Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oru Cindrella Kathai 8 by Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 8 பொண்ணு பார்த்துட்டு வந்தோம் என்று ரவி கூறியதில் நிறைய குழம்பிப் போன செளமி, கொஞ்சமும் யோசிக்காமல், “ஓ, யாருக்கு?” என்று கேட்டுவிட்டு, தன் நாவைக் கடித்துக் கொண்டாள் செளமி. “என்னங்க யாருக்குன்னு கேட்டுட்டீங்க? எனக்குத் தான். “ என்றான் சிரிப்புடன், நல்ல வேளையாக இவள் லூசுத்தனமாகக் கேட்டதைப் பொருட்படுத்தாமல். “சாரிங்க ரவி.  என்னவோ நியாபகத்தில யாருக்குன்னு கேட்டுட்டேன். பொண்ணு பிடிச்சிருக்குங்களா?” என்று தன் தவறை மறைக்க, பொய்யான மகிழ்ச்சியுடன் வினவினாள் செளமியா. […]

Readmore

Oru Cindrella Kathai 7 By Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 7 ரவியின் பதட்டமான அக்கறை கலந்த பேச்சைக் கேட்ட செளமிக்கு அவனிடம் அதற்கு மேலே எரிந்து விழுகத் தோன்றவில்லை. அதிலும், அவன் குரலில் தென்பட்ட உண்மையான பதட்டம் கண்டு அவளுக்கு வியப்பே உண்டாயிற்று. “அட, நாம பிராப்ளம்னு மெசேஜ் பண்ணதுனால பதட்டத்துல கால் பண்ணிட்டான் போலயே! சே, அதுகுள்ள எப்படி திட்டிட்டோம்” என்று தன் மீதே பழியைத் தூக்கித் தானாகப் போட்டுக் கொண்டாள் செளமி. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. மறுமுனையில் ரவீந்திரனின் பேச்சும், […]

Readmore

Oru Cindrella Kathai 6 By Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 6 செளமி அந்த முகப்புத்தக நட்பு அழைப்பை ஏற்றுக் கொண்ட அடுத்த நொடியே, அவனிடமிருந்து “நன்றி” செய்திகள் வரத் துவங்கியிருந்தன. இது போல ஏதேணும் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த செளமிக்கு அவனது விளையாட்டுத்தனம் கண்டு மனதில் ஒரு சிரிப்பு எழுந்தது. முகப்புத்தகத்தில் முன்னர் அவள் பதிவிட்டிருந்த பல புகைப்படங்களுக்குத் தாராளமாக லைக் மற்றும் இதய சமிக்கைகள் வாரி வழங்கியிருந்தான். இவள் பள்ளியில் இறுதியாண்டு பிரிவு உபச்சார விழாவிற்கு முதல் முறையாக அம்மாவின் நீல […]

Readmore

Oru Cindrella Kathai 5 By Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 5 திருவண்ணாமலை கோவிலில் செளமியாவைப் பார்த்துவிட்டு திண்டிவனம் வந்து சேர்ந்த ரவீந்திரன், சற்றே குழம்பிப் போய் தான் காணப்பட்டான். அவன் எண்ணவோட்டம் குறித்து அவனுக்குச் சற்றே கவலை கூட ஏற்பட்டது எனலாம். அவனுக்குப் பிடிக்காத செயல்கள் நடைபெறும் போது வழக்கமாக அவன் அச்செயலையோ, அச்செயல் செய்யும் நபரின் பேரிலோ துவேஷம் கொள்வான். தன்னை வேண்டாம் என்று மறுத்த செளமியாவைக் கண்ட போது, அவனுள் அமிழ்ந்திருந்த வெறுப்பு மேலோங்கி அவளைப் பேச்சால் காயப்படுத்தியிருந்தது. “இவ […]

Readmore

Oru Cindrella Kathai 4 by Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 4 “இதென்னடி கூத்தா இருக்கு? நம்ம ரவிய கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த பொண்ணு சொல்லிட்டாளாமே? இதுக்குத்தான் நான் ஆலாய்ப் பறந்தேன். நம்ம அபியவே ரவிக்கு குடுக்கறேன்னு. என் பேச்சை இங்க யாரு கேட்கறா” என்று தன் வெங்கலக் குரலால் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் சேதி சொல்லிவிட வேண்டும் என்பற்காகவே சத்தமாக பேசினார் மரகதம். ஹாலில் அமர்ந்திருந்த ரவீந்திரன், மரகதம் வந்த உடனேயே, எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டான். அடுக்களையில் […]

