Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

வாவ் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.. எங்க கேள்வி கேட்கனும்னு ...நான் மிஸ் பண்ணிட்டன்..என் நேத்ராவ யாருமே கேட்கல ....

தேங்க் யூ ஜாஷ் :) :)

இப்ப கூட கேட்கலாமே :D:D:D

நேத்ராவை எல்லாருமே கேட்டிருக்காங்க பாருங்க :love::love::love:
 
என் பொண்ணை சேட்டைன்னு சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
வாழ்ததுகள் சரண்.
பேட்டி கொடுக்கிற அளவுக்கு எம்புள்ள எட்டூர் பாஷை பேசுதா வாவ் மீ ஆப்பி.

Heyyyyyyyyyyyyyyy guysssssssssssss..!!

Here comes another lively session with saranya akka
.:love::love::love: @kani - hema

இதுவரைக்கும் interview பண்ணினதுல மிகவும் சேட்டைப்பிள்ளை இவர் என்பதை உங்களிடம் கூறிக்கொண்டு:LOL::LOL::love:

Lets Startttttttttt..!!



1.உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..நிறைய கூட சொல்லலாம்...

பிறந்து வளர்ந்தது எல்லாம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கத்தில ஒரு குட்டிகிராமம்.கல்யாணத்துக்கு பின்னால பெங்களூர் வாசம்.வீட்டுக்காரர்க்கு மத்திய அரசாங்கத்தில் வேலை. பெயர் கனி.ஒரே பையன். க்ருத்தவ். 5 படிக்கிறான். எங்க குடும்பம் இவ்வளோ தான்.

கதை படிக்கிறதுன்னா அத்தனை பிடித்தம். பைத்தியம் மாதிரி ஒரு நாள் முழுக்க சாப்பிடாம கூட விடாம படிச்சிருக்கேன்.
ஆனா எல்லாம் கல்யாணத்துக்கு பின்னாடி தான்.அதுக்கு முன்னே வாரமலர், சிறுவர் மலர், குடும்ப மலர்ன்னு இப்படி தான் ஆரம்பிச்சது.
ஆனா ஜீன்னு சொல்லுவாங்களே அதுதான் இத்தனை படிக்க வச்சதோ?

அப்பாவும், அம்மாவும்சரித்திர நாவல்கள் அப்படி படிப்பாங்க.எங்க வீட்டில பெரிய மரபெட்டிநிறையகல்கி நாவல், சாண்டில்யன்நாவல்ன்னுபெரிய பெரிய புக்கா வச்சிருக்காங்க.அதுவும் பத்திரமா பைண்டிங் பண்ணி.இப்பவும் இருக்கு.

இன்னும்நிறைய சொல்லலாம்னு சொன்னா நான் நிறுத்தவே மாட்டேன்.


2.எப்படி சரண்யாக்குள்ள ஒரு ரைட்டர் இருந்ததை கண்டுபிடிச்சீங்க...ப்ளாஷ்பேக் ப்ளீஸ்

நான் எங்க கண்டுபிடிச்சேன்?சும்மாவிளைடாட்டா ஒரு பேச்சுல என்னை எழுதிப்பாரேன்னு அமிர்தாக்காவும், ரமாமாமியும் தூண்டிவிட்டாங்க. just for fun இப்படித்தான் ஆரம்பிச்சேன்.முடியும் முடியாதுன்றதை தாண்டி விளையாட்டுக்கு அவங்களுக்கு மட்டும்னு தோணினதை எழுதினேன். முதல் ஐந்து அத்தியாயங்கள் எழுதி அவங்களுக்கு அனுப்ப இதை முழுசா எழுதுன்னு ஆரம்பிச்சு வச்சது அவங்க தான்.அப்படி ஆரம்பிச்சது தான் நட்சத்திர விழிகளிலே வானவில்.


3.வீட்ல என்ன response as a writer அஹ்

பர்ஸ்ட்நாவல் புக்கா வர வரைக்கும் ஹஸ்பன்ட் தவிர வேற யாருக்குமே மூச்சே விடலை. அவங்களுக்கு என் ஆர்வத்துக்கு தடைபோட மனசில்லை. எழுதுன்னுட்டாங்க.
புக் ரிலீஸ் ஆனதும்அதுவும் என் கைக்கு வந்ததும் தான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும்சொன்னேன்.ஆனாஅதை நம்பவைக்க நான் பட்ட பாடு இருக்கே அந்த பாடு.

