Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 30

அத்தியாயம் – 30 “ஹலோ ..மஞ்சரி.” “சொல்லுங்க நான்தான். என்னாச்சு ? அப்பாக்கு ட்ரை பண்ணா, எடுக்கவேயில்லை.” “இடியாப்ப சிக்கலாகிடுச்சு.நீ உங்க ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு என் ஆபிஸ் வா. நாம கொஞ்சம் தனியா பேசணும். அஞ்சு மணிக்கு அங்க இருக்க மாதிரி வா. நான் என் ஸ்டாஃப அனுப்பிடறேன்.”, இன்னதென்று பிரிக்க முடியாத வகையில் இருந்தது ராஜேந்திரனின் குரல். “என்னாச்சுபா ? அதுக்குத்தான் எங்க அம்மாவை போக வேண்டாம்னு சொன்னோம். கேட்டத்தானே.”, கவலையாய் சொன்னாள். “ப்ச்…நீ […]


விண்மீன்களின்சதிராட்டம் – 29

அத்தியாயம் – 29 இரவு ஏழரை மணி போல் காஞ்சிபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். போனில் மஞ்சரி அழைப்பது தெரிந்து, புன்னகையுடன் எடுத்தான். “ஹலோ..மஞ்சரி ?” “எங்க இருக்கீங்க ?” “என்னாச்சு ? குரல் ஒரு மாதிரி இருக்கு ?”, நெற்றி சுருங்க அவளைக் கேட்டான். “எங்க இருக்கீங்கன்னு கேட்டேன் ?”, அவள் பல்லைக்கடித்துக் கேட்பது புரிந்தது. “பூந்தமல்லி கிட்ட வந்துகிட்டிருக்கோம். செம்ம ட்ராஃபிக். என்னாச்சுமா ?” “ ம்ம்ம் பெரிய பிரச்சனையாச்சு. உங்கம்மா போன பண்ணி, […]


விண்மீன்களின் சதிராட்டம் – 28

அத்தியாயம் – 28 இரண்டு நாள் கழித்து, வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திலிருந்து பெர்மிஷன் வாங்கி, அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் மாலின் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தாள் மஞ்சரி.  சற்று நேரத்திற்கெல்லாம் ராஜேந்திரன் வரவும், இருவரும் காபி, சமோசா வாங்கி வந்து அமர்ந்தார்கள். “ மீட்டிங் எப்படி போச்சுபா ? காண்டாக்ட்ஸ் கிடைச்சுதா ?”, மஞ்சரி அவன் கோயம்பத்தூர் சென்று வந்ததைப்பற்றி விசாரித்தாள். சுருக்காமாக அதைப்பற்றிச் சொன்னவன், “அந்த மாமாகிட்ட பேசினேன். லிங்க் எடுத்தாச்சு.”, பெருமையாகச் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 27

அத்தியாயம் – 27 மஞ்சரி தான் ஒருவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுவதாய் சொன்னவுடன், காஞ்சனா தான் உடனே கத்தினார். “காஞ்சனா… அதான் நம்ம சொந்தத்துலன்னு சொல்றா இல்லை. கொஞ்சம் அமைதியா இரு.”, மனைவியை அடக்கிவிட்டு, “நீ சொல்லுமா…”, என்றார் தன் மகளைப் பார்த்து. விக்ரம் மனைவி வேதாவோட அண்ணனைத்தான் சொல்றேன் பா. அவர் பேர் ராஜேந்திரன். உங்களுக்குக் கூட தெரியுமே.” கைலாசம் யோசனையாய் பார்க்க, காஞ்சனா “அவனா ? வேலை கூட இல்லையே, ஏதோ வியாபாரம்தான பண்றதா […]


விண்மீன்களின் சதிராட்டம் -26

அத்தியாயம் 26 ஒரு வழியாய் வெற்றிகரமாய் ப்ராஜெக்டை முடித்து போட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தையும் இப்போது கஞ்சி, செரலாக் என்று சாப்பிடவும், அவளால் கல்லூரிக்கு வார நாட்களில் 3 – 4 நாட்கள் சென்று, முடிக்க முடிந்தது. டிகிரிக்கும் இதே ப்ராஜெக்ட் என்பதால், அதற்கேற்ற நகாசு வேலைகள் மட்டும் செய்து முடித்தால் போதும்.   இப்போது மீண்டும் வாரம் ஒரு முறை சென்றால் போதுமானது. மிச்ச நேரம் குழந்தையுடன் செலவிட்டாள். மாமியார் வீட்டிற்கும் அவ்வப்போது சென்றாள். விக்ரம் மே முதல் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 25

