Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 3

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
யாழி - விஷ்ணு டீசர் டியர்ஸ் படிச்சிட்டு கருத்தை சொல்லிட்டு போங்க..

"போச்சு போச்சு உன்னோட கனவு, லட்சியம், ஆசை இவ்ளோ ஏன் உன்னோட வாழ்க்கையே போச்சு..!! தப்பான ஆளுக்கு ஓகே சொல்லி மொத்தமா நீயே அதை குழி தோண்டி புதைச்சு சமாதி கட்டிட்ட" என்று கூற நிலை குத்திய விழிகளுடன் தம்பியை பார்த்திருந்த யாழிக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.

"எந்த ஒரு முடிவெடுக்கும் முன்ன யோசிக்கவே மாட்டியாடி நீ..!! போட்டோ பார்த்து எப்படிடி ஓகே சொன்ன எனக்கு தெரிஞ்சு நீ ரொம்ப அவசரபடர யாழி.., நான் தான் அத்தனை முறை சொல்லிட்டு போனேனே நான் சொல்லாம ஓகே சொல்ல கூடாதுன்னு அப்புறம் ஏன் யாழி அவசரப்பட்ட..!!" என்று உள்ளிறங்கிய குரலில் கேட்க அவளிடம் பதிலில்லை

'வாயை திற..!! இப்படி பேசாம இருந்தா நீ எனக்கு பண்ணின துரோகம் இல்லன்னு ஆகாது..',

"சாரிடா நான் வேணும்ன்னு பண்ணலை.., எனக்கே தெரியலை எப்படி.. என்றவளின் மனக்கண்ணில் மீண்டும் அதியின் முகம் மின்னி மறைய என்ன பதில் சொல்வதென புரியாத தடுமாற்றம்.

'யாழி நான் என்ன எனக்காகவா பேசிட்டு இருக்கேன் உனக்காக தான் பேசுறேன் அது கூட உனக்கு புரியலையா.., ஏய் நான் தான் அன்னைக்கே அந்த ஆள் சரியான ரவுடியா இருக்கான் பார்வையே மிரட்டலா இருக்குன்னு சொன்னேனே எப்படிடி ஓகே சொன்ன..?? அப்போ உன் தம்பி மூக்கு உடைஞ்சத பத்தி உனக்கு கவலை இல்லையா..',

'சாரி விஷ்ணு எனக்கு அவர் தான் இவர்ன்னு தெரியாதுடா..',

'ஏய் தெரியுது தெரியலை இப்போ பிரச்சனை இல்ல உன் வாழ்க்கை பத்தின பெரிய முடிவு யாழி அதுல என்னை கேட்காம நீ எப்படி ஓகே சொல்லுவ..?? அப்போ உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா..?? அப்பா அம்மாவை விட உன் மேல அதிகமான அக்கறை எனக்கு இருக்கு கொஞ்சமும் யோசிக்க மாட்டியா..??'

'சரி என்னை விட அவரை கல்யாணம் பண்ணிகிட்டா இனி நீயா இருக்க முடியாது போன் மட்டும் இல்ல, நீ என்ன சாப்பிடனும், என்ன ட்ரெஸ் போடணும், என்ன பண்ணனும், எல்லாமே வேற ஒருத்தங்க தான் தீர்மானிப்பாங்க நீ அவங்க சொல்றதை மட்டுமே செய்ய போற உனக்குன்னு சுயஅடையாளமே இருக்காது கொஞ்சம் கொஞ்சமா சுயம் இழந்து உன்னையே தொலைச்சிடுவ தெரியுமா..??'

'ஒரு பெண்ணுக்கு சுயமரியாதையும் சுய அடையாளமும் எவ்ளோ முக்கியம் தெரியுமா..?? கல்யாணம் பண்ணா அதெல்லாம் காணாம போயிடும் அது மட்டுமா உன்னோட ஆசை கனவு லட்சியம் எல்லாம் தூக்கி கிடாசிட்டு அன்னைக்கு fb ல பார்த்தோமே அதுல அந்த மேம் சொல்ற மாதிரி நீ சமையல் ரூம்ல முடங்க வேண்டியது தான்', என்று கூற யாழி முகத்தில் குழப்ப ரேகைகள் வெகு தீவிரமாக படர்ந்தது.

