Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 12 2

Admin

Admin
Member
தன் பாட்டியின் இறப்பிலேயே இருந்த தாமரை அன்று தான் கவனித்தாள். என்ன இது ஒரு வயது பெண் இருக்கும் அறைக்கு என்ன தான் அவன் வீடு என்றாலும் இப்படி வரலாமா என்று யோசித்தவள்.

எப்போது இருந்து வருகிறான் என்று நினைவு கூர்ந்தவள் ஒ நம் பாட்டியின் இறப்புக்கு பிறகு தான் என்று நினைத்து நாம் தான் இந்த அறையை விட்டு வெளியிலேயே போகவில்லையே…

பின் அவரும் தான் என்ன செய்வார் என்று அப்போதும் அவனை தவறாக நினைக்காமல் நல்ல விதமாகவே எடுத்துக் கொண்டு ஆதித்யாவை பார்த்து “வசந்தி நீங்க இரவு தான் வருவீங்கன்னு சொன்னா….” என்று அவள் பேச்சி முடிவதற்க்குள்.

“ஏன் தாமரை நான் இப்போ வரக்கூடாதா….?” என்ற அவன் குரல் எப்போதும் இல்லாது மென்மையாக ஒலிக்க.

அப்போது தான் முதன் முறையாக அவன் பேச்சின் வித்தியாசத்தை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க. அப்போது ஆதித்யாவின் பார்வை அவள் முகத்தில் இல்லாது கீழ்நோக்கி இருக்க.

அதை பார்த்த தாமரை சட்டென்று தன் துப்பட்டா ஏதாவது விலகி இருக்கா என்று பார்க்க. அவள் நினைத்தது போல் கொஞ்சம் விலகி தான் இருந்தது. அதை சரிசெய்தவள் தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது அவளின் நிலை.

யாரை இவ்வளவு காலமாக தன் தாய் தந்தை ஏன் தன் பாட்டிக்கு மேலாக நினைத்தாளோ….அவனிடம் இருந்து சத்தியமாக இப்படி ஒரு பார்வையை எதிர் பார்க்கவில்லை.

அப்போதும் கூட அவனை வில்லன் ரேஞ்சிக்கு எல்லாம் எண்ணவில்லை. இவனும் சராசரி ஒரு ஆண்மகன் தான் என்று நினைக்க தோன்றியது. இந்த அறையில் பேசுவது சரியில்லை என்று நினைத்தவள் .

ஆதித்யாவை பார்த்து “சார் நாம் கீழே போய் பேசலாமே…..?” என்றதற்க்கு.

ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்த ஆதித்யா அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டே “ஏன் தாமரை இங்கேயே வசதியா தானே இருக்கு.” என்று கேட்டான்.

ஆதித்யாவுக்கு முதலில் தான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஒரு சிறு பெண்ணிடம் எப்படி தன் விருப்பதை சொல்வது என்று. அதுவும் இல்லாமல் அவளை கல்யாணமும் செய்துக் கொள்ள முடியாது என்ற பட்சத்தில் நம் விருப்பதை சொல்வதில் பயன் என்ன என்று தான் விட்டு விட்டான்.

ஆனால் தாமரையைய் பார்க்க பார்க்க அப்படி அவளை தன்னால் லேசில் விட்டு விட முடியாது என்று நினைத்தவன் எப்படி தன்னுடன் சேர்த்துக் கொள்வது என்பது தான் இந்த ஒரு மாதகால எண்ணமாக இருந்தது.

அதுவும் நேற்று சத்யா சொன்ன தாமரை வெளியில் சென்றால் அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்றதில் இருந்து தன்னை விட்டு அவளுக்கு ஒரு வாழ்க்கையா என்று நினைத்தவன்.

இனி அவள் நிலை அவள் வயது . தன்னை பற்றி என்ன நினைப்பாள் என்பதை நினைத்தால் நான் பைத்தியமாக தனியாக தான் நிற்க வேண்டும் என்ற முடிவோடு தான் காலையில் வசந்திக்கு போன் செய்ததே….

