அருமை அருமை நன்றிகள் பல மா. நாங்கள் கூட ஆராதனாவை இத்தனை அழகாக ரசித்தது இல்லை என்று தோன்றியது. அவளது காதப் பாத்திரம் அப்படியே கவிதை வடிவில். நன்றிகள் பல மா.ஆராதனா —
ஆழமான சிந்தனையின் அழகான அலை
ஆணவமில்லா பேச்சு
ஆகாயம் போல மனம்....
ஆராய்ந்தால் தெரியும் அவள் தனித்துவம்
ஆயிரம் பேர் கண்ணனை அன்பு கடவுளாகவும் ஆசை காதலனாகவும் அவர்கள் காண,
அவள் மட்டும்
ஆதரவு தரும்
அருமை சகோதரனாக
ஆதரித்தாள்....
ஆழ்கடல் அலை போல ஆழ்ந்த சிந்தனை
ஆனந்த மழை காதலி....
ஆகாய நட்சத்திரத்தில்
அவள் ஒற்றை நிலா
ஆர்ப்பாட்டமில்லாமல் ஒளி தரும் அமைதி....
ஆராதனா
ஆச்சரியமாய் அதிசயமாய்.....