எழுத கூட இத்தனை கஷ்டப்படலை.இதுல சொந்தக்காரங்க நீயா? நீயா? நீயான்னு ஒரே கேள்வி தான் சுத்தி சுத்தி. ரத்தக்கண்ணீரே வந்துடுச்சு.அதையெல்லாம் இப்ப நினைச்சாலும் ரொம்ப குச்ச்சட்டமா இருக்கும்.

ஆனா இப்ப ஒவ்வொரு புக் ரிலீஸ் ஆனதும் ஊர்லஎல்லாருக்கும் குடுத்து படிக்க சொல்லி படிச்சு முடிச்சதும் கதையை பத்தி அவங்களை என்கிட்டே பேச சொல்லின்னு ஒரேசந்தோஷம் தான்.

ஆனாலும் அப்பப்ப உன்னை இப்படி நினைக்கவே இல்லைன்னுசொல்லிட்டே இருப்பாங்க. இப்ப சமீபமா சலசலக்கும் மணியோசை படிச்சு பார்த்துட்டு வீடியோ கால்ல உத்து உத்து பார்த்து இன்னும் நீயான்னு நம்பமுடியலைன்னு சிரிச்சுட்டே சொல்றாங்க. (சத்தியசோதனை)

பாருங்கய்யா...நாங்க ரைட்டர்னா நாடு நம்பினாலும் வீடு நம்பல....ரைட்டர் சோதனைகள்...;):LOL:

4.உங்க கதைக்கு வந்த முதல் comment ?யார்?


ரமா மாமியும், அமிர்தாக்காவும் தான்.நான் எழுதி அவங்களுக்கு அனுப்பினதும் அவங்களே எழுதின மாதிரி அத்தனை சந்தோஷம் அவங்களுக்கு.இன்னும் இன்னும்னு இப்ப வரைக்கும் நிக்க விடாம விரட்டிட்டே தான் இருக்காங்க.எப்பவும் இருப்பாங்க.

அதே மாதிரி ஒரு எழுத்தாளருக்கு(என்னை நானே சொல்லிக்கறேன்.) மிக பெரிய சந்தோஷமே விமர்சனம் தான்.பொன்னும்மா தான் அந்த முதல் கதைக்கு முதல்விமர்சனம் எழுதினது.அன்னைக்குஒரு ரிவ்யூ இத்தனை சந்தோஷம் தரும்ன்னு உணர்வு பூர்வமா நான் உணர்ந்த நேரம்.

மல்லிகாக்கா இவங்களை நான் சொல்லாம இருக்கவே முடியாது.நானே எதிர்பாராத நேரம் ஒரு எழுத்தாளரா, ஒரு சகோதரியா என்னோட முதல்கதைக்கு கருத்துசொன்னாங்க.பர்ஸ்ட் கதை எழுதற சரண், இந்த இடத்துல இந்த டயலாக்ஸ் சரியான்னு பாருன்னு என்னையே என் கதைக்கு வாசகரா மாத்தினாங்க.எனக்கு அத்தனை சப்போர்ட்டா இருந்தாங்க.இப்ப வரைக்கும் இருக்காங்க.மல்லிகாக்காMM சைட் ஆரம்பிச்ச புதுசுல அவங்களுக்கு அடுத்து அதுல எழுத ஆரம்பிச்ச முதல் எழுத்தாளர் நானே.அதுவும் என் முதல் கதையை.

