Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 2

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 2

நண்பர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு விடுதியில் தன்னறையில் வந்து தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். தலையணை அருகில் இரண்டு, மூன்று புத்தகங்கள் கிடந்தன. போர்வை விரிப்பு கூட மடிக்கப்படாமல் இருந்தது. அறை முழுவதும் புத்தகங்களும் நோட்டுகளும் ஏதேதோ காகிதங்களுமாக இருந்தது.

கட்டிலில் விழுந்தவளுக்கு கடைசியாக பார்த்த அன்னையின் முகம் கண்ணுக்குள் விரிந்தது. அன்னையின் கத்தலும் அதன் பிறகு வலியின் முணகலும், அதை தொடர்ந்த சம்பவங்களும் நினைவிற்கு வந்தன.

இதற்கு மேல் நடந்தவைகளையே நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை என்று உணர்ந்தவள், அந்த நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்று நினைத்தாள்‌. கட்டிலிலே கிடந்த புத்தகங்களை பார்த்தாள், ஏனோ மனம் அதன்‌ பக்கம் திரும்பவில்லை.

அறையிலே அடைந்து கிடக்க பிடிக்கவில்லை. சட்டென்று எழுந்து தலையை கோதியவள், யுனிவர்சிட்டியின் நூலகத்திற்கு சென்றாள்.

ஒவ்வொரு நூலடுக்குளாக பார்த்துக் கொண்டே வந்தாள். ஒன்றையும் படிக்கும் மனநிலை வரவில்லை. கார்ல் மார்க்சில் இருந்து டால்டாய்ஸ் வரை படித்தாயிற்று‌. இன்னும் இன்னும் என தேடல் தான் அவளுள் தோன்றுகிறதே தவிர, படிப்பதை நிறுத்த தோன்றவில்லை அவளுக்கு.

கல்கி அவர்களின் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தை கண்டு, அவளது கால்கள் தன்னைப் போலவே நின்றன. அப்பாவின் நியாபகம் அனிச்சையாய் வந்தது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை அவர் தானே இவளுக்கு அறிமுகப்படுத்தியது‌.


"அப்பா… அப்பா…" என சக்தி கத்திக் கொண்டே அரண்மனை முழுவதும் ஓடிக் கொண்டிருந்தாள்.


ஏதோ குறும்புத்தனம் செய்துவிட்டு, அன்னை கொடுக்கும் தண்டனைக்கு பயந்து, தந்தையைத் தேடி ஓடிக் கொண்டிருந்தாள் அந்த மொட்டு.

"அப்பா…" என் கத்தியவாறே, அந்த அரண்மனையிலேயே இருந்த பெரிய நூலகத்திற்கு வந்து சேர்ந்தாள் சக்தி.

இராஜாதித்யர் பெரும் புத்தகப்பிரியர்! அவர் அப்பா, தாத்தா என அனைவரும் புத்தகம் பிரியர்களாகவே இருந்தனர். ஆகையாலே தங்களது அரண்மனையிலேயே ஒரு பெரும் பகுதியை நூலகமாக ஒதுக்கி வைத்திருந்தனர்.

ஈசி சேரில் சாய்வாக அமர்ந்து, கல்கி அவர்கள் எழுதிய சிவகாமி சபதம் புத்தகத்தினை படித்துக் கொண்டிருந்தார் இராஜாதித்யர்.

"அப்பா..‌." எனத் தாவி ஓடி வந்து இராஜாதித்யரின் மேலே ஏறிக் கொண்டாள் சக்தி.

"என்னடா?" என இராஜாதித்யர் கனிவுடன் கேட்க,

"அப்பா அம்மா அடிக்க வராங்க…" என கோள் மூட்டினாள் சக்தி.

"அம்மாவை அடிக்க வேண்டாம்னு சொல்லிடறேன். ஆனா அம்மா அடிக்கற அளவுக்கு நீங்க என்ன பண்ணிங்க?" என்று இராஜாதித்யர் அவளிடம் கேட்க, திருதிருவென விழித்தாள் சக்தி. அவள் கள்ள விழிகளே காட்டிக் கொடுத்தது அவள் ஏதோ சுட்டித்தனம் செய்திருக்கிறாளென்று.