Readmore

Oru Cindrella Kadhai 3 By Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 3 ரவியின் நடவடிக்கைகளோ, செயலோ, பார்வையோ எதுவோ ஒன்று மனதில் நெருடலைத் தோற்றுவித்திருக்க, வீட்டினரின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற யோசனையிலேயே ஆழ்ந்திருந்தாள் செளமியா. இரண்டு நாட்களில் கலந்து பேசிவிட்டு பதில் சொல்கிறோம் என்று கூறிச் சென்றிருந்த மாப்பிள்ளை வீட்டார், அடுத்த தினமே, பெண் பிடித்திருக்கிறது, மேற்கொண்ட பேச நல்ல நாள் பார்த்து வருகிறோம் என்று செய்தி சொல்லியிருந்தனர். அந்த தின மாலையும், செளமியின் தாய் கலாவதி, இவளது சம்மதத்தைப் […]

Readmore

ஒரு சிண்ட்ரெல்லா கதை 2 By Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை 2 மாப்பிள்ளை வீட்டார் விடை பெற்றுச் சென்றிருக்க, மீதமிருந்த பஜ்ஜிகளையும் முருக்கையும் தட்டில் கொட்டிக் கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தார் செளமியின் தாய் கலாவதி. செளமியின் தந்தை சின்னசாமி, ஆர்வமாக பஜ்ஜியை எடுத்து வாயில் வைத்தார். மறு பஜ்ஜியை எடுக்க அவர் கைகள் நகர, பஜ்ஜி தட்டை தூர நகர்த்தி வைத்தார் கலாவதி. “ஒண்ணு போதும். எண்ணெய் பலகாரம் உங்களுக்கு ஒத்துக்காது. ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம் இருக்கு. வாயை கட்டுப்படுந்துங்க மொதல்ல” “இன்னொரு […]

Readmore

ஒரு சிண்ட்ரெல்லா கதை – 1 By Aruna Kathir

ஒரு சிண்ட்ரெல்லா கதை – 1   “மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாரி நான் வந்து வந்து போவேண்டா வெள்ளி செவ்வா தேதி” என்று சற்றே ஹை டெசிபலில் ஒலித்த பாடல், அந்த வாடகை இன்னோவா காரினுள் கசிந்தது. இசையின் ஓசை தன் இனிய குரலின் சப்தத்தை மட்டுப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், ஓட்டுனரின் அருகே அமர்ந்திருந்த மரகதம், “தம்பி அந்த பாட்டை கொஞ்ச மெதுவா வைப்பா” என்று கூறிவிட்டு, தன் முழு உடலையும் பின்னால் திரும்பும் […]

Readmore

கடம்பன் குன்று 8

கடம்பன் குன்று – 8   மன்னர் நெடுவேள் ஆவி அர்த்தமான புன்னகையுடன் அங்கயற்கண்ணியின் நாட்டியத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தார். அவரது இடது பக்கவாட்டில் அமர்ந்திருந்த ராணி பவித்ரமங்களாம்பிகை தனது எண்ண ஓட்டத்தை முற்றிலுமாக முகத்திரை இட்டு மறைத்துக் கொண்டவள், எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாது அமைதியாக உடன் அமர்ந்திருந்தாள். மங்களாம்பிகை முகம் உணர்ச்சிகள் தொலைத்திருந்த பொதிலும், மனமொ எரிமலை குமிழ் போல கொதித்துக் கொண்டிருந்தது. “இவள் என்ன ஊரில் இல்லாத அழகியா? நாட்டில் எத்தனை தேவதாசிகள் நடனம் […]

Readmore

கடம்பன் குன்று 7

கடம்பன் குன்று – 7   விகர்ணனின் உயிர் அவன் உடலை விட்டு நீங்கிய நொடி, தன் எஜமானர் புலிப்பாணி சித்தரின் காலடியில் அமர்ந்திருந்த புலியார் ஒரு சின்ன திடுக்கிடலுடன் எழுந்து கொண்டார். “விகர்ணா!இப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டாயே. உன் உயிரினை எடுத்த பாவத்தினை நான் ஏற்பது போல் ஆகிவிட்டதே” என்று எண்ணிய புலியார் சஞ்சலத்துடன் தன் குருநாதரை ஏறிட்டார். தன் ஆத்ம சீடனின் மனக் கவலையை உணர்ந்த புலிப்பாணி சித்தர், புலியாரின் கவலைப் போக்க எண்ணினார். […]

Readmore