இவங்களை என் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.மறக்கவும் மாட்டேன்.(விக்ரமன்bgm லாலால்ல்லாகேட்டா நான் பொறுப்பில்லை மக்களே)

ஹேமாக்கா...இது புது நியுஸ்...எம்.எம்ல second writer நீங்க தானா...வாழ்த்துகள்...செம..:love::love:

5.உங்க கதை கேரக்டர்..அதை எப்படி உருவாக்கினீங்க...ஏன் உருவாக்கினீங்க..அதன் பின் இருக்கும் சுவாரசிய நிகழ்வு..அதுக்கு பெயர் வைச்ச நிகழ்வுன்னு எல்லாத்துக்கும் சொல்லனும்...
ஒரு கதா நாயகன்

6. ஒரு கதா நாயகி

7.ஒரு வில்லன்/வில்லி
8.ஒரு துணை பாத்திரம்

இப்படி எல்லாத்துக்கும் ஒரு கதை சொல்லுங்க

ஈஸ்வரா... சத்தியமா சொல்ல வரலைங்க.எதையுமே திட்டமிட்டு செய்யறதில்லை.எதுக்குமே கதைப் பின்புலமும் இல்லை.அப்ப தோணும் விஷயங்கள் தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் உருவாக காரணம்.
ஏதாவது ஒரு ஒன்லைன் கிடைக்கும். அதை வச்சு முன்னாடி பின்னாடின்னு மானே மரிக்கொளுந்தேன்னு டெவலப் பண்ணிடுவேன்.

நாம வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்திப்போம். அப்படி ஒரு சிலரோட குணங்கள் நாமஎழுதும் போது மண்டைக்குள்ள ஒரு தீப்பந்தத்தை பத்தவைக்கும்.கப்புன்னு பிடிச்சுட்டு அப்டியே உருவாக்கிட்டுபோய்டவேண்டியது தான்.பெருசா வேற ஒண்ணுமில்லை.( ஹப்பாடா ஒரு வழியா சொல்லிட்டேன். கதை மாதிரி இருந்ததா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்.)


9.உங்க கணவர் உங்க கதை படிப்பாங்களா..?படிச்ச பிடிச்ச கதை என்ன?


படிச்சா தான பிடிச்சத சொல்ல யுவர் ஆனர்?ஒன்னு கூட படிச்சதில்லை. ஆனா எப்போவாச்சும் எடிட் பண்றச்ச வந்து பார்த்துட்டு இந்த டயலாக் இத எப்படி நீ எழுதலாம்னு கேட்டு ராயல்ட்டி வாங்கபோறேன்ற வரைக்கும் போவார்.
(சில கலாய்ஸ சுட்டு கதையில எழுதிடுவேன், அதுக்குத்தான், நமக்கு கதை தான் முக்கியம்)


அக்கா....அப்போ சொல்லுங்க..ஒரு டயலாக் for example.. @kani - hema

10.கதை எழுதும்போது டிஸ்டர்ப் பண்ணினா என்ன செய்வீங்க?

எனக்கு யாராச்சும் பக்கத்துல இருந்தா டைப்பண்ண வரவே வராது.அதனால ஒண்ணு யாரும் இல்லாத நேரம் டைப் செய்வேன்.இல்லைனா ரூம்ல உட்கார்ந்து டைப் பண்ணுவேன்.யாரும் டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க.


எழுத்தாளருக்கு இந்த நாட்டுல இடம் கிடைக்க மாட்டேங்குதே...ச்ச...நானும் இடம் தேடிட்டே இருக்கேன்..?‍♀️?‍♀️

11.ஒரு இடம்..ஒரு நபர் எந்த வசதியுமில்லாம...போக நினைச்சா யார் கூட.?எந்த இடம்...மொபைல்...கிடையாது..பட் சாப்பாடு உண்டு.

கண்டிப்பா வீட்டுக்காரர் கூட தான்.அவர் இருந்தா போதும், வேற எதுவுமே வேண்டாம்.இடம் பிரச்சனையே இல்லை. எதுவா இருந்தாலும் ஓகே.(எங்கயும் விட்டுட்டு போறதா இல்லை)

12. இந்த கதை தான் என்னோட பெஸ்ட்...அப்படினு நினைக்கிற கதை எது?

எல்லோருமேஎழுத ஆரம்பிக்கிற ஒவ்வொரு கதையும் பெஸ்ட்டா குடுக்கனும்னு தான் ஆரம்பிப்போம்.நானும் அப்படித்தான். ஒவ்வொருகதையும் ஒவ்வொரு விதம். அந்த விதத்துல எல்லாமே பெஸ்ட் தான்.

ஆனா இதை நான் சொல்றதை விட என் கதையை படிக்கிற வாசகர்கள் சொன்னா சும்மா ஜில்லுன்னு இருக்கும். (சொல்வீர்களா? சொல்வீர்களா?)

