உனதன்பில் சரணாகிறேன் 14

Advertisement

காதலர்களின்
காற்றோடு கலந்த
காலம் நீளும்
இரவு பயணம் என
கனவு கண்டு
கை கோர்த்து சென்ற
காதலின் பிடியில்
குளிர்ந்திருந்தது....


காதலை அள்ளித் தந்து
கண்களில் பேசிக் கொண்டவர்கள்,
காற்றின் இசையோடு கலந்து
காலத்தை கூட மறந்திருந்திட.....

காணாத ஒரு
கருமை நிழல்
காத்திருக்க
கடைசி பயணம் ஆகிவிடும் என
கனவிலும் கூட கருதவில்லை....

காதல் கணங்கள் ஒவ்வொன்றும்
காலத்தின் கரங்களில் உருக
கண்ணீராய் மாறிய
கடைசி நெற்றி முத்தம்....

காதல் சிரிப்பு
காற்றில் கரைந்து
கண்கள் நனைக்க....

கடைசியில் மீதமாய்
காயம் தந்த நினைவுகளும்
காதலித்த நிமிடங்கள் தான்....

காலம் கடந்தும்
காதல் அழியாமல்
கண்ணீரில் வாழும் காதலர்கள்...
 
தன் நேசத்தினை நிரூபிக்க துடிக்கும் அவளின் பிடிவாதம்...
 

Advertisement

Advertisement

Back
Top