Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 19

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் பத்தொன்பது :

வீட்டினர் எல்லோரும் பாட்டு கச்சேரியிற்கு வந்திருக்க, மனோவும் அன்பழகனும் இருப்பதால் போலிஸ் பந்தோபஸ்தும் இருக்க, இல்லாத நபர்கள் என்று பார்த்தால், அங்கையும் ரதி பூர்ணிமாவும் ஸ்ருஷ்டியும் விகாஸும்.

பிரபல பாடகர் மற்றும் அவர் குழு வந்திருக்க, அவர்களின் ஊர் ஆட்கள் மட்டும்மல்ல சுற்று வட்டாரத்தில் இருந்து வேறு ஊர் ஆட்களும் வந்திருக்க கச்சேரி கலை கட்டியது.

கச்சேரி ஆரம்பித்து இரண்டு பாட்டுக்கள் முடிந்திருக்க, தில்லை ராஜராஜனை அழைத்தவர், “அங்கை மட்டும் தான் குழந்தைங்களோட வீட்ல இருக்கா, தனியா இருக்கா, நீ போறதும் போகாததும் உன் விருப்பம்” என்றார் சற்று கோபத்தை முகத்தில் காண்பித்து.

இரண்டு புறமாய் பிரிந்து அமர்ந்திருக்க, ஒரு புறத்தில் மனோவும் கரிஷ்மாவும் அன்பழகனும் ராஜலக்ஷ்மியும் நாச்சியும் அமர்ந்திருக்க, மறுபுறம் சுவாமிநாதனும் தமிழ் செல்வனும் தங்களின் மனைவி மகன் மகள் குடும்பத்துடன் அமர்ந்திருக்க, அங்கே இருந்த தில்லை தான் பேசினார்.

“ம்மா” என்று பல்லை கடித்தான்.

“டேய், சும்மா ஓவரா பண்ணாத போடா. அழகா, அறிவா, படிச்ச, சொத்தோட ஒரு பொண்ணு உன் பின்ன சுத்தது இல்லையா அந்த திமிர்டா உனக்கு”

அசையாமல் சில நொடி நின்றவன் “இது, இது தான் எல்லோரும் நினைக்கறீங்க இல்லையா. அப்போ ஏதோ பெரிய வாழ்க்கை அதிர்ஷ்டமா எனக்கு கிடைச்சிருக்கு. நான் அதுக்குறிய மதிப்போட இல்லை. அதனால் தான் இத்தனை நாளா நான் சொல்ற அத்தனையும் கேட்ட என் குடும்பத்துல இருக்குறவங்க, இப்போ என் பொண்டாட்டி வந்ததும் அந்த மிதப்புல ஆடுறேன்னு சொல்லி நீங்க ஆடுறீங்க அப்படிதானே” என்று மெல்லிய குரலில் என்றாலும் தெளிவாய் வார்த்தையை கடித்து துப்பினான்.

வீடு மொத்தமும் மெல்லியதாய் அதிர்ந்தது.

“டேய் ராஜா, நான் அந்த அர்த்ததுல சொல்லலை, எப்பவும் போல கிண்டல் பண்ணினேன்”

“நீ கிண்டல் பண்ணினியோ. என்ன பண்ணுனியோ எனக்கு தெரியாது. எல்லோருக்கும் அந்த எண்ணம் தான், எனக்கு தெரியும். இதனால உங்க யாருக்கும் ஒன்னுமில்லை. எனக்கும் அவளுக்கும் தான் எப்பவும் முட்டிக்குது. எல்லோரும் நிம்மதியா தானே இருக்கீங்க, எங்க உயிரை மட்டும் ஏன் எடுக்கறீங்க. அங்கையோட சேர்ந்து வாழறதுக்கு முன்ன உங்களுக்கெல்லாம் என் மேல இருந்த நம்பிக்கை இப்போ இல்லை”

“இருந்திருந்தா இந்த முதல் மரியாதைக்கு நான் சொன்னப்போ மறு வார்த்தை யாரும் பேசியிருக்க மாட்டீங்க, எதிர்ப்பு காட்டியிருக்க மாட்டீங்க. மனுஷனா பொறந்தா நன்றி வேணும்”

“அது என் மாமனார் குடும்பம் கிடையாது, இப்போ நம்ம பிரச்சனையை தீர்த்த குடும்பம் அது மட்டும் தான் எனக்கு” என்றவனின் குரலில் அப்படி ஒரு கோபம் கூடவே வருத்தமுமிருந்தது.