My favorite தேன் தெளிக்கும் தென்றலாய் ப்ர்சாத்..-அஷ்மீயீ :love::love:

13. பிடிச்ச ஒரு personality.யாராவேணும்னாலும் இருக்கலாம்...ப்ரபலம்னு இல்ல..உங்களை inspire செஞ்சவங்கள சொல்லுங்க.

என்னோட அம்மா.ரொம்ப பிடிச்ச பெர்சனாலிட்டி, இன்ஸ்ப்ரேஷன்எல்லாமேஅம்மா தான்.ஆனா இதுவரை நான் அவங்கக்கிட்ட இதை சொன்னதில்லை.இப்ப இந்த கேள்வியை கேட்டதும் இதை தவிர என்னால வேற யாரையுமே நினைக்க தோணலை.

அம்மாவை பொறுத்தவரை மட்டுமில்லை என்னோட குடும்பம் ரொம்ப பெருசு. அத்தனை பேருக்குமே தெரிஞ்ச விஷயம் நான் அப்பா பிள்ளைன்றது.அப்பாவை, என்னை அறிஞ்சவங்களுக்கு இது நல்லா தெரியும்.அப்பா இருந்தா போதும்னு அம்மாக்கிட்டையே சொல்லுவேன்.ஆனாஇப்ப போய் அம்மா நீங்கதான் என் ரோல் மாடல்ன்னு சொன்னா சத்தியமா நம்ப மாட்டாங்க.கிண்டலா சொல்றேன்னு நினைச்சு அடி போடின்னு போய்டுவாங்க.
வாழ்க்கையில் அம்மாவை மாதிரி தைரியமா இருக்கனும்னு நினைப்பேன்.ஆனா கண்டிப்பா இருக்க முடியாது. எந்த முடிவையும் தைரியமா துணிச்சலா எடுப்பாங்க.ரொம்ப ரொம்ப தன்னம்பிக்கை.அப்பாவுக்கு பல நேரங்கள்ல அம்மா தான் தைரியம் சொல்லுவாங்க.யாரையும் எதிர்பார்க்காம, அவங்களே செய்வாங்க.கஷ்டப்பட்டநேரங்கள்லஅம்மா மட்டும் மனசளவுலதளர்ந்து போயிருந்தா மேல வந்திருக்க முடியாது நாங்க.அம்மா அம்மா தான்.

அவங்களோட இன்னொருஸ்பெஷாலிட்டி
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
இந்த குறள்பார்க்கும் போது கேட்கும் போதெல்லாம் அம்மா ஞாபகம் தான்.நன்னயம் செய்துட்டு காட்டிக்காமபோய்ட்டே இருப்பாங்க.கூடவே வைராக்கியம் நிறைய. என்னால இப்படி இருக்க முடியுமான்னா நிச்சயமா தெரியாது.என்னால மட்டுமில்லை,யாராலையும் முடியாது.இரும்பு பெண்மணி என் அம்மாவுக்கு அப்படிபொருந்தும்.(கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்)


செமக்கா.....சூப்பர்...:love::love:


14. கதை எழுத ஆரம்பிச்ச அப்புறம் சொதப்பின ஒரு விஷயம்...

ஒருதடவை ரெண்டு தடவை இல்லை.பலதடவை நடந்திருக்கு.நான் எழுத ஆரம்பிச்சா ரொம்ப வேகமா எழுதுவேன். ஒரு அப்டேட் முடிச்சு தான் நிமிர்வேன்.என்ன ஒன்னு அப்பப்ப டைப்பண்ணிட்டு சேவ் பண்ண மறந்துடுவேன்.டெலிட் ஆகிடும். (இதுக்கு நிறைய திட்டு வாங்கியிருக்கேன் மாமிக்கிட்ட, அமிர்தாக்காக்கிட்ட. அதை வெளியில சொல்லமாட்டேன். ரகசியம்.)

அந்த வேதனை இருக்கே...வேதனை....நான் உஷாரா இரண்டு page தாண்டினதும் save பண்ணிடுவேன்..

15.எந்த படம் பார்த்து நீங்க அழுதீங்க?

