Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் 18.2

  ஆறுச்சாமியின் கண் முன்னரே நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்திருந்தார் வேலுச்சாமி. கைகளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைய ஒரு கார் வசதி கூட இல்லை. பேருந்தும் அந்நேரத்திற்கு இல்லை. உடனே விக்ரமனிற்கு அழைத்து விரைந்து வீடு வருமாறு சொல்ல,   “எனக்கு ஏதாவது ஆனா விக்ரமனை விட்டுடாத டா. அவன் உன்ர பொறுப்பு ஆறுச்சாமி” என நண்பனின் கையை பிடித்துக்கொண்டு கேட்க, கண்களில் நீர் பெருகியது ஆறுச்சாமிக்கு.   “என்னடா ஏதேதோ பேசுற? உனக்கு ஒன்னும் ஆகாது. […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் 18.1

மண்வாசம் 18 :   ஏமாற்றம், வெறுமை, தோல்வி, எதிர்பார்ப்பு என அவரவர் ஒரு உணர்வை உள்ளத்தில் சுமக்க, அவர்களை சுமந்து கடந்தது காலம்.   ஆறுச்சாமியும் முத்துச்சாமியும் ஊரார் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து அழைத்துக் கொண்டிருந்தனர்.   அருந்தமிழுக்கும் அரும்புக்கும் ஒரே நாளில் திருமணம் என்றிருக்க, ஊரில் உள்ள பெரிய வீடுகளில் ஒரே நேரத்தில் விசேசம் வந்ததில் எங்கு செல்வதென்று உற்றார் உறவினர் தான் புலம்பலுக்கு ஆளாகினர்.   இரு வீட்டிலும் மாங்கல்யத்திற்கு பொன் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 17.2

  குலசேகரன் அமைதியாய் இருக்க அரும்பிற்குள் பல சூறாவளிகள் சுழன்று கொண்டிருந்தன.   “நான் ஒன்னும் என்ர சுயநலத்துக்காக உன்னைய கட்டாயப் படுத்தல மாமா. உனக்கு என்னைய எந்த அளவுக்கு பிடிக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆத்துல விழுந்தப்போ நீ துடிச்சதெல்லாம் பாத்துட்டு தானே இருந்தேன்” என்றதும்   “எதைய எதோட முடிச்சு போடற” நெற்றியில் அறைந்து கொண்டான்.   “நான் முடிச்சு போடல. உன்னைய உரிமையா வந்து என்ர கழுத்துல முடிச்சு போடத்தேன் சொல்லுறேன். கண்ண […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 17.1

மண்வாசம் 17 :   நான்கு நாட்கள் கடந்திருக்க, வெளியே செல்வதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள் அரும்பு. அவளையே பார்த்தபடி வெற்றிலையைத் தட்டி வாயில் போட்டார் வேலாத்தாள்.   “நம்மூட்டு கல்யாண பத்திரிக்கை அச்சடிக்க கொடுக்க சரிபாத்து வாங்கியாறச் சொன்னாருங் ஆத்தா நம்ம முத்துச்சாமி மாமன்” என்றுவந்து நின்றான் மைக் மாரிமுத்து.   அதில் அரும்பு ஒரு நொடி வாசலைப் பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். பின் மரகதம் வந்து அதை வாங்கிப் பார்க்க, அவரை […]

Readmore

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 20.2

இரு தினங்கள் முன்பு நடந்த இந்த கூத்தை நினைத்துப்பார்த்த லட்சுமிக்கு தெய்வானை மட்டும் இல்லை என்றால் என்ன செய்திருப்போம் நாம்? என வியப்பாய் இருந்தது.   எப்படி எல்லாம் அழகாய் நொடியில் திட்டம் போட்டு காரியத்தை நடத்தியும் காட்டிவிட்டார் என எண்ணி எண்ணி வியப்பில் மாய்ந்து போனார் லட்சுமி.   “என்ன லட்சுமி, சிலையா நிக்குற?” என அவரை உலுக்கிய தெய்வா, “இந்த புடவைக்கு, நான் போட்டுருக்க ரூபி செட் ஜுவல் மேட்சா இருக்கான்னு சொல்லு” என்றார் […]