“டேய் ராஜா, அப்படி இல்லடா” என்று பதறி தில்லை சொல்ல காதில் வாங்கவில்லை. வெளியிடம், ஆர்கெஸ்ட்ரா சத்தத்தில் வெளி ஆட்களுக்கு கேட்க வாய்ப்பில்லை எனினும் இதற்கு மேல் அவனுக்கு பேச விருப்பமில்லை.

பெரியப்பாவிடம் சென்றவன் “எனக்கு முடியலை பெரியப்பா, நான் வீட்டுக்கு போய் தூங்கணும், நீங்க இங்க பார்த்துக்கங்க, நான் இருக்கேன்னு விட்டுடாதீங்க, பார்த்துக்கோங்க” என்று சொல்லி வீடு செல்ல

இவன் பேசி நடப்பதை பார்த்த ராஜலக்ஷ்மி அன்பழகனிடம் “எங்க போறான்னு கேளுங்க?” என்றார். அங்கையும் குழந்தைகளும் வீட்டில் இருக்க இவருக்கு வர மனதே இல்லை. அங்கை தான் “போம்மா” என்று துரத்தி இருந்தாள்.

அன்பழகன் எழுந்து வந்து “எங்க போறீங்க?” என்று கேட்க,

“வீட்டுக்கு மாமா” என்று அவன் சொல்ல, அதை ராஜியிடம் அவர் சொல்ல,

“அங்கை முகமே சரியில்லை” என்றார் தாயாய்.

“அதான் வீட்டுக்கு போறாரில்லை பார்த்துக்குவார் விடு” என்றார். அவரும் உணர்ந்தே இருந்தார். வெளியில் காண்பித்து கொள்ளாவிட்டாலும் ராஜலக்ஷ்மியும் அன்பழகனும் உணர்ந்தே இருந்தனர். அங்கைக்கு நிறைய வேலைகள் என்று. ஒரு பக்கம் ரதி பூர்ணிமா பின் சுத்துவது, பின் வீட்டு மேற்பார்வை, பின் தொழில்கள் என்று நிறைய வேலை.

ஆம்! தொழில்கள் தான். ராஜராஜன் படிக்கவில்லை. ஆனால் அங்கை படித்து இருக்கிறாளே. முன்பு அவனிடம் பணமும் கிடையாது, படிப்பும் கிடையாது. இப்போது பணமும் அங்கை மூலம், படிப்பும் அவளிடம். நிறைய நிறைய இழுத்து போட்டுக் கொண்டான். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் முன்னிற்கு வர வேண்டும் என்ற வெறி.

ரதி பூர்ணிமா பிறந்து அங்கைக்கு ஐந்து மாத ஒய்வு அவ்வளவே, பின் ராஜராஜன் புதிதாய் எல்லாம் செய்ய, அவள் முழுவதும் துணை நின்றாள்.

அவளின் படிப்பான எம் பீ ஏ, முழுதாய் உபயோகமானது என்றும் சொல்லலாம், முழுதாய் உபயோகப் படுத்தினான் என்றும் சொல்லலாம்.

அவனின் அரிசி மில்லை முன்பே விரிவு படுத்தி இருந்தான் தான். இப்போது ராயர் பிராண்ட் அரிசி தமிழகமெங்கும் மொத்த வியாபாரத்திலும், சில்லறை வியாபாரத்திலும். அதனால் வேலைகள் இருவருக்குமே நெட்டி முறித்தன. இன்னும் ஸ்திரமாகாத நிலையில் வேலையாட்களை நம்பி விட மனதில்லை.

எல்லாம் அவன் மேற்பார்வையில். அவனின் வேகத்திற்கு அங்கை ஈடுகொடுக்க, வேறு ஆட்களை கொடுக்கல் வாங்கல்கள் கொள்முதலுக்கு அவன் உபயோகிக்கவில்லை. எல்லாம் இருவருமே!