எந்த படம்னு இல்லை, கொஞ்சம் சோக ஸீன் வந்தாலும் கண்ணீர் தன்னைப்போல கொட்ட ஆரம்பிச்சுடும்.சத்தமே இல்லாம அழுதுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைச்சிட்டு சிரிச்ச மாதிரி வச்சுப்பேன்.(அழுதது யாருக்கும்தெரியப்படாது, புரியப்படாது)

உங்களை இங்க நாங்க என்னவோ நினைச்சோமே....கீழ உள்ள கேள்வியில தெரியும்

16. பிடிச்ச ஹீரோ ஏன்?


விஜய்.ஏன்னு தெரியல. சின்னதுல இருந்தே பிடிக்கும். இப்ப வரைக்கும்.

17. நீங்களும் உங்க கணவரும் ஃப்ர்ஸ்ட் பார்த்த திரைப்படம்

இந்த கேள்வியை நான் அவங்கட்ட கேட்டேன்.எனக்கு ஞாபகம் இல்லைன்னு கேட்டதுக்கு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாங்க.எனக்கு ஞாபகத்துல இருந்தவரைக்கும் குசேலன் போனோம், ஆனா அது எத்தனாவது படம்ன்னு ஞாபகம் இல்லை. (ஏற்கனவே இதுக்கு வாங்கிக்கட்டியாச்சு. சோ நோ திட்டிபையிங்)


திட்டோடவ விட்டாங்க..குட்டு வாங்கிகோங்க...:cautious:

18.அஷ்மி கேரக்டர் எங்க எல்லாருக்குமே favorite உண்மையில அஷ்மி போல யாராச்சும் தெரியுமா...இல்ல..pure imagination அஹ் கா?share more on that.

இதுக்கு உண்மையை சொல்லலாமா?வேண்டாமா?ப்யூர் இமாஜினேஷன் இல்லை.இதை மட்டும் சொல்லிடறேன். நம்ம ஒவ்வொருத்தர்க்குள்ளையும் அஷ்மி இருக்கா. நாம தான் எழுப்பனும்.

19.நீங்க செஞ்ச மிகப்பெரிய atrocity..வால்தனம் என்ன?

ஒன்றா ரெண்டா சொல்லவே. அது இருக்கு எக்கச்சக்கமா.ஆனா ரகசியம்.

ஒன்னு கூட சொல்லாம பில்டப்ப பாரேன்...அக்கா ஒன்னாச்சும் சொல்லுங்க கா.. @kani - hema

20.இது என் வாழ்க்கையில ரொம்ப சுவாரசியமான சம்பவம்...அப்படி நீங்க நினைக்கிற நிகழ்வு என்ன?

என் வீட்டுக்காரரை என்னோட நிச்சயதார்த்த ஆல்பத்துல வலைவீசி தேடினது தான்.
நிச்சயம் பண்ணின ஆல்பம் வரவும் ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் பார்த்திட்டு இருந்தாங்க.நான்ரெண்டு மூணு பக்கத்து பின்னால தான் பார்க்க ஆரம்பிச்சேன்.அதுவும் என் அண்ணியா வந்து பாருன்னு சொல்லவும்.(யாருமே என்கிட்டே முதல்ல அதை காமிக்கலை, வந்து பாருன்னு சொல்லவும் இல்லை)
அண்ணி அன்னைக்கு எங்க விசேஷத்துக்கு வரலை.
எங்க உன் மாப்பிள்ளைன்னு கேட்டதும் முன்னாடி பார்க்காம அடுத்தடுத்த பக்கமா போய் கடைசியில மாலை மாத்தறப்போ ஜோடியா பக்கத்துல அவரை பார்த்ததும் இவங்க தான்னு காமிச்சேன்.பாதி பேர் சிரிக்க அண்ணி முறைக்க எனக்கு புரியலை.

ஏன்னா அதுக்கு முந்தின சில போட்டோஸ்ல கூட்டமா க்ரூப் போட்டோவுல ஹஸ் நின்னுட்டு இருந்தாங்க.அசடு வழிஞ்சேன்.

நான் தான் அவங்களை சரியா பார்க்கவே இல்லையே.லேசா பார்த்த முகமும் மறந்து போச்சு.திருதிருன்னு முழிச்சேன்.இப்ப வரைக்கும் சொல்லிக்காட்டி சிரிப்பாங்க.குடும்பத்தில ஒவ்வொரு கல்யாணத்திலையும் வச்சு செய்யறாங்க.


