Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 19 2

Admin

Admin
Member“ஹே லூஸு... என்னடி பண்ற?” என்றபடி ஹரி வந்து மீனாவை பிடித்துக்கொண்டான். அதற்குள் மீனா ஒரு முறை நீரில் முழ்கி எழுந்து இருந்தாள்.

“பயப்படாத மீனா ஒன்னும் இல்லை...” என்றபடி ஹரி அவளை அழைத்துக் கொண்டு மேலே வர பார்க்க....
“இங்க வந்தா... நான் திரும்பத் தண்ணியில தள்ளுவேன்.” என்றபடி தள்ளுவதற்கு ஹரிணி தயாராக நின்றாள்.

மீனாவுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது. அவள் பயத்தில் ஹரியை இறுக்கி பிடித்துக் கொண்டு இருந்தாள். அவளின் பயத்தை நன்றாக உணர்ந்த ஹரி “ஒன்னும் இல்லை... நாம கொஞ்ச நேரம் கழிச்சு போவோம்.” என்றவன், அவளை நீரில் மெதுவாக இழுத்தபடி சென்றான்.

“நீயும் நீச்சல் அடிக்கிறியா....” என்ற ஹரி மீனாவை தன் முதுகில் சுமந்து கொள்ள... அவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள். அவளோடு சேர்ந்து மெதுவாக நீந்தினான்.
மேலே இருந்து ஹரிணி அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தாள். ஹரிக்கு அவள் ஏன் இப்படிச் செய்கிறாள் எனப் புரியாமல் இல்லை....

நடுவில் இருந்த கல்லில் மீனாவை உட்கார வைத்த ஹரி “இங்கயே இரு வந்திடுறேன்....” என அவளை அங்கே விட்டுவிட்டு மேலேறி வந்தவன், ஹரிணியைத் தூக்கி தண்ணீரில் போட....

நீரில் முழ்கி எழுந்தவள் “எனக்கு ஒன்னும் பயமில்லை....இப்ப உன் ஆளு என்ன ஆகிறா பாரு?” என மீனாவை நோக்கி செல்ல....

“ஹரி சீக்கிரம் வாங்க... அவங்க என்னைத் தள்ளி விட வராங்க...” மீனா கத்த.... ஹரி மீனாவிடம் விரைந்து நீந்தி சென்றான். அவன் அருகில் வந்ததும் மீனா நீரில் தாவி அவனை அனைத்துக் கொண்டாள்.

அவர்களைப் பார்த்து ஹரிணி பொங்கி சிரித்தவள், திரும்பி விக்ரமை பார்க்க... அவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

அதன் பிறகு அங்கிருந்த கடற்கரைக்குச் சென்றவர்கள் அங்கேயும் நீரில் நன்றாக ஆடினார்கள். இப்போது ஹரியும் மீனாவும் அவர்களாகவே ஒட்டிக்கொண்டு இருந்தனர்.

“எப்படி நம்ம ட்ரீட்மென்ட்?” ஹரிணி இல்லாத காலரை தூக்கி விட....

“நல்லா தான் இருக்கு... ஆனா உங்க அண்ணன் அண்ணி ஏற்கனவே மாறி இருக்க மாதிரி தான் இருக்கு...” விக்ரம் சொல்ல... ஹரிணி திரும்பி அவர்களைப் பார்த்தாள்.

மீனாவை அங்கிருந்த வலை உஞ்சலில் படுக்க வைத்து ஹரி ஆட்டிக்கொண்டு இருந்தான். இருவரும் எதோ பேசி சிரித்தபடி இருந்தனர்.

“எப்படியோ நல்லா இருந்தா சரி தான்.” என ஹரிணி நினைத்துக் கொண்டாள்.

“எனக்கும்...” என ஹரிணி உஞ்சலை காட்ட விக்ரம் அவளை அழைத்துக்கொண்டு சென்றான். அங்கே அது போல் நிறைய மரத்துக்கு மரம் கட்டி வைத்து இருந்தனர். குழந்தைகள் பக்கத்திலேயே மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டு இருந்தனர்.

ஹரியை தாண்டி செல்லும் போது... வேண்டுமென்றே ஹரிணி அவனை இடிக்க... ஹரி மீனா மீது சென்று விழுந்தான்.

அவனால் உடனே எழுந்துகொள்ள முடியவில்லை.... அதனால் புரண்டு மீனாவின் பக்கத்தில் படுத்து “எருமை கண்ணை எங்க வச்சிட்டு வர....” அவன் ஹரிணியைப் பார்த்து கேட்க....

