Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 17 1

Advertisement

Admin

Admin
Member
பிரண்ட்ஸ் கதை முடிஞ்சிடுச்ச்ச்சச்ச்சு, இன்னும் ஒரு எபிலாக் மட்டும் இருக்கு...

அத்தியாயம் பதினேழு:

ஆடாமல் அசையாமல் அவனால் அப்படியே படுத்திருக்க முடியவில்லை, அசைந்தால் அங்கை எழுந்து விடுவாளோ என்று மெதுவாய் அவளை விட்டு நகர்ந்து வசதியாய் படுக்க வைத்து, கதவை திறந்து வெளியே வந்தான்.

அங்கே குளிர் பலமாய் தான் இருந்தது. ரூமின் உள் ஹீட்டர் இருந்ததினால் தெரியவில்லை. விளக்குகள் அணைந்து இருக்க, குளிருக்கு இதமாய் கைகளை கட்டிக் கொண்டு சுற்றி பார்த்தான்.

வாயில் கதவு திறந்து இருக்க, “ஓஹ்! அது தான் காற்று உள்ளே வருவதினால் குளிர் பலமாய் இருக்கிறது போல” என்று நினைத்தவனாக, வெளியே சென்று பார்க்க, அங்கே படியில் கால் நீட்டி அமர்ந்து அன்பழகன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஆள் வரும் அரவம் கேட்டு சுவாதீனமாக சிகரெட் புகைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தவர், அங்கே ராஜராஜனை பார்த்தும் வேகமாய் அதனை அணைத்து தூக்கி எறிந்து விட்டார்.

“பரவாயில்லை” என்று அவன் சொல்லும்முன்னமே

“சாரி, நான் ராஜி வர்றான்னு இருந்தேன்” என்று வேகமாய் எழ போக,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவன் “எழாதீங்க உட்காருங்க” என்றவன் அவரின் அருகில் அமர்ந்தான்.

அங்கே ரம்மியமாய் இருந்தது, இரவின் மெல்லிய பனி படர்ந்து அந்த அமைதியும் குளிரும் நன்றாக இருந்தது.

“நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா” என்ற அன்பழகனின் கேள்விக்கு, “இல்லை பண்ணமாட்டேன்”

“ட்ரிங்க்ஸ்”

“அதுவும் இல்லை” என்றான்.

“குட்” என்றவர், “நான் இங்க வந்து கொஞ்சம் இதெல்லாம் பழகிட்டேன். ராஜி கூட இல்லாதப்போ அதிகமாகிடுச்சு. இப்போ அம்மு கன்சீவா இருக்கிறதனால ராஜி என்னை எதையும் தொடக் கூட விட மாட்டா”

“என்னவோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுதான் அவ தூங்கின பிறகு அவளுக்கு தெரியாம வெளில வந்து உட்கார்ந்துட்டேன்” என்று அவர் சொல்ல.. அப்போது தான் அதையே கவனித்தான், அவருக்கு பக்க வாட்டில் பாட்டில் க்ளாஸ் என்று எல்லாம்.

“சரி, நான் உள்ளே போறேன்” என்று அவன் எழ முற்பட, “அட, இருங்க” என்று அவனின் கை பிடித்தவர்,

“உங்களுக்கு தெரியாது, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவரின் குரல் கரகரத்து இருக்க, கண்களில் மெல்லிய நீர் படலமும் கூட.

“என்ன ஆச்சு?” என்றான் அவரின் கையை தட்டிக் கொடுத்து.

“நான் சொன்னா நீங்க தப்பா எடுக்க மாட்டீங்களே?” என்றார்.

“மாட்டேன், சொல்லுங்க”

“நீங்க தப்பா எடுக்க மாட்டீங்கன்னு எனக்கு தோணுது, அதுதான் சொல்றேன்” என்றவர், “கொஞ்சம் குடிச்சிக்கட்டுமா?” என்று கேட்க,

அவர் கேட்ட விதத்தில் சிரிப்பு வர சிரிக்க ஆரம்பித்தவனிடம் “ராஜி எழுந்துக்குவா, உஷ்” என்று என்று அவனை அடக்க, ராஜராஜன் சிரிப்பை அடக்கினான்.

“உங்க கல்யாணம் நடந்த நாள்ல இருந்து ஒரு நாள் கூட நான் நிம்மதியா தூங்கினது இல்லை, அம்மு உங்க கூட கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு, அப்புறம் கல்யாணம் நடந்த பிறகு பிடிக்கலைன்னு நிக்கறா, மனோவும் ராஜியும் என்னோட சண்டை போடறாங்க, நான் தப்பு பண்ணிட்டனோ என் பொண்ணு வாழ்க்கை என்னாகுமோன்னு அவ்வளவு ஒரு கஷ்டம் வருத்தம் எல்லாம்”

“ராயர் இல்லைன்னா இன்னைக்கு நான் இல்லை. அவருக்காக நான் என்ன வேணா செய்வேன். அவர் முன்ன நடந்தது இந்த கல்யாணம். உண்மையா அவர் சொல்லலை இதை நான் தான் சொன்னேன் என

இது ராஜராஜனின் அனுமானத்தில் இருந்தாலும் அவர் வாயால் நிச்சயமாய் கேட்கும் போது புதிய செய்தியே! ஆச்சரியமான உண்மை என்ன பார்த்து எனக்கு பெண் கொடுத்தார். ராயர் பேரன் என்றாலும் இதனை எப்படி செய்ய முடியும்?