"இன்னும் உலகம் தெரியாம இருக்க யாழி நீ..!! நீயே பாரு" என்று லேட்டஸ்ட்டாக கல்லூரி மாணவர்கள் இடையே எடுக்க பட்ட சர்வே குறித்த வீடியோவை காட்டியவன்,

'பார்த்தியா இப்போல்லாம் சிங்கிள்லா கெத்தா சுத்துறது தான் ட்ரென்ட் ஆனா நீ தான் பழைய பஞ்சாங்கமா கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துட்ட அப்புறம் குழந்தை குட்டின்னு இன்னும் நாலு வருஷத்துலயே ஆன்ட்டி ஆகிடுவ நாளைக்கு என் பசங்க வந்து உன்ன பாட்டின்னு கூப்பிடும்' என்று கூற யாழிக்கு தூக்கி வாரிபோட்டது .

'டேய் அப்போ நான் அவசரபட்டுடேனா..??' என்றாள் குழப்பத்துடன்.

'ஆமாடி அப்படி உனக்கு சிங்கிள்லா இருக்க பிடிக்காட்டி பின்னாடி யாராவது உன்னை லவ் பண்ணினா அவங்க லிவிங் டூகெதர்ல இருக்கலாம் அது தான் இப்போ ட்ரென்ட் தெரியுமா...??'

'லிவிங் டூ ஈத்தாரா ..?? அப்படின்னா என்னடா..??'

'அடிப்பாவி இன்னுமா நீ அப்டேட் ஆகாம இருக்க..?? அது ஈத்தர் இல்லடி டூகெதர்.., லிவிங் டுகெதர்'

'ஏதோ ஒன்னு ஆனா என்னன்னு சொல்லுடா..'

'அதான்டி போன வருஷம் சுப்ரீம் கோர்ட் கூட ஜட்ஜ்மென்ட் கொடுத்ததே'

'என்னன்னு..??'

"நமக்கு யாரயாவது பிடிச்சா கல்யாணம் பண்ணாம அவங்க கூட ஒரே வீட்ல இருக்கலாம், யாரும் யாரையும் டாமினேட் பண்ண முடியாது, யாரும் யாரோட டிசிஷன் எடுக்க முடியாது, யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியது கிடையாது, யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்ல, யாரும் யாரோட கனவு, லட்சியத்துக்கு நடுவுல நுழைய முடியாது இப்படி நிறைய இருக்கு"

'இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்'

'நீ பண்ணின முட்டாள் தனத்துல இருந்து உன்னை எப்படி காப்பாத்துறதுன்னு இவ்ளோ நேரமா பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்ட்டால எல்லாம் தேடி கண்டுபிடிச்சேன்'

'அப்போ நீ கல்யாணம் பண்ணிப்பேன் சொன்னது..??'

'அப்போ சொன்னேன்டி இப்போ பார்த்தா எனக்கு ஒன்னு சிங்கிள்லா சுத்துறது இல்ல லிவிங் இது தான் பெஸ்ட்டா இருக்கு அப்போ தான் லைப்பை என்ஜாய் பண்ண முடியும் நம்ம வாழ்க்கையை யார் என்னன்னே தெரியாதவங்க கையில தூக்கி கொடுத்து சிக்கி சின்னாபின்னம் ஆகாம மை லைப் மை ரூல்ஸ்ன்னு சந்தோஷமா அனுபவிச்சி ரசிச்சி நம்ம வாழ்கையை நாம வாழ முடியும்' என்று முடிக்க வாழ்க்கை குறித்த பயம் முதல் முறை தோன்றியதில் யாழி முகத்தில் தீவிர சிந்தனை..,
 
Last edited:
அடப்பாவி.. ??? லூசு, எருமைமாடு, பைத்தியக் காரா.. இதுங்க அரை லூசுங்கன்னு தான் நினைச்சேன்.. சோசியல் மீடியா பார்த்து மொத்தமா கெட்டு போய் இருக்குதுங்க.. அக்காவுக்கு பண்ற அட்வைஸாடா இது.. ???
பேசாமல் ரெண்டு பேரும் காவி கட்டி சாமியாரா போயிடுங்க.. தனித் தீவு, தனி சேனல் ன்னு குஷியா இருக்கலாம்...??? கல்யாணம் பண்ணி ரெண்டு அப்பாவிங்க வாழ்க்கையை கெடுத்துடாதீங்க..
Writer sis அதி கையால இவனுக்கு இன்னும் நாலு அப்பு வைக்க சொல்லுங்க.. இந்த கூமுட்டை அதிய என்ன பேச்சு பேசுது..
Vaishu sis இந்த அக்கா தம்பி நமக்கு வேண்டாம் ஆர்மியை கலைச்சுடுங்க.. ஒன்னா சேர்ந்து இதுங்கள திட்டலாம்..
 