"அது வந்து… அப்பா… அம்மா…" என் இழுத்துக் கொண்டிருந்தாள் சக்தி. அதற்குள் மூச்சு வாங்க அங்கு வந்து சேர்ந்தார் பர்வதம்.

"அப்பா அம்மா வந்துட்டாங்க…" என்று கத்தியவாறே இராஜாதித்யருடன் ஒட்டிக் கொண்டாள் சக்தி.

"அவளை இறக்கி விடுங்க…" என் பர்வதம் தன் கணவரிடம் சொல்ல, மகளை மடியோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு முடியாது எனும் விதமாக, குறும்பு சிரிப்புடன் பார்த்தார் இராஜாதித்யர்.

"இப்போ அவளை விடப் போறிங்களா இல்லையா?" என்று பர்வதம் கண்டிப்புடன் கேட்க‍,

"எதுக்கு பர்வதம் குழந்தையை அடிக்க வர்ற?" என்று கேட்டார் இராஜாதித்யர்.

"உங்க பொண்ணு ஸ்கூல்ல இரண்டு பொண்ணுங்களை அடிச்சி வச்சிருக்கா… ஒரு பையனை கடிச்சி வச்சிருக்கா… பத்தாததுக்கு டீச்சரையே எதிர்த்து பேசறாளாம்! ஸ்கூலுக்கு போனா ஒரே கம்ப்ளெய்ன்ட்டா சொல்லறாங்க இவ மேல…" என்று குற்றப்பத்திரிகை வாசித்தார் பர்வதம்.

"என் பொண்ணுனு தெரிஞ்சுமா குறை சொன்னாங்க??" இராஜாதித்யர் பொங்கி எழ,

"உங்க பொண்ணுன்றதால தான் கம்மியா சொன்னாங்க…" என இடுப்பில் கைவைத்தவாறே அவரை முறைத்தபடி சொன்னார் பர்வதம்.

"அதனால என்ன பர்வதம்? குழந்தைங்கனாளே கொஞ்சம் வாலுதனம் பண்ண தானே செய்வாங்க…" சப்பை கட்டு கட்ட முயன்றார் இராஜாதித்யர்.

"நல்லா இருக்குங்க உங்க நியாயம்! என்கிட்ட பொண்ணுக்கு ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்திடாதனு சொல்லிட்டு, அந்த பக்கமா செல்லம் கெடுத்து இவளை குட்டிச் சுவராக்குறதே நீங்க தான்!" என்று இராஜாதித்யரையே கடிந்தார் பர்வதம்.

"அட இதுக்கெல்லாம் கோபப்படலாமா பர்வதம்?" என அவரின் கையை பிடித்து இழுத்த இராஜாதித்யர், ஈசி சேரின் கைப்பகுதியில் பர்வதத்தை அமர வைத்தார். அதன் பின் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தது அந்த சிறு குடும்பம்.


அழகானதொரு குடும்பம் யார் கண்பட்டு அலங்கோலமாய் போனதோ?

தந்தையின் நினைவில் கண்ணீர் வருவேனென்று சொன்னதும், அவசரமாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, சிவகாமியின் சப்தத்தை நோக்கி கை நீட்டினாள். கொஞ்சம் உயரமாக அந்த புத்தகம் இருந்ததால், கால் நுனியில் நின்று எட்டி எடுக்க முயற்சி செய்தாள்.

சட்டென்று ஒரு உருவம் அவளின் பின்னே வந்து, சிவகாமி சப்தத்தை கையில் எடுத்தது. வேகமாக அவள் திரும்பி பார்க்க, ஆறடியில் ஒருவன் அவளின் பின்னே நின்றுக் கொண்டிருந்தான். புத்தக அடுக்கோடு இவள் ஒட்டிக் கொண்டாள்‌. சிவகாமி சப்தத்தை எடுத்து விட்டு, ஒரு ஏளன பார்வையோடு அவன் சென்றுவிட்டான். பெருமூச்சை விட்டாள் இவள்.

சென்று கொண்டிருப்பவனை பார்வைக்கு கூட வலிக்காமல் முறைத்தாள். அதற்கு மேல் முறைக்க அவளால் முடியாது. அந்த அவன் ஆதிரையன். அவளுடன் ஒன்றாக படித்தவன்.