ராயரின் பெயர் மட்டுமே அரிசி மில்லிற்கு, அதனை அங்கயற்கண்ணியின் பெயரில் பதிந்து விட்டான். ஆம்! அண்ணன்கள் வாங்கிய லோனை அவளின் பணம் கொண்டு அடைத்தவன், அதனை அவளின் பெயருக்கு மாற்றி விட்டான்.

பின்னே அவளது பணம் தானே. வீட்டினர் எல்லோரிடமும் சொல்லியே செய்தான். அது அப்போது சிறிய அளவில் மட்டுமே செயல்பட்டு வந்ததால் யாரும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அவளின் பெயருக்கு மாற்றிய பிறகே அது விஸ்வரூபமெடுத்தது. இப்படி ஒரு வளர்ச்சியை வீட்டினர் எதிர்பார்த்து இருக்கவில்லை.

வீட்டில் இருக்கும் நகையை பேங்கில் வைக்கலாம் என்று அவன் சொல்ல, அங்கையும் சரி என்று சொல்ல, அவனோ லாக்கரில் வைக்காது அடமானத்தில் வைத்து, பின் லோன் வாங்கி என இப்படியாக பெரிய ஷாப்பிங் மால் ஒன்றையும், ஒரு பெரிய காலி இடம் ஒன்றையும் வாங்கி விட்டான். அதுவும் அங்கை பெயரிலேயே. எல்லாம் அவளது பணம் என்பதால் அவளின் பெயரில் மட்டும் தான் வாங்கினான்.

அதனால் வீட்டினருக்கு தெரிந்தாலும் ஆட்சேபிக்க முடியவில்லை எப்படி தனியாய் சொத்து வாங்கலாம் என்பது போல.

அந்த காலி இடத்தினில் ஒரு நிதி நிறுவனத்தின் ஆட்டோ மாலிற்கு வாடகை விட, ம்ம்ம், லோன் கட்ட வேண்டியது நிறைய தான். ஆனால் சில வருடங்களுக்கு மட்டுமே. அந்த மால் மற்றும் இந்த ஆட்டோ மாலின் வாடகையே கிட்ட தட்ட ஆறு லட்சம்.

ராஜராஜனின் மூளையோ இல்லை அவர்களின் உழைப்போ இல்லை நேரமோ ஏதோ ஒன்று தொட்டது துலங்கியது.

ஆனால் ராஜராஜனின் அங்கையின் வாழ்க்கை முறை மாறவில்லை. எதிலும் ஆடம்பரமோ டாம்பிகமோ இல்லை. எப்போதும் போல தான், புதிதாய் எதுவுமில்லை.

இன்னமும் அவன் பைக் தான், அவள் ஆக்டிவா தான், வீட்டில் ராயர் உபயோகித்த அம்பாசிடர் தான்.

இவன் செய்யும் வேலைகள் சொத்துக்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் வருமானங்கள தெரியாது. கூட்டு குடும்பம் என்பதால் எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் சொல்லிட முடியாது. பணம் மட்டும் யாருக்கும் தெரியாது, யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

முன்பு அவனின் உழைப்பு பொதுவாய் இருக்க, இப்பொழுது அவனுடையதாய் மாற்றிக் கொண்டான். ஆம்! இந்த வருமானங்கள் எல்லாம் அவனது.

நிலத்தில் வரும் வருமானம் மட்டுமே பொது. ஆனால் அந்த பொதுவில் இருப்பது பேங்கில் தூங்கியது, சுவாமிநாதன் பெயரிலும் தமிழ் செல்வன் பெயரிலும். ஆம்! அவர்கள் இருவருக்கும் கொடுத்து விடுவான்.

வீட்டு செலவு, பெண் மக்களுக்கு சீர் செய்யும் செலவு என்று எல்லாம் அவன் தோள் மீதே, யாரும் இதை அவனிடம் சொல்லவில்லை.

