Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 14.2

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 2

அவன் பார்த்ததை கண்ட ஹர்ஷூவும், “டேய் சிவதாஸ், நீயா எம்.பி பையன்? உன்னோட இந்த கேவலமான லட்சணத்துக்கு உனக்கு எங்க மீனுக்குட்டி கேட்குதா?... உனக்கும், உன் கல்யாணத்துக்கும் வைக்கிறேண்டா ஆப்பு?...”

நொடியில் தன்னை நெருங்கியவனை ஒரே தள்ளாக கீழே தள்ளியவள் அங்கிருந்து ஓட, அதுவரை செடியின் மறைவிலிருந்த சேகர் ஹர்ஷூவை இழுத்துக்கொண்டு கீழே விழுந்தவன் எழுவதற்கு முன் ஹோட்டலின் முன்புறம் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருந்த இடத்தில் மக்களோடு கலந்துவிட்டான் சேகர்.

அவனுக்கு தெரியும் இனி சிவதாஸ் தங்களை எதுவும் செய்யமுடியாதென்று. அங்கிருக்கும் மேஜையொன்றில் ஆசுவாசமாக அமர்ந்தவன் ஹர்ஷூவையும் கையை நீட்டி அமரசொன்னான்.

ஹர்ஷூவிற்கும் சேகரை நல்ல பழக்கம். திருமணத்தின் போதும், சென்னை வந்த போது வீட்டை அரேஞ்ச் செய்ய உதவியபோதும் நல்ல ஒரு புரிதல் இருவரிடமும் இருந்தது.

“சேகர் அண்ணா, நீங்க இங்க எப்படி? ஆனாலும் கரெக்ட் நேரத்துல வந்துட்டீங்க. சூப்பர்...” என அவனை பாராட்டிவிட்டு,
“ஆனாலும் நீங்க செம கெத்து அண்ணா. அவன் இங்க வந்து பிரச்சனை பண்ணுவான்னு கூட பயப்படாம இதே ஹோட்டலுக்குள்ள இருக்கீங்க பாருங்க. எங்கையோ போய்ட்டீங்க...” எனவும் தன் டீஷர்ட்டின் காலரை தூக்கிவிட்டுகொண்டான் சேகர்.

“நான் கூட அப்டியே நீங்க வெளில கூட்டிட்டு போய்ட்டா ஸ்கூட்டியை எப்படி இங்கிருந்து எடுத்துட்டு போகறதுன்னு யோசிச்சேன். நல்ல வேளை இங்க வந்து அந்த மங்கூஸ் மண்டையன் பிரச்சனை பண்ணினா என் வண்டியை எடுத்துட்டு வரத்தான் நீங்க இருக்கீங்களே. இப்போதான் நிம்மதி...” என்றவள்,

“அப்டியே ஜில்லுன்னு ஒரு ஆரஞ்ச் ஜூஸ் சொல்லுங்க சேகர் அண்ணா?...” என சவடாலாக கூறவும் சேகர் முறைக்க,
“என்ன முறைப்பு? புரியுது. என்னடா நாம இவளை காப்பாத்தியிருக்கோமே, இவ என்னடான்னா நமளுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம ஜூஸ் சொல்ல சொல்றாளேன்னுதானே நினைக்கீங்க?...” சேகர் அதைத்தான் நினைத்தேன் என்பது போல ஆச்சர்யமாக பார்க்க,

“எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும். அதான் சிஸ்டர்னு சொல்லிட்டீங்கல்ல. என்னை காப்பாத்துறதும், சமூகத்தை காப்பாத்த போராடி களைச்சு போன எனக்கு ஜூஸ் வாங்கி தரத்தும் அண்ணனான உங்களோட தலையாய கடமை. அதை தானே செஞ்சீங்க. அதுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும்?...”