சக்தியும் ஆதிரையனும் பன்னிரண்டாவது வரை ஒன்றாக தான் இராவணத்தீவு அரசு பள்ளியில் படித்தனர். வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு இராவணத்தீவுவின் அரசு சார்பாக கல்வி இலவசமாக வழங்கப்படும். இது சக்தியின் தந்தை இரஜாதித்யர் தொடங்கி வைத்த பல நல்ல விசயங்களில் ஒன்று. சக்தி தன் தேவைக்காக படித்தால் என்றால், ஆதிரையன் பெருமைக்காக படித்தான். இருவருக்குள்ளும் அறிவிக்கப்படாத போட்டி எப்பொழுதுமே நிலவிக் கொண்டே இருந்தது. சக்தி தன் கல்விக்கான கட்டணத்தை மற்றவர்களிடம் கேட்டு பெற தயங்கினாள்; அவமானமாக உணர்ந்தாள். பள்ளியில் முதல் மூன்று இடங்களில் வந்து, அரசு தரும் உதவி தொகையில் படிப்பதன் மூலம், அவளின் தந்தையே அவளுக்கு செலவழிப்பது போல் உணர்ந்தாள்.

ஆதிரையனும் இராவணத்தீவில் நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவன் தான். பணப்பஞ்சம் என்பது அவர்களின் பரம்பரையே அறிந்திராத ஒன்று. ஆனாலும் ஆதிரையன் அரசு பள்ளியிலும், அது தரும் ஊக்கத் தொகையிலும் படிப்பதையே பெருமையாக நினைத்தான். அரசின் ஊக்கத் தொகையை பெறுவது அவனுக்கு மட்டுமல்ல அவ்வூரில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்குமே பெருமையான விசயம் தான். ஆதலால் அனைவருமே அதற்காக போட்டி போட்டு படிப்பார்கள்.

எப்பொழுதும் ஆதிரையனுக்கும் சக்திக்கும் மதிப்பெண்களில் முட்டிக் கொள்ளும். ஒரு முறை இவன் முதல் மதிப்பெண் எடுத்தால், மறுமுறை அவள் எடுப்பாள்; அது ஆதிரையனுக்கு உவப்பானது அல்ல. தான் மட்டுமே முதல் இடத்தை பெற வேண்டுமென நினைப்பவனுக்கு சக்தி வலிமையான ஒரு போட்டியாளர். பெரும்பாலான நேரங்களில் அவளின் புத்திசாலித்தனம் இவனுக்கு எரிச்சலாய் இருக்கும். எது எப்படி இருந்தாலும் இறுதி தேர்வில் இருவரும் ஒரே மதிப்பெண்களை பெற்று சூழ இருப்பவர்களை ஆச்சர்யத்தில் முகிழ்த்தினர்.

ஆதிரையன் தன் மதிப்பெண்ணிற்கு மருத்துவம் பயில விண்ணப்பித்தான். நிச்சயம் சக்தியும் மருத்துவத்திற்கு தான் விண்ணப்பிப்பாள் என அவன் எதிர்பார்க்க, அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி அவள் பி.ஏ. காமர்ஸ் படிக்க விண்ணப்பித்தாள். இருந்தாலும் இருவரும் ஒரே பல்கலைகழகத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகையால் இது போன்று எப்பொழுதாவது இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை வாய்க்கும்; அப்பொழுதெல்லாம் ஏளனமாய் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வது அவன் வழக்கம். அதையெல்லாம் இவள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.

சிவகாமியின் சபதம் கிடைக்காததால் ஏமாற்றமாய் அவள் திரும்ப, அங்கு வேறு நாட்டு பெண் ஒருத்தி வந்து, அவள் வைத்திருந்த சிவகாமி சபதம் புத்தகத்தை வைக்க, மகிழ்வுடன் அதை கையில் எடுத்துக் கொண்டாள் சக்தி.

சிவகாமி சபதத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், ஹாஸ்டலிற்கு செல்ல விருப்பமில்லாது, கல்லூரியிலே அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவிற்குள் சென்றாள். மாணவர்கள் அங்காங்கே கூட்டமாகவும் தனித்து அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர், சிலர் பேசிக் கொண்டிருந்தனர். எப்படியோ மாணவர்களின் தலை குறைவாக தென்பட்ட ஓரிடத்தில் அமர்ந்தவள் மெல்ல மெல்ல புத்தகத்தோடு ஒன்றிப்போனாள்.