ராஜராஜனாய் வரையறுத்துக் கொண்டான். எல்லாம் எல்லோருக்கும் லாபமாகிப் போனது. அப்போதும் இவனின் லாபம் மற்ற மக்களின் கண்களை பறிக்கத் தான் செய்தது. சற்று பொறாமையும் கூட “பார்றா இவனுக்கு வந்த வாழ்வை” என்பது போல. ஆனால் கெட்டவர்களோ இல்லை அவன் கெட்டுப் போக நினைப்பவர்களோ கிடையாது.

முன்பு எல்லோரையும் விட கீழ் இருந்தான். இப்போது “வேற லெவல்” அல்லவா. அது உறுத்தியது. சில சமயங்களில் அதை உணர்ந்தாலும் ராஜராஜன் கண்டு கொள்ளவில்லை. .

அங்கைக்கு அது புரிந்து கொள்ளும் அளவு திறமை கிடையாது. உறவுகளுடன் வளர்ந்திராதவள் அல்லவா. அவளுக்கு எல்லாம் நேராய் பார்க்க தான் தெரியும். இந்த உறவுகளுக்குள் நடக்கும் அரசியல் அவளுக்கு புரியவில்லை, பிடிபடவுமில்லை.

ராஜராஜனும் கற்று கொடுக்கவில்லை. அவள் அவளாய் இருக்க விட்டு விட்டான்.

அங்கை மீது பெருமை கர்வம் எல்லாம் உண்டு! ஆம்! ஒரு வார்த்தை கூட இந்த வீடு வந்த நாளாக “நாம மட்டும் ஏன் செலவு செய்யறோம்? ஏன் வேற யாரும் செய்யறதில்லை?” என்று கேட்டதில்லை. அவ்வளவு பணம் வீட்டிற்கு என்று பொதுவாய் அவன் செலவு செய்யும் போதும் கேட்கவே மாட்டாள்.

இதோ விஜயா அக்காவின் பெண் பூபெய்திய போது, பத்து பவுன் செய்தான். நாச்சி கூட “எதுக்குடா இவ்வளவு, நாமளே இப்போ தான் கால் ஊனறோம்” என்று.

“இருக்கட்டும் கிழவி, இது ராயர் வீட்டு சீர். எப்போ இருந்து நீ இப்படி மாறிட்ட” என்று அவரை கிண்டல் செய்தே விட்டான். அது மட்டுமல்லாது மற்ற சீர், விருந்து என்று கிட்ட தட்ட லட்சத்திற்கும் மேல் பணம் செலவான போது, எல்லா உடன் பிறப்புக்களும் வந்த போதும், எதுவும் பணம் வேண்டுமா என்று யாரும் வாய் திறந்து கேட்கவில்லை.

இதற்கு நிலத்தில் வரும் பணம் அப்பாக்களுக்கு செல்கிறது என்று புரிந்த போதும் இவனிடம் கேட்கவில்லை.

இருக்கிறது செய்கிறான் என்று நினைத்தார்களா? இல்லை செய்யட்டுமே என்று நினைத்தார்களா? அவர்களுக்கே வெளிச்சம்!

ராஜராஜனுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல, பதினெட்டு வயதில் அண்ணன்களுக்காக, அக்காள்களின் திருமணதிற்காக உழைக்க வந்தவனுக்கு இதெல்லாம் என்ன? ஒன்றுமேயில்லை.

அவனுக்கு அவர்கள் கூட நின்றாலே போதுமானது தான்.

எதையும் கண்டு கொள்ள மாட்டான். ஆனால் இந்த முதல் மரியாதை விஷயத்தில் அவர்கள் கூட நிற்காதது சலசலப்பு எல்லாம் அவனுக்கு சற்று கடுப்பை கிளப்பி இருந்தது.

கூடவே மனதில் ஒரு நெருடல் கூட, ராஜலக்ஷ்மிக்கு அந்த வீட்டில் இருந்து ஒரு பருக்கை கூட சீராய் செல்லவில்லை. சில சமயம் தோன்றும் ராஜலக்ஷ்மியின் ஒதுக்கம் இந்த வீட்டோடு அதனால் தானோ என்று.

பணம் இங்கே முக்கியமல்ல, சீர் அது வேறல்லாவா? அது அவருக்கு கொடுக்கும் ஒரு அங்கீகாரம் அல்லவா மகளாய்.

