Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கள்வனே கள்வனே – 17

கள்வன் – 17   மனதிற்குள் அடுத்து செய்ய வேண்டியதை கணக்கிட்டவள், இட்லியை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு இன்பனிடம், “கல்யாணத்திற்கு என்ன ஸ்பெஷல்?”    “கல்யாணமே ஸ்பெஷல் தானே?” கேள்வியாய் ஒரு பதில் வந்தது அவனிடமிருந்து.   “ரொமான்ஸ் மன்னனா இருப்பீங்க போலவே… இப்போது தெரியுது ஏன் யுக்தா உங்ககிட்ட விழுந்துட்டான்னு… ஆனால் உங்க அண்ணன் லவ்னா என்னனு கேப்பாருனு நினைக்கிறன்…” பேச்சு வாக்கில் இதயனையும் சீண்டினாள் இனியா. அவனோ உணவே சித்தம் என்பது போல் […]

Readmore

கள்வனே கள்வனே – 16

கள்வன் – 16   கதவு திறந்திருக்க வேகமாக உள்ளே நுழைந்தவள் தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். நேரம் ஒன்பதை தாண்டியிருக்க, தன் வண்டி சாவியை அதன் இடத்தில் மாட்டியவள் மேலும் உள்ளே நடக்க அனைவரும் கூடத்தில் தான் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவசர ஹை சொன்னவள் அவள் அறைக்குள் நுழைய எத்தனிக்க,   “பாப்பா ஏன்டா லேட்?” தந்தை குரல் தடுத்தது.   “புது ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு அப்பா…” […]

Readmore

கள்வனே கள்வனே – 15

கள்வன் – 15   “எல்லோரும் இருக்கும் போது இப்படி தான் கண் சிமிட்டி கூப்பிடுவீர்களா? இனியா கிண்டலாய் சிரிக்கிறாள்.” என்று சிணுங்கிக் கொண்டு அவ்விருட்டில் மெலிதாய் எரியும் விளக்கின் ஒளியில் அவனின் பார்வையை கண்டுகொள்ள முனைந்து கொண்டிருந்தாள் யுக்தா.   “உனக்காகத் தான் பேபி இப்படி அதிகம் புழங்காத கொல்லையில் வந்து முகம் கழுவிக் கொண்டிருக்கிறேன். அதுவும் இந்த கும்மிருட்டில்…” முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்துக் கொண்டே அவள் அருகில் வந்து கூற,   “எனக்காகவா?” […]

Readmore

செல்வி. திருமதீஸ் – 5.2

“நீ சொன்னியே என் மாமியாருக்கு என் மேலே அக்கறைனு… அது எங்க நான் ஹெல்மெட் போடாமல் சென்று டிராபிக் போலீசில் மாட்டி வெட்டியா சில ஆயிரங்களை பிணையா கட்டிடுவேனோனு வந்த அச்சம் அப்படினு வேணும்னா சொல்லலாம்… அதற்காக அவங்களுக்கு என் மேல பாசம் இல்லைனு இல்லை… அவங்களுக்குள்ள ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அதற்குள் மட்டுமே அவரின் அக்கறையை வெளிப்படுத்துவாங்க… ஆனால் அதைவிட அதிகமா வசை பேசுவாங்க… அவங்களுக்கே தெரியும் யார் மேல பிசகுனு ஆனாலும் தன் மாமியார் […]

Readmore

செல்வி. திருமதீஸ் – 5.1

திருமதீஸ்: உ    அந்த புத்தம் புதிய நிசப்தமான காலை வேளையில் மனதை வருடும் மெல்லிய தென்றலில் வீட்டின் தோட்ட புல்வெளியில் வீட்டின் சுவரோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த மகனைத் தேடி வந்திருந்தார் ஈஸ்வரின் தாய், “டேய் இன்னும் சக்தியை சமாதானம் செய்யலையா… முகம் இன்னும் வாட்டமாவே இருக்கு…”    “ப்ச்… நீ விடுமா நான் பாத்துக்குறேன்.” அன்னையின் கேள்விக்கு தலையை நிமிர்த்தாமலே பதில் கூறினான் ஈஸ்வர்.   “என்ன பார்த்துக்குவ? தங்கமான பொண்ணை நல்லா […]

