Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 27

  வெற்றியின் ஆலோசனைக்கிணங்க சிம்லாவில் அடிமையாக இருந்தவர்களிடம், அவர்கள் கடத்தப்பட்டதன் காரணங்களை அந்த கூட்டத்தினர் தெரிவித்தனர்.   ஏற்கனவே அனைவருக்கும் கௌதம், மதன் மூலம் தெரிய வந்த விஷயம் தான் என்றாலும் இப்பொழுது மீண்டும் இவர்கள் மூலம் உறுதியாகியிருந்தது. பலருமே தாங்கள் செய்த குற்றங்களை எண்ணி மனதளவில் மிகவும் வருந்தினர். அவர்களும் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள், பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கிறதென்று! இங்குக் கடத்தி வரப்பட்டத்திலிருந்து அதுதானே அவர்களுக்கு நிலைமை!   இப்படி ஒரு […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 02 )

    வரவேற்பறையில் நடக்கும் கூத்தை அவளும் கவனித்துக் கொண்டிருந்ததால், “போயிட்டு வாங்க அத்தை. நான் மட்டும் தான, நானே எதுவும் சமைச்சு சாப்பிட்டுக்கறேன். திரும்பி வரும்போது சொல்லுங்க…” எனச் சொன்னாள்.   அவள் அப்படிச் சொன்னதும் தான் நிம்மதியானது மஞ்சுளாவிற்கு. மூவருமாகப் புறப்பட்டு செல்ல, வெற்றிக் கதவைப் பூட்டிவிட்டு காரை எடுத்தான். அங்கிருந்து மாலிற்கு சென்றவன், திரைப்படத்திற்கு டிக்கெட் எடுத்து, தம்பியிடம் தந்தவன், அவன் காதில் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு… அவனது வியந்த பார்வையை பொருட்படுத்தாமல் […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 01 )

  உயிர்ப்பே இல்லாமல் வலம் வரும் மருமகளைப் பார்க்க மஞ்சுளாவிற்குப் பாவமாக இருந்தது.   “உங்க அண்ணி என்ன சொல்லறாங்க டா?” மருமகளை மாற்றவோ, தேற்றவோ முடியாத ஆதங்கத்தில், மகன் முத்துவிடம் கடிந்து கொண்டாள்.   “ஏன் உங்க அருமை மருமகளைக் கேட்க வேண்டியது தானே! நான் தான் உங்களுக்கு வம்பு வளர்க்க கிடைச்சேனா?” என்று எரிந்து விழுந்தான் இளையவன். அவனும் என்ன செய்வான், என்ன கேட்டாலும் ஒன்றும் இல்லை என்று மழுப்பி விட்டு, மீண்டும் சோர்ந்து […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 02 )

  வெற்றிச்செல்வன் புருவங்கள் முடிச்சிட குழப்பமாக நிர்ம லா தேவி கூறியதைக் கேட்டவன், “அத்தை என்ன ஆச்சு?” என அவனும் தன் பங்கிற்கு உலுக்கினான்.   எப்பொழுதும் அவன் நுழையும் போது உரிமையாகச் சண்டை போட்டு, ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என்று கேட்பவர், இன்று தவறு செய்த பிள்ளை போல விழித்தார்.   “என்ன பிரச்சனை அத்தை…”   “பாரு வெற்றி, நீயும் உங்க மாமா மாதிரி தான் பேசுவ தெரியும்! அதுக்காக… நாங்க செய்யறது […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 01 )

  செந்தாமரை வீட்டில் இல்லாதது குறித்து, வெற்றிச்செல்வன் எதுவும் கேட்பானோ என்று… மறுநாள் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருக்கும் பேரனின் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி அம்மாள்.   ம்ம் ஹ்ம்ம் அழுத்தக்காரன். வாயே திறக்கவில்லை! அதோடு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவன் இல்லையே! அவன்தான் தெளிவுற அறிவானே தன் மனையாள் எங்கே என்று!   பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராஜேஸ்வரி அம்மாவுக்குப் பொறுமை பறந்திருந்தது. அத்தனை ஆசையாய் வந்த பெண்ணை வந்தவுடனேயே துரத்தி விட்டானே […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 24 ( PART 02 )

