது இல்லை ங்க. நம்மளோட பொண்ணு வாழ்க்கைன்னு வரும் போது எனக்குப் பயமும் வந்துருது. நானும் அசடாக நடக்க ஆரம்பிச்சுடறேன்” என்று அவரிடம் அசடு வழியக் கூறியவரை முறைப்புடனும், பாவமாகவும் பார்த்தார்கள் அவருடைய கணவனும், மகளும்.

“என்ன ரெண்டு பேரும் போட்டிப் போட்டுட்டு என்னை முறைக்கிறீங்க?” என்று அவ்விருவரிடமும் அச்சத்துடன் வினவினார் கனகரூபிணி.

“அப்பறம் எங்களை என்னச் செய்யச் சொல்றீங்க ம்மா?” என்று அன்னையிடம் சலிப்புடன் கேட்டாள் மஹாபத்ரா.

அவரோ,“என் பயம் உங்களுக்குச் சலிப்பாக இருக்கா டி?” என்று அவர்களிடம் கோபத்துடன் கேட்க,

“அப்படி இல்லை ம்மா. ஆனால் நீ பயப்பட்றது தான் தேவையே இல்லைன்னு சொல்ல வர்றோம்” என்று தனது மனைவியிடம் சாந்தமாக உரைத்தார் பிரியரஞ்சன்.

“ஏன் ங்க?” என் அவரிடம் கேட்டார் கனகரூபிணி.

“அந்தப் பொண்ணு ருத்ராக்ஷியோட புகுந்த வீட்டாளுங்களைப் பார்த்தால் தங்களோட கண்ணில் எந்நேரமும் விளக்கெண்ணெயை ஊத்திட்டுக் குறை கண்டுபிடிக்கிறவங்க மாதிரியாக உனக்குத் தெரியுது?” எனக் கேட்டார் அவரது கணவர்.

“ஊஹூம்!” என்று கூறியது மட்டுமில்லாமல் அதை மறுத்து தலையையும் அசைத்தார் அவருடைய மனைவி.

“அப்பறம் எதுக்கு ம்மா இதெல்லாம் யோசிச்சு நீங்களே உங்களைப் போட்டுக் குழப்பிக்கிறீங்க?” என்று அவரிடம் வினவினாள் மஹாபத்ரா.

“எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் டி!” எனப் பதில் சொன்னார் கனகரூபிணி.

“ம்மா! ஒரு தாயாக உங்க மக மேலேயும், அவளோட கல்யாண வாழ்க்கை மேலேயும் உங்களுக்கு அக்கறை இருக்கிறதில் தப்பே இல்லை. ஆனால், நடக்காத ஒரு விஷயத்துக்காக இப்படி நடந்துக்கிறது உங்களோட மனசுக்கு அமைதியைக் கொடுக்காது. அதை மட்டும் புரிஞ்சுக்கோங்க!” என்று அவருக்கு விளக்கிக் கூறினாள் அவருடைய மகள்.

“ம்ம்” என்றவரிடம்,

“ம்மா! உங்க மாப்பிள்ளையோட வீட்டாளுங்க, அதான், அவரோட அப்பா, தங்கச்சி, அவங்ககிட்ட மட்டும் இல்லாமல், ருத்ராக்ஷியோட புகுந்த வீட்டு ஆளுங்களுக்காகவும் நீங்க எப்பவும் கவனமாகவே இருக்கனும்ன்னு அவசியம் இல்லை. உங்கப் பொண்ணோட வாழ்க்கை ஒன்னும் அதில் இல்லை. நானும், காஷ்மீரனும் வாழப் போகிறதில் தான் இருக்கு. நாம இங்கே வந்தது நாம எல்லாரும் குடும்பமாக சேர்ந்து இங்கே இருக்கிறவங்களை ருத்ரா அண்ட் ஸ்வரூபனோட கல்யாணத்துக்கு இன்வைட் செய்யத் தானே? அந்த வேலை தான் முடிஞ்சதே? அப்போ அவங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பிடலாம். அவ்வளவு தான்!” என்று கூறிய மகளைப் பின் தொடர்ந்து,

“அதே தான்! இதுக்குப் போயிட்டு ஏன் இவ்வளவு தயங்கிற நீ?” என அவரது கையை மிருதுவாகப் பற்றிக் கொண்டார் பிரியரஞ்சன்.

