Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
கதை விறுவிறுப்பாக போகுது, சூப்பர் காலையில இந்த எபிசோட வாசிக்கிறது காஃபி வித் ஆராதனா-ன்னு சொல்ற மாதிரி சூப்பராக இருக்கு ஆராதனா. இப்ப சாலாவோட பதில் என்னவா இருக்கும்னு நான் தலையைப் பிச்சுக்காம யோசிக்கலாம்னு நினைக்கிறேன். நாளைக்குள்ள இதுக்கு பதில் கிடைச்சிடும் இல்லையா. கதையில் படிக்கிறப்ப ஹஸ்பென்டை விட்டு வர்றது சரியான முடிவுதான். ரியல் லைஃப்லயும் இதுதான் சரியாக இருக்கும். ஆனால் எனக்கு சில டவுட்ஸ் இருக்கு. இவுங்களுக்கு தேவைனா வெளில தொடர்புகள் வச்சுக்கிறாங்க, அப்புறம் எத்தனை வருஷம் ஆனாலும் மன்னிப்பு கேட்டு வீட்டோட சேர்ந்திருக்கிறாங்க. ஆனால் அத்தனை வருடங்களும் அந்தப் பெண்கள் தன்னோட உடல் உணர்வுகளையும் மன உணர்வுகளையும் அடக்கிக்கிட்டே பிள்ளைகளுக்காக வாழுறாங்க. நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன். இந்த உடல் உணர்வுகளை அடக்கும்போது பல விதமாக அது நோயாக வெளிப்படும். அதாவது உடல் வெப்பமாக, இறுக்கமாக, பல வித நோயாக இல்லைன்னா மன அழுத்தமாக கூட வெளிப்படுது. இது பெண்கள் பலரும் அனுபவிக்கிற விஷயம்தான். ஹஸ்பென்ட் வெளிநாட்டுல வேலை செய்றவுங்களும் இதைத்தான் அனுபவிக்கிறாங்க. அது பரவாயில்லை. அந்த பிரிவை அவுங்களோட பணம் ஈடு கட்டிடுது. ஆனால் இந்தப் பிரிவு கள்ளத் தொடர்பினால ஏற்படுற இந்த பிரிவு பெண்களை உடல்ரீதியாகவும் ரொம்பவே பாதிக்குது. சில வருடங்கள் கழித்து அந்த ஆண் திரும்பவும் குடும்பத்தோட சேர்ந்தாலும் அந்தப் பொண்ணால அந்த ஆணோட சேர்ந்து நல்ல குடும்ப வாழ்க்கை வாழ முடியுமா? கண்டிப்பா முடியாது? அப்போ இது அந்தப் பொண்ணோட கட்டம் சரியில்லைன்றது காட்டுதா? என்ன தீர்வு இதுக்கு? தெரியலை.
 
Top