Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto’s Interstellar Kaadhal Episode 16

அத்தியாயம் – 16 பொசய்டனின் நினைவுகளுள் சென்று, கயா கிரகத்தினருக்கு எப்படி மற்ற உயிரினங்களை விட அதிக சக்திகள் கிடைத்தது என்று அறிந்துகொண்ட அவர்கள் மூவருக்கும், அந்தச் சிறு விதையான பிரச்சனை என்னவென்று நன்றாகவே புரிந்தது.   “இது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். நம்முடைய அரிய கண்டுபிடிப்பை, அந்தக் கண்டுபிடிப்பிற்கான பலனைச் சம்பந்தமே இல்லாதவர்களுடன் பகிரச் சொன்னால் கோபம் வருவது இயல்பான விஷயம் தான். ஆனால் செலினாவின் இடத்திலிருந்து பார்க்கும்போது, அது தான் சரியான முடிவு. ஏனென்றால் […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 15

அத்தியாயம் – 15 வாழ்க்கை நாம் அனைவரும் இந்தக் கேள்வியை ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் சிந்தித்து இருப்போம்.    அந்தக் கேள்வி, “நாம் ஏன் வாழ்கிறோம் ? இந்த வாழ்க்கையில் என்ன பயன் இருக்கின்றது ?” என்பது தான். ஆனால், இதை நாம் உணர்வுப்பூர்வமாகத் தான் யோசித்து இருப்போம்.    இதை ஏன் அறிவியல் மூலமாக யோசிக்கக் கூடாது ? இந்தக் கேள்வியை ஓர் இறை நம்பிக்கை உடையவரிடம் கேட்டால், “நாம் அனைவரும் […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 14

அத்தியாயம் – 14 அந்தி வானம் சிவந்திருக்க… வானத்தில் சில மீன்கள் மட்டும் நீந்தாமல் ஒரே இடத்தில் அசையாமல் நின்று இருந்தன. அந்த மாலை நேர சூழல் மனதுக்கு இதம் அளிப்பதாக இருந்தது. நந்தினியின் வீட்டில் பொசய்டன் தரைதளத்தில் மற்ற குடும்பத்தினர் அனைவரையும் அமர வைத்து, அவர்களது நினைவுகளை மாற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இருபத்தி எட்டு ஆண்டு கால நினைவுகளை அவர் மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். மாடியில் நந்தினி தனக்கு தேவையான பொருட்களை […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 13

அத்தியாயம் – 13    அங்கு ஒரு அசாதாரண நிசப்தம் குடிகொண்டிருந்தது. ஆனால், இயற்கை என்ற பெயரை உடைய காரிகையின் அணிகலன்களான மரங்கள் தங்கள் போக்கில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. அவளின் மகவுகளான விலங்குகள் மற்றும் புள்ளினங்கள் அவளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். பொசய்டன், நந்தினி தான், இந்தப் பிரச்சினையின் தீர்வு என்று கூறியவுடன், அனைவர் மனதிலும் பெரும் பாரம் ஏறியது போல் இருந்தது. அவர் கூறியதை கிரகிக்கவே, சில நொடிகள் தேவைப்பட்டன அவர்களுக்கு. பொசய்டன், “இந்த பிரபஞ்சத்தோட […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 12

அத்தியாயம் – 12  மனதில் பட்டாம்பூச்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து புல் இனங்களும் சிறகை விரித்துப் பறந்தன.  மூளை தன் பங்கிற்கு ஹைபோத்தலாமஸை தூண்டிவிட்டு, காதல் ஹார்மோனை சுரந்தது. முதல் முறையாக அறிவும், மனமும் ஒருங்கே செயல்பட, எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் வெளிவரத் தொடங்கின.  தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த நந்தினியைக் கண்டதும், அவளுக்கு ரோஜா மலர் பிடிக்காது என்பதையும், புத்தகங்கள் தான் பிடிக்கும் என்பதையும் அறிந்து இருந்ததால், தன் கையில் இருந்த புத்தகத்தை ஒருமுறை சரி பார்த்தான். ‘காதல் […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 11

