Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒளி சிந்தும் இரவு 20.2

முல்லை உள்ளே வர, கதவை தாழிட்டான் அன்பரசு.    இன்று முதலிரவு இல்லை என்பதாய் அன்பரசு சொல்லியிருந்ததால் சற்று இயல்பாகத்தான் இருந்தாள் முல்லை. “பால் சாப்பிடுறிங்களா?” என்றாள்.    “ம்ஹும்… எனக்கு அந்த பழக்கமில்ல. நீ குடி. இரண்டு இட்லியும் ஒரு தோசையும்தான சாப்பிட்ட”    “ரொம்ப சூடா இருக்கு, அப்புறம் குடிக்கிறேன்” என்று டேபிளில் வைத்தாள் பால் சொம்பை. பின்னே இயல்பாய் கட்டிலில் அமர்ந்து, ஐந்து நிமிடம் போல் அறையை நோட்டமிட்டு ரசித்த பிறகு “எனக்கு […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 20.1

அத்தியாயம் 20    சுகந்தி சத்யன், முல்லை அன்பரசு நால்வரும் சிவன் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசனம் முடிந்து, பிரகாரத்தை சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.    “என்னடா? ஜவுளிக்கடையே வைக்கலாம் போல?” என கிண்டலடித்தான் சத்யன்.    “ஆமா சத்யா. பத்து சர்ட்க்கு மேல எடுத்து வச்சிருக்கார்” என்றான் அன்பரசு.    “இந்த வயசுலயும் ஒரு ஆளா எவ்வளோ வேலை பார்த்திருக்கார்? பணத்தை வாரி இறைச்சிருக்கார் அன்பு. சாப்பாட்டை பாராட்டதவங்களே இல்ல” என்றான் வியப்போடு.    “போய் ரெஸ்ட் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 19.2

அடுத்தநாள் காலை அன்பரசுக்கு நலங்கிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. சேகர் குடும்பமும் வந்திருந்தனர். கல்பனாவும், அனுவும் இருக்கவே சுகந்தியின் வேலை குறைந்திருந்தது.    சேகர் அன்பை அழைத்து வர, பட்டு வேஷ்டியில் இருந்த அன்பரசனை ரசித்த கல்பனா கன்னம் தடவி நெட்டி முறித்து வாசலில் புதுப்பாய் போட்டு, அதிலே வெள்ளி முக்காலியிட்டு, “சேகர் அதுல உக்கார வை” என மகனுக்கு கட்டளையிட்டார் பேரானந்தத்தோடு.    நவீன பழக்கங்களின்றி பழைய பழக்கத்தை கடைபிடித்து வீடே விழாக்கோலமாக இருக்க, தாய்மாமான் முறைக்கு […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 19.1

    அத்தியாயம் 19    சத்யன் சரவணனிற்கு அழைத்து அன்பரசு முல்லையின் கல்யாண தேதியை சொல்லி, “இன்னும் அன்புகிட்ட கூட தேதி சொல்லல, நீங்க அங்கயிருந்து வரனுமேனு உங்களுக்குத்தான் முதல்ல சொல்றேன், இன்னும் இருபத்தஞ்சு நாள் இருக்கு. பத்து நாள் முன்னாடியே வந்து சேருங்க” என்றிருந்தார் மாதவன்.    பிறகு அன்பரசுக்கு சொல்ல, தந்தை இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான் ஆகையால் “சரிப்பா, ஆனா நான் சொல்றதுக்கு முன்ன மண்டபம் புக் பண்ணிடாதிங்க” என்றிருந்தான்.    இன்னும் இருபது […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 18.2

அழைப்பை ஏற்ற முல்லை “மாமா என்ன சொன்னாங்க? இங்க வந்ததுக்கு திட்டினாங்களா?” என்றாள் பதட்டமாக.    “அதெல்லாம் இல்ல” என்றவன், “ம் சொல்லு, எப்போ கல்யாணம் செய்துக்கலாம்?” என்றான்.    முல்லை அமைதியாக, “என்னை சோதிக்காத முல்லை” என்றான் சிறு கோபத்தோடு.     “என் அப்பாம்மாக்கு நான்தான் உலகம். என் சந்தோசம்தான் அவங்க நிம்மதி. இரண்டு முறை அவருக்கு ரொம்ப முடியாம ஆகிடுச்சு. உசுரே போச்சு எனக்கு” என கலங்கியவள்,     என்னை தத்தெடுக்கலனா என் அப்பாக்கும் […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 18.1

