Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 17

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---17

“என்ன என்ன சொன்னா…? கல்யாணமா...அவளா...எதற்க்கு...” என்ற எந்த வார்த்தையும் முழுவதும் பேச முடியாமல் திக்கி திக்கி ஆஷிக்கிடம் அதிர்ச்சியுடன் கேட்டான்.

சித்தார்த் அதிர்ச்சியை ஆஷிக்கும் புரிந்துக் கொண்டான். அவனே அவள் பேச்சில் ஒரு நிமிடம் ஆடி தானே போய் விட்டான்.அப்படி இருக்கும் போது சிறு பெண் என்று நினைத்து இருந்தவள் ஒரு வாரத்தில் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னதை கேட்டால் ஒரு அண்ணனுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக தான் இருக்கும்.

பின் அவன் அதிர்ச்சியை போக்கும் பொறுட்டு அனைத்தையும் சொல்லி விட்டான். அதுவும் அவள் எந்த மாதிரி பையனை திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னதை கேட்ட சித்தார்த்துக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை.

அவன் அதிர்ச்சியை பார்த்து ஆஷிக் “அது தான் சொல்கிறேன். இனி மேல் அவள் முன் அவளுக்காக தான் உங்கள் திருமணம் தடையாவதை பற்றி பேசி வைக்காதீர்கள். இது வரை அதை தான் அவளிடம் புரிய வைத்திருந்தேன்.திரும்பவும் நீங்கள் ஏதாவது பேசி அவள் ஏடா கூடாமாக ஏதாவது செய்து வைத்திட போகிறாள்.”

ஆஷிக்கின் பேச்சி சரியாக பட “சரி ஆஷிக் நாங்கள் அடுத்த வாரம் என் பாட்டிம்மாவோடு உங்கள் வீட்டுக்கு வருகிறேன்.ஆனால் ஆருண்யா என்ன சொல்வாள்.” என்றதற்க்கு.

“அவளை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்கள் இதை பரினிதாவிடம் சொல்லி விடுங்கள் அதாவது நீ கல்யாணம் ஆகவில்லை என்றாலும் நான் ஆருன்யாவை திருமணம் செய்துக் கொள்வேன் என்று.” அவளிடம் சொல்லும் படி சொன்னான்.

அவன் கவலை அவனுக்கு என்ன தான் நான் அவளிடம் அதட்டி பேசினாலும் உள்ளுக்குள் ஒரு உதரல் இருக்க தான் செய்தது.அதனால் சித்தார்த் தெளிவாக சொல்லி விட்டால் நிம்மதியாக நாளை டெல்லிக்கு செல்லலாம் இல்லையா அதனால் தான்.

சித்தார்த்தும் “கண்டிப்பாக ஆஷிக் நான் அவளிடம் அவள் புரியும் படி சொல்லி விடுகிறேன். நீங்கள் சொன்னதில் இருந்து எனக்கே பயமாக தான் இருக்கிறது. எனக்காக என்ன மாதிரி பிரச்சினையில் சிக்க இருந்தாள்.

அதுவும் அந்த பையன் பத்தி நீங்கள் சொல்லும் போது நான் ஆடி தான் போய் விட்டேன்.”

என்று அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை “ஆஷிக் என் தங்கை உங்களிடம் சொல்லியிருப்பாள் என்று நினைக்கிறேன் நான் டெல்லி சென்று இருக்கிறேன் என்று.என் தங்கை உங்களிடம் பேசியவுடன் நீங்கள் எனக்கு போன் செய்து ஆருண்யாவும் டெல்லியில் தான் இருக்கிறாள் என்று கூறியிருந்தால் நானே அவளிடம் பேசி கையோடு சென்னைக்கு அழைத்து வந்து இருப்பேன் இல்லையா…? இப்போ பாருங்க உங்கள் பிஸியான ஒர்க் டைமில் டெல்லி வேறு செல்ல வேண்டியிருக்காது இல்லையா…?” என்று கேட்டவனை மனதுள் ஆமாம் ஆமாம் என் வேலை பாதிக்கிறது என்று பெரிய அக்கரை தான் என்று நினைத்துக் கொண்டே

சித்தார்த்திடம் “அப்படி சட்டென்று நீங்கள் கூப்பிட்ட உடன் அவள் வருவாள் என்று நினைத்து விடாதீர்கள். இப்போது நானே அவளிடம் ஏதாவது ஒன்று சொல்லி தான் இந்த திருமணத்திற்க்கே சம்மதிக்க வைக்க வேண்டும். நானே எது சொல்வது என்று தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.” என்று ஆஷிக் சித்தார்த்திடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே…

அங்கு சாப்பிட அழைக்க வந்த பரினிதா ஆஷிக் பேசியதை கேட்டு “பேசாமல் நீங்கள் ஆருண்யா அண்ணியிடம் நீ திருமணம் செய்துக் கொண்டால் தான் நானும் திருமணம் செய்துக் கொள்வேன் என்று கூறுங்களேன்.” என்று கூறி விட்டு இருவரையும் எப்படி என் ஐடியா என்பதை போல் பார்த்து வைத்தாள்.

