Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 7 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----7
கேசவமூர்த்தியின் பேச்சை கேட்ட சந்தானமும், அசோக்கும் அமைதியாக இருந்தார்கள் என்றால்,பிரதாப் தன் மனதுக்குள் போராடி கொண்டிருந்தான். தன் மகள் மட்டும் தன்னை விட்டு பிரிய கூடாது.ஆனால் மற்றவரின் மகளை பிரித்ததும் இல்லாமல் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியப்படுத்த வில்லை.கடைசியில் அவர் இறந்ததும் தெரிவிக்க வில்லை.என்று தன் மனது கொந்தளிப்பை அடக்கி கொண்டிருந்தான்.

பின் பிரதாப்பே கேசவமூர்த்தியை பார்த்து “சரி உங்கள் கன்டிசனுக்கு நான் ஒத்துக் கொண்டாள் ?” என்று கேள்வி எழுப்பினான்.பிரதாப்பின் இந்த பதிலால் மற்ற மூன்று பேருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றால், சகுந்தலா அம்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சகுந்தலா அம்மா யோசனையுடன் பிரதாப்பின் முகத்தையே பார்த்திருந்தார்.இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் சிறிதும் யோசிக்காமல் எப்படி உடனே வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க ஒத்துக் கொள்ள முடியும். அதுவும் தன் பெற்றோர்களிடம் கூட கலந்து பேசாமல் தன் இஷ்டப்படி முடிவு எடுப்பது என்பது அவ்வளவு நல்லதிற்கு இல்லையே….என்று தன் சந்தேகத்தை கண்ணில் காண்பித்தார் என்றால் …

கேசவமூர்த்தி அதை தன் வாய் மொழியால் கூறினார். “பிரதாப் சார் எப்படி நீங்கள் டெல்லியில் இருக்கும் பிஸ்னஸை விட்டு இங்கு செட்டில் ஆக முடியும். அதுவும் இல்லாமல் இந்த முடிவை பற்றி நீங்கள் உங்கள் பெற்றோரிடமும் கேட்க வில்லை.”என்று கேள்வி எழுப்பினார்.

பிரதாப் மிக பொருமையாக அசோக்கே இது நம்ம பிரதாப் தானா…. என்று சிந்திக்கும் அளவுக்கு மிகவும் நிதானமாக வார்த்தையை கோர்த்தான். ஏன் என்றால் சகுந்தலா அம்மாவின் சந்தேகத்தை அவரின் கண்களே காட்டி கொடுத்து விட்டது. முதலில் அவரின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும். பின்பு கேசவமூர்தியின் கேள்விக்கு அவர் ஏற்றுக் கொள்ளும் விதமாக பதில் அளிக்க வேண்டும்.

அதனால் முதலில் சகுந்தாலா அம்மாவிடம்” நான் உடனே உங்கள் நிபந்தனைக்கு சரி என்று நான் சொல்வதால் உங்களுக்கு என் மேல் சந்தேகமாக கூட இருக்கலாம். “ இடையில் ஏதோ பேச வந்த கேசவமூர்த்தியை தடுத்து “நீங்கள் சந்தேகம் பட்டாலும் அதில் தப்பும் இல்லை ஏன் என்றால் நீங்கள் பெண்ணை பெற்றவர் நாளும் யோசிப்பதில் தவறு ஏதும் இல்லை.

முதலில் உங்கள் நிபந்தனைக்கு நான் ஒத்துக் கொண்டதிற்கு முக்கிய காரணம் உங்கள் மகளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அடுத்து சென்னையிலும் நான் என் தொழிலை தொடங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். அதனால் தான் சந்தானம் ஒட்டலை வாங்கினேன். இன்னும் ஒரு ஒட்டலையும் விலை பேசிக் கொண்டிருக்கிறேன்.இன்னும் ஒரு வாரத்தில் அதுவும் முடிந்திடும்.”என்று கூறி முடித்தான்.

