Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 10

என்ன முயன்றும் ஹர்ஷிவ்தாவின் அருகாமையை விலக்க மனம் வரவில்லை ஷக்திக்கு. ஆனாலும் இதற்கு மேல இப்படியே இருந்தாள் சண்டிராணி சண்டைக்கு தயாராகிவிடுவாளே?

தன்னை சமன் செய்துகொண்டு அவளிடமிருந்து மனமில்லாமல் விலகியவன் அவளை பார்த்து புன்னகைக்க,

“நவ் ஆர் யூ ஆல்ரைட் கௌரவ்?...”

இல்லையென்று கூறி மீண்டும் அவளின் அணைப்பிற்குள் அடங்கி அவளை ஆள ஆசைதான். அதையே அவனது விழிகள் பிரதிபலித்ததோ?

“ஹ்ம், இல்லைன்னு சொன்னா மட்டும் திரும்பவும் நீ என்னை கிஸ் பண்ணவா போற?...” பெருமூச்சு விட்டவனை நக்கலாக பார்த்தவள்,

“ஆமாமா முதல்ல நான் ஆரம்பிச்சு வைக்கலைனா நீ மட்டும் என்னை கிஸ் பண்ணிருக்கவா போற?...” அவனை வம்பிழுக்க அவனோ மீண்டும் தன் அணைப்புக்குள் அவளை நிறுத்தியவன்,

“அம்மாவை நான் ரொம்ப மிஸ் பன்றேன்டா தேனு. வாரம் ஒருதடவை இந்த வீட்டுக்கு வந்தா கூட பத்து நிமிஷத்துக்கு மேல இருக்க மாட்டேன். என்னால இருக்கவும் முடியாது. இப்போ இவ்வளோ நேரம் நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேனா அதுக்கு காரணம் நீ தான்...”

தாயின் பிரிவு உண்டாக்கிய ஏக்கத்தோடு பேசியவனை கரிசனையாக பார்த்தவள் தனக்கு தெரியும் என்பது போல முறுவலித்தாள்.

“அதை விடு, நீ என்னோட பர்மிஷன் இல்லாம என்னை எப்டி கிஸ் பண்ணலாம்? யார் குடுத்தா இந்த தைரியத்தை? ஒரு சாரி கூட கேட்கலையே என்கிட்ட?...” ஷக்தியை கலகலப்பாக்க அவனின் ஏக்கத்தை தவிர்க்கும் பொருட்டு பேச்சை மாற்றி மல்லுக்கு நின்றாள்.

“எதுக்கு மேடம் சாரி கேட்கனும்? நான் உன்னோட ஹஸ்பண்ட். கிஸ் மட்டுமில்லை அதுக்கு மேலயும் போவேன். அது என்னோட ரைட்ஸ்...” என்றவனை “அப்படியா...” என்பது போல பார்த்தாள்.

“அதுமட்டுமில்லை மேடம். என் வொய்ப் சொல்லிருக்கா. அவங்கவங்க உரிமையை எதுக்காகவும் விட்டுகொடுக்க கூடாதுன்னு. அவளோட பேச்சை மீறலாமா?...” விஷமமாக அவளை பார்த்து கண்ணடித்து,

“ஒன்ஸ்மோர் ரிகர்சல் பார்க்கலாமாடா தேனு?...” என்பவனை பார்த்து புன்னகைத்தவள்,

“தாராளமா, மாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே. கமான் கௌரவ்...” அவனின் தோளில் தன் பூங்கரங்களை மாலையாக்கி சட்டென அவனை இழுத்துவிட்டாள். ஷக்தி இலகுவாக நின்றிருந்ததால் திடீரென இழுத்ததும் ஹர்ஷூவை ஒட்டிகொண்டான்.

“நீயெல்லாம் பொண்ணாடி? ராட்சசி, இப்படி போட்டு என்னை ஆட்டிப்படைக்கிறையே?...” என பொருமியவனின் முகத்தில் கிஞ்சித்தும் கோவமில்லை. மாறாக அவள் மீதான மையல் இருந்தது.

