Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 14.3

  அரசி மீது அதீத ஆத்திரத்தில் இருந்தார் ஆறுச்சாமி. சொல்வதொன்று செய்வதொன்று என்றால் யாருக்கும் அப்படித் தானே இருக்கும். இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்று அனுமதி வாங்கிச் சென்றவள், இப்போது வர முடியாது என்றால்?     வேலை முடியவில்லை என்ற அவளின் காரணம் எல்லாம் சமாதானம் செய்ய முடியாமல் அவரது காதோடு நின்றுவிடுகின்றன.   அங்கு அரசியோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள். ஊருக்கு போய் நிலைமையை சரி செய்வோம் என்று எழ, அவள் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள் அவள் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 14.2

  பொழுது புலர்ந்ததில் இருந்தே புதுவிதப் பொலிவொன்று அருந்தமிழைத் தொற்றிக் கொண்டிருந்தது. கைகளில் இருந்த வளையல்களை வருடியவள் அவளுக்கு மிகவும் பிடித்த அயிரை நிறப் புடவையை உடுத்தியபடி பள்ளிக்கு வந்திருந்தாள்.   காலையில் இருந்து அவளைக் காக்க வைத்தவன் மாலையில் தான் தரிசனம் தந்தான். மாறனைக் கண்டதும் உள்ளுக்குள் லேசான படபடப்பு தொற்றிக் கொண்டது. அவனும் அவள் உடுத்தியிருந்த அதே அயிரை நிறத்தில் தான் சட்டை அணிந்திருந்தான்.   மாறனும் அதை கவனித்திருப்பான் போல, அவன் பார்வையும் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 14.1

மண்வாசம் 14 :   செல்லாண்டியம்மன் கோவில் மண்டபம்!   சிறு அளவிலான கூட்டத்தினரை மட்டும் தாங்கி இருந்தது. அவர்கள் அனைவரும் அரும்பிற்கும் தேவராஜனிற்கும் நடைபெறவுள்ள இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்திற்கு வருகை புரிந்தவர்கள் ஆவர்.   ஒரு புறம் ஐயர் கணபதியை வணங்கி பூஜையை துவங்கியிருக்க, மறுபுறம் வந்தவர்களுக்கு எல்லாம் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வெளியே முத்துச்சாமியின் சரோஜினியும் முன்னின்று வருவோரை வரவேற்றிருக்க, உள்ளே சொந்தபந்தங்களின் கேள்விகளுக்கு மரகதம் இரையாகிக் கொண்டிருந்தார்.   “என்ன மரகதம்! முத்து அண்ணனும் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 13.2

  ஆறுச்சாமியின் இல்லத்தில் அனைவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு எழ,   “அப்பா நாளைக்கு நான் வெளியூர் போகோணும்ங்” என்று மெல்ல ஆரம்பித்தாள் அரசி.   “எதுக்கு” என்றார் துண்டால் தன் கையைத் துடைத்தபடி,   “என்ர வேலை விசயமாங்” என்றாள்.   “அதெல்லாம் ஒரு வாரம் கழிச்சு போய்க்கலாம்” என்றுவிட்டு செல்ல,   “இல்லைங்ப்பா நாளைக்கே போகோணும்ங்” என்றாள் வேகமாய். திரும்பி அவளை ஆழமாய் பார்த்தவர் தன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு செல்ல, செல்லும் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 13.1

மண்வாசம் 13 :   அரும்பின் இல்லத்தில் தன் அன்னை சரோஜினியோடு அமர்ந்திருந்தான் தேவராஜன். அவன் பார்வை மொத்தமும் அம்மத்தா மீது தான் இருந்தது.   “இன்னும் கொஞ்ச நாளைக்குத்தேன் கண்ணு. அப்பறம் பாரு உன்ர மாமன் மவளுக்கும் உனக்கும் ஜாம் ஜாம்னு நான் கலியாணம் பண்ணி வைக்குறேன்” என்ற வேலாத்தாவை முறைத்தவன்,   “இதையே தான் அஞ்சு வருசமா சொல்லுற அம்முச்சி. இதுவரைக்கும் நீ என்னத்த நடத்திக் கிழிச்ச?” என்று வெடித்தான்.   “ஆருகிட்ட பேசுறோமுன்னு […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 12.2

  கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து அவரவர் இயல்பு வாழ்க்கையில் தம் பயணம் தொடர, பாண்டியனும் தன் பூமியினுள் இறங்கி வேலை பார்க்கத் துவங்கினான்.   தன் ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்யத் திட்டமிட்ட குலசேகரன், முதலில் மண் அமைப்பை மேம்படுத்த ஒரு மாதத்திற்கு முன்னரே பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டிருந்தான். அவை இப்போது போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணோடு சேர்த்து உழுது கொண்டிருந்தான்.   உழவனின் நண்பனாம் மண்புழு ஆனால் நவீன விவசாயத்தில் விவசாயிகளுக்கு உற்ற […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 12.1

மண்வாசம் 12 :   இரவெல்லாம் எரிகரும்பு கொழுந்து விட்டு எரிந்து அதன் தணல் மட்டுமே பாதையில் படிந்திருக்க, ஜோதிவடிவான தெய்வத்தை மனதில் நிறுத்தி பூக்குழியில் இறங்கி வந்துகொண்டிருந்தனர் பக்தர்கள்.   ஓம் சக்தி.. பராசக்தி.. என்ற அம்பாளின் திருநாமங்களே எட்டு திக்கிலும் ஒலித்தது.   குண்டம் திருவிழா இனிதே நிறைவடைந்து தேரோட்டம் நடைபெற, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டத் தேரில் செல்லாண்டியம்மன் பவனி வர, ஊர்கூடி வடம் பிடித்து தேரிழுத்தனர்.   அந்த பிரம்மாண்ட தேர் சக்கரத்திற்கு மஞ்சள் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 11.2

  “இன்னுமா எடுக்குற?” என்று கேட்கவும் தான் தன் கவனத்தை திருப்பினாள் அரசி.   அப்போது தான் உணர்ந்தாள் கையை உயர்த்தியதில் புடவை கொஞ்சம் இடுப்பை விட்டு விலகுவதை. அதுவரை பெரிதாய் தெரியவில்லை. இப்போது அவன் முன் பெரிதாய் தெரிந்தது. அதுவும் அவன் நின்றிருக்கும் புறம் விலகியிருக்க, அப்படியே கையை இறக்காது கீழே பார்த்தவள், ஒருகையால் புடவையை இழுத்து இடுப்பை மறைத்தபடி மறுகையால் அட்டாலியைத் தடவினாள்.   ஸ்டூலின் மேலே நின்றபடி கையை மாற்றி மாற்றி இப்படியே […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 11.1

மண்வாசம் 11:   திருவிழாவின் இரண்டாம் நாள்!   அதிகாலை ஐந்து மணியளவில், ஊர்மக்கள் அனைவரும் தீர்த்தம் எடுத்து வர, ஆற்றை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தனர்.   ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு, ஈரம் சொட்டும் உடையோடு தீர்த்தக் கலசத்தில் நீரை நிரப்பி வேப்பிலையை அதன் மேல் சொருகி வைத்து, சக்தி கலசத்தோடு வாத்தியங்கள் இசைக்க அணிவகுத்து வருவது வழக்கம். அந்த தீர்த்தத்தை அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.   “விக்ரமா! நான் தீர்த்தத்துக்கு […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 10.2

ஏழு வருடங்களுக்கு முன்!   இது போன்றதொரு திருவிழாவில் ஊர்மக்கள் அனைவரும் கோவிலில் கூடியிருந்த வேளையில்,   “ஆத்தா வந்திருக்கேன்டா” எனப் பெருங்குரலெடுத்து சாமியாடத் துவங்கினார் ஒரு பெண்மணி. அவரது குரலுக்கு,   “அட ஆராவது மஞ்சநீர் கலந்து கொண்டாங்க. சட்டுன்னு போங்க. எலுமிச்சம்பழம் எங்க? கற்பூரத்தை கொளுத்துங்க..” என ஆளாளுக்கு பரபரக்க, நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்தாள் அரசி.   ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தாலும் இதுபோன்ற செயல்களில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. கடவுள் இல்லை என்பவரைக் […]

Readmore