அடேய் கிறுக்கு பயலே விஷ்ணு உன்னோட வாயிலேயே ரெண்டு மிதி மிதிக்கணும், என்னமா கெட்டு குட்டி சுவராகி, யாழியையும் குழப்பி மோசம் போக பிளான் போட்டு கொடுக்கற, என்னோட கையில மாட்டுன உன் மண்டைல கொண்டை வந்துடும் ?????????.MEME-20230425-113005.jpg
 
Last edited:
யாழி - விஷ்ணு டீசர் டியர்ஸ் படிச்சிட்டு கருத்தை சொல்லிட்டு போங்க..

"போச்சு போச்சு உன்னோட கனவு, லட்சியம், ஆசை இவ்ளோ ஏன் உன்னோட வாழ்க்கையே போச்சு..!! தப்பான ஆளுக்கு ஓகே சொல்லி மொத்தமா நீயே அதை குழி தோண்டி புதைச்சு சமாதி கட்டிட்ட" என்று கூற நிலை குத்திய விழிகளுடன் தம்பியை பார்த்திருந்த யாழிக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.

"எந்த ஒரு முடிவெடுக்கும் முன்ன யோசிக்கவே மாட்டியாடி நீ..!! போட்டோ பார்த்து எப்படிடி ஓகே சொன்ன எனக்கு தெரிஞ்சு நீ ரொம்ப அவசரபடர யாழி.., நான் தான் அத்தனை முறை சொல்லிட்டு போனேனே நான் சொல்லாம ஓகே சொல்ல கூடாதுன்னு அப்புறம் ஏன் யாழி அவசரப்பட்ட..!!" என்று உள்ளிறங்கிய குரலில் கேட்க அவளிடம் பதிலில்லை

'வாயை திற..!! இப்படி பேசாம இருந்தா நீ எனக்கு பண்ணின துரோகம் இல்லன்னு ஆகாது..',

"சாரிடா நான் வேணும்ன்னு பண்ணலை.., எனக்கே தெரியலை எப்படி.. என்றவளின் மனக்கண்ணில் மீண்டும் அதியின் முகம் மின்னி மறைய என்ன பதில் சொல்வதென புரியாத தடுமாற்றம்.

'யாழி நான் என்ன எனக்காகவா பேசிட்டு இருக்கேன் உனக்காக தான் பேசுறேன் அது கூட உனக்கு புரியலையா.., ஏய் நான் தான் அன்னைக்கே அந்த ஆள் சரியான ரவுடியா இருக்கான் பார்வையே மிரட்டலா இருக்குன்னு சொன்னேனே எப்படிடி ஓகே சொன்ன..?? அப்போ உன் தம்பி மூக்கு உடைஞ்சத பத்தி உனக்கு கவலை இல்லையா..',

'சாரி விஷ்ணு எனக்கு அவர் தான் இவர்ன்னு தெரியாதுடா..',

'ஏய் தெரியுது தெரியலை இப்போ பிரச்சனை இல்ல உன் வாழ்க்கை பத்தின பெரிய முடிவு யாழி அதுல என்னை கேட்காம நீ எப்படி ஓகே சொல்லுவ..?? அப்போ உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா..?? அப்பா அம்மாவை விட உன் மேல அதிகமான அக்கறை எனக்கு இருக்கு கொஞ்சமும் யோசிக்க மாட்டியா..??'

'சரி என்னை விட அவரை கல்யாணம் பண்ணிகிட்டா இனி நீயா இருக்க முடியாது போன் மட்டும் இல்ல, நீ என்ன சாப்பிடனும், என்ன ட்ரெஸ் போடணும், என்ன பண்ணனும், எல்லாமே வேற ஒருத்தங்க தான் தீர்மானிப்பாங்க நீ அவங்க சொல்றதை மட்டுமே செய்ய போற உனக்குன்னு சுயஅடையாளமே இருக்காது கொஞ்சம் கொஞ்சமா சுயம் இழந்து உன்னையே தொலைச்சிடுவ தெரியுமா..??'