அவனின் மையல் பார்வையில் மனம் மயங்கியவளை கண்டு ரசித்தவன், “சரி ரொம்ப நேரமா வெளில நிக்கிறோம். பனி கொட்டுது பாரு. வா தூங்கலாம்...”

குறும்பு கூத்தாடும் விழிகளோடு, “ரிகர்சல் பார்க்கலையா கௌரவ்?...” அவனை போலவே கண்ணடித்து கேட்க,

தன்னை வம்பிளுக்கவே அவ்வாறு செய்கிறாள் என புரிந்தவனாக, “பார்க்கலாமே? ஆனா ஒண்ணு. இப்போ பார்க்க போற ரிகர்சல் வெறும் முத்தத்துக்கு மட்டுமே இருக்காதுடா தேனு. அதுக்கும் மேல போகும். எப்படி வசதி?... ஓகே வா?...” இன்னும் நெருக்கமாக நின்று அவளிடம் வம்பு வளர்க்க அவனையே ஆழ்ந்து பார்த்திருந்தாள் ஹர்ஷிவ்தா.

இதழ்கள் சிரிப்பில் துடிக்க, “கௌரவ் இந்த ஜென்மத்துல நீ குடும்பஸ்தன் ஆகபோறது இல்லை. ஐ மீன் அப்பா ஆகபோறது இல்லைனு சொன்னேன். தொட்டதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுட்டு நிக்கிற நீ தேறாத கேஸ். இன்னும் வளரனும் தம்பி. போ போ போய் தூங்குற வேலையாச்சும் உருப்படியா செய்...” என அவனை கலாய்த்து விட்டு போய் இழுத்து போர்த்தி படுத்துவிட்டாள்.

அவளின் கிண்டல் பேச்சை ரசித்தவன் அவளருகே படுத்துக்கொண்டே, “ என்ன பேச்சு பேசறடா தேனு?... உனக்கு இந்த வாய் மட்டும் இல்லைனா?...” என்றவனை முடிக்க விடாமல்,

“உனக்கு வெறும் வாய் மட்டும் தான் கௌரவ். செயல்ல ஒன்னும் காணோம். எப்போ பாரு பேசிட்டே இருக்கிறது...” என மனைவியவள் அலுத்துக்கொள்ள,

“கொஞ்சமாவது வெக்கம், கூச்சம் எதாச்சும் இருக்கா உன்கிட்ட?...”

“என்னோட புருஷன் கிட்ட பேச நான் எதுக்கு கூச்சபடனும்? வெட்கப்படனும்?. அதுக்கெல்லாம் வேற ஆளை பாரு. உங்ககிட்ட நான் பேசாம வேற யாரு பேசுவா? இல்லை பேசிறத்தான் விட்ருவேனா?...” ஹர்ஷூவின் பேச்சில் ஷக்திக்கு இதயம் முழுவதும் ஜில்லென்ற உணர்வு பரவியது.

“ஸ்வீட் இம்சை. எதாச்சும் சொல்ல வந்தா பேச விடறியா நீ?...” அவளின் மூக்கை பிடித்து ஆட்டிக்கொண்டே.

“அதைத்தானே இப்போ வரைக்கும் செய்துட்டு இருக்க. சொல்லேன்...”

“இன்னும் ரெண்டு நாள்ல நான் ஆபீஸ் போக ஆரம்பிக்கனும்டா...”

“அதுக்கு ஏன் அழற குழந்தை ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிற மாதிரி இப்டி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு சொல்ற?, ஆபீஸ் தானே தாராளமா போய்ட்டு வா...”

“கொஞ்சமாச்சும் புருஷனை பிரிஞ்சு இருக்கனுமேன்னு கவலை இருக்குதா பாரு ராட்சஸி, ராட்சஸி...” முணுமுணுப்பாக கூறினாலும் அவளின் காதிலும் விழத்தான் செய்தது.

