காதலால் திருமணம்
உறவுகள் எட்டி நிற்க..
மீண்டும் ஒரு காதல் திருமணம்
காதலுக்காக எதுவும்
செய்ய உறவுகள் ஒட்டி நிற்க!!!
தலைமுறை இடைவேளையா???
வாழ்க்கைமுறை மாற்றமா???
தள்ளி வைத்ததெல்லாம்
தன்னை காக்க
தான் என்று
உணர்ந்த நொடி
நன்றியுணர்வு மேலோங்கியதா???
உறவை செப்பனிடவே
ஒரு திருமணம்
இரு மனம்
இணையாமல்
இரு வருடம்!!!!
நொடி ஒன்று போதுமே
காதல் கண்களில் வலம் வர...
கோபப்பார்வை திரையாய்
இருக்கையில்
வலம் தான் வருமோ??
காதல்!!