இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

Advertisement

உண்டு உறங்கி காலையில் படிக்கவும் சரிதான் ஆரா சிஸ் ஆனால் உங்க கதையை பார்த்து விட்டு நாளை படிக்கலாம் என்று நினைத்தாலும் காந்தமாக இழுக்கிறது.

தீனா பேச்சு சூப்பர்.
சாலாவை சரியாகவே கணித்து இருக்கிறார்.
பிரகாஷ்க்கு வாழ்நாள் எப்படி இருக்கும் என்பதை காட்டி கொடுத்துள்ளார்.
ஷாலினிக்கும் அதே நிலைதான் என்பது அவள் சகோதரியின் பேச்சு உணர்த்துகிறது.
 
சில பேருக்கு சொல் புத்தியும் கிடையாது.சுய புத்தியும் கிடையாது.பிரகாஷ் அந்த ரகம்.அவன் தவறு செய்து விட்டு சாலாவை எளிதாக சமாளிக்கலாம்னு நினைச்சிருப்பான்.ஆனால் அந்த நினைப்பை சாலா எளிதாக உடைத்து விட்டாள்.தீனாவின் பேச்சு உண்மை.சொந்த அக்காவே ஷாலினிய நம்பல.பிரகாஷிற்கு மட்டுமில்லை இனி ஷாலினிக்கும் இந்த நிலைமை தான்.இனி அடுத்த வேட்டு பாண்டியம்மாள் உனக்கு.தேவியின் ஆட்டம் இனிதே தொடரட்டும்.
 
பெண் பாவம் பொல்லாது என்பார்கள்…என்னைப் பொறுத்தவரை எந்தப் பாவச் செயல்களுக்கும் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். சிலது சீக்கிரத்தில் சிலது காலம் தாழ்த்தி.
இங்கு தேவியின் வருத்தம் நியாயமானது.
பாண்டியம்மாள் தேவியை உதாசீனப்படுத்தி என் மகள்கள் வாழ்க்கையைப் பாரென்று வெந்த புண்ணில் வேல் பாச்சியிருந்திருக்கின்றார்.
இவர்கள் சித்திராவை குமரனுக்கு கல்யாணம் செய்ய நினைத்த போது சாலா யாரின் பக்கம்? அதற்கு சாலாவும் ஆதரவென்றால் அதுவும் பெரிய பிழை தானே.
ஆனாலும் தேவி இப்படி இவர்கள் வாழ்க்கை சீரழிய வேண்டுமென்று அம்மனை வேண்டியதும் மனதிற்கு சரியாகப் படவில்லை…ஆனாலும் அவரது மனவருத்தம் நியாயமானது.
 
தயவு செய்து எல்லோரும் உண்டு, உறங்கி விட்டு காலையில் படிக்கவும் 🙏🙏🙏
காலையில் படிக்கிற அளவுக் கெல்லாம் பொறுமை இல்லங்க. முழிப்பு வந்தவுடன் கைகள் போனைத் தான் தேடுது.
அடுத்து தேவியா? அவர்கள் சொல்வதும் சரிதான். வீட்டுக்கு வந்த பெண்ணை கண்கலங்க வைப்பது தவறு தானே. ஆனால் எல்லோருக்கும் பிடித்த சாலாவை நினைத்து பார்த்து இருக்கலாம் தேவி.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top