Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன்னன் மனம் பிருந்தாவனம் - லைட்டா ஒரு டீஸர்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே

இனி வரவிருக்கும் அத்தியாயத்தின் சிறு துளிகள் ? ? ?

“ண்ணா, ண்ணா...” என்றவளின் கதறலை கேட்டவன் உயிரெல்லாம் நடுங்கிவிட,

“சோபி... சோபியா...” என கத்திய நெடுஞ்செழியனின் குரலில் பரிதவிப்பும் பதட்டமும்.

சட்டென உடலெல்லாம் குப்பென்று வியர்த்துவிட்டது. ஒரு நிலையில் நிற்க முடியாமல் இங்குமங்கும் அலைபாய்ந்தாவ்ன்,

“சோபிம்மா, டேய் குட்டி எங்கடா இருக்க?...” என்றவனின் குரலில் அழுகை கலந்துவிட்டது சமவிகிதத்தில்.

“அட அட அட. என்ன ஒரு தவிப்பு, என்னவோ இவ உன் பொண்டாட்டி மாதிரி...” என்ற தனாவின் எள்ளல் குரலி,

“டேய்....” என ஆத்திரம் தீரமட்டும் கத்தினான் நெடுஞ்செழியன்.

“உன் பொண்டாட்டியை தூக்கிருந்தா கூட இவ்வளோ துடிச்சிருக்க மாட்ட போலடா செழியா? சும்மா தவிக்கிறியே...” என்று இன்னும் அடக்கமாட்டாமல் அவன் சிரிக்க,

“டேய் அவ குழந்தைடா. அசிங்கத்துக்கு பேர் போன உங்களுக்கெல்லாம் உறவுகளோட புனிதம் தெரியுமா? வேண்டாம். என்னை வெறியேத்தாத. பேசாம சோபியாவை பத்திரமா கூட்டிட்டு வந்து விட்டுடு. இல்ல கொன்னு புதைச்சிடுவேன்....” என்று எச்சரிக்க,

“என்ன கொண்டுவந்து விடவா? உங்களுக்கு வந்து சிக்குறாங்க பாருங்க. என்ன அழகா இருக்கா? அண்ணனும் தம்பியும் தேடி தேடி கட்டிருக்கீங்கடா...” என்றான் கதிர் தனது அசிங்கமான குரலில்.

“கதிரவா...” என்ற நெடுஞ்செழியன் அடைபட்ட சிங்கமாக கர்ஜிக்க,

“நீ எவ்வளோ வேணும்னாலும் கத்திக்கோ. எனக்கு நிகிதா வேணும். உன்கிட்ட இருக்கற ஆதாரங்கள் வேணும். நீ இதை பன்றதால உன் பொண்டாட்டியை, இந்த பொண்ணை விட்டுடறேன். இல்லைன்னா இங்க என்ன நடக்கும்ன்னு நான் சொல்லனுமா என்ன?...” என்றான் கதிர்.

“இங்க பார் செழியா நாங்க வாழறதுக்கே அவ்வளோ ரிஸ்க் எடுத்தோம். இவ்வளோ நாள் மறைச்சு பண்ணினது எங்க பெயர் வெளில வந்துட கூடாதுன்னு தான். அதையே நீ அம்பலமாக்க நினைச்ச எங்களை யாராலையும் கட்டுப்படுத்த முடியாது. அழிவு உனக்கும், உன்னை சேர்ந்தவங்களுக்கும் தான்...” என்றான் தனா.

கூடவே சோபியாவின் நிலையை புகைப்படம் எடுத்து நெடுஞ்செழியனுக்கு அனுப்ப ஐயோ என்று கதறிவிட்டான் அவன்.

“சோபி...” என்ற மனுவின் விழிகள் ரத்தமாய் சிவந்திருக்க நீர் திரண்டு மனைவியின் முகத்தை திரையிட்டு மறைத்தது.

“குட்டிம்மா, டேய்...” என அதையே பார்த்த மனுரஞ்சனின் மனம் விண்டுபோனது.

-------------------------------------

“தப்பான கணிப்பு. உங்களை மாதிரி ஆளுங்க வேற எப்படி யோசிப்பீங்க?..." என்றாள் சுபஷ்வினி ஏளனமாக.

“எங்க கஸ்டடில இருக்கும் போதே எவ்வளோ பேசற. கேவலம் பொண்ணு நீ...” தனா எகிற,

“ஏய் ச்சீ நிறுத்து....” என அவனுக்கு மேல் குரலை உயர்த்தியவள்,

“என்ன சொன்ன? கேவலம் பொண்ணா? அந்த பொம்பளையை வச்சு தான பணம் சம்பாதிச்சீங்க. அதுக்கு கூட கேவலம் ஆம்பளைங்க நீங்க லாயக்கில்லையோ? இன்னைக்கு இந்த பொண்ணால தான் உங்க முடிவு. ஒரு பொண்ணால தான் உங்களுக்கு அழிவு....” என்றாள் சீற்றம் கொண்ட பெண் புலியாக சுபஷ்வினி.

Nirmala vandhachu ???
Surprise ahh morning update thandha nalla irrukkum ma???
 
Top