அண்ணா பாவம்க்கா...மிடில..உங்களோட...உங்க மருமக வரவரைக்கும் சொல்லிக்காட்டினாலும் தப்பில்ல...

21. உங்க மொபைல் ரிங்டோன் என்ன..?ஏன்..? பிடிச்ச பாடகர் யார்?

புரியாத புதிர். விஜய் சேதுபதி நடிச்சது. அதில் வெள்ளை கனவுன்னு ஒரு சாங்.அதுல புத்தம் புது மழை என்னை நனைத்திடன்னு ஒரு லைன் வரும் அதை ரெக்கார்ட் பண்ணி ரிங்டோனா வச்சிருக்கேன். ஏன்னாபிடிக்கும். பிடிக்கும்.


பிடிச்ச பாடகர் எஸ்பிபிதான்.எப்பவும்.அவரோட எல்லா பாட்டுமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.பாட்டுன்றதை தாண்டி ஒவ்வோர் பாட்டுலயும் ஒவ்வொரு லைன், சில வார்த்தைகள்ன்னு அவரோட ஸ்பெஷல் இருக்குமில்லையா?இப்படி பிரிச்சு பிரிச்சு பிரிச்சு ரசிப்பேன்.

இதான் friends அந்த பாட்டு..

22.உங்க கதையில எதாவது உண்மை சம்பவம் உங்க லைஃப்ல உள்ளதை எழுதி இருக்கீங்களா.?அப்படி இருந்தா சொல்ல தோணினா சொல்லலாம்..something funny lovely ஆக

உண்மை சம்பவம் எல்லா கதையிலும் ஒவ்வொரு சுவாரசியமான உண்மை சம்பவங்கள் குட்டி குட்டியா லவ்லியா ரொம்பவே funny-யாஇடம்பெற்றிருக்கே.

இப்போ எழுதற விரல் தீண்டிடு உயிரே கதையில் உண்மையா இருந்த ஒரு மனிதரை வச்சு எழுதியிருக்கேன். இப்படியும் இருக்காங்கன்னு காண்பிக்க.ஒரு கதாப்பாத்திரத்தை அந்த தன்மையில் இருந்து மிகைப்படுத்தி நிறைய எழுதலாம். ஆனா நான் எழுதற முனீஸ்வரன் கதாப்பாத்திரத்தோட உண்மை தன்மை அப்படியே எழுதினா அவ்வளோ தான்.

அவரை இதுல உண்மையை விட குறைவா காமிச்சிருக்கேன்.நிஜத்தில் நெருங்கமுடியாத அளவிற்கு இருக்கும் மனிதர்.


23. உங்களை ஊக்கப்படுத்திக்க நீங்க என்ன செய்வீங்க..?எங்களுக்கும் சொல்லுங்க..any motivational story something of that kind

ரொம்ப டவுனா ஃபீல் பண்ணினா யார்ட்டையும் பேசாம தூங்கிடுவேன்.தூக்கம் வரலைனாலும் கண்ணை மூடிட்டு படுத்துப்பேன்.எழுந்துக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸா ப்ரெஷா இருக்கும்.அத ஊக்கப்படுத்திக்கறதா கூட சொல்லலாம்.ஆனா அப்படி இருக்கறது ரொம்ப கம்மி.எப்பவும் எனர்ஜியா தான் இருப்பேன். ஓயாம பேசிட்டே. தனியா மோட்டிவேட் பண்ணிக்கன்னு எதுவும் செய்யறதில்லை.

மோட்டிவேஷனல் ஸ்டோரியா?நான் பாலோ பன்றதை சொல்றேன்.இதை எடுத்தாலும், எடுக்கலைன்னாலும் ஓகே தான்.

கவலைகளை கவலைகளா பார்த்தா கவலைகள் அதிகமாகத்தான் செய்யும்.அதை அந்த இடத்திலேயே விட்டுட்டு நம்ம வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும். இல்லைன்னா கவலையே நம்மை பார்த்து இப்படி இருக்காங்களேன்னு கவலைப்பட ஆரம்பிச்சுடும்.அப்பறம் அந்த கவலையை மட்டும் தான் நாம பார்க்கிற மாதிரி இருக்கும். ( ஏதாவதுபுரிஞ்சதா?)


