Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 15

அத்தியாயம் – 15 “ஆர் யூ சீரியஸ்..?” ஜென்சியின் எதிரே அமர்ந்திருந்த பார்த்திபனின் வயது முப்பதுகளின் பாதியில் இருக்கும்.. அவளிடம் ஆச்சரியமாய் கேட்டவரிடம், “உங்களோட விளையாட தான் இவ்வளவு தூரம் வந்திருப்பேனா பார்த்திபன்..” என்று புருவம் உயர்த்தி கேட்டாள். ஜென்சி ஆர்.எக்ஸ் நிர்வனத்தில் சேர்ந்தபோது அவளுக்கு மேலதிகாரி பொறுப்பில் அவன் இருந்தான். அப்பொழுதில் இருந்தே அவளின் திறமையும் ஆற்றலும் அவர் அறிந்ததே..!!  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தோம் என்று இல்லாமல் புதிது புதிதாய் ஒவ்வொரு விஷயங்களை கற்று […]


மின்னல் மழையாகி வா – 14 (2)

ஒருவழியாக வீடு வந்து சேரும்போது இருள் பரவ தொடங்கியிருந்தது. கேட்டில் இருந்து  நீண்ட பேவ்மெண்டும் சில ஏக்கர்களில் தோட்டமும் சூழ்ந்திருக்க  நடுவே கால்னியல் அமைப்பில் தனித்து கம்பீரமாய் நின்றது ரெமிஜியஸின் இல்லம்..!! இவர்கள் வந்ததும் வேலையாள் ஒருவர் வந்து கதவை திறந்துவிட முன்னால் சென்ற ரெமியஜியஸ் அவரிடம் ஏதோ கூறிவிட்டு, “சாரி.. வீட்டில் இருந்து வரவேற்க யாருமில்ல..” என்று சிரித்து,  “வெல்கம் ஹோம்.. வா ம்மா..” என்று இன்முகமாய் கூறினார். அவர் சாதாரணமாய் சொன்னது அவனுக்கு என்னவோ […]


மின்னல் மழையாகி வா – 14 (1)

அத்தியாயம் – 14 கண் மூடி சாய்ந்த ஜோஷ்வாவிற்கு சில நிமிடங்கள் கூட அந்நிலையில் நீடிக்க முடியவில்லை. ஜென்சி அமர்ந்த நொடியில் இருந்து நினைவெல்லாம் அவளை சுற்றியே வட்டமடிக்க மெல்ல அவளிடம் திரும்பினான். அவள் கவனம் இங்கில்லை. முகமோ ஏதோ சிந்தனையில் இருப்பதனை உணர்த்த, “அதானே.. இவளாவது நம்மள கண்டுக்கிறதாவது.. பேசாதன்னு சொன்னதும் விட்டது தொல்லைனு நினைச்சு இருப்பா..” என்ற சலிப்போடு திரும்பியவன் பார்வையோ சுவற்றில் மோதிய பந்து போல் மீண்டும் அவளிடம் தான் வந்தது. “பட்.. […]


மின்னல் மழையாகி வா – 13

அத்தியாயம் – 13 அந்த விமானத்தின் நுழைவாயிலில் வரவேற்று அவன் பயண சீட்டினை சரிப்பார்த்து உள்ளே அனுப்பிய ஏர்ஹோஸ்டஸை ஒரு புன்னகையோடு கடந்து தோளில் சுமந்திருந்த பேக்கினை தனக்கு கொடுப்பட்டுள்ள இருக்கையின் மேல் வைத்துவிட்டு அமர்ந்தான் ஜோஷ்வா. மற்ற காயங்கள் ஆறி மறைந்து இருந்தாலும் கால் மட்டும் இன்னும் பழையபடி வரவில்லை. அதை மறந்து அவன் வழக்கமான வேக நடையிட்டு வந்ததால் அமர்ந்தவுடன் காலில் லேசாய் வலி எடுக்க, “தாத்தா.. எல்லாம் உன்னால தான்..” என்று மானசீகமாய் […]


மின்னல் மழையாகி வா – 12

அத்தியாயம் 12 “கமான்.. கமான்… ஜெஸ்ட் ஒன் மோர்.. கமான்..” சன்னமான முணுமுணுப்போடு கையில் வைத்திருந்த ‘பா’ வடிவ கேம்பேட் மூலம் திரையில் தெரிந்த ஹெலிகாப்டரை மிக ஜாக்கிரதையாய் இயக்கி கொண்டிருந்த ஜென்சியின் வயது பதினைந்து..!! கொடுக்கப்பட்ட நிமிடங்களுக்குள் வெளியே வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகுண்டுகளையும் ஒவ்வொன்றாய் ஹெலிக்காப்டர் மூலம் அடுக்கு மாடிகட்டிடத்தின் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே அந்த மிஷன்..!! குறுகலான அறையில் வரிசையாய் ப்ளேஸ்டேஷன் இணைக்கப்பட்ட கணினிகளை நான்கு தடுப்புகளாக பிரித்து சிறிதாய் […]