  வெற்றியோ, மீண்டும் “போ…” என அந்த இடமே அதிரும் படி கத்த நொடிக்கு நொடி ஏறும் அவன் கோபத்தைக் கண்டு வெடவெடத்தவள்.   அவனின் கைகளில் என்னவாயிற்று என்று ஆராய வேண்டும் என்று மனம் உந்தினாலும், அவனது வார்த்தைகள் அதிக வலியைத் தந்தது. அதோடு தான் இங்கு இருக்க இருக்க அவன் கோபம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வேறு வழியே இல்லாமல் அந்த அறையிலிருந்து அவசரமாக வெளியேறினாள்.     ‘என்னை எப்படி அவன் அப்படி […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 24 ( PART 01 )

  கோபத்தில் செந்தாமரையின் வார்த்தைகள் வரைமுறையின்றி பயணித்துக் கொண்டிருந்தது வெற்றிச்செல்வனுக்கு ஆயாசமாக இருந்தது.   “ஸ்டாப் இட் செந்தாமரை. தேர் ஈஸ் எ லிமிட் பார் எனிதிங் அண்ட் எவெரிதிங்…”   “கோபப்பட்டு சமாளிக்காதீங்க… எனக்கு நீங்க செய்யறதை எல்லாம் யோசிச்சு பார்க்கவே பயமா இருக்கு? என்ன செய்யறீங்களோ? அதோட பின் விளைவு என்னவோ? எதையும் யோசிக்காம எப்படி உங்களால இவ்வளவு தூரம் இறங்க முடியுது…” இத்தனை நேரமும் இரைந்து கொண்டிருந்தவள், அழவே தொடங்கி விட்டாள்.   […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 23 ( PART 02 )

  அந்தம்மா வெகுவான தயக்கத்தின் பிறகு, ஒரு புகைப்படத்தைக் காட்டி, “இவன் என் மகன். இவனை நாலு மாசமா காணோம் பா… எங்க தேடியும் கிடைக்கலை. யாருகிட்ட கேட்கன்னு வரைமுறை இல்லாம எல்லாருகிட்டயும் கேட்டுட்டேன். இங்கிருக்க ஊர் தலைவருங்க கிட்ட சொன்னா, ஏதாவது தெரியுமேன்னு தான் சுத்து வட்டாரத்துல இருக்க எல்லாருகிட்டேயும் கேட்டுட்டு இருக்கேன்” என விசும்பலோடு கூறினார்.   தான் யார், எங்கிருந்து வந்திருக்கிறேன் இப்படி எதைப்பற்றியும் தொடங்காமல் நேரடியாக தன் மகனைப் பற்றி, அந்த […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 23 ( PART 01 )

  செந்தாமரை பஞ்சாபிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து முத்து ஏற்பாடு செய்திருந்த வண்டி மூலம் சேலம் வந்து சேர்ந்திருந்தாள். கணவனிடம் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே மற்றவர்களிடமும் சொல்லவில்லை.   அவளை திடீரென எதிர்பார்க்காத ராஜேஸ்வரி அம்மாள், “என்னம்மா வரேன்னு சொல்லவே இல்லை? தனியா எதுக்கு அலையுற?” என செல்லமான கண்டிப்போடு வரவேற்பு தந்தார்.   “என்ன பாட்டி இதுக்கெதுக்கு கூட ஒருத்தர்? நானே வந்துக்குவேன் பாட்டி. இதுக்கெல்லாம் கவலை படாதீங்க” எனச் சொல்லியவள்,   “உங்களுக்குத் […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 22 ( PART 02 )

  கூடவே, “மாமா தன் வேலைக்காகத் தானே இங்க வந்தாரு. அவரே இங்க இருந்திருந்தாலும்… வேலையை முடிச்சு ரிடையர்மெண்ட் வாங்கியதும் அங்க தானே அத்தை கூட்டிட்டு போயிருப்பாங்க?” என்று கேட்டபோது மஞ்சுளாவிடம் பதில் இல்லை.   ‘அது தானே உண்மை!’ மனம் நிதர்சனத்தை அலசியது. அதோடு வெற்றி திருமணத்திற்காகச் சேலத்திற்குச் சென்றவளிடம் மாமியார் நடந்து கொண்ட முறை முற்றிலும் வேறல்லவா! முன்புபோல புறக்கணிப்போ, உதாசீனமோ எதையும் அவள் பார்க்கவில்லையே! மிகவும் அனுசரணையாக, ஆறுதலாகத் தானே இருந்தார். அதிலேயே […]

Readmore