பிரதாப் பேசியதை கேட்ட கேசவமூர்த்தி “எந்த ஒட்டலை விலை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தன் சந்தேகத்தை கேட்டதற்க்கு…. பிரதாப் ஒரு ஒட்டலின் பெயர் சொல்லும் போதே தன் நண்பன் அசோக்கை பார்த்தான். பிரதாப்பின் கண் அசைவை புரிந்துக் கொண்ட அசோக் தன் செல்லில் பிரதாப் சொன்ன ஒட்டலின் ஒனரும் தங்களுடன் படித்த நண்பனுமான வாசுவுக்கு யாரும் அறியாமல் மெசஜை தட்டினான்.

பிரதாப் பேசியவுடன் கேசவமூர்த்தி வாஷ்ரூமுக்கு சென்று வருகிறேன் என்று பிரதாப் எதிர்பார்த்தது போல் சொல்லி விட்டு சென்றார்.பின் திரும்பி வரும் போது அவர் முகத்தில் திருப்தியை பார்த்தவுடன் பிரதாப் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே. திட்டம் போட்டு வீழ்த்த உனக்கு மட்டும் தான் தெரியுமா? என்று நினைத்துக் கொண்டான்.

கேசவமூர்த்தி மனதிலோ…. பிரதாப் சொல்வது உண்மையே…. அதை பிரதாப் விலை பேசியதாக சொன்ன ஒட்டல் முதலாளியின் வாயிலாக சற்று முன் தான் வாஷ் ரூமுக்கு செல்வதாக சொல்லி போன் மூலம் உறுதி படுத்தியத்திக் கொண்டார்.

பின் கேசவமூர்த்தி பிரதாப்பிடம்,”இவ்வளவு பெரிய முடிவை உங்கள் பொற்றோரிடம் கேட்காமல் நீங்களே எப்படி சொல்வீர்கள்….”என்று கேட்டதற்க்கு “நான் முதலில் சொன்னது போல் சென்னையில் இந்த ஒட்டல் பிஸினஸோடு, டெல்லியில் உள்ளது போல் டெக்ஸ்டைல்ஸ்,பில்டிங் கன்செக்க்ஷன்,அடிடெஸ்மன்ட் ஏஜென்ஸி தொடங்க வேண்டும் என்று முதலிலேயே நான் முடிவு செய்து விட்டேன். அது என் பொற்றோருக்கும் தெரியும்.”என்று கூறி கேசவமூர்த்தியை தான் சொல்வதை எல்லாம் நம்புகிறார்றா…. என்று பார்த்தான்

பாவம் பிரதாப் விரித்த வலையில் சரியாக விழுந்தார்…என்பதை கேசவமூர்த்தி தன் கேள்வியின் மூலம் நிருபித்தார்.”பெண்ணை உங்கள் பெற்றோர் பார்க்க வேண்டாமா….?”என்றதற்கு பிரதாப்”நீங்கள் முதலில் சொன்னது போல் என் வயது இருபத்தி ஒன்பது முடிந்து விட்டது. என் பொற்றோர்கள் மூன்று வருடமாகவே திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்.எனக்கு தான் ஒரு பெண்ணையும் பிடிக்க வில்லை. அதனால் அம்மா நீயாக எந்த பெண்னை காண்பித்தாலும் எங்களுக்கு சரியே… நாங்கள் வந்து ஆசிர்வாதம் செய்கிறோம்,என்று முதலிலேயே சொல்லி விட்டார்கள்” என்று மெய்யும்,பொய்யும், கலந்து கூறினான்.

பிரதாப் சொல்வதை கேட்ட சந்தானம்…”பிறகு என்ன கேசவா….நீ சொல்வதற்க்கு எல்லாம் தான் பிரதாப் விளக்கம் கொடுத்து விட்டார் வேறு என்ன”?என்று கேட்டதற்கு சகுந்தலா அம்மா “வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே?”என்றதற்கு…

அசோக் தன் மனதுக்குள் இருந்து….இருந்து… இவன் இப்போது தான் திருமணம் செய்யும் முடிவையே எடுத்து இருக்கிறான். இவர்கள் கேட்கும் கேள்விகளில் அந்த எண்ணத்தையே கை விட்டுட்டுவானோ… நமக்கு இனி காலம் முழுவதும் இவன் பின்னாடி அலைவது தான் விதியோ என்று அவன் கவலையில் மூழ்கினான்.

