Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Suriyanavanin Aazhkadal

சூரியனவனின் ஆழ்கடல் – 17

கடல் – 17 தர்மராஜ் நின்ற விதமும், அவன் பார்வை தன்னை தாண்டி சென்ற திசையும் அருளை மேலும் கோபமுற செய்ய, “அப்ப ஒத்த வார்த்தல சொன்னா கேக்கமாட்ட? அப்பிடித்தான?…” என்றவன் அவனை அடிப்பதற்கு நெருங்க, “இங்காருண்ணே நா அந்த புள்ளக்கிட்ட ஒத்த வார்த்த பேசிப்போட்டு போயிடுதேன். பொறவு பொறவு…” என அருள் அடித்துவிடுவானோ என பயந்துகொண்டு அவன் பின்னே நகர பால் வாங்குவதற்காக நான்கைந்து பெண்களும், இரண்டு ஆண்களும் அங்கே வந்துவிட, “ஏலே ராசு இங்கன […]


சூரியனவனின் ஆழ்கடல் – 16 (2)

“புள்ள அத தவுர வேற ஆரையும் அந்த அறக்குள்ள விடமாட்டிக்குது. எதுக்கு அத்த சங்கடத்த குடுத்துக்கிட்டு?…” “என்ன செய்யனுன்னு நெனைக்கிதீக? அத்த சொல்லுங்க…” “மச்சு எடுத்தா என்னங்கறேன்?…” என கேட்க, “ஆத்தே அது ஒடனேங்காட்டி முடியுமா? எம்புட்டு சோலி?…” “த்ச்சு த்தே, எம்புட்டு நாளாகிப்புடும்? ஒரு மூணு வாரமாவுமா?…” “கட்டடத்த பாப்பமா? இல்ல கலியாண சோலிய பாப்பமா? மொத விசேசம் முடியட்டு…” ராஜாத்தி சொல்ல, “அதேன் ஆத்தா இருக்குல இங்கன. பாத்துக்கிடாதா?  சோதிட்ட சொல்லி ஆள கொண்டார […]


சூரியனவனின் ஆழ்கடல் – 16 (1)

கடல் – 16 அன்னம் வீட்டிற்கு வந்ததில் இருந்து தண்ணீர் கூட குடிக்கவில்லை. அவருக்கு தெரியும் தான் செய்தது அதிகமென்று. ஆனால் வேறு வழி அவருக்கு இருக்கவில்லை. கூட்டத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. அதிலும் பகையை மறந்து பெண் கேட்டும் தனக்கு மறுத்ததை தாங்கமுடியவில்லை அவருக்கு. “அம்மோவ்…” என அவரின் மடியில் தலைசாய்க்க போனவனை விட்டு தள்ளி அமர்ந்த அன்னம் அவனை அழுத்தமாய் பார்க்க, “போதுமாலே, இதுக்காங்காட்டி என்ன அவமானோ வேணுமாக்கும்? சொல்லு…” என […]


சூரியனவனின் ஆழ்கடல் – 15

கடல் – 15 அங்கே நிற்கவே அன்னத்திற்கு அதற்கு மேல் இஷ்டம் இல்லை. அப்போதுதான் அங்கு தான் வந்திருக்கவே கூடாதோ என நினைத்தவர் அனைவரையும் பார்வையிலேயே பஸ்பமாக்கிவிட்டு அங்கிருந்து செல்ல, “அம்மோவ்…” என்றான் தர்மராஜ். “போதுஞ்சாமி, கெளம்பு…” என மகனை கண்டிக்கும் தொனியில் பேசியவர், “இவிங்க செயிச்சதா நெனைக்கிதானுக. இந்த அன்னமா விட்டாத்தேன் செயிச்சதா அர்த்தோ. பாப்பம். நீ வாயா…” என மகனை அழைத்துக்கொண்டு செல்லப்பார்க்க, “செத்த நிக்கிதது…” என்ற அருள் அவர்களை மறித்துவிட்டு, “மாமோவ், கலியாணத்துக்கு […]


சூரியனவனின் ஆழ்கடல் – 14

கடல் – 14 அன்னத்தின் கோபத்திற்கு எல்லை இல்லை எனலாம். அந்தளவிற்கு ஏமாற்றமும், ஆத்திரமும் அவரை படுத்தி எடுத்தது. அவரின் எண்ணவோட்டத்தை நாடி பிடித்த குணசாலி சரியாக குறி பார்த்து அடித்தாள். “கேக்குதீகளா? நாஞ்சொல்லுதத? இப்ப செத்த முன்னதேன் அண்ணேனும், ராசுவும் காசியாத்தா கூட வந்து தாக்கல் சொல்லிட்டு விசேசத்துக்கு சொல்லிட்டு போனாக. எம்வீட்டு மனுசேன் ஆளுக்கு முந்தி அங்க போவனுமின்னு தவிச்சிக்கிட்டு கெடக்குதாரு…” “இங்க ஒன்னுமே தெரியல புள்ள. காத்துவாக்குல ஒன்னும் வரலியே…” அன்னம் சொல்ல, […]


