Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤31

Advertisement

டேய் சுந்தரு, பிள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டற மாதிரி இருக்குடா நீ உங்க அண்ணிக்கிட்ட சொல்லற ஆறுதல்.
நீ உங்கம்மாகிட்ட என்னென்ன பேசின "அண்ணன் இப்படி இருக்குறதுக்கே அண்ணி இப்படி பேசறாங்களேன்னு ".

நல்லா பேசறதெல்லாம் பேசிட்டு, இப்ப "இந்த பிரிவு நிரந்தரமல்லன்னு" உருக்கமா farewell note வாசிக்கறயா நீ. வாழ்க்கை உன்னை வெச்சு செய்யும் டா தீபிகா ரூபத்துல.

மீரா இப்ப தான் புகுந்த வீட்டுல இருக்குற 2 பேய்களுக்கு மந்திரிச்சுட்டு tired-ஆ பிறந்த வீட்டுக்குள்ள வந்துருக்கா. அதுக்குள்ள இங்க 4 பேரும் ஆளுக்கு ஒன்னா சொல்லி அவளை நொந்து போக வெக்கிறாங்க.
நல்லா கேட்டா அப்பாகிட்ட கேள்வி. கொஞ்சம் தெளிஞ்சுருக்காரு பொண்ணு விஷயத்துல. ஆனாலும் மீராவோட மாமி சொல்லற மாதிரி இவரு தன்னோட கோவத்துக்கு இவங்க பிரச்னையை use பண்ணிக்கிறாரு.

விருமா, இப்படி தான் உன்னை வளர்த்துருக்காங்களா உன் வீட்டுலங்கிறாரு, வீரனார் இது என்ன அந்த வீட்டு பேச்சாங்கிறாரு. என்ன தான் ஒரு பொண்ணு பேசலாம்ன்னே புரியலை. பேசாமல் பிறக்க வைக்கறப்பவே கடவுள் பொண்ணுங்களை பேச்சுதிறன், கேட்கும் சக்தி ரெண்டையுமே வைக்காமல் படச்சிடலாம்.

செம பல்பு வாங்கினான் மு.பு. பொண்டாட்டிகிட்ட. மறுபடியும் போப்பா உங்களுக்கு தான் இருக்கவே இருக்கே அருமருந்து. அதோட குடித்தனம் நடத்து. அநேகமா உங்கம்மாவோட ஒத்துழையாமை இயக்கத்துல மண்டை காஞ்சு போய் உங்கப்பாவே உனக்கு company கொடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

பிரேமாகிட்ட பேசப்போய் பைரவியும் முட்டைக்கோசோட அக்காவுக்காக வீரனார்கிட்ட கொடி புடிப்பாங்களோ?

மீரா சொன்னா பாருங்க, சுயநலமாய் வீட்டை எதிர்த்துட்டு போறவங்க சந்தோஷமா தான் இருக்காங்க, அவங்க கூட பிறந்த பாவத்துக்கு எந்த தப்பும் செய்யாத அவங்களோட sibling(s) தான் வதை படறாங்கன்னு - அது bitter fact. நான் நிறைய real examples பார்த்துருக்கேன் என்னை சுற்றி.
 
Top