“வாங்கிட்டு வரேன்...” என பல்லை கடித்துக்கொண்டே எழுந்து சென்றவன் ஜூஸ் ஆடர் செய்துவிட்டு ஷக்திக்கும் போனில் தகவலை கூறிவிட்டு வந்தமர்ந்தான். அவன் கொண்டு வந்திருந்த ஜூஸை குடித்துக்கொண்டே,

“ஜூஸ் சொன்னா வெறும் ஜூஸ் மட்டும் தானா? வேற எதுவும் சாப்பிட வாங்கித்தர மாட்டீங்களா? இப்போ கௌரவ்க்கு வேற தகவலை சொல்லிருப்பீங்க. அவன் வேற வந்து என்னை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுப்பான். அதுக்காச்சும் எனக்கு ரெண்டு லெக்பீஸ் இருக்கிற பிரியாணி வாங்கித்தரலாம்ல. என்ன அண்ணனோ?...” என புலம்பிக்கொண்டே ஜூஸை குடித்து முடித்தாள்.

குடித்துவிட்டு சுற்றுமுற்றும் தேட, “நீ கவலைப்படாதேமா, அந்த சிவதாஸ் இங்க வரமாட்டான். அவனை பத்தி தெரிஞ்சுதான் நான் இங்க சாவாகாசமா உட்கார்ந்திருக்கேன்...”

“ஹ, நான் ஏன் கவலைபட போறேன். இங்க வந்தா அத்தனை பேர் மத்தியில என்கிட்ட நல்லா அறை தான் வாங்கிட்டு போவான். பொறுக்கி ராஸ்கல்...” என வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

அவளின் கேமராவை பார்த்துக்கொண்டே, “ஏம்மா ஹர்ஷூ இவ்வளோ முன்னேற்பாட்டோட இப்படி வம்பை தேடி வந்திருக்கியே? இங்க வரப்போறதை பத்தி ஷக்திக்கிட்ட சொன்னியா?. அந்த சிவா எம்.பி பையன் வேற?...”

“சோ வாட்? எம்.பி பையன்னா? அதை விடுங்க. நானும் தான நீங்க இங்க எப்டி வந்தீங்கன்னு கேட்டேன். நீங்க முதல்ல பதில் சொல்லுங்க. அப்றமா நான் சொல்றேன்...”

“பாவம் ஷக்தி...” என்றவனை ஹர்ஷூ முறைக்கவும், “தெரியாம சொல்லிட்டேன். இங்க நான் ஒரு அசைமண்ட்க்காக வந்தேன். ஆனா எங்க அதை பார்க்க முடிஞ்சது? என்னோட வந்திருப்பவன் இந்நேரம் வேலையை முடிச்சிருப்பான். நான் இங்க வந்ததுமே உன்னை பார்த்தேன். எதுக்கு வந்திருக்கான்னு பாலோ பண்ணி பின்னாலயே வந்து பார்த்தா இப்படி ஒரு சிக்கல்...”

அவன் பேச்சுக்கு காதுகொடுத்து கொண்டே தன் கேமராவில் பதிவானவற்றை பார்வையிட்டு கொண்டிருந்தவள், “அச்சோ...” என தலையில் கை வைத்துகொண்டாள்.

“என்னாச்சுமா? ஏன் திடீர்னு டென்ஷன் ஆகிட்ட?...” என பதறிப்போய் கேட்டவனை,
“என்ன, என்ன ஆச்சு?. போங்கண்ணா உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை...” என அவள் பொரிந்து தள்ள சேகர் புரியாமல் திகைத்து விழித்தான்.

“என்னை தேடி லாஸ்ட்ல வந்த நீங்க முதல்லையே என்கிட்ட பேசிருந்தா உங்க ஹெல்ப்போட நான் இந்த வீடியோவை சத்தமில்லாம எடுத்து முடிச்சிருப்பேன். அவனும் நல்லா சிக்கிருப்பான். இப்போ பாருங்க அவனோட முகமே சரியா தெரியலை இந்த வீடியோல. எல்லாம் உங்களால தான்...”