அதைக் கேட்டுத், தான் தெளிவு பெற்று விட்டதைப் போன்று அவர்கள் இருவரையும் பார்த்து மெல்லியதாகப் புன்னகை புரிந்தார் கனகரூபிணி.

“இப்போ உங்க முகத்தில் குழப்பத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. நாளைக்குச் சாயந்தரம் ஊருக்குப் போகனும்ல? சோ, இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க” என அவரை உறங்க வைத்து விட்டுத் தந்தையும், மகளும் வெளியே வந்தனர்.

அவர்களைக் கேள்வியாகப் பார்த்த அனைவரிடமும் உண்மையைக் கூறி விட்டார்கள் இருவரும்.

அதைக் கேள்வியுற்றதும்,”நீ சொன்னது நூத்துக்கு நூறு சரிம்மா! பொண்ணைக் கொடுத்துட்டா என்னாகுமோ? ஏதாகுமோன்னு பதறிட்டு இருக்கனும், அவளோட புகுந்த வீட்டுக்காரங்க மட்டுமல்லாமல் எல்லாரையும் நினைச்சுத் திக்குத் திக்குன்னுட்டே இருக்கும்ன்னுச் சட்டம் ஏதாவது இருக்கா என்ன? நீங்க அப்படித் தான் இருக்கனும்னு நாங்களும் எதிர்பார்க்க மாட்டோம். நீங்களும் தயவு செஞ்சு அப்படி நடந்துக்காதீங்க!” எனத் தன் சம்பந்தியிடமும், மருமகளிடமும் உறுதியாக கூறினார் சந்திரதேவ்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே அதை ஆமோதித்தனர்.

அதன் பின்னர், கனகரூபிணி கேட்டுக் கொண்டார் என்பதாலும், மற்றவர்களுக்கும் வேலை இருப்பதாலும் மறுநாளே அந்த ஊரிலிருந்து கிளம்புவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருந்தார்கள் ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தினர்.

- தொடரும்

இதை ஏன் இங்கே இவ்வளவு அழுத்தி ஒரு யூடியில் சொன்னேன்னா, இன்னும் பொண்ணைக் கொடுத்தவங்களில் ஒரு சிலர் இப்படியான நிலைமையில் தான் இருக்காங்க. அதனால் அந்த நிலை மாறனும்னு எனக்கு ஆசை. அதான், இந்த விஷயத்தை விரிவாக எழுதி இருக்கேன். மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களும், பொண்ணு வீட்டு ஆளுங்களும் ஒருத்தருக்கொருத்தர் சமமான மரியாதையைக் கொடுத்
துக்கிட்டாலே போதும் எல்லாமே சரியாக இருக்கும்! இதான் என்னோட கருத்து ஃப்ரண்ட்ஸ்.
 
உண்மைதாங்க எங்க வீட்டுல எங்க அம்மாவும் மாமியாரும் ரொம்பவும் close aah இருக்காங்க. பார்க்கும் யாரும் திருஷ்டி சுத்திப் போடுங்கனு சொல்வாங்க.
 
Last edited:
உண்மைதாங்க எங்க வீட்டுல எங்க அம்மாவும் மாமியாரும் ரொம்பவும் close aah இருக்காங்க. பார்க்கும் யாரும் திருஷ்டி சுதந்திரப் போடுங்கனு சொல்வாங்க.
Ama sis. Adha kandipa senjudunga. Thank you so much ❤️
 
Top