“எப்படி பெண் கொடுக்கறேன்னு சொன்னீங்க?”

“உங்களை பார்த்தேன் குடுக்கலாம்னு தோணிச்சு குடுத்துட்டேன் அவ்வளவு தான், அந்த நிமிஷம் ராயர் அய்யா உங்களை பத்தி உங்க வாழ்க்கை என்ன ஆகுமோன்னு கவலையா பேசின போது குடுத்துட்டேன்”

“இது தோத்துப் போகக் கூடாது. என் பொண்ணுக்கும் உங்களை பிடிக்கணும். நீங்களும் அதுக்குறிய மதிப்போட இருக்கணும், இப்படி என்ன என்னவோ சஞ்சலம் இந்த ரெண்டு வருஷமா?”

“எல்லாம் சரியாகிட்டாலும், அவளுக்கு உங்களை பிடிச்சிருக்கணுமேன்னு எப்பவும் எனக்கு கவலை தான். ஒரு அப்பாவா இது ரொம்ப பெரிய கவலை?”

“இதுல ராஜி வேற என்னோட ரெண்டு வருஷம் இல்லை, மனோவோட போயிட்டா, வெளில கெத்தா சுத்திட்டு இருந்தாலும் உள்ள தவிச்சு போயிட்டேன்”

“இன்னைக்கு.. இன்னைக்கு எனக்கே தெரிஞ்சது என் பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குன்னு” என்று சொல்லி சிரித்தவர், “அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். யாருக்காகவும் கொஞ்சமும் அலட்ட மாட்டா, இன்னைக்கு நீங்க திரும்ப நடந்த போது அவ கண்ல தெரிஞ்ச தவிப்பு, நீங்க பக்கம் வந்ததும் தெரிஞ்ச நிம்மதி, இப்போ கொஞ்சம் நேரம் முன்ன பார்த்த சந்தோசம்..” என்று சொல்லி நிறுத்தினார்.

“உங்களுக்கு மட்டுமா? எனக்கும் இன்னைக்கு தானே தெரியும் உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கும்னு. கொஞ்சமும் மதிக்க கூட மாட்டாளே என்னை, சேர்ந்து வாழ வரும் வரை. அவக்கிட்ட பேச எத்தனை முறை முயற்சி பண்ணினேன். முடியாதுன்னு தெரிஞ்சு தானே போடின்னு விட்டேன்” என்று நினைத்துக் கொண்டான்.

வேகமாய் இரண்டு க்ளாஸ் முழுவதும் உள்ளே இறக்கினார். “அச்சோ, என்ன இது?” என்று அவன் தடுத்தான்.

“இன்னும் ஒன்னே ஒன்னு” என்று சொல்லி, ஒரு முழு பாட்டிலையும் காலி செய்தார்.

“உங்களுக்கு தெரியுமா? தெரியாது! எப்படி தெரியும்? சரி நான் சொல்றேன்!” என

“யப்பா, இந்த குடிமகன்கள் அலப்பறை, தாங்க முடியவில்லையே” என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.

“ராஜி என் வாழ்க்கைல வந்த தேவதை! அந்த தேவதை எனக்கு இன்னொரு தேவதையை கொடுத்தா, அவளுக்கு நான் நியாயம் செய்யலையோன்னு பயந்து பயந்து இருந்தேன். இப்போ எனக்கு அப்படி தோணலை. அவ சந்தோஷமா இருக்கா, நானும். ஹ, ஹ, இப்போ ஐ அம் எ ஹேப்பி மேன்” என்று கத்தினார்.

“அச்சோ, கத்தாதீங்க” என்று அவன் சொல்லியும் கேட்கவில்லை.

ஆனால் ராஜலக்ஷ்மிக்கு கேட்டு விட்டதே! அவர் எழுந்து வெளியே வந்தவர், அன்பழகனோடு ராஜராஜனையும் பார்த்து அதிர்ந்து நிற்க,

அவரை பார்த்து அன்பழகன் அசடு வழிய, ராஜலக்ஷ்மியின் கண்கள் ராஜராஜனை ஆராய, “நான் குடிக்க மாட்டேன்” என்று அவனாய் சொல்ல

அவரின் முகத்தில் ஒரு நிம்மதி.

“இன்னைக்கு நாள், நான், ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அன்பழகன் உளற..

“நீங்க முதல்ல வந்து தூங்குங்க, இந்த குளிர் உங்களுக்கு பழக்கம், இவருக்கு இல்லை” என்று ராஜி சொல்ல,

“நீங்க ஏன் அத்தை என்னை அவர் இவர் பேசறீங்க” என்றான் ராஜராஜன்.

