Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அருகினில் என் தூரமே – 15

தூரம் 15 சக்திவேல் பிறந்ததிலிருந்து அவன் வீட்டின் சூரியன், நட்சத்திரம், நிலா எல்லாம் அவன்தான். தாத்தா, அப்பா, அம்மா, அத்தை என்று அத்தனை பேரின் கவனமும் கவனிப்பும் அரவணைப்பும் அன்பும் எல்லாம் அவன் ஒருவனுக்குத்தான்! காதலனாகவும் அவனுக்கு அதிர்ஷ்டமே. சரோஜினி எப்போதும் அவனை முக்கியமாக நினைப்பாள், அதை அவனுக்கு உணர்த்தவும் தவறியதில்லை அவள். அப்படி எல்லாரும் சீராட்டி வளர்த்ததால் சக்திக்கு ஏக்கங்களோ ஏமாற்றங்களோ வாழ்க்கையில் கிடையாது. நன்றாகப் படித்தான், பிடித்த வேலையில் சேர்ந்தான். உண்மையில் அவன் வயது […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 16(3)

புது விஜயம் 16(3) “எப்போ இருந்து என்னை பிடிக்கும்?” என்று ஆவலாகக் கேட்க  “அது அறியிலா” என்றாள் மின்மினி. “பின்னே எந்தா அறியும் மின்மினிகுட்டி?” என்றவன் கைகள் மின்மினியின் கரங்களை அழுத்திக்கொடுத்தன.  “இவ்வளவு நேரம் நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” என்று இங்கிருந்து சென்றதிலிருந்து நடந்ததை ஒப்பிக்க மின்மினியும் சொன்னாள். “நீங்கதான் உங்க ஜோலி முடிஞ்சதும் போய்ட்டீங்களே அப்போ எப்படி நான் சொல்லுவேன்?” மின்மினி முகத்தில் சிரிப்பிருந்தாலும் அவள் குரல் அவள் உணர்ந்த கஷ்டம் சொல்ல, […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 16(2)

புது விஜயம் 16(2) வெள்ளையும் ஆரஞ்சும் கலந்த நிறத்திலிருந்த வண்ணாத்திப்பூச்சி வெள்ளைப்பூவொன்றின் மீது சிறகடித்து தேன் குடித்துக்கொண்டிருந்தது. அந்த பூ எப்போது மலர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. இரவும் பகலும் மாறிடும் இடைவெளி நேரம் நமக்குப் புலப்படுவதில்லை. மெல்ல மெல்ல மாற்றம் கொண்டு ஏதோவொரு நொடியில் மொத்தமாய் இரவு கவிழும் இல்லை பகல் புலரும். வினயனுக்கு மின்மினி மீதான ஆவலும் காதலும் அப்படியான ஒன்று. பூ மலர்ந்தது போல் அவன் காதல் என்றால், அந்த கணம் அவனுக்குப் […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 16(1)

புது விஜயம்  16 வினயனின் வருகையை மின்மினி எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென ஒரு அதிசயம் கண்ட  நிலை! அந்தவுணர்வு கூட சில நிமிடங்களே. பின் அவன் என்ன காரணமாய் வந்திருக்கக் கூடும் என்று மின்மினியே ஊகித்திருந்தாள். அதைவிட வேலை முடிந்தால் சென்றுவிடுவான், இவனை நினைக்காதே என்று மனதை அடக்கினாள்.  ஆனால் வினயனின் பேச்சும் பேச்சில் தெரிந்த பிரியமும் மின்மினி எதிர்நோக்கியிருந்த ஒன்றல்லவா?. மின்மினி கண்சிமிட்டாமல் அவன் சொன்ன காதல் கேட்டாள். நம்ப ஆவலும் காதலும் அவன்பால் இருந்தாலும் அவன் […]

Readmore

அருகினில் என் தூரமே – 14(3)

தூரம் 14(3) கோவிலிலிருந்து கிளம்பும்போது, சித்ரஞ்சன் கொஞ்சம் தயங்கியே  “வசு! நீ வண்டி ஓட்டுறியா?” என்று கேட்டான். பல வருடங்களாக வசுந்த்ரா இப்படியான வண்டிகள் ஓட்டுவதில்லை. ஏனோ ஒரு கோபம், பிடிவாதம். ‘எங்கப்பாவோட வண்டிதான் ஓட்டுவேன்’ என்ற எண்ணம். சித்ரஞ்சன் சில முறை ஆசையாய்க் கேட்டும் மகனை பள்ளியில் விட, அழைக்க என்று ஸ்கூட்டி வாங்கி ஓட்டியவள் சித்ரஞ்சன் வண்டியைத் தொட மாட்டாள். ‘உனக்குப் பிடிச்சதை செய்ய மாட்டேன்’ என்ற பிடிவாதம். இப்போது அப்பா, அண்ணனிடம் உண்மையைப் […]

Readmore

அருகினில் என் தூரமே – 14(2)

