Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 20 1

Advertisement

Admin

Admin
Member
இன்னொரு பார்ட் முடிஞ்சா இன்னைக்கு இல்லை நாளைக்கு

அத்தியாயம் இருபது :

அங்கை இளகமாட்டேன் என்பது போல அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க, இடுப்பை சுற்றாத கையால் அவளின் ஒரு கையை எடுத்து அவனின் தலையில் வைத்துக் கொண்டான்.

அதில் தலைக்கு குளித்து துவட்டாததில் ஈரம் இருக்க, ஒன்றும் பேசாமல் அவள் அணிந்திருந்த காட்டன் புடவையின் தலைப்பை கொண்டு ஈரத்தை துவட்ட ஆரம்பித்தாள்.

விட்டேனா என்று அவளின் வயிற்றில் புடவையின் மேல் முகத்தை பதித்து இருந்தவன், அவள் முந்தானையால் தலையை துவட்ட கிடைத்த இடைவெளியில் புடவையை வாகாய் விலக்கி இதுவரை ஆடை மறைத்திருந்த இடத்தினில் முகத்தை புதைத்துக் கொண்டு இடையை சுற்றி இறுக கையை படர விட்டு இறுக்கி கொண்டான்.

இது தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதோ.

பின் அந்த இடங்களில் அவனின் இதழ்கள் ஜாலங்கள் செய்ய மொத்தமாய் அவளின் உடல் இளகி விட்டது அவளையும் மீறி.

“ப்ச், ப்ளீஸ் வேண்டாம்” என்று அவள் குரல் ஒலிக்க, ராஜராஜன் இந்த மறுப்பை எதிர்பார்க்கவில்லை. அவள் இதுவரை மறுத்ததாய் ஞாபகமே இல்லை .

முகத்தை பக்கவாட்டில் திருப்பி வைத்து கொண்டான். அப்போதும் அவளை விட்டு விலகினான் இல்லை.

“சாரி, ரொம்ப டார்ச்சர் பண்றேனா” என்றான் கம்மிய குரலில்.

அவளிடம் பதிலே இல்லை!

சட்டென்று ஒரு சோர்வு அவனை ஆட்கொள்ள, மெதுவாக “உடம்பெல்லாம் வலிக்குது” என்றான் சிறுபிள்ளையாய்.

அத்தனை வேலைகள் அவனிற்கு, வலிக்காமல் எப்படி இருக்கும், தலையை துவட்டி முடித்தவள், மெதுவாய் அவனை விலக்கி விட்டு எழுந்து கொண்டாள்.

அவளின் மடியில் முகம் புதைத்து இருந்தவன் இப்போது மெத்தையில் புதைத்துக் கொண்டான்.

“நீங்க விரதம் இருக்கீங்க, என் பக்கத்துல வரக் கூடாது, இந்த கோவில் கும்பாபிஷேக வேலை ஆரம்பிச்சதுல இருந்து இருக்கீங்க, இன்னும் நாற்பத்தி எட்டு நாள் இருக்கே மண்டல பூஜை முடிய”

அப்போது தான் அது தன் ஞாபகத்தில் இல்லாதது புரிய, “மறந்துட்டேன், ப்ச்” என்று சலித்தவன், “முடிச்சிக்கலாம்” என்றவனின் மனதில் அப்படி ஒரு சோர்வு. மறந்து போனது, சற்றும் ஞாபகமில்லை, அங்கை மட்டுமே அவனின் நினைவினில்.

இறைவனிடம் மனதில் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

பின் குழந்தைங்கள் மூவரையும் பாதுகாப்பாய் படுக்க வைத்தவள், முன் கேட்டில் இருக்கும் காவலாளிக்கு அழைத்து இரண்டு வார்த்தைகள் பேசினாள். அவன் விழித்து இருக்கிறானா இல்லையா என்று சரி பார்த்து, பின் ரூம் கதவை தாளிட்டு விளக்கை அணைத்து வந்தவள்,

முகத்தை மெத்தையில் புதைத்து படுத்திருக்கும் அவனின் மீது அப்படியே தன் முழு உடல் பாரத்தையும் கொடுத்து அவன் மேல் படுத்துக் கொண்டாள்.

முகத்தை படுக்கையில் வைத்து இருந்தவன், ஒரு பக்கமாய் முகத்தை திருப்பி வாகாய் படுத்துக் கொண்டு “தேங்க்ஸ் டி” என்றான். அங்கையின் அருகாமை வெகுவாய் தேவையாய் இருந்தது.