Readmore

செல்வி. திருமதீஸ் – 4

திருமதீஸ்: ஈ    “இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க சக்தி?” தன் செவிகளில் திடுமென விழுந்த ஒலியில் ஒரு கணம் பதறி பின் நிமிர்ந்தாள் சக்தி. அங்கு பாகற்காயை மென்ற கணக்காய் நின்றிருந்தான் ஈஸ்வர். தோளில் மடிக்கணினி பை தொங்க, கழுத்தில் டை மற்றும் சட்டையில் இரு பொத்தான்கள் அவிழ்த்து விடப்பட்டு ஓய்ந்த நிலையில் இருப்பவனை கண்டதும் கையும், காலும் பரபரவென அவனுக்கு தேவையானதை செய்யத் துடித்தாலும் மனம் காலையில் நடந்த பிணக்கை நினைவுபடுத்த நங்கூரமிட்டது […]

Readmore

செல்வி. திருமதீஸ் – 3

திருமதி: இ   மற்ற இரு வீடுகளுக்கு முற்றிலும் மாறாக அவ்வீடு மெளனத்தின் ஆட்சியால் சூழப்பட்டிருக்க, செங்கதிரோன் தன் புலன்களை விரிவாய் விரித்து தாராளமாய் அவ்வீட்டின் மீது வீசினும், அதனுள் இருந்த உறுப்பினர்கள் அதனை சற்றும் சட்டை செய்யாது நித்திராதேவியின் ஆசியில் திளைத்திருந்தனர். இருப்பினும் எவ்வளவு நேரம் தான் தன் அருளை ஒரே வீட்டிற்கு வாரி வழுங்குவார் தேவி? ஆசி வழங்கிய சோர்வில் துயில் கொள்ள சென்றுவிட, அந்த வீட்டின் ஓர் அறையில் பஞ்சு மெத்தையில் மென்மையாய் […]

Readmore

செல்வி. திருமதீஸ் – 2

திருமதி: ஆ   ஆதவன் செவ்வென தன் வேலையை எவர் தூண்டலமின்றி செய்ய அவருக்கு உறுதுணையாய் தன் வேலையையும் வீறிட்ட குரலால் செய்தான் கிருஷ். ஆதவனின் கதிர்கள் திரைச்சீலையுடன் கண்ணாம்பூச்சு ஆட அந்த பட்டும்படாத வெளிச்சத்தில் தனக்கருகில் அழுது கொண்டிருந்த க்ருஷை தன் புறம் இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் மங்கை. அன்னையின் சூட்டை உணர்ந்த க்ரிஷ் அவள் மார்பில் முட்டி மோதி தன் பசி தீர்க்க முயல, பட்டென விழிகளை திறந்தாள் மங்கை. விழித்ததும் வழக்கமாக செல்லும் […]

Readmore

கள்வனே கள்வனே – 14

கள்வன் – 14   விழிகளை தரையில் பதித்து இதயன் அறைக்குள் நுழைந்த யுக்தா இனியாவின் முதுகில் முட்டி மோதி நின்றாள்.   “என்னடி இப்படி வழியில் நிக்கிற?” என்று கடுப்புடன் யுக்தா மொழிய, சட்டென்று தன் கை கொண்டு அவள் வாயை மூடினாள் இனியா.   கேள்வியாய் பார்த்த யுக்தாவிற்கு தன் விழிகளால் அறையினுள் இனியா கண் காட்ட, அவளின் விழிமொழி பதிலை யுக்தா தொடர அவள் கண்ட காட்சி அவள் உதட்டினில் முறுவலை கொணர்ந்தது. […]

Readmore

செல்வி. திருமதீஸ் – 1

திருமதி: அ   நாலாபுறமும் அடைக்கப்பட்டிருக்கும் அந்த நிசப்த அறையை இருள் சூழ்ந்திருக்க, பெயருக்கென்று இரவு விளக்கும் எரிந்துகொண்டிருக்க, அந்த நிசப்தத்தை கலைக்கவென அலறியது அந்த ஒலிக்கடிகை. வழக்கமான ஒன்றாயினும் முதல்முறை போலவே பதறியடித்து ஒலிக்கடிகையின் தலையில் ஒரு தட்டு தட்டி அமர்த்தினாள்.   கண் இமைகள் பிரியாமல் அடம்பிடிக்க, மனமோ இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் உறங்கிக்கொள்கிறேனே என்று அவகாசம் கேட்டது. மூளையும் அலுப்பில் தன் கடினத்தை குறைத்துக்கொள்ள, போர்வையை இழுத்து தலை வரை […]

Readmore