இனிமே கவலைக்கே கவலை வராதே:LOL::cool:

24.சின்ன வயசுல இருந்து நிறைவேறாத ஆசை ஒன்னு..இனியும் அது நிறைவேறாது அப்படி ஒன்னு இருக்கா

இருக்கே.எனக்கு நைட்ல ஒரு ரூம்ல நான் மட்டுமே தனியா இருக்கனும். தூங்கனும்னு ஆசை.ஆனா இதுவரை நிறைவேறலை. இனியும் அது நிறைவேறவே நிறைவேறாது.எப்பவுமே.ஏனா தனியா இருக்கனும்னா அவ்வளோ பயம் பயம்.

அட விசித்திரமே:LOL::LOL::LOL:

25.இதெல்லாம் செஞ்சா சரண் உங்க ப்ரண்ட் ஆகிடுவா..?என்ன செய்யனும் அப்படி?

க்யூட்டா பூனைக்குட்டி படத்தை போட்டு ஹாய் சரண்னு சொன்னாலே ப்ரெண்ட் ஆகிடலாம்.



இது எல்லாம் உங்க ரீடர்ஸ் கேட்ட கேள்விங்க

அப்ப முக்கியமான பகுதிக்கு வந்துட்டோம்னு நினைக்கிறன்.


26. சரண்யா சிஸ் கதையில எப்பவும் ஹீரோயின்ஸ் ஹீரோவை விட கெத்த காட்டுவாங்க..ஏன் அப்படி..?அப்படி இருக்கனும்னு நினைக்கறாங்களா இல்ல...அப்படி தான் அவங்க இருக்காங்களா?

யாரா இருக்கும்? ஜோ அக்காவா? பாத்திமாவா?

அவங்க இரண்டு பேருமே இல்ல..யார்னு சொல்ல மாட்டேன்.

ஹீரோயின் கெத்தா இருக்கனும்னு திணிக்கப்பட்டு வரது இல்லைங்க.அதுவே தானா அமைஞ்சிடுது.
ஹீரோவை கொஞ்சம்கெத்தா காட்டனும்னு நினைப்பேன்.ஆனா என்னமோ ஹீரோயின் கிட்ட ஹீரோ வரப்ப என் டைப்பிங்க்ல என்னவோ ஆகிடுது.தானாவே அப்படி அமைஞ்சிடுது.எழுதி முடிச்சு பார்த்தா இதுதான் நீ காட்ட நினைச்சியான்னு என்னையே என் எழுத்துக்கள் கேள்வி கேட்கும்.

அப்படித்தான் பொண்ணுங்க இருக்கனும்னு நினைக்கிறேனான்னு கேட்டா ஆமாம்ன்றதை விட ஒவ்வொரு பொண்ணுக்குள்ளையும்கெத்து இருக்கத்தான் செய்யும்.ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம அறியாமலே அது வெளிப்படவும் செய்யும்.

நான்அப்படித்தான்இருக்கேனாவா?
அப்படியும் சொல்லலாம். அப்படி இல்லைன்னும் சொல்லலாம்.கெத்து காட்டற இடத்துல காட்டுவேன்.சில நேரங்கள்ல அப்பப்ப நீ வெத்துன்னு ஹஸ் கிட்டமொக்கை வாங்கிய சம்பவங்கள் ஏராளம். ஆனாலும்வெளில காமிக்கிற கெத்து குறையாது.கெத்து காமிக்கிறதே ஒரு தனி கெத்துதான் இல்லையா?


27. நீங்க எழுதின கதையில உங்களுக்குப் பிடிச்ச பாத்திரம் என்ன? கதை என்ன...?.ஏன்?எனக்கு எப்பவுமே அஷ்மி தான்

இவங்க யார்ன்னு தெரியலையே?