என்ன தான் இவர்களுக்கு பணக் கஷ்டம் இருந்த போதும் சௌந்தரிக்கும் விஜயாவிற்கும் வீட்டில் இருந்து செய்யும் சீர் இம்மியும் குறையாது.

இதெல்லாம் மனோவிற்கும் அங்கைக்கும் புரியாது இருக்கலாம், ஆனால் ராஜலக்ஷ்மிக்கு அன்பழகனுக்கும் எப்படி தெரியாமல் இருக்கும்.

ராயர் இருந்தால் பேச்சே வேறு.. நாச்சி என்ன செய்வார். தானாய் கிடைத்தால் தானே மகளுக்கு மரியாதை, விட்டு விட்டார். இது அவரின் மனதின் ரகசியம்.

அதனால் கூட மகளிடம் அவரால் கொஞ்ச முடியவில்லை.

எது எப்படியோ ராஜராஜனை போலவே அங்கைக்கும் பணம் ஒரு பொருட்டே அல்ல! அந்த வகையில் இருவரும் ஒருமித்த தம்பதிகள்!

அங்கைக்கு உழைப்பின் கம்பீரம் வந்திருந்தாலும், உடல் இளைத்து சற்று கறுத்து தேஜஸ் குன்றி தான் இருந்தாள்.

இங்கே வீடு வந்தால் நால்வரும் அவர்களின் ரூமில்.

மெதுவாக எட்டி பார்க்க, முதன் முதலில் அந்த அறையில் அங்கையை எப்படி பார்த்தானோ அந்த தோற்றத்தில் அங்கை.

விகாஸும் ஸ்ருஷ்டியும் உறங்கியிருக்க, ரதி பூர்ணிமா அம்மாவின் நெஞ்சினில் துயில் கொண்டிருக்க, அங்கை படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடி இருந்தாள். ஓய்ந்த தோற்றம்.

மனதை பிசைந்தது, அவனும் தான் என்ன செய்வான். இவளை யார் எல்லோர் முன்னும் வார்த்தையாட சொன்னது, அவனுக்கு அளவில்லா கோபம் தான்.

இருந்தாலும் முகம் தேடும் அவளிடம் செல்ல பரிதவிப்பு தான். ஆனாலும் செல்ல முடியவில்லை. இயல்பாகவே ராஜராஜன் கோபக்காரன், ஒரு சொல் பொறுக்க மாட்டான் என்று தெரியும் எல்லோருக்கும் தெரியும். அதனாலயே அவனிடம் பேசும் போது ஜாக்கிரதையாய் பேசுவர்.

இப்போது இவள் பேசுவது கண்டுகொள்ளாமல் விட்டால், “பாருடா பணம் இருக்குற பொண்டாட்டி வந்தா ராஜராஜன் கூட பேச்சு வாங்கிட்டு வெட்கமில்லாமல் திரும்ப போய் பேசுகிறான்” என்பது போல வருகிறது.

இரண்டு முறை அந்த பேச்சும் காதில் விழுந்தும் விட்டது.

அடுத்தவரும் மனைவியும் ஒன்றா? அவளும் அவனுமே வேறே கிடையாதே! அந்த மடையர்களுக்கு யார் சொல்வது என்று அவனுக்கு புரிந்தாலும் அந்த பேச்சு அவனுக்கு பிடித்தமில்லை.

அங்கையிடமும் பல முறை சொல்லியாகிவிட்டது, யாராவது இருந்தால் பார்த்து பேசு என்று, அவளும் கேட்பதில்லை, அது அவளின் இயல்பு!

ராஜராஜனும் சரி அங்கையற்கண்ணியும் சரி இரண்டு பேருமே ஆளுமையான ஆட்கள், அதனால் முட்டிக் கொள்கிறது.

இவன் உள்ளே வருவதை பார்த்தும் கண் திறந்து பார்த்தவள் பின் கண் மூடி கொண்டாள்.

சத்தமில்லாமல் உள்ளே வந்தவன், உள்ளே சென்று ஒரு அவசர குளியல் போட்டு வந்தான்.

பின்பு ஒரு வேஷ்டியை கட்டி கொண்டு வந்தவன், மகளை அலங்காமல் அவளின் மீதிருந்து தூக்கினான்.