'ஒரு பெண்ணுக்கு சுயமரியாதையும் சுய அடையாளமும் எவ்ளோ முக்கியம் தெரியுமா..?? கல்யாணம் பண்ணா அதெல்லாம் காணாம போயிடும் அது மட்டுமா உன்னோட ஆசை கனவு லட்சியம் எல்லாம் தூக்கி கிடாசிட்டு அன்னைக்கு fb ல பார்த்தோமே அதுல அந்த மேம் சொல்ற மாதிரி நீ சமையல் ரூம்ல முடங்க வேண்டியது தான்', என்று கூற யாழி முகத்தில் குழப்ப ரேகைகள் வெகு தீவிரமாக படர்ந்தது.

"இன்னும் உலகம் தெரியாம இருக்க யாழி நீ..!! நீயே பாரு" என்று லேட்டஸ்ட்டாக கல்லூரி மாணவர்கள் இடையே எடுக்க பட்ட சர்வே குறித்த வீடியோவை காட்டியவன்,

'பார்த்தியா இப்போல்லாம் சிங்கிள்லா கெத்தா சுத்துறது தான் ட்ரென்ட் ஆனா நீ தான் பழைய பஞ்சாங்கமா கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துட்ட அப்புறம் குழந்தை குட்டின்னு இன்னும் நாலு வருஷத்துலயே ஆன்ட்டி ஆகிடுவ நாளைக்கு என் பசங்க வந்து உன்ன பாட்டின்னு கூப்பிடும்' என்று கூற யாழிக்கு தூக்கி வாரிபோட்டது .

'டேய் அப்போ நான் அவசரபட்டுடேனா..??' என்றாள் குழப்பத்துடன்.

'ஆமாடி அப்படி உனக்கு சிங்கிள்லா இருக்க பிடிக்காட்டி பின்னாடி யாராவது உன்னை லவ் பண்ணினா அவங்க லிவிங் டூகெதர்ல இருக்கலாம் அது தான் இப்போ ட்ரென்ட் தெரியுமா...??'

'லிவிங் டூ ஈத்தாரா ..?? அப்படின்னா என்னடா..??'

'அடிப்பாவி இன்னுமா நீ அப்டேட் ஆகாம இருக்க..?? அது ஈத்தர் இல்லடி டூகெதர்.., லிவிங் டுகெதர்'

'ஏதோ ஒன்னு ஆனா என்னன்னு சொல்லுடா..'

'அதான்டி போன வருஷம் சுப்ரீம் கோர்ட் கூட ஜட்ஜ்மென்ட் கொடுத்ததே'

'என்னன்னு..??'

"நமக்கு யாரயாவது பிடிச்சா கல்யாணம் பண்ணாம அவங்க கூட ஒரே வீட்ல இருக்கலாம், யாரும் யாரையும் டாமினேட் பண்ண முடியாது, யாரும் யாரோட டிசிஷன் எடுக்க முடியாது, யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியது கிடையாது, யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்ல, யாரும் யாரோட கனவு, லட்சியத்துக்கு நடுவுல நுழைய முடியாது இப்படி நிறைய இருக்கு"

'இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்'

'நீ பண்ணின முட்டாள் தனத்துல இருந்து உன்னை எப்படி காப்பாத்துறதுன்னு இவ்ளோ நேரமா பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்ட்டால எல்லாம் தேடி கண்டுபிடிச்சேன்'

'அப்போ நீ கல்யாணம் பண்ணிப்பேன் சொன்னது..??'

'அப்போ சொன்னேன்டி இப்போ பார்த்தா எனக்கு ஒன்னு சிங்கிள்லா சுத்துறது இல்ல லிவிங் இது தான் பெஸ்ட்டா இருக்கு அப்போ தான் லைப்பை என்ஜாய் பண்ண முடியும் நம்ம வாழ்க்கையை யார் என்னன்னே தெரியாதவங்க கையில தூக்கி கொடுத்து சிக்கி சின்னாபின்னம் ஆகாம மை லைப் மை ரூல்ஸ்ன்னு சந்தோஷமா அனுபவிச்சி ரசிச்சி நம்ம வாழ்கையை நாம வாழ முடியும்' என்று முடிக்க வாழ்க்கை குறித்த பயம் முதல் முறை தோன்றியதில் யாழி முகத்தில் தீவிர சிந்தனை..,
Nirmala vandhachu ???
 
Top