Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகவரி தேடும் காதல் டீஸர்

Advertisement

முகவரி தேடும் காதல் குட்டி டீஸர்

TNW contest story.


“ டேய் கண்ணா வா.. அம்மா லன்ச் பண்ணிட்டேன்.. கொஞ்சம் சூடா இருக்கும் போதே சாப்பிடு அப்பதான் டேஸ்ட் நல்லா இருக்கும்..”

என்று சந்திரா அழைத்தும் மகன் வராமல் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக ஹாலுக்கு வந்தார்..


சந்திராவினால் கண்ணன் என்று அழைக்கப்பட்டவன் தாய் அழைக்கும் சத்தம் கேட்டும் எழுந்து வராமல் தீவிரமாக தொலைக்காட்சியில் மோட்டு பத்லு பார்த்துக் கொண்டிருந்தான்..


தாயின் அவசரம் அவனுக்கு புரியாமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்..


“ கண்ணா அம்மா கூப்பிடுறது கேக்கல.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அப்பா வந்துடுவார்.. அப்புறம் அந்த மனுஷன் உன்னை நிம்மதியாவா சாப்பிட விடுவார்.. ஆயிரம் குறை சொல்லி திட்டிக்கொண்டே இருப்பார்.. அப்புறம் என் புள்ள சாப்பிடறது உடம்புல ஒட்டாமலே போய்டும்.. ” என்று கூறி அவன் தலையை கலைத்து விட்டு தலைவாசலில் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தார்..


அவர் இவ்வளவு நேரம் புகழ்ந்து பாடிய கணவனே மனைவியை ஆசை பார்வை பார்த்துக் கொண்டு வாசலில் நின்றார்..


“ ஏண்டி அறிவு கெட்டவளே.. உனக்கு கடவுள் மனசாட்சியை படைக்கவே இல்லையா?..

இவர் என்ன ரெண்டு, மூணு வயசு பாப்பாவா?.. நீ மடியில் தூக்கி வச்சு கொஞ்சி நிலா சோறு ஊட்டி விட..


சூடா சாப்பிடாட்டி உன் புள்ளை உடம்புல ஒட்டாதோ?..


இந்த 130 கிலோ எடை கொண்ட யானை உடம்பில ஒட்டினா என்ன?.. ஒட்டலேன்னா என்னடி?.. இந்த 26 வருஷமும் ஒட்டினதுக்கு அவர் என்ன கிழிச்சார்?.. இனி ஒட்ட போறதுக்கு என்ன கிழிக்க போறார்?..


அங்க பார். கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த வேலை பார்கிறாரா?.. ஐந்து வயசு பாப்பா பாக்குற கார்ட்டூன் பார்க்கிறார் உன் புள்ள.. இதுல இவருக்கு சூடான சாப்பாடு இல்லதது தான் ஒரு கேடு..



வா வந்து உழைத்து கலைச்சு போய் வந்திருக்கிற எனக்கு சூடான சாப்பாட்டை வை.. அவருக்கு காலைல அவிச்ச 50 இட்லி மிச்சம் இருக்குமே அதை போடு தின்னுட்டு போய் திரும்பவும் கார்ட்டுன் பார்க்கட்டும்.. தண்ட சோறு..


புள்ளைய பெத்து கையில வாங்கினதுமே ஆசையா என் அப்பன் பேரு வச்சேன்.. அதுக்காக என்னால கடுச்சொல் பேசி திட்ட முடியல..”


கணேசன் அப்படி திட்டி பேசிக்கொண்டிருக்கும் பொழுது சம்மந்தமே இல்லாமல் வாய்விட்டு சத்தமாக சிரித்தான் திருநாவுக்கரசு..


அவன் சிரிப்பு கணேசனை இன்னும் அதிகமாக கோபப்படுத்தியது.. மீண்டும் திட்ட வாயை திறக்கும் பொழுது அவர் காதில் கேட்ட வார்த்தையில் உச்சகட்ட அதிர்ச்சியும் அதிக கோவத்தையும் கொண்டார்..



“ அம்மா எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை.. கல்யாணம் பண்ணினால் எவ்வளவு ஹாப்பியா இருக்கலாம்.. நம்ம சொந்தம் எல்லாம் விருந்து வைப்பாங்க தானே..! ” என்றான்..



சாதாரணமாக கூட அவனது வயதுக்கு தகுந்த பேச்சுக்களை ஒரு நாளும் திரு பேசியிருக்க மாட்டான்..ஆனால் இன்று அதிசயமாக திருமணம் செய்து வை என்று கேட்டதை பார்த்து சந்திரா அதிர்ந்தார் என்றால் கணேசன் அதிக கோபத்தைக் கொண்டார்..



“ ஆமா இவரே தண்டசோறு.. ஊர் கூட்டி நான் இன்னொருத்தண்டச் சோறை அழைச்சிட்டு வருவேன்னு வேற கனா காணுறாரோ?.. இங்க பாருடி சந்திரா.. அவர் எப்ப நூறு ரூபாவது சொந்தமா உழைக்கமுடியும்னு உழைக்கிறாரோ அன்னைக்கு அவரையே போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லு..