இப்போது சேகர் கொலைவெறிக்கே ஆளானான். தனக்கு இது தேவைதான் என்பது போல தலையில் அடித்துக்கொண்டே, “எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்...” என கொதிக்கவும்,
“ஜூஸ் காலி. ஒண்ணே ஒண்ணு வாங்கிட்டு வந்துட்டு இன்னும் வேணும், வேணும்னா? காசு வச்சிருக்கீங்கள்ள போய் வாங்கி குடிங்க. நான் அடுத்த ப்ளான் பண்ணனும்...” அவனது பக்கம் திரும்பாமலே கூறினாள்.

சத்தியமாக நொந்தே போனான் சேகர். ஷக்தியை நினைத்து அவனுக்காக பரிதாபப்பட்டது சேகரின் நெஞ்சம். அதுவும் கூட ஹர்ஷூவிற்கு தெரியாமல் தான். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அனைத்தையும் தூரத்தில் இருந்து சிவதாஸ் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

சரியாக அந்த நேரம் பதட்டத்தோடு ஷக்தி வந்ததும் சேகர் அவனை அமைதிப்படுத்தி நடந்ததை கூறிக்கொண்டிருந்தான். ஹர்ஷூவோ ஷக்தியின் புறம் திரும்பவே இல்லை. ஷக்தியால் கோவத்தை அடக்கவே முடியவில்லை. முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவன்,

“ஹர்ஷூ கிளம்பு...” இரண்டு வார்த்தைதான். ஆனால் அவை அமிலத்தில் அமிழ்த்தி எடுக்கப்பட்டது போன்ற வெப்பத்தை பரப்பியது. ஏனோ ஹர்ஷூவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவனை நிமிர்ந்து பார்த்ததுமே அந்த விழிகள் கக்கிய கனலை கண்டு அவளது இதயத்தில் குளிர் பரவியது. கொஞ்சம் பயந்துதான் போனாள். பதிலேதும் பேசாமல் அவனோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.

“டேய் ஷக்தி, கோபப்படாம கொஞ்சம் பொறுமையா கேளு. இனிமே இப்படி வராம பார்த்துக்கோ. பயந்துட்டே போறா பாரு...” என ஹர்ஷூவிற்காக பரிந்துபேச ஷக்தி அவனையும் முறைத்துவிட்டு காரை எடுக்க செல்லவும் அவள் சேகரிடம் வந்து,
“அண்ணா நீங்க ஸ்டில் பேச்சுலர் தானே இப்போவும். நீங்க சம்சாரி ஆகறதுக்கு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு. என்னோட தங்கச்சின்ற கடமையை செய்ய நேரம் வந்துருச்சு. நான் அடுத்த மாசம் நடக்கபோற ஒரு கல்யாணத்தை நிறுத்த போறேன்...”
முதலில் புரியாமல் பார்த்த சேகரின் முகம் பேயறைந்ததை போல ஆகிவிட்டது. அதுவும் அவள் அடுத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

“உங்களுக்கு ஓகேனா அந்த பொண்ணை நீங்க மேரேஜ் பண்ணிக்கோங்க. பொண்ணு செம க்யூட்டா இருப்பா. நீங்களும் பொண்ணு தேடற டைம் எல்லாம் வேஸ்ட். நல்ல சான்ஸ். டோன்ட் மிஸ் இட்...” என கூறி முடிக்கவும் ஷக்தி வரவும் சரியாக இருந்தது.

“நல்லா யோசிச்சு சொல்லுங்கண்ணா...” சொல்லிவிட்டு அப்பாவியாக பாவம் போல முகத்தை வைத்துகொண்டு காரில் ஏறி அமர, ஷக்தி சேகரிடம் விடைபெற அவனை அழைத்தால் அவனோ ஆணியடித்தது போல அப்படியே அதிர்ச்சியில் நின்றிருந்தான்.
 
Top