Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

தாஜ்மஹாலில் இருப்பது மும்தாஜ் அல்ல...... காதல்..!! காதலை மைய்யமாக வைத்து எழுத தொடங்கிய கதையில் அதன் உட்கருத்தாக தொழில்நுட்ப சாதனங்களால் இன்றைய தலைமுறையின் ஆக்கமும், அழிவும் இரண்டையும் நல்ல முறையில் எவ்வித முகச்சுளிப்பும் இல்லாத வகையில் நேர்மையான கருத்துக்களோடும், நகைச்சுவை உணர்வோடும் மிக சுவாரஸ்யமாக கதை களத்தை எடுத்து சென்ற எழுத்தாளருக்கு மிக்க நன்றி ???? இந்த கதையில் வெற்றி பெற்றது அதியா அல்ல யாழியா என்ற கேள்விக்கு இருவருமல்ல, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த ஆழமான காதல் தான் ♥️♥️♥️♥️♥️ திருமணத்தின் அடிப்படை இரு மனங்களின் ஈர்ப்பு, நேசம், பரஸ்பர மரியாதை, அன்பு, காதல்? அவை இன்றி வாழ்நாள் முழுவதுற்குமான ஒரு உறவு சாத்தியமாகாது. இணைந்து விட்டால் உதற முடியாத ஒரு பந்தம்...!! ???? மனவீணையிலிருந்து இசைந்த ராகம் புதுமை, இனிமை, அருமை. நல்ல கதை, நிறைவான முடிவு. வெற்றி பெற மனம் கனிந்த வாழ்த்துக்கள் ??????⭐⭐⭐7cf98146e7839081c217132528d36efd.gif
 
ஹாய் டியர்ஸ்....

இதோ 'மனவீணையின் புதுராகமே' இறுதி பதிவுகள் பதித்துவிட்டேன்.. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க... போட்டியில் பங்கேற்று ஒன்றரை மாதத்தில் கதை முடிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அதை விட என்னோட கதை கருவிற்கு கிடைத்த வரவேற்ப்பு..!! ஏன்னா கருத்து சொல்ற படங்களே வந்த வேகத்துல காணாம போயிடும் கதை எந்த அளவு வாசகர்களுக்கு பிடிக்கும்ன்னு சின்ன சந்தேகம் இருந்தது ஆனா அதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தேங்க்ஸ் எ லாட்..!! ஆனா நிச்சயமா கதையை சரியான நேரத்தில் முடிக்க மிகபெரிய உந்துசக்தியே உங்க எல்லாரோட கருத்துக்கள் தான்... எவ்ளோ சாங்க்ஸ், மீம்ஸ்ன்னு செம கலாட்டாவா போச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை உறுதுணையா இருந்த உங்க எல்லாருக்கும் பெரிய நன்றிகள்...

முக்கியமா வாய்ப்பு வழங்கிய மல்லி மேம்க்கு என்னோட பெரிய தேங்க்ஸ் எப்போ என்ன சந்தேகம் இருந்தாலும் உடனுக்குடன் அதை தீர்த்து வழி நடத்தி உதவினாங்க she has been with me throughout this journey அடுத்து முக்கியமா கடந்த ஒன்றரை மாதமாக எனக்கு உறுதுணையாக இருந்த என் கணவர் குழந்தைகளுக்கும் நன்றி சொல்லியே ஆகணும் நிச்சயமா அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா தினமும் பதிவு கொடுத்து கதையை முடிப்பது சாத்தியமில்லை.

அடுத்து இது போட்டி கதை என்பதால் வோட்டிங் இருக்கும் உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் நிச்சயம் வாக்களியுங்கள் ..பலருக்கு கதை மாந்தர்கள் பெயர் நினைவில் இருக்குமளவு கதை பெயர் ஞாபகம் உள்ளாதா என்று தெரியவில்லை, ஆனால் என்னோட கதை எண் 3 இந்த கதையே அதிர்துடியன், யாழி, விஷ்ணு இவங்க மூணு பேரை சுற்றி தான்..!! காமெடி, க்ரைம்ன்னு என்ன பேஸ் எடுத்துகிட்டாலும் இது இறுதியில் காதல் கதையாக தெரியவேண்டும் என்பது போட்டி விதிமுறை இங்க நான் current scenario எடுத்திருக்கேன்.

இதில் அதிர், யாழி, விஷ்ணு மூவருக்கும் ஒருவர் மீதான மற்றவர் காதல் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம 3 எண்ணிற்கு வாக்களியுங்கள்.

மீண்டும் நன்றி ... மிஸ் யூ ஆல் ? ? ? ? ? ?