இடுப்பில் கைவைத்து முறைத்த ஹரிணி “இப்ப நான் தள்ளி நீ விழுந்த....” என்றதும், ஹரி சிரிக்க....

“நான் இடிச்சதும் இது தான் சாக்குன்னு போய் விழுந்திட்டு பழியை என் மேல போடுறான்.” ஹரிணி சொல்ல....

“நான் தான் அவன் கேடின்னு சொன்னேன் இல்ல மா .... நீ தான் உங்க அண்ணன் நல்லவன்னு நம்பிட்டு இருந்த.... வா நாம போவோம்.” என விக்ரம் அவளைச் சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு சென்றான். மீனா அண்ணன் தங்கை அடிக்கும் லூட்டியை பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

நன்றாக இருட்டும் வரை அங்கே இருந்தவர்கள் பின்பு அவரவர் அறைக்குத் திரும்பி குளித்து உடைமாற்றி, இரவு உணவுக்கு வெளியே சென்றனர்.

நீரில் அதிக நேரம் ஆடியதால்.... எல்லோருமே நல்ல பசியில் இருந்தனர். உணவை நன்றாக ஒரு கட்டி கட்டிவிட்டு திரும்ப ரெசார்ட் வந்தவர்கள், சிறிது நேரம் அங்கிருந்த பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

“குட் நைட் சொல்லி படுக்கச் செல்லும் போது.... “நீ எங்களோட இன்னைக்குத் தூங்கலாம் வரியா...” ஹரிணி அனியிடம் கேட்க.... இன்னும் சிறிது நேரம் அத்வியோடு விளையாடலாம் என்ற எண்ணத்தில் அவளும் சரி என்றாள்.

குழந்தைகளை அழைத்துக்கொண்டு விக்ரம் தம்பதியர் கீழே இருந்த அறைக்குச் செல்ல... ஹரியும் மீனாவும் முதல் தளத்தில் இருந்த தங்கள் அறையை நோக்கி சென்றனர்.

ஹரி பால்கனியில் நின்று கடலை பார்த்துக்கொண்டு இருக்க... மீனா அதற்குள் குளியல் அறைக்குள் சென்று இரவு உடையை மாற்றிவிட்டு வந்தாள்.

“உங்களுக்கு இந்த இருட்டில எதாவது தெரியுதா.....”

“இல்லை... ஆனா இங்க நின்னுட்டு இந்தக் கடல் அலையோட சத்தம் கேட்கவே நல்லா இருக்கு... நீயும் வா...” ஹரி அழைக்க.... மீனா மறுத்துவிட்டு கட்டிலுக்குச் சென்றாள்.

ஹரியும் உள்ளே வந்து கதவை அடைத்துவிட்டு பார்க்க... மீனா கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள்.

ஹரி அவளருகில் படுத்து அவளைத் தன் பக்கம் திருப்பி “என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

“எனக்கு இன்னைக்கு நைட் தூக்கமே வராது...”

“ஏன்?”

“இவ்வளவு பக்கத்தில கடல் இருக்கு... அதோட அலை சத்தம் வேற இப்படிக் கேட்கும் போது... எப்படித் தூக்கம் வரும்? நாம தூங்கும் போது தண்ணி உள்ள வந்திட்டா....”

அவளின் பயத்தைப் பார்த்து ஹரிக்கு சிரிப்பாக வந்தது. சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்தவன் “நாம தூங்க வேண்டாம்.” என்றான்.

இவன் என்ன சொல்கிறான் என்பது போல மீனா பார்க்க.... ஹரி விளக்கை அணைத்துவிட்டு மெல்ல அவளை ஆக்ரமிக்க.... மறுக்கத் தோன்றாமல் மீனா அவனுடன் கலந்தாள்...

வெளியே எப்படி ஓயாத அலையோ அப்படி உள்ளேயும் ஓயாத காதல் அலை அடிக்க.... பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இணைந்த இந்தத் தம்பதிகளின் வாழ்க்கை இனியாவது இனிக்குமா.....

 
SINDHU NARAYANAN

Well-known member
Member


:love: :love: :love:

ஹரியும் மீனாவும் ஒன்னு சேர்ந்துட்டாங்க...

காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படர்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாதே நகிலா ஓ ஓ
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member


சூப்பர், ரம்யா டியர்
ஹா ஹா ஹா
சொன்னோமில்லே
ஹரிணியுடன் ரெசார்ட் போனால்
நல்லது நடக்கும்ன்னு
நடந்திடுச்சா, ஹரிஹரன்?
 
Last edited:
Top