ஆனால் பிரதாப் அதற்கும் அசராமல் நான் எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன் என்பது போல் சகுந்தாலா அம்மாவை பார்த்து “நான் சென்னையில் பிஸ்னஸ் தொடங்க போகிறேன் என்று முடிவு ஆனாதும்… முதலிலேயே இங்கு நான் ஒரு பங்களாவை வாங்கி விட்டேன்.ஏன் என்றால் சென்னையில் தான் மாதத்தில் இருவது நாள் தங்க வேண்டியிருக்கும் என்ற காரணத்திற்காக, ஆனால் இப்போது நான் என் பங்களாவில் தங்குவதற்கு பதிலாக உங்களுடன் இருக்க போகிறேன். அப்படியே உங்கள் பிஸினஸையும் நான் பார்த்துக் கொள்வேன் உங்களுடையதும் ஒட்டல் பிஸ்னஸ் என்பதால எனக்கும் ஈஸியாக தான் இருக்கும்.மேலும் உங்கள் மகளும் உங்களை விட்டு பிரிய தேவையில்லை.” என்று கூறினான்.

அசோக் கேசவமூர்த்தியிடம் அவர் மேலும் ஏதும் கேட்கும் முன்பே ”டெல்லியில் உள்ள அவன் பிஸினஸை நான் பார்த்து கொள்வேன்.எனக்கு அது பழக்கமே ஏன் என்றால் முன்பே அவன் பாதி நாள் வெளி நாடுகளுக்கு தான் பறந்து கொண்டு இருப்பான். அப்போது எல்லாம் நான் தான் பார்த்து கொள்வேன்”.என்று கூறி பிரதாப்பின் விளக்கம் சொல்லும் வேலையை குறைத்தான்.

இவ்வளவு விளக்கம் அளித்த பின்பும் ஏனோ சகுந்தாலா அம்மாவுக்கு மனதில் ஏதோ நெரிடியது. அது இன்னதுதான் என்று சொல்ல முடிய வில்லை. ஆனால் ஏதோ தவறு உள்ளது போல் மனதுக்கு பட்டது. அதனால் பிரதாப்பிடம் “நாங்கள் நாளை எங்கள் பதிலை சொல்கிறோம்.”என்று கூறி முடித்தார்.

பிரதாப்புக்கு சகுந்தலா அம்மாவின் இந்த பதில் ஏமாற்றம் அளித்தது.தன் வாழ்நாளில் யாரிடமும் இது போல் பணிந்து அவன் விளக்கம் அளித்தது கிடையாது.இவ்வளவு ஏன் அவன் தன் பெற்றோரிடம் கூட அவன் இவ்வளவு பணிந்தது கிடையாது. குறைந்த பட்சம் பத்மினியிடம் கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தாவது, அவனுக்கு மனது ஆறியிருக்கும் இவர்களின் இந்த பதில் அவர்கள் தன்னை அவமதித்து விட்டதாகவே கருதினான்.

பின் எழுந்தவாறு சரி நீங்கள் உங்கள் பெண்ணிடம் கேட்டு பொருமையாகவே பதில் சொல்லுங்கள் என்று அசோக்கிடம் கண் அசைவில் எழும்மாறு கூறினான். பிரதாப்பின் எரிந்த மனதில் எண்ணையை ஊற்றுவது போல் கேசவமூர்த்தி”என் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.நான் சொல்லும் முடிவே அவளுடையதும் என்று கூறினார்.

பின் சகுந்தலா அம்மா மிகவும் நேரம் சென்று விட்டது. சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என்ற அழைப்பை நிராகரித்துக் கொண்டே இன்னும் எழாமல் அமர்ந்திருக்கும் அசோக்கிடம் கண்டன பார்வையை செலுத்தி கொண்டிருக்கும் போது கேட்டை திறந்துக் கொண்டு பத்மினி ஸ்கூட்டியை தான் எப்போதும் நிறுத்தும் இடத்தில் பிரேக் போட்டு பின்னால் அமர்ந்து இருக்கும் ஷாலினியிடம் “இப்போதாவது கண்ணை திற” என்று அவளை அதட்டினாள்.