சித்தார்த் “உடனே குட்டிம்மா நீ ஏன் இங்கு வந்தாய். பெரியவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது வரக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனா...இல்லையா…” என்று சொல்லி அவளை உள்ளே போ என்று கூறியதற்க்கு.

உள்ளே செல்ல விருப்பம் இல்லாமல் அவர்கள் இருவரையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்க்கு உண்டான காரணம் ஆஷிக்குக்கு புரிவது போல் இருந்தது.

சித்தார்த் பரினிதாவை சிறு பெண் போல் தான் நடத்துகிறான் என்று ஆஷிக்குக்கு சொர்க்க பூமியிலேயே பார்த்து விட்டான். ஆனால் இப்படி பேச்சிக்கு பேச்சி அவளை பேசும் போது கூட ஒரு ஒரு வார்த்தைக்கும் அவளை பேச விடாமல் அவ்விடத்தை விட்டு அனுப்பினால் அவள் எப்போது தான் தெரிந்துக் கொள்வது.

இவர்கள் இப்படி ஒன்றும் தெரியாமல் வளர்த்து விட்டு விடுகிறது.பின் அவளை கட்டி கிட்டவன் தான் அவளை வைத்துக் கொண்டு கஷ்டப் பட வேண்டி உள்ளது என்று தனக்கு தானே…அனுதாப பட்டுக் கொண்டான்.

இருந்தும் அவள் சொன்ன ஐடியா நல்லா ஐடியாவாக தான் தோன்றியது அதனை சித்திர்த்திடமே சொல்லியும் விட்டான். “இப்போது எதற்க்கு பரினிதாவை அனுப்பினீர்கள். அவள் சொன்னதை தான் நான் செய்ய போகிறேன்.” என்று சொல்லி விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போனவன் கார் கதவை திறந்து ஏறாமல் சிறிது நேரம் சித்தார்த்தை பார்த்தான்.

சித்தார்த் “என்ன ஆஷிக் ஏதாவது என்னிடம் கூற வேண்டுமா…?”

“ஆமாம் .நான் ஒன்று சொல்கிறேன் தப்பா நினைக்க கூடாது.நீங்கள் உங்கள் தங்கையின் பேச்சையும் என்ன சொல்கிறாள் என்று கேட்பது தப்பு இல்லை என்று நினைக்கிறேன். அவள் குழந்தை தனமாக இருந்தாலும் சில சமயம் சரியானதை தான் சொல்கிறாள், செய்கிறாள். இப்போது என்னிடம் சொன்ன ஐடியா கூட எனக்கு பிடித்து தான் இருக்கிறது.

அது போல தான் உங்கள் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் டைரியை படித்தவுடன் எவ்வளவு விரைவாக அங்கு இருந்தே டிடெக்டிவ்வை பிடித்து என்னை கண்டு பிடித்து பேசி..இதோ இப்போது உங்களிடம் நான் இவ்வளவு அமைதியாக பேசிக் கொண்டு இருக்கிறேனா...அதற்க்கு காரணம் பரினிதா தான்.

இதே அவள் என்னிடம் வந்து நீங்கள் என் சகோதரியை விரும்பியது மட்டும் சொல்லி இருந்தால் நான் இப்படி நடந்து இருப்பேனா என்பது சந்தேகம் தான்.ஆனால் அவள் கையோடு அந்த டைரியை கொண்டு வந்து தந்ததனால் தான் என்னால் உங்கள் நிலமையை புரிந்துக் கொள்ள முடிந்தது. இதில் இருந்தே தெரிகிறதே உங்கள் தங்கை சிறு பெண் இல்லை என்று.

என்ன ஒன்று உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அவளை வளர விடாமல் செய்து விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.” என்று சொல்லி விட்டு தன்னை திரும்பியும், பார்க்காமல் காரை ஸ்டாட் செய்து செல்லும் ஆஷிக்கையே பார்த்திருந்தான் சித்தார்த்.