சூரியனவனின் ஆழ்கடல் – 13

கடல் – 13 மின்னொளி கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே ராஜாத்தி காசியாத்தாவுக்கு அழைத்துவிட்டார். “ஒங்கிட்ட எதாச்சும் சொன்னானா சோதி?…” என எடுத்த எடுப்பிலேயே கேட்க, “இந்தா மெதுவாத்தேன் பேசேன். எந்த வண்டிய புடிக்கிததுக்கு இம்புட்டு வேவமா பேசுத?…” என விஷயத்தின் வீரியம் புரியாது சாவாகாசமாக காசியாத்தா கதைபேசும் பாவனையில் கேட்க, “ஆத்தா நா என்ன கேக்குதேன். நீ என்னத்த சொல்லுத?…” என கடுப்படிக்க, “நீதேன் இன்னமும் சொல்லலையே…” என்றதும் இங்கே நடந்த விஷயத்தை சுருக்கமாய் சொல்ல, […]


சூரியனவனின் ஆழ்கடல் – 12

கடல் – 12 கதவை திறந்ததும் வெளியே வேகமாய் வந்தவள் அங்கிருந்த தோட்டத்து வேலையாட்களையும், தோப்புக்கு அமர்த்தியிருந்த காவல்காரர்களோடு இன்னும் சிலரும், பக்கத்து தோப்பு ஆட்களும் என கூடியிருந்தனர். அதனை பார்த்துவிட்டு உள்ளே நின்றவனை திரும்பி பார்த்து முறைத்தவள் மீண்டும் கூட்டத்தில் துழாவ அங்கே ஒரு மூலையில் முருகய்யனும், சற்று தூரத்தில் இறுகிய முகத்துடன் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த அன்னமும் கண்ணில் பட்டனர். “எவனோ சோலிய பாத்துருக்கான்ப்பு. மின்னுவ நமக்கு தெரியாதா?…” என ஒருவன் ஆரம்பிக்க, “அதெதுக்கு […]


சூரியனவனின் ஆழ்கடல் – 11

கடல் – 11 தர்மராஜுடன் வீட்டிற்கு வந்த அன்னம் அவனை பருப்புமத்தையை கொண்டு அடித்து துவைத்துவிட்டார். தாயின் அத்தனை அடியையும் வாங்கியபடி சிறு பிள்ளையென விசும்பிக்கொண்டே நின்றான் அவன். அடித்து அடித்து ஓய்ந்த அவர் மூலையில் அமர்ந்து வாய்விட்டு அழ தாயின் கண்ணீரில் மனம் வலிக்க நின்றவன் அருகே சென்று ஆறுதல் சொல்ல கூட அச்சமாக இருந்தது. முதல்நாள் இரவு அன்னம் உறங்கியதும் அவன் உறக்கம் வராமல் இருப்பதால் நண்பர்களை காண செல்ல வழக்கமாக சந்திக்கும் இடத்தில் […]


சூரியனவனின் ஆழ்கடல் – 10

கடல் – 10 வீட்டிற்கு வரும் வரையில் ஒரு நிம்மதியில்லை முருகய்யன், ராஜாத்தி இருவருக்கும். வழியிலேயே இளவரசன் உறங்கிவிட வாசலை அடைந்ததும் ராஜாத்தியிடம் இருந்து வாங்கி அவனை தோளில் போட்டுவிட்டு பணத்தை எடுக்க, “வேணாம்னே. வாரப்பவே சோதி குடுத்துட்டாப்ல அண்ணே. நா பொறப்படுதேன்…” என ஆட்டோ ட்ரைவர் கிளம்பிவிட வேகமாய் வீட்டிற்கு சென்று கதவை தட்ட உறக்கமில்லா கண்களுடன் உடனே வந்து கதவை திறந்தாள் மின்னொளி. தான் சொன்னாலும் வராமல் இருக்கபோவதில்லை. வருவார்கள் என்று தெரியும். ஆனால் […]


சூரியனவனின் ஆழ்கடல் – 9

கடல் – 9 மறுநாள் மாலை வழக்கம் போல தோப்பிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாள் மின்னொளி. அன்னத்தின் வீட்டை கடக்க அங்கே அவரின் வாசலில் நின்று குணசாலி பேசிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்தும் பாராதது போல மின்னொளி நடையை எட்டிப்போட இவளை கண்டுவிட்ட குணசாலி, “என்னா மின்னு பாத்தும் பாக்காம போற?…” என வழிமறிக்க அதில் எரிச்சலானவள், “தெரியுதுல. பொறவு எதுக்கு வம்படியா நிப்பாட்டுதீக?…” என்றாள் வெடுக்கென்று. அவளின் கேள்வியில் முகம் விழுந்துவிட்ட குணசாலி, “நிப்பாட்டாம?, பாத்த எடத்துல […]