“நீ என்ன நாடு விட்டு நாடா போக போற? இவ்வளோ அலுத்துக்கற? இதுல நான் பீல் பண்ண வேற செய்யனுமாக்கும்?...”

“உன்கிட்ட எதிர்பார்த்தேன் பாரு, எனக்கு தேவைதான்...” என ஷக்தி தலையில் அடித்துக்கொள்ள,

“இதைத்தான் பேசனும்னு சொன்னியா?...”

“இல்லை, இந்த வீக் என்ட் என்னோட வொர்க் பன்ற ஆபீஸ் ஸ்டாப்ஸ், அன்ட் ப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் ஹோட்டல்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன்...”

“வாவ் சூப்பர் கௌரவ். போகலாமே...” என உற்சாக குரலில் கூவவும் ஷக்திக்கோ,

“நல்ல வேலை என்னை கேட்காம ஏன் அரேஞ்ச் பண்ணின”... அப்டின்னு கேட்காம விட்டாளே என்று நிம்மதியாக இருந்தது.

அதன் பின் சிறிது நேரம் ஷக்தி தன்னுடைய அலுவலகம் பற்றியும் அங்கிருப்பவர்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருக்க அதற்கு “ம்ம்” கொட்டிகொண்டிருந்த ஹர்ஷூவோ எந்நேரம் உறக்கத்தின் பிடிக்குள் சென்றாளோ அவளே அறியாள்.

இரவின் மெல்லிய வெளிச்சத்தில் எந்தவிதமான ஒப்பனையும் இன்றி தன் கைவளைவிற்குள் கட்டுண்டு துயில்கொண்டிருப்பவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

“எப்படி உங்ககிட்ட விழுந்தேன்னு தெரியலைடா தேனு. உன்னோட அடாவடித்தனமும், திமிரும் எனக்கு ஏன் அவ்வளவு பிடித்தமானதா இருக்குதுன்னு இப்போ வரைக்கும் எனக்கு பிடிபடலை. உன்னோட அசட்டு தைரியமும், ஓவர் கான்பிடன்ஸ் இதெல்லாம் எனக்கு கவலையை, பயத்தை தான் குடுக்குது. ஆனாலும் ஐ லவ் யூடா தேனு...”

அவளின் உறக்கம் கலையாமல் மென்மையாக மீண்டும் அவளின் இதழோடு தன் இதழ்களை உறவாடவிட்டவன் நொடியில் விலகியும் விட்டான்.

“ஹ்ம், உன் பக்கத்துல இருந்தா என்னோட கண்ட்ரோல்ல நானே இல்லை. எவ்வளோ நாள் தான் சமாளிக்க?...” புலம்பிக்கொண்டே உறங்க எத்தனிக்க,

“ஹ்ம் ஐ லவ் யூ கூட நான் தூங்கினதுக்கு அப்பறமாதான் சொல்லுவியா கௌரவ். இப்படி ஒரு பயந்த கோழியா நீ? கிஸ் கூட பால்கனில குடுத்தது போல ஸ்ட்ராங் இல்லை. பச்...” அரைத்தூக்கத்தில் பேசியவளை கண்டு திகைத்தவன்,

“இன்னும் தூங்கலையா நீ?...” விரிந்த புன்னகையோடு வினவியவனை அரைக்கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள்,

“தூக்கத்துல கூட நான் அலார்ட்டா இருப்பேனாக்கும். டிஸ்டர்ப் செய்யாம தூங்கு கௌரவ்...” மெல்லிய சிணுங்கலோடு இன்னும் அவனை ஒண்டி கொண்டவள் அவனின் மார்பில் தலைவைத்து சுகமாக உறக்கத்தை தொடர ஆரம்பித்தாள்.

“உனக்கு இனி தினமும் சத்திய சோதனைடா ஷக்தி...” என புலம்பியபடி தானும் தன்னவளோடு தூக்கத்தை அணைத்துக்கொண்டான்.


