

வாழ்வெனும் ஆழி பேரலையில் மனம் மயக்கும் அமைதி சீரலையும் வரும்!!! புரட்டிப் போட்டு மிரட்டும் சுழலும்
சுனாமியும் வரும்!!! எது வந்தாலும் மனம் தளராமல் எதிர் நீச்சல்
அடிக்கும் நீரதியாய் வாழ்ந்தால் நீயும் ரதியாய் வாழலாம். வாழ்வும் சிறக்கும். நீரதி பாத்திரம் கற்பித்த பாடம் இது.
பயந்து நடுங்கி பழி போட்டு ஒதுங்கி நிற்கும் நிலாவாய் வாழ்ந்தால் தேய்ந்து வளரும் மதியாய் வாழ்வும் இருக்கும். நிலா வாழ்வு சொன்ன மதி இது.
சோம்பேறியாய் சோம்பி திரிந்தால் மூத்த மருமகளாய் இருந்தாலும் தள்ளி தான் நிற்க வேண்டும். முதன்மை இருக்காது. தரங்கினி உணர்த்திய தருணம் இது.
வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று நியாயமாய் நடந்தால் வாழ்வில் சுணக்கம் இன்றி நிம்மதியாய் வாழலாம் என்பது பவ்யா பவ்யாமாய் தந்த கருத்து இது.
மகளோ மருமகளோ தவறு செய்தால், திருத்தி நல்வழி சொல்லி அவர்கள் வாழ்வை சீர் செய்யும் பொறுப்பான மாமியாராய் இல்லாமல் இருந்தால், என்ன துன்பம் அனுப்பிவிப்பர் என செயலில் உணர்த்திய வளர்மதி.
பெண்கள் குணங்கள், அதனால் வரும் நன்மை தீமைகள் என ஒவ்வொரு பாத்திரத்திலும் அருமையா சொல்லி இருக்கீங்க தேவிமா.
காதல் கானல் நீராய் மட்டுமல்ல, கனலும் நெருப்பாய் தகித்தாலும் தோள் சாய, துணை மட்டுமே பெண்ணின் நிம்மதியென ஆழி அழகாய் உணர்த்தி விட்டான்.
தப்பு செய்தால் அதட்டும் அமுதன், மனைவிக்கு துணை நிற்கும் தீபன், வாய் பேச்சால் நொந்து போன ஹரி, பணம் மட்டுமே சம்பாதித்து கொடுத்தால் போதும், தள்ளி நின்று அரசளாலாம் என ஒதுங்கி நிற்கும் கணவன் படைப்பாய் தேசிகன். பல ஆண்களின் இயல்புகளையும் அழகா உணர்த்தி இருக்கீங்க. எதார்த்த வாழ்க்கையும், நடக்கும் அரசியல், கோபம், குறைகள்ன்னு இயல்பா இருந்தது. மனசுக்கு நிறைவாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேவிமா







