Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 8 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

வேலவன் பெரிய மனுஷன்.......

ஏண்டா கண்ணா இதை நீ அப்போவே தெரிஞ்சிருக்கணும்.......
இப்போ நிஜமாவே எனக்கு சிரிப்பு தான் வருது.......
பொண்டாட்டி அழுதா ஏன்னு கூடவா கேட்கமாட்டாங்க???
அந்த நிலமையில் பொண்டாட்டி இருக்கான்னா அவளுக்கு நீ தேவையே இல்லைடா......

இங்கே முதல் குற்றவாளி நீயும் உங்கம்மாவும்...... அக்கா அப்புறம் தான்.........
பொண்ணுங்க என்னைக்கும் செல்ல பிள்ளைங்க தான் இல்லைனு சொல்லலை....... ஆனால் அதை தெரிந்து பொண்ணுங்களும் அளவோட இருந்துக்கணும் அண்ணன் தம்பிக்கு கல்யாணம் ஆனதும்....... அப்படி இருந்தால் எப்போவும் செல்ல பொண்ணுங்க தான்........
எங்க அப்பா பேமிலி ல இந்த மாதிரி யாராச்சும் பொண்ணுங்க பேசினா அப்பாவும் அம்மாவுமே செவுள்ல நாலு நச்சுன்னு போடுவாங்க......
ஒரே வார்த்தையில் நீ பேசாதே னு சொல்லிடுவாங்க....... முகத்தை எங்கே போய் வச்சுப்பாங்க???

பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆனதும் அப்பா அம்மா வேலை தான் பொண்ணுங்களை கண்ட்ரோல் பண்ணுறது.......
வீட்டுக்காரனும் எவனுக்கு வந்ததோனு இருக்கான்......
அப்புறம் இப்படி தான் பொண்டாட்டி கிளம்பிடுவா......

எத்தனை பேர் கூட இருந்தாலும் ஆண்களுக்கு கடைசி வரை கூட இருக்க போறது மனைவி மட்டுமே........
அதை அனுபவித்த மாமியார் & அக்கா கூட இப்படி வாழ வந்த பொண்ணுங்களை துரத்துறதை என்ன சொல்ல???

ஆக மொத்தம் ஆண்கள் எவ கூட போயிட்டு வந்தாலும் சரி இந்த மாதிரி காது கூசும் கேட்க கூடாத வார்த்தைகளை அவனோ வீடு ஆட்களோ கேட்டாலும் சரி பொண்ணை பெத்தவங்க பொண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்புறத்துலேயே குறியா இருக்காங்க.......
இது தான் நடக்குது.......
பெண்ணின் விருப்பத்தின் பேரில் விட்டால் அந்த பொண்ணு குடுத்து வச்சவ தான்........

யார் எப்படி இருந்தாலும் பெண்ணின் வாழ்க்கை எப்படி என்பதை தீர்மானிப்பது கணவன் மட்டுமே......
அதுக்கு படிச்ச படிக்காத பணக்கார ஏழை எதுவும் விதிவிலக்கில்லை.....
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

என்ன செய்வது?
எப்படியும் நம்ம வாழ்க்கையை வாழத்தானே வேண்டியிருக்கு
தன்மானமாவது? புடலங்காயாவது?

எத்தனை ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு துன்பப்பட்டாலும் பெண் என்பவள் பெற்றோரையும் பார்க்க வேண்டியிருக்கே
இவள் நலனுக்காகத்தான் அவங்களும் சொல்லுறாங்க

இப்போ காட்டும் இந்த வீரத்தை இந்த கூமுட்டை கலெக்டர் அப்பவே காட்டியிருந்திருக்கலாம்

பெற்ற மகனின் முன்னாடி பேசக் கூட தயங்கும் வார்த்தைகளை அந்த உத்ரா பரதேசி பீடை பேசியிருக்கிறாள்
அப்போ அவளுக்கு எவ்வளவு ஏத்தமும் கொலஸ்ட்ராலும் இருக்கணும்
இவளுக்கு மரியாதை குறையக் கூடாதாம்
இவளைப் பெற்ற மூதேவி சொல்லுறாள்

ஹ்ம்ம்..........பூவிதயா பாவம்தான்
அதைவிட அய்யாசாமியின் உயிர் முக்கியமாச்சே

சுதாகரன் அருமையான சொந்தம்
இவரை விட யசோதா அருமையான அத்தை
தாயின் உடன்பிறந்தவர் தாய் மாமா தாயின் மறுபதிப்புன்னு சுதாகரன் நிரூபித்து விட்டார்
 
Last edited:
என்ன மாதிரியான சூழ்நிலை இது.....

அருமையான எழுத்து சிஸ்...சூப்பர்
படிக்க படிக்க பூவியோட நிலையை பார்த்தா ..ரொம்பவும் மனபாரமா இருக்கு....
 
Last edited:
கனமான பதிவு சரண்யா???.உத்ரா,இதயாவை பற்றி பேசியது தெரிந்த பிறகும்,அன்று என்ன நடந்தது என கண்ணனிடம் சொல்லாமல் மறைக்க பார்க்கும் ருக்மணி என்ன ஜென்மமோ???.

உத்ரா சொன்னதை கேட்டே அதிர்ச்சியில் இருந்தவனுக்கு,அறையில் எவ்வளவு மோசமாக பேசி இருந்தால் கண்ணன் அதை கேட்டு நிலைகுலைந்து போய்,நெஞ்சை பிடித்திருப்பான்????.
தன்னை சிறிதும் மதிக்காத உத்ராவுக்காக,ருக்மணி மகன் வாழ்க்கையை வீணாக்கிட்டா????.

இதுல அக்காவ பேர் சொல்லி மரியாதை இல்லாம பேசாதேன்னு சொல்லுது???.அமைதியா இருக்கறதை பார்த்து நல்லவன்னு நெனச்சா,ஊமை ஊரை கெடுக்கும்னு பேசாமலேயே இதயாவை வீட்டை விட்டு போக வச்சிடுச்சு???. கண்ணனோட அம்மாவான்னு சந்தேகமா இருக்கு???

உத்ராவை,வேலவன் கண்டிச்சதால் அவளால் எந்த பிரச்சனையும் வராது என்ற ஒன்றே போதும் என இதயாவின் குடும்பத்தினர் அவள் மனநிலை பற்றி சிறிதும் நினைக்காமல் ப்ளாக்மெயில் செய்து அவளை கண்ணன் வீட்டில் விட்டு விட்டனர். பாவம் இதயா????..

இங்கிருந்தால் எங்கே வீட்டுக்கு வந்திடுவாளோ என ஊரை விட்டே செல்லவது,மகள் வாழ்க்கைக்காக என்றாலும் அவள் குடும்பத்தினர் செய்தது கொஞ்சமும் சரியில்லை???. எல்லாம் சுதாகரன், யசோதாவின் திட்டமிட்ட வேலை???.

பெத்த தாயும்,கூடப்பிறந்தவங்களும் எவ்வளவு முக்கியமோ,பொண்டாட்டியும் அவ்வளவு முக்கியம் என வேலவன் சொன்னதை கேட்டு,இனியாவது கண்ணன் தன் குடும்பத்தை பற்றி நினைப்பதை விட்டு,மனைவியின் மனதை மாற்ற முயற்ச்சி செய்து வாழ்க்கையை தொடங்கட்டும்...
 
Last edited:
Top