வெயில் இறங்கிக் கொண்டே வந்து ஆதவன் சாயும் நேரம் வந்தது. இன்னும் அவள் புத்தகத்திலிருந்து கண்களை பிரித்தாளில்லை! அவளின் முன்பு ஷூ அணிந்த இரண்டு கால்கள் வந்து நின்றன. அப்பொழுதும் அவள் நிமிர்ந்தாள் இல்லை. வந்தவன் செருமி பார்த்தான்; பதிலில்லை அவளிடம்.

நாகநந்தியும் சிவகாமியும் பேசிக் கொள்ளும் இடத்தை விறுவிறுப்பாக படித்துக் கொண்டிருந்தாள் சக்தி. சட்டென்று அவள் கையிலிருந்த புத்தகம் பறிக்கப்பட்டது. விழுக்கென்று அவள் நிமிர்ந்தே பார்க்க, அங்கே ஆதிரையன் நின்றுக் கொண்டிருந்தான். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவனை பார்த்தாள்.

"மணி ஆறாக போகுது… இங்க இருந்த ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் எப்பவோ போய்ட்டாங்க… இனியும் நீ இங்கையே உக்காந்திருந்தா அது உனக்கு தான் நல்லதில்லை." என்றுவிட்டு அவன் கிளம்ப, பட்டென்று எழுந்துக் கொண்டாள் சக்தி.

"என் புக்…" என்று இழுத்தாள், அவன் பின்னோடு சென்று.

அவன் இவளை திரும்பி பாராமலே புத்தகத்தை நீட்டிக் கொண்டே செல்ல, அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து, அந்த புத்தகத்தை அவள் வாங்கினாள்.

'திரும்பி குடுத்தா என்ன குறைஞ்சி போய்டுவானா?' என்று மனதிற்குள் அவனை திட்டிய படியே அவனோடு நடந்தாள் சக்தி.

அவனின் பின்னால் நடந்து வர அவளுக்கு பிடிக்கவில்லை. அதற்காக அவனை முந்திக் கொண்டு நடப்பது வீம்பாக படும். இயல்பாய் நடப்பது போல் அவனோடு சேர்ந்து நடந்தாள் சக்தி.

தூரத்தில் இருந்து பார்த்தால் காதலர்கள் ஒன்றாய் நடந்து வருவது போன்றொரு தோற்றம் இருவருக்கும். எத்தனை கண்கள் அதை பார்த்ததோ? எத்தனை ஒற்று செய்தியினை கொண்டு சென்றதோ?
 
யார் அந்த ஒற்றன்? 🤔🤔🤔🤔.

மகாராஜாவுக்கு செய்தி பறந்துவிட்டதோ?

சக்தியின் மலரும் நினைவுகள் அழகாகவும் அதேசமயம் வலியையும் கொடுக்கிறது😣😣😣.

ஆதிரையன் கொஞ்சம் கர்வம்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் வளந்தவனே சிவகாமிய பறிச்சதும் இல்லாம அதைய இன்னொரு பொண்ணு மூலமா தர்றியே என்னா விசயம்,??.
அதேபோல பார்க்குலையும் புக்கை புடுங்குறே😏😏😏😏😏.
ஏன் பார்க்குல இருந்து எல்லாரும் கிளம்பியாச்சு ன்னு வாயத் தொறந்து சொல்ல வேண்டியதுதானே.
கண்காணிப்பு பலமா இருக்கும் போல.
அப்ப ஆதி தான் இங்கன🙄🙄🙄🙄🙄.
பொழிலுக்கு தான் அந்த மகராசாவா?🙄🙄
 
ஆதிரையன் கொஞ்சம் திமிர் இருக்கு 😕😕 ஆனால் கொஞ்சம் நல்லவன் மாதிரியும் தெரியுது 🧐 🧐 🧐 🧐

சக்தி இவனுக்கு ஜோடியா இல்லை ராஜாவுக்கா 🤔🤔🤔🤔

பொழிலரசி கதையில் வருவாளா 😏😏😏

இப்போ ராஜாவுக்கு இவங்களை பத்தி உளவு செய்தி போயிடுச்சு 🤗 🤣 🤗 🤣 🤗 அதோட எதிர் வினை என்னவோ🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Top