அன்று ஜாக்கிரதையாய் தூக்கினாலும் உடலில் தெரியாமல் கை பட்டு விட்டது. இப்போது அப்படி எந்த ஜாக்கிரதைகளும் இல்லை. அவளின் மேனியில் அழுத்தமாய் கை உரச மகளை தூக்கியவன், அருகில் படுக்க வைத்து விட்டு, காலை நீட்டி அமர்ந்திருந்த மனைவியின் மடியில் தலை வைத்து கொண்டான்.

சிறிது நேரத்தில் முகம் திருப்பி அவளின் மடியில் சற்று மேலேறி வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டு அவளின் இடுப்பை சுற்றி கையை போட்டுக் கொண்டான்.

இருவரிடமும் எந்த பேச்சுமில்லை!

அங்கை அவனின் அணைப்பை தள்ளவில்லை, அதே சமயம் பதிலுக்கு அணைக்கவுமில்லை. உடலிலும் தளர்வில்லை. ராஜராஜனிற்கு அவளின் உடல் மொழி புரியாதா என்ன? இந்த இறுக்கம் அவனுக்கு பிடித்தமில்லை.

அங்கையை இன்னும் இறுக கட்டிக் கொண்டான்.

ராஜராஜனின் முரட்டுதனங்கள் அங்கையின் மனதிற்கு எப்படியோ, உடலிற்கு அத்துப்படி! ஆனால் எல்லாம் அவள் அனுமதித்தால் மட்டுமே, இந்த முறை அவளுக்கு அனுமதிக்க மனதில்லை!




ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

ராஜராஜன் அங்கை மட்டுமே :love::love::love:

செலவு சீர் எல்லாமே வீட்டோடு இருக்கும் பிள்ளைக்கு தான் முதல் பொறுப்பு.......
தள்ளி இருக்கிறவங்க எல்லாம் அப்படியே இருந்துப்பாங்க.......

ஊர் உலகத்தில் நடக்கிறது தான்........ பொண்டாட்டி வசதியான இடம்னா கணவர்கள் நிறைய இதுமாதிரி கேட்டுத்தான் ஆகணும்......
புரிந்தாலும் தெரிந்தாலும் அடிக்கடி வந்து விழும்........
பேச்சு செயல் பணம் எல்லாவற்றிலும் இந்த பேச்சு கேட்கணும்.......

ஐயோ பாவம் :cry::cry::cry: அண்ணன் அக்காக்களுக்காக படிப்பை விட்டு உழைத்து பிடிக்காத கல்யாணம்னாலும் பெரியவர்களுக்காக ஏற்றுக்கொண்டு 2 வருட பிரிவு முடிந்து வாழ ஆரம்பிக்கும்போதே பேச்சு......
கஷ்டமான விஷயம் தான்....... அங்கே கோபம் காட்டமுடியாது........ அதுக்காக ஒரே ஆள் பொண்டாட்டி தான்.......

அங்கை நிலை அதைவிட மோசம் போலவே........ அவனோடு சேர்ந்து உழைத்தாலும் அவளோட பணம் என்றாலும் பொண்டாட்டி பேரில் சொத்து வாங்குறது இன்னும் பல வீடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று தான்......
பந்தம் பாசம் உறவு எல்லாவற்றையும் பணம் குப்புறத்தள்ளிவிடுகிறது........
அங்கையை எப்படி சமாதானம் பண்ணப்போறான் ராஜராஜன்???
 
Last edited:
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு..

அதே போல் ராஜனின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக அங்கையின்
பங்கு உண்டு

Businessman ஆயாச்சு ராஜராஜன்(y)(y)

அவள் அவளாய் இருக்க விட்டு விட்டான்... ??

எப்பவும் முட்டிக்கிறவங்கதான் சீக்கிரமே கட்டிக்குவாங்க போல ... ??
 
Last edited:
:love: :love: :love:

பெரிய episode கொடுத்ததுக்கு @Admin மல்லிக்கு ஒரு ??