அத்தியாயம் 18     சற்று நேரம் அழுதாலே கண்களும் முகமும் சிவந்திடும் முல்லைக்கு. கடந்த ஒரு மணி நேரமாக அழுது கொண்டிருக்கவே நன்றாக வீங்கி சிவந்திருந்தது முகம். அதனால்தான் அன்பரசிடம் முகம் காட்ட தயங்கினாள்.    மீண்டும் அழைப்பானோ என்று முகத்தை நன்றாக கழுவிக்கொண்டிருந்தாள். ஒரு மணிக்கெல்லாம் மதிய உணவு உண்டதும் ரங்கசாமி காம்ப்ளக்சிற்கு சென்றிருக்க, வழக்கமாய் உண்டதும் சற்று நேரம் தூங்கும் ஜானகியும் தனதறைக்கு சென்றிருந்தார்.    அன்பரசு முல்லை வீட்டிற்கு வர, “வாங்க தம்பி, […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 17.2

இதென்ன இப்படி பார்க்குறா என நினைத்தவன் “எரும” என அதட்டல் விட, “ஹான்” என்றாள் திடுக்கிட்டு.    “போடீ… எனக்கு இட்லியும் வேணாம், ஒன்னும் வேணாம்” என்றெழுந்து அறைக்குள் சென்றிட, பிறகுதான் சாம்பார் போடாதது நினைவு வர, “சாரி சத்யா. வந்து சாப்பிடு, எதோ நியாபகத்துல இருந்துட்டேன்” என்றாள் கெஞ்சலாக.    நிச்சயம் சுகந்திக்கு பழைய நினைவு வந்திருக்காது என்று அறிந்தாலும், அவளுள் தனக்கான இடத்தை அவளிற்கு உணர்த்த வேண்டி, “எதோ நியாபகமா?” என்றான் அழுத்தப் பார்வையோடு. […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 17.1

    அத்தியாயம் 17    அன்பரசு சென்று ஒரு மாதம் முடிந்திருக்க, வருவதற்கு மேலும் பத்து நாள்கள் ஆகும் என்றிருந்தான். படப்பிடிப்பெல்லாம் முடிந்திருந்தது.    டப்பிங் வேலை இரண்டு நாள்கள் இருக்க, அதற்கடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், மேலும் இரண்டு நாள் கழித்து பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் தற்போது நடித்து முடித்த படத்திற்கான கலந்துரையாடல் இருக்கவே வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் வந்தது.    சிறு சிறு வேடங்களில் நடித்தபோது இப்படி வாய்ப்பு […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 16.2

நிச்சயத்தின் போது போட்டிருந்த உடையிலேயே இருந்தாள் முல்லை. சாப்பிடும்போது கை கழுவினாள்தான். ஆனால் மணிகட்டிலிருந்து முழங்கை வரை இவன் போட்டு விட்ட சந்தனமும் நகையும் இன்னும் முல்லையை தழுவிக்கொண்டிருந்தது.    சில நொடி முல்லையை ரசித்தவன், பிறகு அவளின் தவிப்பான முகம் கண்டு, “என்ன பிரச்சனை உனக்கு?” என்றான்.     ஒன்றுமில்லை என்பதாய் தலையசைக்க, ஜானகியும் சரவணனும் அருகிலிருக்க வேறு என்ன பேசுவதென்று “மூனு மணிக்கு ட்ரைன். இப்போ டைமாகுது, எதாவது சொல்லனும்னா கால் பண்ணு” என்று […]

Readmore

ஒளி சிந்தும் இரவு 16.1

அத்தியாயம் 16    “அப்பா நீங்க ஏன் கோவில்ல கல்யாணம் செய்துக்கல?” என்றாள் ஜனனி.    “அது கல்யாணம் இல்லைடா, நிச்சயம்”    “அப்படினா?”    “முல்லையைத்தான் நான் கல்யாணம் செய்துக்குறேனு நம்ம சொந்தங்களுக்கும் அவங்க சொந்தங்களுக்கும் முறைப்படி தெரியப்படுத்துறது” என்றான்.    தந்தையின் பேச்சு முழுதாய் புரியவில்லை என்றபோதும், தற்போது நடந்தது கல்யாணம் இல்லை எனப்புரிய “அப்போ கல்யாணம் எப்போப்பா?” என்றாள் மகள்.    “அதெல்லாம் லேட் ஆகும் ஜனனிம்ம்மா. அப்பாக்கு டைமே இல்ல” என்றான் […]

Readmore