ஷாலினியுடன் வந்ததால் கார்டனில் யார்?யார்? இருக்கிறார்கள் என்று பத்மினி கவனிக்க வில்லை. ஆனால் பிரதாப்புக்கு இவ்வளவு டென்ஷனிலும் பத்மினி எங்கே இன்னுமா வீட்டுக்கு வரவில்லை? என்ற கேள்வியும் இல்லை முதலிலேயே வந்து விட்டலா?என்று தன் மனதுக்குள்ளாகவே பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

அதனால் பத்மினியின் ஸ்கூட்டி சத்தம் கேட்டதும் ஆவாலுடன் அவளையே பார்த்திருந்தான்.ஆனால் பாவம் பத்மினி தான் கவனிக்காமல் ஷாலினியுடன் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தால். எப்போதும் பத்னிமி மிகவும் வேகமாக தான் வண்டியை ஒட்டுவாள்.அதனால் எப்போதும் ஷாலினி பின்னால் அமர்ந்தால் கண்ணை மூடிக் கொண்டுத்தான் அமர்வாள். அதனால் தான் வண்டியை நிறுத்தியதும் வேறு எங்கும் பாராமல் ஷாலினியுடன் கதை அளந்துக் கொண்டிருந்தாள்.

இதை அறியாத பிரதாப் இப்போதும் அவள் தன்னை பாராதது தன்னை அவமதித்து விட்டதாகவே கருதினான். வண்டி சத்தம் கேட்டதும் பிரதாப்புடன் அனைவரும் பத்மினியையும், ஷாலியையும் பார்த்ததால் பேச்சி தடை பட்டு அனைவரின் பார்வையும் அங்கு சென்றது.

பார்த்தவர்களில் ஒவ்வொரு மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது. பிரதாப்புக்கு தன்னை அவமதித்ததாக கருதினான் என்றால் கேசவமூர்த்திக்கு தன் பெண்ணும் பிரதாப்பை பார்த்தால் அவள் கருத்தையும் கேட்போம் என்று நினைத்து இருந்தார். ஏன் என்றால் அன்று ஒட்டலில் நம் பெண் பிரதாப்பை நன்கு பார்த்திருக்க மாட்டாள் என்றே கருதினார்.அனைத்து தகப்பானரும் நினைப்பது போலவே.

பாவம் அவருக்கு எங்கே? தெரியபோகுது பிரதாப்பை பார்த்து பத்மினி சலனம் பட்டதும், பின் அது தவறு என்று ஒதுக்கினாலும், எப்போதும் படுத்தவுடன் உறங்கிவிடும் பத்மினியின் உறக்கம் நேற்று இரவு பிரதாப்பின் நினைவில் கெட்டதும்.

சகுந்தலா அம்மாவோ, இந்த இடம் வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டுருந்தார்.அவர் மனதுக்குள் பதிந்து விட்டது இது தான். தன் மகன் இருபத்தியொரு வருடத்திற்கு முன் எப்படி அவன் மாமனாரிடம் பேசினானோ அதே மாதிரியே பிரதாப்பின் பேச்சும் இருப்பதே அதற்கு காரணம்.சரித்திரம் திரும்புமோ?

இன்று அவகாசம் கேட்டதே தன் பேத்தியிடம் இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை தடுக்க நினைத்திருந்தார்.தன் மகனிடமே சொல்லி இருக்கலாம், ஆனால் அது என்னவோ தெரியவில்லை கேசவமூர்த்தியின் திருமணத்திலிருந்தே அவர் தன் தாயின் பேச்சை கேட்பதை நிறுத்தியிருந்தார்.இப்போது அனைவரிடம் முன்பும் பத்மினியிடம் சம்மதம் கேட்டால் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதே, அதற்கு ஏற்றார் போல் சந்தானமும் பத்மினியே வந்து விட்டால் அவளிடமே கேட்டு விட்டே செல்லலாம் என்று கூறினார்.
 
Top