Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம் 2

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

“எல்லாரையும் சமாளிச்சுட்டேன் ஆனா வைஷுவை சமாளிக்க முடியலடா.. வீட்டுக்கு வந்த பிறகும் அழுகையை நிறுத்தல” என்று தன் சொல் பேச்சு கேட்காமல் அடை மழையாக கண்ணீர் சொறியும் மகள் குறித்து சுஜி தம்பியிடம் புலம்பி தள்ளினார்.​

“நீ வைஷும்மா கிட்ட கொடுக்கா” என்றதும் “மாமா உன்கிட்ட பேசணுமாம் வைஷு அழாம பேசு” என்றதும் தாயின் மடியில் கவிழ்ந்திருந்த வைஷு வேகமாக கைபேசியை வாங்கி அதில் தெரிந்த உதயாதித்தனிடம்..,​

“ஐ ஹே ட் யூ மாமா! நான் மேம் கிட்ட எவ்ளோ கான்பிடென்ஸா சொன்னேன் தெரியுமா பட் நீங்க என்னை சீட் பண்ணிட்டீங்க.. நீங்க என் மாமாவே கிடையாது யூ ஆர் எ சீட்டர் ஐ டோன்ட் வான்ட் டூ ஸீ யூ, டோன்ட் வான்ட் டூ ஸ்பீக் வித் யூ எனிமோர்” என்று அழுகையினூடே வைஷு சத்தமாக மாமனை பேசவும்​

“வைஷு என்ன பேச்சு இது எங்கிருந்து கத்துகிட்ட..?மாமாகிட்ட ஸாரி கேளு ..” என்ற சுஜி கையை ஓங்கவும், “அக்கா” என்று அழுத்தமாக வந்தது உதயனின் குரல் அதில் தன் கையை கீழே இறக்கியவர் “ஸாரி உதய் அவ ஏதோ புரியாம பேசுறா நீ தப்பா எடுத்து...”​

“அக்கா குழந்தைக்கு என்ன தெரியும்..? நான் தளிரை கல்யாணம் செய்துக்க போறேன் சொன்னபோது அவளோட சந்தோஷத்தை பார்த்ததானே நீ..! இப்போ செய்யமாட்டேன் சொன்னா அவளோட ஏமாற்றம் இப்படிதான் இருக்கும் ஆனா நான் வேண்டாம்னு சொன்னதுக்கு பின்னாடி இருக்க காரணத்தை புரிஞ்சுக்கிற அளவு மெச்சுரிட்டி அவளுக்கு இல்லை அதான் இவ்வளவு அடம் ..! நீ திட்டாம அவளுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கவை நான் காலையில வந்து பேசுறேன்”​

“சரி உதய் ஆனா அவ தளிர் நம்ம வீட்டுக்கு வராம சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம் கௌஷிக்கையும் சாப்பிட கூடாதுன்னு சொன்னதுல அவனையும் சமாளிக்க முடியலை.. அக்கா சாப்பிட்டா தான் சாப்பிடுவேன்னுஅவனும் அதிசயமா அக்காவோட கூட்டணி போட்டு என்னை படுத்துறங்க”​

“க்கா ஃபோன் வைஷு கிட்ட கொடு” என்றவன்,​

“வைஷும்மா என்னைக்கு இருந்தாலும் தளிர் தான் உன்னோட மாமி இதுல மாற்றம் கிடையாது”​

“நிஜமாவே எங்க மேம்மை கல்யாணம் செய்துப்பீங்களா..?”​

“நிச்சயமாடா ம்மா”​

“அப்போ ஏன் மாமா இன்னைக்கு கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொன்னீங்க.. எங்க மேம்க்கு எவ்ளோ ஷேம்மா இருந்திருக்கும், நீங்க மேம்மை அழ வச்ச அங்கிளை பனிஷ் பண்ணுவீங்கன்னு ஆசையா இருந்தேன் ஆனா நீங்க தப்பு செய்யாத எங்க மேம்மை பனிஷ் பண்ணிட்டீங்க அவங்க எப்படி அழுதாங்க தெரியுமா..?"​

"எங்க மேம் எப்பவும் ஸ்மைலிங் ஃபேஸ்ஸா இருப்பாங்க இன்னிக்கு அவங்க க்ரையிங் ஃபேஸ் எனக்கு பிடிக்கவே இல்ல.. உங்களால தான் அவங்க அதிகமா அழுதாங்க” என்று மீண்டும் தன் அழுகையை தொடர்ந்த குழந்தைக்கு எப்படி சட்டப்படி நடைபெற்ற திருமணத்தில் இருந்து தளிரை வெளிக்கொணர்ந்த பின் தான் திருமணம் செய்ய முடியும் என்று புரிய வைக்க முடியாமல் திண்டாடிப்போனான் உதயாதித்தன்.​

 
Last edited:
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😆😆😅😅
டீ பிரமாதம் போங்க ஜீ 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰☺️ ☺️ ☺️ ☺️ ☺️ ☺️ ☺️
இதுக்கு தான் டா அட்வைஸூ எல்லாம் என்ற ஆர்மி சைடுல இருந்து பண்ணுனோம்.
கேட்டியா ?கேட்டியா?.
வைஷூவே உன்னைய ஹேட் பண்ணறளவுக்கு வந்துருச்சு விசயம்.
அப்ப அந்த விசயம் எம்பூட்டு சீரியஸ்ஸூன்னு புரிஞ்சுக்கோ..
மொதல்ல சோறுதண்ணி உங்காம இருக்குற வைஷூவோட பாசத்துக்கு❤️❤️❤️❤️❤️❤️🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

ரைட்டர் ஜீ உங்களுக்கு இந்த வெயில் காலத்துல சுடச்சுட இரண்டு டீ பார்சல் தான் கிஃப்ட் பண்ணறோம்.
அதையப் பருகிட்டு சீக்கிரமா எபி கொண்டு வாங்க. 🤭🤭🤭🤭🤭
அப்படி என்னா தான் சரத்து கேப்புமாரிதனத்தை கிழிச்சு தோரணம் கட்டறானு பாக்கனும்..🫤🫤🫤🫤🫤🫤🫤.
 
Emma vaishu unga mamane Anga yegapatta thalavali la irukaan ne innum paduthura😬😬😬
அடடா நீங்க ஹார்மி மாறி வந்துட்டிங்களா?? எங்க ஹீரோ பற்றி எல்லாம் கவலை படுறிங்க. 🤣🤣🤣🤣இதுக்கு தான் தூக்க கலகத்துல உண்மையெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்றது😝😝😝😝.
 
Top