“என்ன கேட்கிறான் இவன்?” என்று ராஜலக்ஷ்மி புரியாமல் பார்த்து, பின் கிரகித்து, அவனை பார்க்க,

“உங்க அண்ணன் பையன் தானே, வா போன்னு கூப்பிடுங்க, பேர் சொல்லி கூப்பிடுங்க, எனக்கு அவர் இவர் பேசினா என்னவோ மாதிரி இருக்கு. என்னால உங்க கிட்ட சகஜமா பேச முடியலை” என்று அவன் சொல்லி விட, அங்கை அவனோடு வாழ வந்த நாளாய் ராஜராஜன் நினைத்திருந்தது தான், ஆனால் சொல்லியதில்லை, தள்ளியே நிற்பான். இன்று சொல்லி விட்டான்.

ராஜலக்ஷ்மிக்கு விரிந்த சிரிப்பு, கூடவே கண்களில் நீர், அவரால் அதற்கு பதில் சொல்லக் கூட முடியவில்லை.

“எழுந்திருங்க” என்று கணவனை கை பிடித்து தூக்க, “ராஜி நான் ரொம்ப ஹேப்பி” என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே நடத்தவர், “விடு ராஜி” என்று சொல்லி திரும்ப ராஜராஜனிடம் வந்தவர்,

“நான் உங்களை ஒரு முறை கட்டி பிடிச்சிக்கிறேன் என்று அவனை அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ்” என்றார் மீண்டும்.

அவர் விட்டதும் “எதுக்கு?” என,

“ம்ம், என் பொண்ணுக்கு உங்களை பிடிச்சதுக்கு, என் பொண்ணுக்கு பிடிக்கிற மாதிரி நீங்க இருந்ததுக்கு” என்று சொல்லிச் செல்ல,

“என்ன சொல்ல வருகிறார் இவர்” என்று புரிந்தும் புரியாத போதும் மனது நிறைவாய் உணர்ந்தது. கூடவே “கல்யாணம் பண்ணி கட்டாயமா அவளை என்கிட்டே நீங்க தள்ளி விட்டதனால மட்டும் தான் அவளுக்கு என்னை பிடிச்சது” என்ற ரகசியத்தை புறம் தள்ளினான்.

அன்பழகனை சென்று படுக்கையில் விட்ட ராஜலக்ஷ்மி வெளியே வர, அப்போதும் ராஜராஜன் இயற்கையை ரசித்தபடி நின்றிருந்தான்.

“ரொம்ப குளிருது, உங்களுக்கு ஒத்துக்காம போயிடப் போகுது. உள்ள வாங்க” என்று சொல்ல, அவரை முறைத்து பார்த்தான்.

பின்பு “உனக்கு ஒத்துக்காம போயிடப் போகுது” என்று சொல்ல,

“ம்ம் அது” என்றவன், “எனக்கு அப்படி ஒன்னும் குளிர் தெரியலை அத்தை” என்று சொல்லி உள்ளே நடக்க,

“உங்க பிரச்சனைக்கு கஷ்டத்துக்கு நாங்க தான் காரணம்னு நீயும் நினைக்கறியா?” என்றார்.

 
:love::love::love:

மாமா full moodல இருக்கிறார்.......
என் பொண்ணுக்கு உங்களை புடிச்சுடுச்சு........ புடிக்கிறமாதிரி நீங்க இருந்ததுக்கு.......
அடடா அவனே பொண்டாட்டி தூங்கிட்டானு இருப்பான்.....
மிலிட்டரி ஓவர் ரவுசு காட்டுறார்..........

வீட்டுக்காரரோடு மருமகனை பார்த்ததும் பயம் வந்துடுச்சே.......
நான் குடிக்கமாட்டேன்......

நிறைய வீடுகளில் அப்பா குடிப்பாரு........ அம்மாக்கு தெரியும்....... ஆனால் மருமகன் குடிக்கக்கூடாது........
நல்லா இருக்கு நியாயம்....... இது மாதிரியே பொண்டாட்டி வீட்டிலும் எதிர்பார்க்கமாட்டாங்களா???

மாமியார் அத்தையா வர்றாங்க...... பார்ப்போம் என்ன சொல்றாங்கன்னு.......
 
Last edited:
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போயிடுமா :p

ஒரு அப்பாவா அவர் தவிப்பு நியாயம் தான்..
ராஜி. ரொம்ப சீக்கிரம் கேட்டுடியே மாஆஆ
 
Last edited:
:love: :love: :love:

மாமனார் மாப்பிள்ளைகிட்ட
மனசு விட்டு பேசுறார்...

ராஜராஜன் Old Fashion... :p
No smoking... & No drinking...

ராஜன் ஒட Mind Voice சூப்பர்....

அன்பழகன் ஓட ரவுசு தாங்க முடியல...
குடியும் குடுத்தனுமுமா எப்படி வாழனும்னு அவர்கிட்ட கத்துக்கலாம் போல...

அன்பழகன் ஒரு சின்ன அறிவுரை...
Smoking is injuries to health
 
Last edited:
Top