அத்தியாயம் – 25 வேதா, பகலில் வாணி, சுதீப்புடன் பேசியபின், இவள் பங்கு வேலைகளை முடிக்க உட்கார்ந்தால்  குழந்தை அழுதான். இரவு பத்து பத்தரை வரை பெற்றவர்கள் பார்த்துக்கொண்டாலும், அதன்பின் அவள்தான் பார்க்கவேண்டும். விவேக்குட்டியும் இரவில் இப்பொழுதெல்லாம் முழித்துக்கொண்டிருந்தான். இரவு ஒரு மணி வரை விழித்திருந்தாலும், அவளால் முழுதாக செய்ய நினைத்ததை முடிக்க முடியவில்லை. காலையில் ஏழு மணிவரை அம்மாவும் பிள்ளையும் உறங்கினார்கள். விக்ரமிடம் பேசியவள்.  பெற்றவர்களிடம், “அம்மா, என்னால நைட் இவனையும் பார்த்துகிட்டு என் ப்ராஜெக்டையும் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 24

அத்தியாயம் – 24 தொட்டிலிட்ட மறு நாள் இரவு விக்ரம் ஊர் திரும்ப வேண்டும். விடியற்காலை காயத்ரியையும் ரகுவையும் மதுரைக்கு ரயிலேற்றி விட்டு வந்தவன், உடனே குளித்து, டிபன் சாப்பிட்டு கிளம்பிவிட்டான். “என்னடா, உடனே கிளம்புற ?”, என்ற பர்வதத்திடம், “இல்லைமா இன்னைக்கு கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. சாயந்திரம்தான் வருவேன். “ என்றான். “உன் பெட்டியெல்லாம் எப்ப அடுக்குவே ?” “வந்து பார்துக்கறேம்மா.  விடியக்காலை ரெண்டு மணிக்குதானே ஃப்ளைட். எல்லாம் பத்தரைக்கா கிளம்பினா […]


விண்மீன்களின் சதிராட்டம் – 23

அத்தியாயம் – 23 வேக வேகமாய் தொட்டில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. விழாவிற்கு இரண்டு நாட்கள் இருக்கையில், வேதாவின் ப்ரொபசர் அழைத்திருந்தார். எடுத்துப் பேசியவள் ஒரு கலவையான உணர்வுடன் அறைக்குள் வந்தாள். “என்ன வேதா ? குழந்தை பிறந்ததுக்கு வாழ்த்து சொல்ல கூப்பிட்டாரா ?”, என்று கேட்டான் விக்ரம். “ம்ம்.. அது, அப்பறம் என் ப்ரொஜக்ட் பத்தி….”, என்று இழுத்தாள். “அதுதான் நீ என்ன பண்ணப்போறன்னு முடிவு பண்ணிருக்கதானே ? என்ன தயக்கம் ?” “அது […]


விண்மீன்களின் சதிராட்டம் – 22

அத்தியாயம் – 22 சனிக்கிழமை அதிகாலை வந்து இறங்கினவனை எப்போதும் போல் ராகவன் வந்து அழைத்துப்போனான். வீட்டிற்கு சென்றவன், பேச முற்பட்ட தாயிடம், “காலையில பேசிக்கலாம்மா…”, என்று அவன் அறைக்குள் சென்றுவிட்டான். காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பித் தயாராக வந்தவன், அண்ணி, பிள்ளைகளைகளிடம் பேசியவாறே காப்பியை குடித்துவிட்டு, ஒரு பையை எடுத்துக்கொண்டு மனைவி மகனைப் பார்த்துவிட்டு இரவு வருவதாய் சொல்லிச் சென்றான். விக்ரம் பர்வதம்மாவிடம் பேசாமல் தப்பிப்பது மாலினிக்குப் புரிந்தது. இது எப்படிப் போகிறது என்று பார்க்கலாம் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 21

அத்தியாயம் – 21 “ராஜா…நீயும் விக்ரமுக்கு பேசு.”, என்றான் ராகவன். “நீங்க சொல்லிட்டீங்களா ?” “ம்ம்…நீயும் போன் பண்ணு.”, என்றான் மொட்டையாக. நடந்தது எதுவும் சொல்லாமல். உள்ளூர் சொந்தங்களிடம் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள் பெரியவர்கள் மூவரும். ராஜாவின் போனில்தான் கோமதி பேசிக்கொண்டிருந்தார் அவரின் பக்க சொந்தங்களுக்கு. அவரை பேசி முடிக்கச் சொல்லி வாங்கியவன், வாட்சப்பில் விக்ரமிடம் செய்தி இருக்கவும் அதைப் பார்த்தான். மீட்டிங்கில் இருக்கிறேன். அரை மணி நேரம் கழித்துப் பேசுகிறேன். வேதாவின் போன் அவளிடம் வைத்திருக்கச் சொல்லு, […]