அதுவும் இப்போது தன் பார்வையும்,தன் பேச்சையும் வைத்தே அவள் தன்னை கண்டு கொண்டாள் என்பது தெரிந்ததும் முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்க்கு என்பது போல் முழுவதும் தன்னை வெளிபடுத்தி விட முடிவு செய்து விட்டான்.

இன்று காலை ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு தான் சென்றிருந்தான். அங்கு ஒரு டைமண் நெக்லஸை பார்த்ததும் இது தாமரைக்கு போட்டால் எப்படி இருக்கும் என்று அவன் கற்பனை செய்ய. ஆதித்யாவின் முகத்தை பார்த்தே அவனின் விருப்பத்தை கண்டு கொண்ட சத்யா.

அந்த கடை காரரிடம் அந்த நெக்லஸை தான் வாங்குவது போல் வாங்கிக் கொண்டான். ஏன் என்றால் அந்த சமயத்தில் அந்த கடையில் பத்திரிகைகாரார்கள் இருந்தார்கள். அப்போது ஆதித்யா அந்த நெக்லஸை வாங்கினால் குடும்பமே இல்லாத ஆதித்யா ஏன் நெக்லஸ் வாங்குகிறான் என்று கேள்வி எழும்.

அதை நினைத்தே தான் சத்யா தான் வாங்குவது போல் வாங்கிக் கொண்டான். பின் காரில் வரும் போது அந்த நெக்லஸை ஆதித்யாவிடம் கொடுக்க. ஆதித்யா கொஞ்சம் மனவருத்ததுடன் தான் வாங்கிக் கொண்டான் எனலாம்.

தன் மனதுக்கு பிடித்தவளுக்கு தைரியாம ஒரு பரிசு கூட வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று நினைத்துவன் தன் கையில் உள்ள நெக்லஸை பார்த்தவன் அதன் அழகில் இதை அவள் கழுத்தில் போட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழ சத்யாவிடம் தாமரை வீட்டுக்கு போ என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டான்.

சத்யாவும் தலைவனின் எண்ணம் புரிந்தவனாய் ஆதித்யாவை தாமரை இருக்கும் வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விட்டான்.எப்படி தாமரையிடம் தன் மனதை சொல்லுவது என்று தயங்கிக் கொண்டு தான் ஆதித்யா மாடி ஏறினான்.

ஆனால் தாமரையின் சிரித்த முகத்தை பார்த்தவன் தன் தயக்கம் எல்லாம் விட்டு விட்டு தன் மனதை உடனே அவளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றும், அந்த சிரிப்பு தன்னை பார்த்து சிரிக்க வேண்டும் . ஏன் இன்னும் சொல்ல போனால் தன்னை மட்டும் பார்த்து சிரிக்க வேண்டும் என்று ஒரு வெறியே ஏற்பட்டு விட்டது.அதனால் தன்னை முழுவதும் வெளிபடுத்த முடிவு செய்து விட்டான்.

தன்னையே ஒரு வித கிலியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் தாமரையைய் பார்த்து “என்ன தாமரை அங்கேயே நின்னுட்டே….உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். இங்கு வந்து உட்கார்.” என்று கட்டிலில் தன் பக்கத்தில் கைய் காட்டி சொல்ல.

தாமரையின் கைய் கால் ஒரு நிலையில் இல்லாது ஆட்டாம் காண ஆராம்பித்ததது.தாமரையின் பயம் அவள் முகத்திலேயே தெரிய.

அவளாகவே வர மாட்டாள் என்று நினைத்து ஆதித்யாவே தாமரையின் அருகில் சென்று அவள் கைய் பிடித்து கட்டிலில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டு அவள் கையை மென்மையாக பற்றி அதை தடவ.

தாமரைக்கு எங்கு இருந்து தான் அந்த தைரியம் வந்ததோ...தன் கையைய் அவன் பிடியில் இருந்து விடுவித்தவன் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

ஆதித்யா தாமரையின் பயத்தை பார்த்து இப்படி செய்வாள் என்று என்னாது அவள் கையைய் அழுத்தம் இல்லாது மென்மையாக தான் பற்றி இருந்தான். அதனால் தான் தாமரையால் ஈசியாக கையைய் விடுவித்துக் கொள்ள முடிந்தது.