திரும்பவும் பரினிதா சாப்பிட அழைத்து செல்லும் வரை ஆஷிக் சொன்னதையே தான் நினைத்திருந்தான். அந்த நினைப்பில் பரினிதாவை பற்றி ஆஷிக் சொன்னதை தான் சிந்தித்துக் கொண்டு இருந்தானே தவிர. அந்த சிந்தனையில் பரினிதாவை பற்றி எதற்க்கு ஆஷிக் இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கிறான் என்றும், எதற்க்கு அவள் மேல் இவன் இவ்வளவு அக்கரை செலுத்துகிறான் என்றும் சிறிதும் யோசிக்கவே இல்லை.

இந்த சிந்தனையும் சித்தார்த்துக்கு கொஞ்சம் நேரம் தான். தன் ரூமுக்கு வந்ததும் ஆருண்யா திருமணத்துக்கு ஒத்துக் கொள்வாளா என்றும், பின் இதை எப்படி பாட்டிம்மாவிடம் சொல்வது என்பதிலேயே இருந்தது.

தன் பாட்டிம்மா ஒத்துக் கொள்வார் என்பதில் சித்தார்த்துக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் இரு வருடமாக தன் திருமணத்தை பாட்டி ஆவாளுடன் எதிர் பார்த்திருப்பது அவன் அறிந்ததே…

அவனின் தயக்கமே இது வரை பரினிதா திருமணம் முடிந்து தான் என்று பேசி விட்டு இப்போது தன் திருமணத்தை பற்றி தானே எப்படி பேசுவது என்று தான்.மேலும் ஆஷிக் பரினிதாவை பற்றி சொன்ன விஷயம் தனக்காக எவனோ ஒரு பொறுக்கியை திருமணம் செய்ய முடிவு எடுத்தது பற்றி கேட்டதில் இருந்து இனி பரினிதா திருமணத்துக்காக தன் திருமணத்தை தள்ளுவதும் முட்டாள் தனம் என்றே தோன்றியது.

ஆனால் இதை பாட்டிம்மாவிடமும் சொல்ல முடியாது. இதை கேள்வி பட்டால் கண்டிப்பாக பாட்டிம்மா பரினிதாவை கண்டிப்பாக தண்டிக்காமல் விட மாட்டார்கள். பாட்டிம்மா தண்டனையை பரினிதா தாங்க மாட்டாள்.

ஏற்கனவே அது என்னவோ தெரியவில்லை.பரினிதாவுக்கும் பாட்டிம்மாவுக்கும் ஒத்து போவது இல்லை.அதையும் அவன் கொஞ்ச நாள் முன் தான் கவனித்தான்.அதனால் பரினிதாவை பற்றியும் சொல்லாமல் தன்னையும் பாட்டிம்மா தவறாக நினைக்காமல் அவர்களிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேலையிலேயே அவனுக்கு அந்த வேலையே கொடுக்காமல் அவள் அன்பு தங்கை செய்து முடித்திருந்தாள்.

ஆம் சித்தார்த் தன் ரூமுக்கு போனதும் தன் ரூமுக்கு வந்த பரினிதா பாட்டிம்மாவுக்கு போன் செய்தாள். எப்போதும் போனில் கூப்பிடதா பரினிதா கூப்பிட்டதும் பாட்டிம்மாவுக்கும் கொஞ்சம் பயமாகவே ஆகி விட்டது என்று கூட சொல்லலாம்.

ஆனால் அதை வெளிகாட்டாமல் இந்த பக்கம் போன் எடுத்த பாட்டிம்மா “என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கே..எதாவது முக்கியமான விஷயமா…?” என்று விசாரித்தை கேட்ட பரினிதா இதை தான் எண்ணினாள்.

ஒரு பேத்தி போன் செய்து இருக்கிறாளே என்ன எப்படி இருக்கே சாப்பிட்டியா… என்று பாசமா விசாரிக்கிறாங்களா என்னவோ அக்யூஸ்ட்டே விசாரிப்பது போலவே ஒரு விசாரணை என்று மனதில் நினைத்துக் கொண்டே பாட்டியிடம் .

“ஆமாம் பாட்டிம்மா உங்களிடம் முக்கியமானா விஷயத்தை பற்றி பேசணும். “ என்றதற்க்கு.

“இந்த சமயத்திலேயா…டைமுக்கு தூங்கினால் தானே நாளை நேரத்துக்கு கல்லூரிக்கு போக முடியும்.அதனால் எது என்றாலும் நாளை பேசலாம்.” என்று சொல்லி விட்டு வைக்கும் வேளையில் அவசரமாக “ அண்ணா திருமணத்தை பற்றி பாட்டிம்மா .” என்ற வார்த்தையில் போனை வைக்க போன வரலட்சுமி பாட்டி .

“என்ன பரினிதா என்ன விஷயம்.” என்று ஒரு பதட்டத்துடன் கேட்டார்.

