Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 31

Advertisement

ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! படுத்தேவிட்டானையா மாப்பு கேக்கறதுக்கு. அதை கூட ஒழுங்கா கேக்கத் தெரியுதா பாரு. எல்லாமே டைரக்ட்டு பண்ணற கண்ணோட்டத்துலையே பாக்கறான். இவரு வருவாராம் நதி ஆச்சரியமா பாக்கோனுமாம். என்னாடா காலக்கொடுமை டைரக்டருக்கு வந்த சோதனை🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪.

டேய் ஆர்யா சிம்மாவே மிரண்டு போற அளவுக்கு கட்டிப்புடிச்சியே அந்த டீலிங் ரொம்பவே எனக்கு புடிச்சிருக்குடா. பயபுள்ள சிம்மாகிட்டயும் மாப்பு கேக்கறானாம் அவனோட டைரக்ஷன் பிரகாரம்.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭. ஏன்டா இனிமேட்டு இனிமேட்டுன்னு சொல்லறியே அதுக்கான சந்தர்ப்பமே அமைய வேண்டாமுன்னு நதி முடிவுபண்ணி செயல்படுத்தற மாதிரி தெரியுதேடா. ஆனா ஒன்னு டா இரண்டு பேத்தோட சோடி பொருத்தம் எல்லாவிதத்திலையும் டாப்போ டாப்புடா. ஆர்யா இதுதான்டா உன்ற நிலை
 
என் கர்வமும்
போட்டு வைத்த
எல்லைக் கோடுகளும்
மொத்தமாக
வீழ்ந்ததடி பெண்ணே
உன் மௌனத்திலும்
நிதானத்திலும்..

முதலாமவனாய் கேட்கவேண்டிய
செய்தியை
இறுதியானவனாக
கேட்டதில்
அறுதியிட்டு உறுதி
கொண்டேன்
என்னை மாற்றிக் கொள்ள..

நீ உன் இயல்பில்
அப்படியே இருக்க
என் இயல்பு
தலை தெறித்தோடி
உன் முன்
உனக்கானவனாக
நின்றுவிட்டேன்
சித்தம் பித்தம்
கொண்டு..

மன்னிப்பை
யாசிக்க நினைத்தும்
யாசிக்கத் தெரியாமல்
நிற்கிறேன்

வா!
வாழ்ந்து காட்டி
நிரூபிக்கிறேன்
என்னை..
நீ அதை வேண்டாத
போதும்
எனக்கு அது
தேவையாக இருக்கிறது!
 
Top