மின்னல் மழையாகி வா – 11

அத்தியாயம் – 11 ஜென்சி கதவை திறக்கும்முன் தானே அது திறக்கப்பட மறுபக்கம் நின்ற தேவிபிரியாவை கண்டு அவள் தயக்கமாய் பார்க்க அவளை இங்கு எதிர்பார்க்காத அவரும் புருவங்கள் முடிச்சிட யோசனையாய் பார்த்து, “ஜென்சி இங்க..” என்று அவர் கேட்கும்போதே, “நீங்க ஏன் வந்தீங்க..” என ஜோஷ்வாவின் வார்த்தைகள் எரிச்சலாய் வந்து விழுந்தது. அதில் மகனிடம் திரும்பிய தேவி அவன் இருந்த கோலம் கண்டு நெஞ்சம் பதற, “என்னடா இப்படி அடிப்பட்டு இருக்கு..” என்று பதட்டமாய் அருகில் வந்தார். “என் […]


மின்னல் மழையாகி வா – 10

அத்தியாயம் – 10   தாமஸ் எழுதி கொடுத்த ஸ்கேன் மற்றும் டெஸ்ட்கள் அனைத்தும் எடுத்து முடிக்கவே மதிய பொழுதை கடந்திருந்தது. தாமஸ் இவ்வாறு இருக்கலாம் என்று கூறியதனை மறையாமல் எஸ்தர் – லிசாவிடமும் கூறி இதற்காக அவர்களை தயார்ப்படுத்தி இருந்தாள்  ஜென்சி. இல்லையெனில் இருவரையுமே சமாளிப்பது கடினம் என்பது தெரியும்..!!  முதலில் பயந்தாலும் ஜென்சி கூறிய சமாதனங்களில் ஓரளவு தெளிந்து இறுதியாய் சிறுநீரக கல் இருக்க கூடாது என்ற பிரார்த்தனையும் ஒருவேளை இருந்தாலும் அதனை திடமாய் […]


மின்னல் மழையாகி வா – 9

அத்தியாயம் – 9   மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த லிசாவின் கையில் சலைன் ஏறிக் கொண்டிருக்க அவள் அருகில் அழுது வடிந்த முகத்தோடு அமர்ந்திருந்தார் எஸ்தர். “ஏன் மாம் பயப்படுறீங்க… அதான் தாமஸ் சொல்றாரே.. டிஹைட்ரேட் ஆகிடுச்சு… உடம்புல ஸ்ட்ரென்த் இல்ல.. வீக்கா இருக்கா அவ்வளவு தான்.. ட்ரிப்ஸ் ஏறி முடிஞ்சதும் கூட்டிட்டு போகலாம்னு.. அப்புறம் என்ன..” ஜென்சி எவ்வளவு ஆறுதல் கூறினாலும் எஸ்தர் முகம் தெளியவில்லை. லிசா மயங்கியதில் இருந்தே இப்படி தான்.. ஏதேதோ எண்ணி பயந்து […]


மின்னல் மழையாகி வா – 8

அத்தியாயம்-8 ஜென்சி அழைப்பை துண்டித்து இருக்க ஜோஷ்வா சொன்னதை காட்டிலும் அவள் குரலில் தெரிந்த அவசரமும் செய்கையும் தான் அவனை இன்னும் சந்தேகத்தில் ஆழ்த்த, “என்னமோ நடந்திருக்கு.. ஆனா ஜென்சியும் மறைக்கிறா…” என்று சிந்தனையில் இருந்தவன் மீண்டும் அலைபேசி ஒலிக்கவும் தான் நினைவு கலைந்தான். தந்தையிடம் இருந்து தான் அழைப்பு..!! அழைப்பை ஏற்று காதில் வைத்ததும், “மீட்டிங் ரூம்மிற்கு வா ஜோசஃப்..” என்று சொல்ல, “ஓகே டாட்..” என்றதும் வைத்து விட்டார்.  “ஜோஷ் வந்திட்டு போனது தெரிந்திருக்கும்… […]


மின்னல் மழையாகி வா – 7

அத்தியாயம் – 7   அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் பொழுது மிகவும் சோம்பலாய் விடிய ஏற்றி கட்டிய கொண்டை, கருப்பு டீ-ஷர்ட் மற்றும் த்ரீ போர்த் பேண்டில் பக்கா வீட்டு லுக்கில் இருந்தாள் ஜென்சி. தாங்கள் மூவர் மட்டுமே என்பதால் வீட்டு வேலைகளுக்கு ஆள் வைக்க எஸ்தர் விரும்புவதில்லை. பெரும்பாலான வேலைகளை அவரே செய்திடுவார் என்றாலும் மகள்கள் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவர்களையும் வேலைகளை கவனிக்க வைப்பார்.  அவ்வாறு தற்போது மூவரின் துவைக்க வேண்டிய துணிகளை எல்லாம் […]