Superb story
 
#TNWcontestWriters
#003
#மனவீணையின்புதுராகமே
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. இன்றைய காலகட்டத்தில் அதிகமாக இளைஞர்களின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனும் இன்ஸ்டாவும் ரீல்சும் ஷார்ட்ஸ் யும் ட்ரெண்டிங்கும் என அதை நோக்கி பயணிக்கும் இவர்களின் வாழ்வும் பிரேக்கப்பும் டிவோர்சும் எளிதாகிவிட்ட இவர்களின் மனநிலையும் அதன் சாதக பாதகங்களும் கதை.. மெல்விண்யாழி.. அதிர்துடியன்... வித்தியாசமான அழகான பெயர் ?
யாழி.. இன்ஸ்டாவும் ரீல்சும் ட்ரெண்டிங்கும் தான் வாழ்வு என நினைக்கும் ஒரு youtuber ஆக வேண்டும் என்பதும் மோட்டிவேஷனல் ஸ்பீச்களை கேட்டு அவர்கள் சொல்வதே நிதர்சனம் உண்மை என நினைத்துக் கொண்டு என்னவென்று புரியாமலேயே பெண்ணியம் பேசிக் கொண்டிருக்கும் பெண்.. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்பதே இவளின் நிலை.. நல்லது கெட்டது என்ன என்பதை தெரியாமல் வளர்ந்த குழந்தை ? இவளோடு மற்றும் ஒரு அரைவேக்காடாக இவளின் தம்பி விஷ்ணு ? இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி களும் அளப்பறைகளும் வேற லெவல் ? நிறைய இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன் ?? அதிர்துடியன்.. ஆளுமையான கெத்தான ஹீரோ ? திருமணம் வேண்டாம் என நினைத்திருக்கும் இவனுக்கு பார்த்த உடனேயே பிடித்து விடுகிறது பெண் அவளை ? அதேபோல் யாழிக்கும் புகைப்படத்தில் அவனைப் பார்த்தவுடன் மனம் அவன் பால் விழுந்து விடுகிறது ? செல்போனில் செல்பியும் ரீல்சும் எடுக்கும் ஆட்களைக் கண்டால் அவர்கள் போனை பறித்து உடைத்ததோடு அல்லாமல் அவர்களுக்கும் அறை கொடுத்து அனுப்பும் அதிர்துடியனும் செல்ஃபியும் சர்ப்ரைஸும் ட்ரெண்டிங்கும் என பேண்டஸி உலகில் வாழும் மெண்வில்யாழி யும் இணைந்தால் என்னவாகும் என்பது கதையில்... ?? உன் ஆம்பிஷன் என்ன என அதி யாழியிடம் கேட்கும் போது அப்படி ஒன்றும் தனக்கு இல்லை என சொல்வதற்கு அச்சப்பட்டு கலெக்டராக வேண்டும் என இவள் கூற அதையே அவன் பிடித்துக் கொண்டு இவளுக்கு அதன் சம்பந்தமான புத்தகங்களை பரிசாக அளிக்க யாழியின் முகம் போன போக்கை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகிறது ?? கதையில் நிறைய அருமையான கதாபாத்திரங்கள் ? கணவனை டேய் என அழைப்பது இப்பொழுது ஒரு ஃபேஷன் ஆகவே இருக்கிறது.. அப்படி அழைக்க விருப்பம் இல்லாமல் யாழி கொடுக்கும் பதில் வெகு சிறப்பு ?? சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை ? நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்?
Good luck dear ??❤
மிக்க நன்றிகள் ? ? ? ? ?
 
இன்றைய நவீன உலகம் இளைய தலைமுறையினரை எவ்விதம் சீர்குலைக்கிறது, அதனை எவ்வாறு களையவும், தவிர்க்கவும் முயற்சிக்கலாம் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளீர்கள். அதற்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள்.❤❤❤

மேலும் கதையை எங்கும் தொய்வில்லாமல் எடுத்துச் சென்ற விதமும் உங்களின் எழுத்து நடையும் வெகு அருமை.:love::love::love:

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் . (y)
மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் மா ? ? ?
 
தாஜ்மஹாலில் இருப்பது மும்தாஜ் அல்ல...... காதல்..!! காதலை மைய்யமாக வைத்து எழுத தொடங்கிய கதையில் அதன் உட்கருத்தாக தொழில்நுட்ப சாதனங்களால் இன்றைய தலைமுறையின் ஆக்கமும், அழிவும் இரண்டையும் நல்ல முறையில் எவ்வித முகச்சுளிப்பும் இல்லாத வகையில் நேர்மையான கருத்துக்களோடும், நகைச்சுவை உணர்வோடும் மிக சுவாரஸ்யமாக கதை களத்தை எடுத்து சென்ற எழுத்தாளருக்கு மிக்க நன்றி ???? இந்த கதையில் வெற்றி பெற்றது அதியா அல்ல யாழியா என்ற கேள்விக்கு இருவருமல்ல, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த ஆழமான காதல் தான் ♥♥♥♥♥ திருமணத்தின் அடிப்படை இரு மனங்களின் ஈர்ப்பு, நேசம், பரஸ்பர மரியாதை, அன்பு, காதல்? அவை இன்றி வாழ்நாள் முழுவதுற்குமான ஒரு உறவு சாத்தியமாகாது. இணைந்து விட்டால் உதற முடியாத ஒரு பந்தம்...!! ???? மனவீணையிலிருந்து இசைந்த ராகம் புதுமை, இனிமை, அருமை. நல்ல கதை, நிறைவான முடிவு. வெற்றி பெற மனம் கனிந்த வாழ்த்துக்கள் ??????⭐⭐⭐View attachment 4844
வாவ் கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களோட கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் டியர் ???? இங்கு வெற்றி பெற்றது காதலே என்பது நிதர்சனமான உண்மை உங்கள் புரிதலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤
 
Top