கானல் -35

Advertisement

நல்ல அழகான கதை மா. காதலித்து கல்யாணம் செய்வதில் மட்டும் வாழ்க்கை வெற்றி பெறுவதில்லை. அதை கானலாக மாற்றாமல் வாழ்க்கை இனிதாக பாய்ந்து காண்பிப்பது தான் அந்தக் காதலுக்கே வெற்றி. மென்மையாக ஆனால் அழுத்தமாக கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் முடிவு கொஞ்சம் வேகமாக முடித்துள்ளதைப் போல் இருக்கிறது.
மற்றபடி போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
ஆழிக்கு நம்ம லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சதே பெரிசுனு தோனுனதால ரதி எவ்வளவு கஷ்டப்பட்டாங்கிறது பெரிசா தெரியலை...எதோ அவனோட ஃப்ரண்ட் ஆல ரதியோட கஷ்டத்த புரிஞ்சு அவனோட காதல கானலாகமா காப்பாத்திட்டான்
 
ஆழி ரதியோட காதல்
கல்யாணம் நடந்ததும்
காணாம போயிடுது
பிடிக்காத மருமகள
வேலைக்காரியாக்கி
அவள மட்டம் தட்டும்
குடும்பம்
மூணாவது மருமகள்
வந்தபின்ன வீட்டில்
நடக்கும் அரசியல்
புரியுது ஆழிக்கு
அதோட நண்பனின்
பேச்சும் மனைவியின்
மனநிலையை
புரிய வச்சு
பிரிய வேண்டிய திருமண பந்தம்
ஆழியோட தெளிவான
சிந்தனையால்
நல்லதொரு குடும்பமா
ரதியின் காதலும் மீண்டும்
கிடைத்து நிறைவான
வாழ்க்கை அமையுது
அருமையான கதை
👌🌹❣️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
 
தவறை சுட்டிக் காட்டி
திருத்தாத
தாய் தந்தையின் குணம்
தங்கையின் செயலால்
தன் வாழ்வும் அழிய போக...

தங்கையின் திமிரில்
தன் தலையிலே மண் அள்ளி போட்டுக் கொண்ட நிலா
திருந்தாத ஜென்மம்....

தவமே காதலாக
திருமணம் செய்து கொண்ட
தம்பதி ரதி❤️ஆழி....

கணவனுக்காக
குடும்பத்தை அனுசரித்து
கஷ்டம் அனுபவித்து
காயம் கொண்ட மனது
கண்ணீர் வடிக்க

கணவனின் விலகல்
காதல் இல்லா பந்தம்
கானல் நீரான வாழ்க்கை

புரிதல் கொண்ட நேரம்
பொண்டாட்டியின் வேதனை
புருஷன் தவிப்பு ஏக்கம்
பரிமாறிய துக்கங்கள்
பாசம் கொண்ட நெஞ்சங்கள்
பரிவாக துணையாக இருக்க
பிரச்சனைகள் தீர்ந்து
காணாத போன காதல்
கைக்கூடியது.....

ரதி ❤️ ஆழி 🤩

வாழ்த்துக்கள் மா.... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐💐
 
💞💞
வாழ்வெனும் ஆழி பேரலையில் மனம் மயக்கும் அமைதி சீரலையும் வரும்!!! புரட்டிப் போட்டு மிரட்டும் சுழலும்
சுனாமியும் வரும்!!! எது வந்தாலும் மனம் தளராமல் எதிர் நீச்சல்
அடிக்கும் நீரதியாய் வாழ்ந்தால் நீயும் ரதியாய் வாழலாம். வாழ்வும் சிறக்கும். நீரதி பாத்திரம் கற்பித்த பாடம் இது.

பயந்து நடுங்கி பழி போட்டு ஒதுங்கி நிற்கும் நிலாவாய் வாழ்ந்தால் தேய்ந்து வளரும் மதியாய் வாழ்வும் இருக்கும். நிலா வாழ்வு சொன்ன மதி இது.

சோம்பேறியாய் சோம்பி திரிந்தால் மூத்த மருமகளாய் இருந்தாலும் தள்ளி தான் நிற்க வேண்டும். முதன்மை இருக்காது. தரங்கினி உணர்த்திய தருணம் இது.

வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று நியாயமாய் நடந்தால் வாழ்வில் சுணக்கம் இன்றி நிம்மதியாய் வாழலாம் என்பது பவ்யா பவ்யாமாய் தந்த கருத்து இது.

மகளோ மருமகளோ தவறு செய்தால், திருத்தி நல்வழி சொல்லி அவர்கள் வாழ்வை சீர் செய்யும் பொறுப்பான மாமியாராய் இல்லாமல் இருந்தால், என்ன துன்பம் அனுப்பிவிப்பர் என செயலில் உணர்த்திய வளர்மதி.

பெண்கள் குணங்கள், அதனால் வரும் நன்மை தீமைகள் என ஒவ்வொரு பாத்திரத்திலும் அருமையா சொல்லி இருக்கீங்க தேவிமா.

காதல் கானல் நீராய் மட்டுமல்ல, கனலும் நெருப்பாய் தகித்தாலும் தோள் சாய, துணை மட்டுமே பெண்ணின் நிம்மதியென ஆழி அழகாய் உணர்த்தி விட்டான்.

தப்பு செய்தால் அதட்டும் அமுதன், மனைவிக்கு துணை நிற்கும் தீபன், வாய் பேச்சால் நொந்து போன ஹரி, பணம் மட்டுமே சம்பாதித்து கொடுத்தால் போதும், தள்ளி நின்று அரசளாலாம் என ஒதுங்கி நிற்கும் கணவன் படைப்பாய் தேசிகன். பல ஆண்களின் இயல்புகளையும் அழகா உணர்த்தி இருக்கீங்க. எதார்த்த வாழ்க்கையும், நடக்கும் அரசியல், கோபம், குறைகள்ன்னு இயல்பா இருந்தது. மனசுக்கு நிறைவாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேவிமா💐💐💐🤗🤗🤗 🥰🥰🥰
 
Sema story madam. Rombha azhaghan thoive illama, edharthama story romba ilukaama arumaya azhagha eludhi irukeenga. Vetri pera vaazhthukal.
 

Advertisement

Advertisement

Back
Top