பிரசாத் இவனை முதல் கதையில்இருந்தே பிடிக்கும்.இன்னொன்னு
அதிரூபன்.மின்னல் அதனின் மகனோ ஹீரோ.மற்ற ஹீரோக்களை விட இவன் ரொம்பவே ஸ்பெஷல்.எப்படின்னுசொல்ல? (சொல்ல வரலைங்க)

ஹீரோயின்ஸ் எல்லாருமே ஒவ்வொரு விதத்துல என்னை கவர்ந்தவங்க தான்.முக்கியமாஅஷ்மியும், கண்மணியும்.

கதை எல்லாமே ரொம்ப பிடிக்கும். ரொம்பவே அனுபவிச்சு ஜாலியா எழுதின கதைன்னா சலசலக்கும் மணியோசை.

28.உங்க கதையில உங்களுக்கு திருப்தியில்லாத கதை..?ரீடர்ஸ்க்கு அவ்வளவா விருப்பமில்லாத கதைன்னு எதாவது இருக்கா?

எனக்கு திருப்தி இல்லாத கதைன்னா நெஞ்சோர நிலவே தான்.பத்து அத்தியாயங்கள் கொண்ட கதை.திருப்தி இல்லைன்னு சொல்லியே அதை இப்ப திரும்பவும் எழுத ஆரம்பிச்சிருக்கேன் வேறு விதமாக.

ரீடர்ஸ்க்கு விருப்பமில்லாத கதை எதுன்னு அவங்க தானே சொல்லனும்.இந்தநெஞ்சோர நிலவே கதையோட முடிவு இப்படி இருந்திருக்க வேண்டாம்னு சொன்னாங்க.இன்னும் அழுத்தமான காரணத்தை கதையின் கருவா எடுத்திருக்கலாம்னு.நிறைய பேர் இதை பெருசா எழுத சொல்லி கதை முடிஞ்சப்பவே கேட்டாங்க. அப்ப முடியலை. இப்ப ஆரம்பிச்சுட்டேன்.


29.சரண்யாவின் பொழுது போக்கு என்ன..?

பையனோட விளையாடறது,நாவல் படிக்கிறது,பாட்டு கேட்கிறது.
போன்ல பேசறது(இதெல்லாம் பொழுதுபோக்கில் வருமான்னு கேட்கப்படாது. எனக்கு வரும் மக்களே)

30.சரண்யா சிஸ் என்ன படிச்சிருக்காங்க?

டிப்ளமோ முடிச்சிருக்கேன். கம்ப்யூட்டர் க்ரூப்.

thank u akka..

நானும் தேங்க்யூ பவி.இதுவரை இப்படி கேட்டு சொன்னதில்லை. புதுசா இருக்கு. ப்ரெண்ட்ஸ் கூட பேசறது வேற. இது. பர்ஸ்ட் டைம். பார்த்து பாஸ் பண்ணி விடுங்க.


ஹஹா....நீங்க பாஸ் இல்ல..ஃப்ர்ஸ்ட் க்ளாஸ்...akkaa

செம.சுவாரசியமா எனக்கு இருந்துச்சு...நீங்களும் சொல்லிடுங்க friends.
 
ஆமாம் போல :) :)
மழையால் போட்ட பதில் பதிவாகல சுத்துச்சு3 வெறுத்து போயிட்டேன் டா...
எழுத்தாளினி என்னையும் மறக்காமல் நினைவு வச்சதில் கொஞ்சம் தலை கிறுகிறுத்து போச்சுடா.
இன்னும்3 பெரிய எழுத்தாளராக வாழ்ததுகள் டா
 
என் பொண்ணை சேட்டைன்னு சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
வாழ்ததுகள் சரண்.
பேட்டி கொடுக்கிற அளவுக்கு எம்புள்ள எட்டூர் பாஷை பேசுதா வாவ் மீ ஆப்பி.

தேங்க் யூ பொன்னும்மா :) :)

மீ கூட ஆப்பி ஆப்பி தான் :love: :love: :love:
 
மழையால் போட்ட பதில் பதிவாகல சுத்துச்சு3 வெறுத்து போயிட்டேன் டா...
எழுத்தாளினி என்னையும் மறக்காமல் நினைவு வச்சதில் கொஞ்சம் தலை கிறுகிறுத்து போச்சுடா.
இன்னும்3 பெரிய எழுத்தாளராக வாழ்ததுகள் டா

திரும்பவும் தேங்க் யூ பொன்னும்மா என கூறிக்கொண்டு ????
 
Top