அங்கை அவனின் வெற்று முதுகில் முகத்தை ஒரு பக்கமாய் திருப்பி வைத்து அவனை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

இருவருமே ஐந்தே நிமிடத்தில் உறங்கி விட்டனர்.

காலையில் அங்கை விழித்ததே உடலின் மேல் ஏதோ பாரமாய் அழுந்தவும் தான்.

அவர்கள் எப்படி உறங்கினார்களோ அப்படியே இருந்தனர். அதாகப்பட்டது ராஜராஜன் கீழே அங்கை அவனின் மேலே.

இப்போது என்ன என்று பார்க்க, அவள் மேலே அவளின் கண்மணி ரதி பூர்ணிமா, அவள் எழுந்து அங்கையை தேடி அவளின் மேல் ஏறி படுத்திருந்தாள்.

“பட்டு மேல இருந்து எழுந்துரு” என்று அங்கை பேச,

குழந்தை தான் உறங்கி இருந்தாளே, அம்மாவை இருபுறமும் அணைத்து கொண்டு நல்ல உறக்கம் இவள் திரும்பினால் அவள் கீழே விழுவாள். அதற்கு கூட ரிஸ்க் எடுக்கலாம்.

ஆனால் அணைத்து பிடித்து இருக்க, குழந்தை தனியாய் விழாமல் இவள் பேலன்ஸ் தப்பி குழந்தை மேல் விழுந்து விட்டால், அம்மாடி யோசிக்க கூட முடியவில்லை. அப்படியே நகர்ந்து ராஜராஜன் மேல் இருந்து இறங்கலாம் என்று யோசித்தாலும் பயமாய் இருந்தது.

வேறு வழியில்லாமல் “விக்கி” என்று விகாஸ் எழும்புவதற்கு குரல் கொடுக்க, அதில் ராஜராஜன் தான் விழித்தான்.

“அசையாதீங்க” என்று அவசரமாய் அங்கை சொல்ல,

“ஏன் அங்கை” என்றான்.

“பட்டு குட்டி என் மேல தூங்கறா”

“அச்சோ, அப்போ திரும்ப முடியாதே”

இப்படியே பதினைந்து நிமிடம் போக, நேரம் ஐந்து மணி தான் என்ன செய்வதென்று இருவருக்கும் தெரியவில்லை.

அன்பழகனும் ராஜியும் அங்கை முன்பிருந்த வீட்டிற்கு சென்றிருப்பர். குழந்தைகள் இங்கிருப்பதால் கரிஷ்மாவும் மனோவும் இங்கே தங்குவதாக தான் ஏற்பாடு.

“மனோக்கு கூப்பிடட்டுமா?” என்றவளிடம்,

“எப்படி வருவார்? கதவை நீதானே தாள்பால் போட்ட”

“ம்ம், ஆனா பால்கனி கதவு சும்மா தான் சாத்தியிருக்கேன், ஏறிடுவான்”

“நாம இப்படி படுத்திருக்கோம்” என்றான் சங்கடமாக ராஜராஜன்.

தங்களின் உடையை ஒரு முறை அவசரமாய் ஆராய்ந்தாள். ராஜராஜன் மேல் உடை இல்லாமல் இடுப்பில் வேஷ்டியோடு உறங்கி இருக்க, அவன் மேல் அங்கை புடவையில், அவள் கோவிலில் இருந்து வந்தது மாற்றவில்லை.

மற்றபடி உடை எங்கும் பெரிதாய் விலகி எல்லாம் இல்லை. என்ன கணவன் மேல் படுத்திருந்தாள். அது சற்று கூச்சம் தான். ஆனால் வேறு வழி இல்லையே விக்கி அசையக் கூட இல்லை.

இன்னும் ரதி எழுவதற்கு காத்திருக்கலாம் என்று நினைத்தால், ஸ்ருஷ்டி கட்டிலை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்து இருந்தாள். தலையணை தடுப்புகள் எல்லாம் பறந்திருந்தன. அவள் கீழே விழும் அபாயமும் இருக்கின்றது.

மகளை அசைக்க நினைக்க, ரதி அம்மாவை இறுக்கமாய் கட்டி உறங்கியிருந்தாள். இதற்கு மேல் முடியாது என்று மனோவை கைபேசியில் அழைத்தாள். பரவாயில்லை அது பக்கத்தில் இருந்தது.