--------------------------------------------------------------

திருவேங்கடமும் புருஷோத்தமனும் தொழிலில் ஆரம்பித்து இன்றைய அரசியல் வரை பல விஷயங்களை அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கே சுற்றி இங்கே சுற்றி பேச்சு ஹர்ஷிதாவின் நடவடிக்கைகள் பற்றி வந்து நின்றது.

“ஏண்டா திரு நம்ம ஹர்ஷூ எதனால இப்படி கல்யாண விஷயம்னாலே வெறுக்கிறா? நம்ம ப்ருத்வி விஷயத்துல கூட தயவு தாட்சண்யம் இல்லாம நடந்திருக்கா. நிச்சயமா இதன் பின்னணில எதாச்சும் இருக்கும். அது உனக்கு தெரியாமலும் இருக்காது. என்னனு எனக்கு தெரிஞ்சிக்கனும். ஈஷ்வர்கிட்ட என்னால இதை கேட்க முடியாது. அதான் உன்னை கேட்கிறேன்...”

அவரின் பார்வையே இப்போது இதற்கான காரணத்தை நீ சொல்லியே ஆகவேண்டும் என்பது போல இருந்தது. திருவேங்கடத்திற்கோ தர்மசங்கடமாக போய்விட்டது.

இனியும் மறைக்க எதுவும் இல்லை என எண்ணியவராக, “அது வந்துடா சோமா...” அவரை தடுக்கவென அங்கே வந்து சேர்ந்த சகுந்தலா திருவேங்கடத்திடம் எச்சரிக்கை பார்வையொன்றை வீசியவர்,

“நானே சொல்றேண்ணே, இதை சொல்றதுல என்ன தயக்கம்? மருமக மேல உங்களுக்கு இருக்கிற அக்கறையில தானே கேட்கறீங்க. இந்த காலத்து பிள்ளைங்களே அப்படித்தான் அண்ணா. உங்களுக்கு தெரியாததா? இப்போ உள்ள சமூகம் எந்தளவு சீரழிவை நோக்கி போய்ட்டு இருக்குன்னு. ஏமாற்றம், பித்தலாட்டம்னு நிறைய விஷயங்களை சொல்லிட்டே போகலாம். பேப்பரை பார்த்தாலே எத்தனை விதமான நியூஸ் நமக்கே நெஞ்சை கொதிக்க வைக்குது. இதுங்க இளரத்தம்...”

“நம்ம ஹர்ஷூ இருக்காளே, எப்போவும் எதாச்சும் வித்யாசமா செஞ்சிட்டேயிருப்பா. ஒரு திரில்லுக்காக துணிச்சலா எதையாச்சும் செஞ்சிட்டு வந்து நிப்பா. அதுங்களுக்கு இது ஒரு ஃபேஷன் போல ஆகிடுச்சு. சின்னப்பிள்ளைங்க கொஞ்ச நாள் அப்டித்தான் இருக்கும்ங்க. இப்போ நம்ம ஹர்ஷூவே குடும்பம்னு ஒரு வட்டத்துக்குள்ள வந்துட்டா. இனிமே சரியா இருப்பா அண்ணா. நீங்க கவலை படாம போய் தூங்குங்க. மணி ஆகிடுச்சு...”

திருவேங்கடத்தின் பக்கம் திரும்பியவர் கண்டிப்பான பார்வையோடு, “உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா? இன்னைக்கு எவ்வளோ வேலை நடந்திருக்கு. போய் படுங்க. நாளைக்கு பேசிக்கலாம். கதை பேச ரெண்டு பேரும் நல்ல நேரம் பார்த்தீங்க போங்க. மாத்திரை சாப்பிடனும்ன்ற நினைப்பில்லாம...”

புருஷோத்தமன் எங்கே வேறு எதையும் கேட்டுவிடுவாரோ என்ற படபடப்பில் கணவனை இழுத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி வந்துவிட்டார் சகுந்தலா.
 
Top