தன்னையும் தன் கையையும் பார்த்துக் கொண்டு இருந்த ஆதித்யாவை பார்த்து “உங்களுக்கு வெக்கமா இல்லே...என் கிட்ட இப்படி நடந்துக்க.உங்க வயசு என்ன….? என் வயசு என்ன…?” என்று தாமரை கேட்ட போது தான் அவன் மண்டைக்கே உறைத்தது அவர்களின் பன்னிரென்டு வயது வித்தியாசம்.

அதை உணர்ந்த போது கூட அதை அவன் பெரிதாக நினைக்கவில்லை. அவன் தான் அவள் மேல் உள்ள ஆசையில் ஏதும் தவறு இல்லை என்று நினைக்கும் நிலையில் இருந்தானே….அவனுக்கா இந்த வயது வித்தியாசம் பெரியதாக தெரிய போகிறது.

மிக கூலாக “எது பேசுவது என்றாலும் என் பக்கத்தில் உட்கார்ந்து பேசு தாமரை.” என்று கூறியவனை இன்னும் முறைத்து பார்க்க.

அந்த முறைப்பை கூட ஆதித்யா ரசித்து பார்த்திருந்தான். என்ன கண்ணுடா அந்த கோலி உருண்டை போல் உருலும் அந்த கண் என்னை காதலோடு பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் போது.அந்த நினைப்பே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது.

அதே நினைவோடு “வா தாமரை” என்று திரும்பவும் அவள் கைய் பிடிக்க முனைய.

“என் கையை பிடித்தா உனக்கு மரியாதை கெட்டுவிடும்.”

பின் என்ன நினைத்தாளோ தன் முகத்தை மூடி அழுதவள். அழுகையுடனே ….. “உங்களை நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். ஆனால் நீங்கள். சேச்சே….”என்று சொன்னவளை பார்த்து.

“நான் உன் கிட்ட மரியாதை எதிர் பாக்கலே….தாமரை. காதலை தான் எதிர் பாத்தேன்.” என்று சொன்னவன் அவள் திமிர திமிர கையைய் பிடித்து இழுத்துக் கொண்டு கட்டிலில் அமர்த்தியவன் அவனும் அமர்ந்துக் கொண்டு அவள் கையைய் பிடித்துக் கொண்டான். மிக அழுத்தமாக.

அவன் கையில் இருந்து தன் கையைய் உருவ பார்க்க அது முடியாமல் போக அவன் முகத்தை பாவமாகவும் பயமாகவும் பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையைய் பார்த்து “என்ன பாத்து நீ பயப்படவே தேவையில்லை தாமரை.கோபப்படாமல் நான் சொல்வதை பொருமையுடன் கேள்.” என்றதற்க்கு.

“எது கேட்க சொல்றே….அடைக்கலாம் கொடுத்தவளையே கட்டிக்க நினைக்கிறியே ...இதை பொறுமையா கேட்க சொல்றியா….?”

“ஏன் உன்னை கட்டிக்கிறதில் என்ன தப்பு இருக்கு.” என்று சொன்னவன்.

அவளை இது தான் சாக்கு என்று கட்டி தழுவ அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றுக் கொண்டே “சே நான் இந்த கட்டிக்கிறது சொல்லலே….கல்யாணத்தை சொன்னேன்.”

“அப்போ நீ அதை நினைச்சி கவலையே பட தேவையில்லை. ஏன்னா நான் உன்னை கல்யாணம் பண்ண போவது இல்லை.”

என்ற அந்த வார்த்தையில் அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க போராடிக் கொண்டு இருந்தவள் தன் போராட்டதை நிறுத்தி விட்டு சிலையாக அமர்ந்து விட்டாள்.
 
Banumathi jayaraman

Well-known member
Member
ஏங்கண்ணு தாமரை
சும்மா எல்லாம் செஞ்சு உன்னைய பார்த்துக்க ஆதித்யா என்ன உன்
சொந்தமா பந்தமா?
ஆதாயமில்லாம்மல் செட்டி ஆத்தோடு போவானா?ன்னு நீ யோசித்திருக்க வேண்டும், தாமரை
 
Last edited:
Advertisement

Advertisement

Top