“என்ன அம்மு இந்த டைம்ல” என்றவனின் குரலில் தூக்கம் மிச்சமிருக்க,

“அண்ணியை எழுப்பாம வா, கீழே சைட்ல போனா எங்க ரூம் பால்கனி ஏறலாம். ஏறி உள்ள வா. யாருக்கும் தெரியாம சத்தம் பண்ணாம வா” என்றாள் படபடவென்று.

அவன் என்னவோ என்று பதறி எழுந்து “எதற்கு?” என்றான்.

“ப்ச், வாடா அண்ணா” அவனும் அவள் சொன்னபடி செய்து உள்ளே வர,

அவன் கண்டது, கவிதையாய் ஒரு காட்சி, ராஜராஜன் கீழே, அவன் மேலே அங்கை, அவன் மேலே ரதி பூர்ணிமா. ஐந்து மணிக்கும் விழிக்கும் ஸ்ருஷ்டி, அவள் ஒரு புறம் ராஜராஜனின் பாதி அங்கையில் பாதி என்று சைடில் மேல் ஏறி படுத்திருக்க,

சிரிப்பு வந்து விட சிரித்து விட்டவன், அவர்களின் போஸை ஒரு ஸ்னாப் எடுத்து, பின் மெதுவாய் ஸ்ருஷ்டியை தள்ளி படுக்க வைத்து, ரதியை உறக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டு, அவளை கொஞ்சும் சாக்கில் திரும்பி நின்று கொண்டாள்.

எழுந்து தன்னை சரி படுத்திக் கொண்டவள், வேகமாய் வந்து அண்ணனின் கை பேசியை பிடிங்க,

“அம்மு டெலிட் பண்ணாத”

“டேய் அண்ணா, அவர் குதிப்பார்டா அவருக்கு இதெல்லாம் இஷ்டமில்லை” என்று ராஜராஜனுக்கு பயந்து சொல்ல,

“என் மருமக இருக்கா, மக இருக்கா அதுல, கூட சைட்ல டம்மி போஸ் தான் நீங்க” என்று மனோ வார்த்தையாட,

அதற்குள் ராஜராஜன் எழுந்து தன் வெற்றுடம்பின் மீது ஒரு துண்டை போர்த்திக் கொண்டவன், மனோவின் “மருமக” என்ற அழைப்பில்,

‘அப்போ விகாஸ்க்கு நீங்க தான் கத்துக் குடுத்தீங்களா?” என்றான்.

ரதியை படுக்கையில் அவளை வசதியாய் படுக்க வைத்து நிமிர்ந்த மனோ, ஆமாம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. “ஏன் அதுல என்ன தப்பு?” என்று விகாஸை போல கேட்டான்.

ராஜராஜன் அவனை பார்த்தபடி நிற்க, “நான் சொல்லிக் கொடுக்கலை, ஆனா இதுல தப்பா எனக்கு தெரியலை” என்றான் அழுத்தமாக.

“நானும் இது தப்புன்னு சொல்லலை. ஆனா உங்க தங்கைக்கு இது தப்பு போல, என்கிட்டே கோபமா கேட்டா நீங்க தான் சொல்லிக் குடுத்தீங்களான்னு. என்னை தப்பு சொல்லியிருக்கா? அதனால் எனக்கு தெரியணும்!”

மனோ மௌனமாகி விட,

“அப்போ தோணினது கேட்டேன், அதை விட மாட்டீங்களா? அதுவும் விக்கி உங்க பக்கத்துல வந்து நின்னதால கேட்டேன். ஏன் அப்படி செஞ்சான்னு நேத்து நைட் கேட்டேன். நான் உங்களுக்கு மட்டும் தான் பயப் படுவேன்னு வந்து நின்னானாம்” என்று சொல்ல,

“நீ என்னை பார்த்து பயப்படுவ, இது செம காமடி. இதை விடமாட்டேன் என் மேல நம்பிக்கை இல்லாம கேட்டது, அதையும் விட உன்னை மாதிரி உன் பொண்ணுக்கும் விருப்பமில்லாம உறவுன்றதால் கல்யாணம் வந்திடுமோன்னு பயம்”

“நான் உங்கப்பா மாதிரி கிடையாது. என் பொண்ணு சம்மதமில்லாம பண்ண மாட்டேன்” என்றான் அவளை தீர்க்கமாய் பார்த்தபடி.

மனோ எதிலும் தலையிடவில்லை. பார்த்து மட்டுமே நின்றான்.