அத்தியாயம் – 11 கனவுகள் “The dream is the (disguised) fulfillment of a (suppressed, repressed) wish.” ― Sigmund Freud கனவுகள்… கடவுளின் படைப்பில் மற்றொரு பிரம்மாண்டம். இந்த ஒற்றை வார்த்தைக்குள் எத்தனை பெரிய சக்தி அடங்கி உள்ளது. இதில் இரண்டு வகைகள். ஒன்று நாம் தூங்கும்போது வருவது. மற்றொன்று நாம் நமது சுய நினைவில் இருக்கும்போதே வருவது. ஆனால், பிந்தயதை நாம் எண்ணங்கள் என்ற பெயரில் ஒதுக்கி விடுவோம். கனவுகளை அறிவியல் மூலம் […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 10

அத்தியாயம் – 10 நினைவுத் துணுக்கு – 1 “டேய் மச்சான், இன்னைக்காச்சும் அந்த பொண்ணுகிட்ட உன் லவ்வ சொல்லுடா. இதோட நாலு மாசமாச்சுடா. நாமளும் தினமும் இந்த காலேஜ் வாசல்ல வந்து நிக்கிறோம். இப்படியே போச்சு, எனக்கு இங்கேயே ஒரு கடை வச்சிக் குடுத்துருடா. சும்மா இருக்கிறதுக்கு பொழுதாவது போகும்” என்று தினமும் பாடும் திருப்பள்ளி எழுச்சியைப் பாடி கொண்டிருந்தான் சுதாகர்.  வழக்கம் போல அதை தூசு தட்டுவது போல தட்டி விட்டு நின்று கொண்டிருந்தான் […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 9

அத்தியாயம் – 9 பரிணாம வளர்ச்சி – Cont.,   மனிதன் எவ்வளவு தான் அறிவியலில் முன்னேறியிருந்தாலும் அவனால் இயற்கையையும் அதன் பராக்கிரமத்தையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இயற்கையின் அப்படி ஒரு படைப்பு தான் பரிணாம வளர்ச்சி. அதனுடைய பிரபாவத்தில் நாம் இன்னும் பாதியைக் கூட உணரவில்லை. மரம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அதற்கு அதனுடைய வேர் தானே முக்கியம். அது போல் தான் பரிணாம வளர்ச்சியும். இதன் தாக்கத்தை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் கூட பார்க்கலாம். […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 8

அத்தியாயம் – 8  அந்த இடத்தின் அமைதியைத் துரத்தும் வண்ணம், ஆதித்யன், “அத்தை எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும்” என்றான்.  ஸ்ரீநிவாசனும் சிவகாமியும், அவனை அதிர்ச்சியோடு பார்க்க ஸ்ரீதர், அவனிடம் வேகமாக வந்து, “ஆதி, சொல்லுப்பா … என் தங்கச்சி எங்க இருக்குறா ? எப்படி இருக்குறா ?” என்று உலுக்கினார். ஆதித்யன் எதுவும் பேசாமல், தன் திறன் பேசியைத் திறந்து அவரிடம் காண்பித்தான். அதைப் பார்த்ததும் அவர் கண்களில் நீர் பெருகியது. உடனே அதை, தனது […]

Readmore

Vinto’s Interstellar Kaadhal Episode 7

அத்தியாயம் – 7   அந்த இரவு நேரத்தில் வானத்தில் இருந்த விண்மீன்களுக்கும் நிலவுக்கும் போட்டியாக அந்தச் செயற்கை பறவை பறந்து கொண்டிருந்தது. அது சேர வேண்டிய இடம் வந்ததும் அது மெல்ல மெல்லத் தனது இறக்கைகளைத் திருப்பி சிறிது தூரம் ஓடி நின்று, தனது வேகத்தைக் கட்டுப்படுத்தியது.  அந்தப் பறவையில் இருந்து, மக்கள் கூட்டம் சிறிது சிறிதாக இறங்கத் தொடங்கியது. அந்த இடம், சென்னை விமான நிலையம். பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்து தங்களுக்காகக் […]

Readmore