அந்த பதட்ட குரலில் என்ன தான் தன் அண்ணனுக்காக தான் இந்த பதட்டம் என்று ஒரு மனது நினைத்தாலும்.மற்றோரு மனதோ இதே கொஞ்ச நேரம் நாம் பேசும் போது, இந்த நேரத்தில் ஏன் போன் செய்கிறாள் என்ற பதட்டம் காணப்பட வில்லையே என்ற எண்ணம் எழுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.

அந்த பக்கம் வரலட்சுமி பாட்டிம்மாவின் போனில் அலோ அலோ என்ற கத்தலில்.

“லைனில் தான் இருக்கேன் பாட்டிம்மா.”

“என்ன திடிர் என்று உன் அண்ணன் திருமணத்தை பற்றி பெரிய மனிஷி போல் இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கிறாய். “என்ன விஷயம் என்று விசாரித்தார்.

இப்போது பாட்டிம்மா குரலில் முன் காணப்பட்ட பதட்டம் இல்லை. இன்னும் சொல்ல போனால் போன குரலிலும் பதட்டம் இல்லையோ நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டோமோ என்னும் வகையில் பாட்டிம்மாவின் குரல் சதாரணமாக ஒலித்தது.

பின் இது பாட்டிம்மாவின் குரல் ஆராய்ச்சி செய்யும் நேரம் இல்லை என்று நினைத்து பாட்டிம்மாவிடம் பரினிதா பொள்ளாச்சி சென்றதில் இருந்து அனைத்தையும் கூறி முடித்தாள். அனைத்தையும் பொறுமையாக கேட்ட வரலட்சுமி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.

பின் கட கடவென்று பரினிதாவை திட்ட ஆராம்பித்து விட்டார். “நீ படிக்கிற பெண் தானே...அடுத்தவங்க டைரியை படிக்க கூடாது என்ற நாகரிகம் தெரியாதா…சரி அது தான் தெரியவில்லை என்றால் அதை படித்த உடன் என்னிடம் தானே சொல்லி இருக்கனும். அதை விட்டு நீயே பெரிய மனிஷி போல் அனைத்தையும் செய்தால். அப்போ வீட்டுக்கு பெரிய மனிஷியா நான் ஏன் இருக்கிறேன்.

சொல் நான் ஏன் இருக்கிறேன்.நீயே டிடக்டிவிடம் சென்று இருக்கிறாயே ...விசாரிக்க சொன்ன இடம் தவறான இடமாக இருந்தால் உன் அண்ணன் மதிப்பு என்ன ஆவாது.

அதுவும் இல்லாமல் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இருந்தால் அவளுக்கும் தானே இது பாதிப்பு.சரி அதோடு விட்டாயா….? அந்த பெண் அண்ணனிடம் நீயே போய் சம்மந்தம் பேசி வந்து இருக்கே...உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

அந்த பெண்ணின் அண்ணன் நல்லவன் என்று நினைக்கிறேன். அது தான் நம் சித்தார்த்தை பற்றி புரிந்துக் கொண்டு தன் சகோதரியிடம் பேசி கல்யாணமும் செய்து வைக்கிறேன் என்று உன்னையும் பெரிய மனிஷி என்று மதித்து சொல்லி இருக்கிறார்.

இதே வேறு யாராவது இருந்தால் இந்த வயது வரை திருமணமாகததுக்கு காரணம் உன் அண்ணன் தானே என்று நினைத்து உன்னை பிடித்துக் கொண்டு உன் அண்ணனை மிரட்டினால் என்ன செய்வது சொல்.இது எல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா…” என்று கண்ட படி திட்டி விட்டு போனை வைத்து விட்டார்.

இந்த பக்கம் பரினிதாவோ அணைந்த போனையே பார்த்துக் கொண்டு இந்த பாட்டிம்மா நான் செய்தது தவறு என்று திட்டுகிறார்களா...இல்லை என்னை திட்டுவதற்க்காக நான் என்ன செய்தாலும் அதில் தவறை கண்டி பிடிக்கிறார்களா...என்ற யோசனையில் பதில் கிடைக்காததால் அதை விட்டு விட்டு மற்றொறு ஆராய்சியில் ஈடுபட்டாள்.

இப்போது நம் அண்ணன் திருமணத்துக்கு பாட்டிம்மா சம்மதித்தார்களா…? இல்லையா…? அதற்க்கும் அவளுக்கு விடை கிடைக்காததால் விட்டு விட்டு தூங்கி போனாள். ஆனால் அவளின் ஒரு ஆராய்சிக்கு பதில் மறுநாள் காலையே கிடைத்து விட்டது.
 
Top