“என் அப்பாவும் என் சம்மதத்தோட தான் பண்ணினார்” என்றாள் ரோஷமாக.

“எனக்கு தெரிஞ்சு நம்ம வாழ்க்கையோட பிரதிபலிப்பு தான் உன் பதட்டம்” என்றவன் அமைதியாய் கதவை திறந்து வெளியேறி விட்டான்.

“லைஃப்ப காம்ப்ளிகேட் பண்ணிகாத அம்மு” என்ற மனோ, அவனும் வெளியேறி ராஜராஜனை அடைந்தவன், “அது கரிஷ்மா சொல்லிக் கொடுத்தா” என்றான்.

“நேத்து இவ விக்கியை மிரட்டினதுமே அவ பயந்துட்டா தப்போன்னு. அதனால தான் எல்லோர் முன்னும் சொல்லலை. என்கிட்டே சொல்லிட்டா, நான் ஒன்னும் தப்பு இல்லைன்னு சொல்லிட்டேன். இதை பத்தி அங்கை கிட்ட இப்போ பேச வேண்டாம். அப்புறம் சொல்லிக்கறேன் சொல்லிட்டேன்”

“அவளுக்கு அங்கையை ரொம்ப பிடிக்கும். எங்கம்மாவையும் பிடிக்கும். அப்போ ரதி ஒன்னு அங்கை மாதிரி இருப்பா இல்லை எங்கம்மா மாதிரி இருப்பான்னு அந்த பட்டுக் குட்டியை இப்போவே அப்படி சொல்லிட்டா” என்றவனின் முகத்தில் அவ்வளவு கனிவு.

“ஓஹ்” என்றவன், அதற்கு மேல் கேட்டுக் கொள்ளவில்லை, மனோவும் சொல்லிக் கொள்ளவில்லை.

படியில் இருவரும் இறங்க, தில்லை அப்போது தான் எழுந்திருந்தார்.

“அத்தை காஃபி” என்று உரிமையாய் தில்லையை கேட்டான்.

“இதோ கொஞ்சம் நேரம் டிகாஷன் இறக்குறேன்” என்று அவர் சொல்ல,

“பரவாயில்லை அத்தை, இன்ஸ்டன்ட் போடுங்க” என்றான்,

“சரி மனோ” என அவர் சொல்ல,

“எனக்கு ரொம்ப டென்ஷன் ஆனா காபி குடிப்பேன், இப்போ எனக்கு உங்க ரெண்டு பேரை நினைச்சு ரொம்ப டென்ஷனா இருக்கு” என்றான் ராஜராஜனிடம்.

“இதெல்லாம் ஒன்னுமில்லை, சில சமயம் அவ இப்படி பண்ணுவா, சில சமயம் நான் இப்படி பண்ணுவேன். ஆனா பல சமயம் நாங்க சரியா போயிடுவோம்” என்றான் இலகுவாய்.

எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்ட மனோ, “காலையில நாங்க எட்டு மணிக்கு கிளம்பறோம். எனக்கு ஒன்பதரைக்கு ஆஃபிஸ் போக சரியா இருக்கும், அப்பாவும் மதியம் மேல ஊருக்கு கிளம்பறார்” என்றான்.

“சரி” என்பது போல தலையசைத்துக் கொண்டான் ராஜராஜன்.




ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

நம்ம heroines எல்லாம் வித்தியாசம் வித்தியாசமா வித்தை காட்டுறாங்களே......
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா :p

என்னடா இது சாண் ஏறி முழம் சறுக்குறீங்களே ரெண்டு பேரும்.......
சனி தான் குடியிருக்குதா நாக்கில்........

சில சமயம் அவ சில சமயம் நான் இப்படி பண்ணிக்குவோம்.....
ஆனால் பல சமயம் நாங்க சரியா போய்டுவோம்.......
அப்போ கரெக்ட்டா தானே போகுது....... அப்புறம் என்ன???

அடுத்த பஞ்சாயத்து அம்மா அப்பா போனப்புறமா???

கரிஷ்மா தானா சம்மந்தி :love:
எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பலன் அங்கை........
 
Last edited:
Hi
உண்மையா மனோவ கூப்பிட்டாச்சு..
அவனுக்கு மட்டுமா கவிதையா ஒரு காட்சி
எங்களுக்கும் தான்
நல்லவேளை படம் எடுத்தான்..
செம நினைவுகள் எதிர்காலத்திற்கு.
 
Last edited:
Top