Readmore

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 20.1

கலாட்டா 20   இரண்டு நாளும் இரண்டு மணித்துளிகள் போல அதிவேகமாய் கடந்து போயின. ராஜகோபால் அவரது தொழில்முறை சுற்றத்தாருக்கு ‘பிசினஸ் கிளப்’பில் ‘பொது அழைப்பு’ கொடுத்துவிட, அதுத்தாண்டிய பலருக்கு முடிந்த வரை நேரிலும், முடியாத பட்சத்தில் அலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார்.   விழா காரியங்களை முன்னே நின்று கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டிருந்தார் ஜெயதேவ். ராஜகோபாலுக்கு எந்த வேலையும் வைக்காமல், அவரே எல்லாம் செய்ய, இருந்த இரு நாட்களை ‘அழைப்பு விடுக்க’ நிம்மதியாய் பயன்படுத்தினார் ராஜகோபால்.   […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 16.2

  தட்..!   எதுவோ கீழே விழுந்து சிதறிய சத்தம் கேட்க, உடனே அத்திசையில் திரும்பிப் பார்த்தான் விக்ரமன்.   அங்கோ களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணங்கள் பூசி அழகாய் காட்சியளித்த பசுவின் சிலையானது உடைந்து இரு துண்டாகிக் கிடக்க, அதையே பார்த்தபடி நின்றிருந்தாள் வேங்கையரசி.   சத்தம் கேட்டு அங்கு வந்த நாயகி கீழே கிடந்ததையும் தன் சின்னப் பேத்தியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,   “இதையும் போட்டு ஒடச்சுப்புட்டியா? எத்தனை தடவ சொன்னாலும் உனக்கு சூதானங்கறது […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 16.1

மண்வாசம் 16 :   தென்றலாய் வருடிக் கொண்டிருந்த காற்று இப்போது தன் வேகத்தைக் கூட்ட அதன் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாது தன் மென் பூக்களை மண் நோக்கி உதிர்த்தது சரக்கொன்றை மரம்.   மண்ணில் உதிர்ந்த மலர்களெல்லாம் மாறனின் பாதத்தை தொட்டபடி கடந்து செல்ல அவன் மனமும் கடந்த நாட்களை எண்ணிப் பார்த்தது.   காதல் அவனுள்ளே வந்த நேரம் அவன் என்னதாய் உணர்ந்தானோ அதனினும் அதிகமாய் அவன் அகம் நிறைந்து போயிருந்தது தமிழின் […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 15.2

  கண்முன்னே நிகழ்ந்தேறிக் கொண்டிருந்த அந்த எதிர்பாராத நிச்சயதார்த்த நிகழ்வால் திடீரென சுவாசம் தடைபட்டது போல் இருந்தது அரசிக்கு.   என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாது நின்றிருந்தாலும் கண்கள் சரிவர அக்காட்சியை படம் பிடித்து மூளைக்கு அனுப்பி இன்னதென்று அவளை உணரச் செய்தது.   அருந்தமிழ் தேவியும், விக்ரம பாண்டியனும் பெரியோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள, அவர்களை ஆசீர்வதித்த அனைவரும் ஆனந்தம் கொண்டிருந்தனர்.   “அட சின்னக் குட்டி வந்துட்டியா?” என்ற நாயகியின் குரலில் அனைவரது […]

Readmore

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 15.1

மண்வாசம் 15 :   சூரியக் கதிர்கள் மறைந்து சந்திரக் கதிர்கள் தோன்றிய வேளை!   அந்த நிலவின் குளுமையும் பிரகாசமும் அரசியிடமும் இருந்தது. உடன் கொஞ்சமாய் அல்ல, நிறையவே சந்தோஷமும் இருந்தது.       “இனி நீ உங்க ஊர்லையே சார்ஜ் எடுத்துக்கலாம். இப்போ சந்தோசமா மா?”   “தேங்க்ஸ் அங்கிள். இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்” என தென்றலது தந்தையின் பாதம் பணிந்து ஆசி பெற்றுக்கொண்டாள் அரசி.   “சொந்த நாட்டுல படிச்சிட்டு […]

Readmore