அவருக்காக இனி நான் தண்டமா செலவு பண்ண மாட்டேன்..


கல்யாணம் பண்ணிக்கிட்டு மிக்சர் சாப்பிட தான் லாயக்கு..

அவர் உடம்பே அவருக்கு பாரம் இதுல அவருக்கு இன்னொரு துணை வேற தேவை..”


என்று மீண்டும் சத்தமிட்டு விட்டு கணேசன் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தார்..



ஒரு வழியாக உணவை உண்டு விட்டு கணேசன் அறைக்கு சென்றதும் சந்திரா மகன் அருகே வந்து அவன் தலையிலேயே இரண்டு கொட்டு வைத்தார்..


“ ஏன் கண்ணா இப்படி பண்ணுற?.. அவரே எப்படா சரியான நேரம் கிடைக்கும் உன்னை திட்டியே பொழுதைப் போக்க நினைப்பார்.. இதில் நீ வேற அவருக்கு சந்தர்ப்பத்தை வசதியா அமைச்சு கொடுக்கிற?..


நல்ல வேளை வாய் பேச்சோட நிக்குது.. என் மாமனார் பெயர் மட்டும் உனக்கு வைக்கலைன்னா உன் உடம்புல பல தழும்புகள் இருக்கும்..


என்ன கண்ணா திடீர்னு கல்யாண பேச்சை எடுத்த?.. யாரையாவது பொண்ண பார்த்தியா பிடிச்சிருக்கா?..

காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கும் ஆசை தான் ஆனா எங்க நம்ம பேச்சு எடுபடுமா என்ன?.. ” என்றார் மன வருத்தத்தோடு..



மகன் திடீரென இவ்வளவு எடை கூடியது அவருக்கே மிகுந்த மன கவலை உண்டு பண்ணியது.. அவனால் இருந்தால் எழ முடியவில்லை.. கீழே குனிய முடியவில்லை.. சேர்ந்தால் போல் பத்து அடி எடுத்து வைத்தாலே வேகமாக மூச்சு இழைக்கிறான்..


அவனை பார்த்தாலே யாரும் வேலை கொடுக்கத் தயங்குகிறார்கள்..



உடல் எடை காரணமாக யானை யானை என்று பள்ளி மாணவர்கள் கேலி பேசியதால் பள்ளிக்குச் செல்லாமல் பாதியிலேயே நின்று விட்டான்..


தாயின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து விட்டு “ என்னமா பேசுறீங்க நான் எப்போ கல்யாணத்தை பத்தி கேட்டேன்.. எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? ” என்றானே பார்க்கலாம்..


“ கண்ணா இவ்வளவு நடந்து இருக்கு என்னடா திரும்ப இப்படி கேக்கிற..?

ஐயோ கடவுளே எனக்கு பயமா இருக்கு.. என் பிள்ளைக்கு மோகினி பேய் எதுவும் பூந்துடுச்சா?..


வயசு பையனை மோகினி பேய் அடிச்சா தானே இப்படி ஏதாவது உளறி வைப்பாங்க..


நாளைக்கு ஜோசியரை போய் பார்த்து மந்துருச்சு தாயத்து கட்டிவிடனும்..” என்று பேசிக்கொண்டே அவனை அழைத்துச் சென்று உணவு பரிமாறி இருவரும் உண்டு முடித்தார்கள்..


“ அம்மா என் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க ஹனிமூன் எங்கேயாவது ஃபாரின் போகணும்..” என்றானே பார்க்கலாம்..



இம்முறை மகன் பேசும் போது அவன் முகத்தை நேருக்கு நேராக சந்திரா பார்த்தார்..

அவன் முகத்தில் கல்யாணத்தைப் பற்றி பேசும் நேரத்தில் மட்டும் பளிச்சிடும் ஒரு பிரகாசம் தெரிந்தது..



கட்டாயம் மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சந்திரா நன்றாக பயந்துவிட்டார்..




 
டீஸர் சூப்பர் 🤩 🤩 🤩 🤩

எல்லோரும் எங்க ஹீரோஸை சாப்பிடுறதுக்கு திட்டி கிட்டே இருக்கீங்க 😃 😄 😄 😄 😄 😄

மொழு மொழுன்னு இருக்கிறது தப்பா 😣😣😣😣😣

மோட்டு பத்லு அருமை தெரியாமல் பேசுறாரு 😜😜😜😜😜😜


கல்யாணம் செஞ்சு வைக்க சொன்னால் வேப்பிலை அடிப்பீங்களா 🤭🤭🤭🤭🤭
 
செம டீ 🤣🤣🤣🤣🤣
எத்தனை வருஷத்துக்கு தான் ஹீரோயின் மட்டும் கார்ட்டூன் பார்த்துட்டு குழந்தைத்தனமா ஏதாவது பண்ணிட்டு இன்னொசென்ட் க்யூட் ன்னு பேர் எடுப்பா... ஃபார் எ சேஞ்ச் க்யூட் ஹீரோ.... 🤩🤩🤩🤩🤩

அப்பப்போ கொஞ்சம் விவரமாவும் பேசுவான்.... 😜😜😜
 
Top