Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 24.1

மண்வாசம் 24 :   அரசிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் தான் இருந்தாள்.   விவசாயத்திற்கு ஏது விடுமுறை? விக்ரமன் எப்போதும் போல் வயலுக்குச் சென்றிருந்தான்.   அவன் மதிய உணவிற்கு வரும் நேரம் என்பதால் உணவு சமைக்க முத்துலட்சுமிக்கு உதவியவள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, அவரை சற்று நேரம் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு கட்டுத்தரைக்குச் சென்றாள்.   அவள் வளர்ந்த லட்சுமி விரைவில் கன்றை ஈனும் தருவாயில் இருந்தது. அதன் தலையை வாஞ்சையாய் தடவி தீவனங்களை வைத்தவள் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 23

மண்வாசம் 23 :   சாரல் மழை சட்டென மறைந்த விடியற் காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் குலசேகரன். அவனுக்கு வெகு அருகில் ஒலித்த கொலுசொலியில் அவன் துயில் மெல்ல கலையத் துவங்கியது.   “மாமாஆஆ…”   அரும்பின் குரல் தேவகானமாய் அவன் செவிகளைச் சென்றடைய, அவள் தன் மென்விரல்களால் அவன் முகத்தை வருடியதில் அவன் அதரங்கள் அழகாய் விரிந்தது.   இருந்தும் கண்விழிக்கவில்லை அந்தக் கள்வன். உடனே அவளது கூர்மையான நிகம் கொண்டு அவன் கன்னத்தில் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 22.2

  ஆறுச்சாமியின் இல்லத்தில் காற்றின் வேகத்திற்கு யன்னல் கதவுகள் எல்லாம் படபடக்க, ரங்கநாயகி ஒவ்வொன்றையும் சாற்றி தாழிட்டுக் கொண்டிருந்தார்.   அந்த சத்தம் சிறிதும் ஆறுச்சாமியின் செவிகளை எட்டவில்லை. சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வள்ளியம்மாளின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்க, பெற்றவருக்கு தன் பிள்ளையின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று புரிந்தது.   “ஜென்னக் கதவைக் கூட சாத்தாம அப்படி என்ன யோசனைல இருக்கற கண்ணு?”   “ஒன்னுமில்லைங் ம்மா” என்ற மகனையே பார்த்த நாயகி,   […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 22.1

மண்வாசம் 22 :   தன் அம்மச்சி வீடு அடையாளம் தெரியாத அளவில் மாறிப் போயிருந்ததை நம்பமுடியாது பார்த்திருந்தாள் அரும்பு.   “என்னடா புதுசா காம்பௌண்டு எல்லாம் கட்டி இவ்வளவு பெருசா கேட்டெல்லாம் போட்டிருக்க?” தன் தம்பியிடம் ஆச்சர்யமாய் கேட்டார் மரகதவள்ளி.   “இத்தனை நாள் நான் மட்டுந்தேன் இருந்தேன் அதனால மூங்கில் தடுப்பே போதும்னு விட்டுட்டேன். இனியும் அப்படியாக்கா” என்றவன் பார்வை பாவையினோரம்.   “எப்படா இந்த வேலை எல்லாம் பாத்த?”   “நீ கல்யாண […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 21.2

  விக்ரமனின் வீட்டுப் பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கிக் கொண்டாள் அரசி.   வேலுச்சாமியின் புகைப்படத்தின் முன் கைப்கூப்பி நின்று வணங்கியவள் அடுத்து முத்துலட்சுமியின் பாதம் பணிய,   “மகராசியா இருக்கோணும். எழுந்திரு கண்ணு” என அவள் தோள் தொட்டு எழுப்பியவர், திருநீறை எடுத்து விக்ரமனுக்கும் அரசிக்கும் நெற்றியில் வைத்துவிட்டு இருவரையும் வரவேற்பறைக்கு அழைத்து வந்தார்.   மூவரும் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர். விக்ரமன் அரசியின் மீது கோபத்தில் இருந்தான். அரசியோ மனவருத்தத்தில் இருந்தாள். லட்சுமியோ மகிழ்ச்சியும் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 21.1