தூரம் 14(2) “எங்க வீட்ல லாலாவுக்கு இருக்க பீரிடம் எனக்குக் கிடையாது சக்தி. அது உனக்கும் நல்லா தெரியும். எனக்கு எங்கண்ணனை பிடிக்கும்தான், அவனுக்கும் அப்படித்தான்! அவனும் நானும் மாறி மாறி கலாய்ச்சிப்போம், அதெல்லாம் எங்களுக்குள்ள. ஆனா உன் முன்னாடி அவன் என்னை பேசினப்போ அந்த தடிமாடு மேலயும் எனக்குக் கோவம், உன் மேலயும் எனக்குக் கோவம்.” “ஹே! அவன் உடனே உன்னை சமாதானப்படுத்த தானே வந்தான்.”  “டேய் பரதேசி! இதான் என் பிரச்சனை. உன் ப்ரண்ட் […]

Readmore

அருகினில் என் தூரமே – 14(1)

தூரம் 14(1)  சித்ரஞ்சன், வசுந்த்ரா, லாலா மூவரும் சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தனர்.  “சாப்பிட வா சித்து” என்று சித்ரா அழைக்க “என்ன சீராடி முடிஞ்சாச்சா” என்று மருமகளிடம் கேட்டார் அஞ்சம்மாள். சித்ரஞ்சன் அம்மாவை முறைக்க, வசுந்த்ரா உடனே  “எங்க வீடு பக்கத்துல தானேத்த இருக்கு, எப்போ வேணுமோ அப்ப எல்லாம் போய் சீராடிப்பேன்” என்றதும் திலகர் மருமகளிடம் “என்னம்மா என்ன சொன்னாங்க உன் வீட்ல?” என்று விசாரித்தார். “சித்தப்பாவை பாராட்டியிருப்பாங்க தாத்தா” என்று லாலா இயல்பாக சொல்ல, […]

Readmore

அருகினில் என் தூரமே – 13

தூரம் 13 “என்ன சித்தப்பா எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?” லாலா சித்ரஞ்சன் பின்னே நின்று கேட்டான்.  “ம்ம், உன் சித்தியைத்தான் தேடுறேன். வெளியேவே காணும்.” என்றபடி திரும்பிய சித்ரஞ்சன் தாடையைத் தடவியபடி யோசனையோடு  “டேய் லாலா! காலையில இருந்து உன் சித்தி நம்ம வீட்டுப் பக்கம் வரலயாடா?” என்றான். “காலையில போன நீங்களே இப்பதான் வரீங்க. சித்தி பதினைஞ்சு வருச ப்ளாஷ்பேக் சொல்லிட்டு வரணும்ல. லேட்டாகும்தானே சித்தப்பா. வராங்களோ இல்லை தாத்தா விடாம இருக்காரோ?” என்று வேண்டுமென்றே […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 15(2)

புது விஜயம் 15(2) நமக்குப் பிடித்தவர்களை, நம்மைப் பிடித்தவர்களை பிரிவது என்பது மிகவும் கடினமானது. பிரிவை விட பிரியத்தைப் பிரிவது இன்னும் கடினம். பிரதாபன் இரண்டையும் ஒருங்கே அனுபவித்தான். ஒன்று மட்டும் நிச்சயம் அவனுக்குத் தெரியும், தாரிணி தன்னை பிரிந்தாலும் அவள் பிரியம் போகாதென்று.  அது கர்வம் கொடுத்த அதே நேரம் கவலையும் கொடுத்தது. இரவுக்கு இரட்டிப்பு சுவையுண்டு. இரவுகள் எல்லாவற்றையும் மிகையாகக் காட்டும். காதலை, காமத்தை, அச்சத்தை, ஆனந்தத்தை  எல்லாவற்றையும் மிகைப்படுத்தும். பிரதாபனுக்கு அவ்விரவு அப்படித்தான் […]

Readmore

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் – 15(1)

புது விஜயம் 15 பிரதாபன் என்ன பேசினான் என்று வினயனுக்குத் தெரியவில்லை. தாரிணியின் அழுகை சத்தம் மட்டுமே அந்த காருக்குள் கேட்டது. வீடு வந்ததும் தாரிணி இறங்கி அப்படியே நின்றாள்.  ‘தேவையில்லை’ என்ற பிரதாபனின் ‘பதம்’ பாவையை பதம் பார்த்திருந்தது. விருப்பமின்மை என்பது வேறு, வேண்டாம் என்பது வேறல்லவா?  நான் எப்படி அவனுக்கு முக்கியமில்லாமல் போனேன் என்ற ஆற்றாமையைத் தாரிணியால்  தாங்கமுடியவில்லை.  தாரிணியின் கைப்பையில் இருந்து சாவியெடுத்து வினயனே வீட்டைத் திறந்தான். தாரிணி உள்ளே நுழைந்தவள் மூங்கில் […]

Readmore