பெரிய கூட்டு குடும்பத்துல இருக்கும் போது இந்த மாதிரி சலசலப்பு
இருக்குறது வாஸ்தவம்தான்...
குடும்ப ஒற்றுமைக்காக அதை கண்டும் காணமல் போய் விடுவது
நல்லது..

பெண்களுக்கு எத்தணை வயசானாலும் பிறந்த வீட்டில் இருந்து கிடைக்கும் சீருக்கு, அது அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் மதிப்பு தனிதான்...
அப்படி பார்க்கும் போது ராஜலக்ஷ்மி பாவம்தான்..

ஊர் பிரச்சனையை தீர்த்து வைத்த அன்பழகனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைத்து, அதற்க்கு வேண்டியது செய்த ராஜராஜனுக்கு hats off.. ??

அங்கை வளர்ந்த சூழ்நிலை வேறு.. அவள் ராஜனுக்காக அனைத்தையும் விட்டு அவனுடைய சந்தோஷம் மற்றும் முன்னேற்றத்திற்க்காக அனுசரித்து போகும் போது அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா...
எப்பவும் இப்படி சண்டையிட்டு கொண்டு இருந்தால்???
அதே போல் அங்கயும் ராஜனை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்

சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்
 
Last edited:
கூட்டு குடும்பத்துல இருக்கிற அரசியல் புரியறதுக்குள்ள ஒரு வழி ஆகிடனும்...

நேர்மையானவங்களுக்கு கஷ்டம்..

கஷ்டப்படும் போது இரக்கப்படும் நல்லவங்க..
மேல உயரும் போது உள்ளார்ந்த சந்தோஷத்தோடு வரவேற்கிறது சந்தேகம் தான்...
லைட்டா ? ஆகும்
 
Last edited:
Joint family la பனிப்போர் கண்டிப்பா இருக்கும்...
ஆனா அந்த போர் அந்த வீட்டைவிட்டு தாண்டாது...
வெளியில் எங்கள் குடும்பம் ன்னு பெருமை தான் ஓங்கி இருக்கும்
 
Last edited:
குடும்ப அரசியல் பற்றிய உங்கள் வார்த்தை கள் சத்தியமான உண்மை...எவ்வளவு வருஷம் ஆனாலும் புரியாது.....

பிரச்சினை கள் இருந்தாலும், மாறாத அன்பு கொண்டவர்கள் ராஜனும், அங்கை யும் ...சமாதானமாகிடும்....
 
Last edited:
Hi
Super epi
எல்லாமே அங்கை பெயரில்
பரிவட்டம் கூட அன்பழகனுக்கு
பணம் பற்றியும் சொல்வதில்லை எனும்போது
தவறான புரிதல் இயல்பு தானே
யாரும் கெட்டவங்க இல்ல
சின்ன சின்ன பொறாமை
இயல்பானது தான்..
ராஜராஜனுக்கு அதை சரியா கையாளும் திறமை இருக்கு.
 
Last edited:
:love: :love:
சூப்பர் எபிசொட் .....
எல்லாமே சகஜம் தான் ....பொறாமை பேச்சு வரத்தை தவிர்க்க முடியாது ....
இவங்க தானே பெரியவங்க கூட இருக்காங்க அப்போ செய்யறது இவங்க பொறுப்பு தான்....
அங்கைக்கு தான் புரியலை RR கொஞ்சமாவது புரிய வைக்கலாம் ....இல்லைனா இன்னும் கஷ்டம் ....
அங்கை பேசுறப்போ பார்த்து பேசணும் ....கணவனோட மரியாதையும் மதிப்பும் தன்னோட கைலனு புரிஞ்சு நடக்கணும் பேசணும் .....பொதுவா குடும்பத்து அரசியல் எந்த பக்கம் எப்படி
திரும்பும்ன்னு சொல்லவே முடியாது ....நமக்கு சரின்னு பட்டதை செய்துட்டு போயிட்டே இருக்கணும் ....

ராஜலக்ஷ்மியும் அவங்க வீடு பொண்ணு தானே அவசியம் சீர் செய்யணும் ....ஏன் அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் தோணவே இல்லை ...ராஜராஜனை என்கவும் குறை சொல்ல முடியாது ....
நன்றி மல்லிகா :):)
 
Last edited:
Top