  மண்வாசம் 21 :   சேத்துமடை பண்ணை வீடு!   எந்நேரமும் தூறல் போடும் வானம். அந்த சிலுசிலு காற்றுக்கு கானம்பாடும் குயில்களும் வண்ணத் தோகை விரித்தாடும் மயில்களும் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ், பசுமை படர்ந்த சிறு குடிலில் வசிப்பதும் பேரின்பமே.   இனி அருந்தமிழ் தேவிக்கும் நன்மாறனிற்கும் வாசஸ்தலம் இதுவே.   சூழ்நிலை சரியில்லாது போக, சூழல் அவர்களது கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை. அவரவர் நினைவுகளில் மூழ்கியபடி அவ்வோட்டு வீட்டின் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 20.2

  வேத மந்திரங்கள் ஓதப்பட, அக்னி சாட்சியாக அரும்பின் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனையாளாக்கிக் கொண்டான் குலசேகர பாண்டியன்.   அரும்பிற்கு சந்தோசம் அரும்ப, கண்களில் ஆனந்தக் கண்ணீரும் அரும்பியது. அவன் கையால் தன் கழுத்தில் ஏறிய பொன் தாலியை தொட்டுப் பார்த்து அவனையும் பார்க்க, அதரங்களில் அரும்பிய மென்னகையுடன் அவள் நேர் வகுட்டிலும் தாலியிலும் குங்குமம் இட்டான் அவள் மாமன்.   மரகதத்தின் முகத்தில் அத்தனை ஆனந்தம். அதனோடே,   “செல்லாண்டியம்மா! […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 20.1

மண்வாசம் 20 :   அவ்விடியல் பல விசேசங்களையும் விவகாரங்களையும் விவாகங்களையும் தன்னுள் கொண்டு வெகு விமர்சையாய் விடிந்தது.   நேரம் காலை ஐந்து மணி!   நீரை வாரி முகத்தில் இரைத்துக் கொண்டே இருந்தாள் அரசி. சத்தமின்றி தண்ணீரோடு கண்ணீரும் வெளியேறுவதால் அந்நீரில் வேறுபாடு தெரியாமல் இருந்தது.   நேற்றைய தினம் வேலுச்சாமியின் நினைவிடத்தில் நடந்தது அனைத்தும் அவள் நினைவை விட்டு நீங்க மறுத்தது. எதையும் வெளியே காட்டிக்கொள்ளாது இருந்தாலும் உள்ளுக்குள் அழுத்தம் அதிகரிக்க, கத்தி […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 19.2

  ஆறுச்சாமியின் இல்லம்!   விடிந்ததும் அவ்வில்லத்திலேயே திருமணம் அதன் பின் மண்டபத்தில் வைத்து வரவேற்பு என்றிருக்க, தற்போது வீடெங்கிலும் உறவுகள் வழிந்து நிரம்பியிருந்தது. காலையில் இருந்து ஆளுக்கொரு வேலைகளை இழுத்துப் போட்டு செய்து அனைத்தையும் தயார் நிலையில் வைத்துவிட்டு சற்றே கண்ணயர்ந்தனர்.   அவ்வீட்டினர் மட்டும் உறக்கத்தை முற்றிலும் தொலைத்திருந்தனர்.   ஆறுச்சாமியும் ரங்கநாயகியும் இதுநாள் வரை சீராட்டி பாராட்டி வளர்த்த பிள்ளையை பிரியும் சோகத்தில் மூழ்கியிருக்க, அருந்தமிழோ தன் வாழ்வில் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 19.1

  மண்வாசம் 19 :   மூன்று நாட்களே திருமணத்திற்கு இருக்க அரும்பின் இல்லத்தில் பந்தக்கால் நடும் வேலைகள் சென்று கொண்டிருந்தன.   இது தாய்மாமன் சடங்கு என்பதால் ஊரார் பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து குலசேகரனை அழைத்திருந்தார் முத்துச்சாமி. அவனும் தன் அக்கா மரகதத்தை மட்டுமே மனதில் வைத்து வருகை புரிந்து மஞ்சள் துணியில் காணிக்கை வைத்து பந்தக்கால் உச்சியில் முடிந்து நட்டியிருந்தான்.   கட்டில் நிறைய தங்க ஆபரணங்கள் பரப்பி […]

Readmore