Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chinna Mookuthi Poo

சின்ன மூக்குத்தி பூ – 18 (1)

பூ – 18 சங்கரிடம் ஒருமுறை பேசியதோடு சரி. மீண்டும் பேசினால் ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு பிள்ளையோடு வேறிடம் சென்றுவிடுவேன் என்ற பின்னர் யாரும் அவனை வற்புறுத்தவில்லை. தேவகியின் வீட்டிற்கு இப்போதெல்லாம் அடிக்கடி சென்று வந்துகொண்டிருந்தார் சித்ரா. அபியின் இறப்பிற்கு பின் அந்த குடும்பத்திடம் அனைவருமே ஒட்டுதல் காட்ட அதற்கே தேவகி இன்னும் தள்ளித்தான் சென்றாள். வாசமல்லியிடம் மட்டும் பேசுபவள் ஆதவ்வை பற்றி வாசுவாக சொன்னால் கேட்டுக்கொள்வாள். தானாக எதையும் கேட்பதில்லை. இது வாசமல்லிக்கு பெரும் கவலையாக இருந்தது. […]


சின்ன மூக்குத்தி பூ – 17 (2)

“டாக்டர்ட்ட பேசு ஷ்ரவா, எனக்கு இங்க இருக்க முடியலை. நான் வீட்டுக்கு வரேன். இப்போ நான் ஓகே தானே? என்னால ஸ்டிக் வச்சு நடக்க முடியுதே…” “ஓகே, அத்தான் ஃபுல் செக்கப் பண்ணிடுவோம் இன்னைக்கு. அப்பறமா முடிவு பண்ணுவோம்…” “என்னடா ட்ரைவ் பண்ணும் போது கேர்லஸா நான் இருந்ததால இப்பவும் நான் சரியில்லைன்னு நினைக்கிறியா?…” என்று பல்லை கடித்த சங்கர் மகனை கண்கலங்க பார்த்தான். “முடியலடா. ஆதவ் இங்க வந்து இப்படி சுருண்டு படுத்துருக்கறதை பாரு. வீட்டுல […]


சின்ன மூக்குத்தி பூ – 17 (1)

பூ – 17 எல்லாம் கனவு போல நடந்து முடிந்து ஒருவாரம் ஆகிற்று. விபத்து முடிந்து இரு நாட்கள் சங்கர் கண் திறக்கவே இல்லை. ஆதவ்வை வைத்தே சடங்குகள் அனைத்தும் நடந்திருந்தனர். தலையிலும், வலது கையிலும் நல்ல அடியும், உடல் முழுவதும் உராய்வும் ஏற்பட்டிருக்க கால் பிசகி இருந்தது. இரு நாட்களுக்கு பின்னர் கண் விழித்ததும் அவன் முதலில் கேட்டது அபியை தான். யார் சொல்வது என்று தெரியாமல் விழித்து நிற்க அங்கே சங்கரின் தாய் மீண்டும் […]


சின்ன மூக்குத்தி பூ – 16 (2)

“காட்டுக்குள்ளையா இருக்க பயப்பட? நான் தான வண்டியை ஓட்டறேன். பின்னாடி சீட்டுல பிள்ளையோட உட்கார எல்லாம் பயந்தா பொழைப்பு ஓடின மாதிரி தான்…” என்றதும் மௌனமாக இருந்தவள், “நான் ஒன்னு சொன்னா என்னை தப்பான பொண்ணுன்னு நினைப்பீங்களா அத்தான்?…” என கேட்க அவளின் குரலே உடைந்து என்னவோ போல் இருந்தது அவனுக்கு. “வாசு என்னாச்சு? ஏன் அழற மாதிரி பேசற?…” என கேட்டவனின் கவனம் வெகு கவனமாய் சாலையில் தான் இருந்தது. “நான், நம்ம கல்யாணம். அதை […]


சின்ன மூக்குத்தி பூ – 16 (1)

பூ – 16 சங்கர் என்ன முடிவெடுப்பானோ என்று ஒருவருக்கும் தெரியவில்லை. விழித்தெழுந்த அபர்னிதா அனைவரும் இறுக்கமாக இருப்பதை பார்த்துவிட்டு, “மம்மி, இங்க கம்பர்டபிளா இல்ல. நான் உள்ள போறேன்…” என சொல்லி ஆதவ் இருக்கும் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள். “உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலைம்மா. இப்படி நம்ப வச்சு கழுத்தை அறுத்த மாதிரி செஞ்சிட்டியே…” என நீலகண்டன் அனுசுயாவிடம் கேட்க, “அண்ணா ஒரு அம்மாவா என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. புருஷனும் இல்லாம என் […]


சின்ன மூக்குத்தி பூ – 15 (2)

“எங்க இல்லை அவ? இங்க தான் இங்க இவருக்குள்ள தான் இப்பவும் இருக்கா…” என்று அவனிடம் கத்தியவள், “இவனோட நான் பேசமாட்டேன். யாரோடையும் பேசமாட்டேன். மம்மி நீ மட்டும் கேளு. கேட்பியா?…” என்றதும் கண்ணீருடன் தலையசைத்தார். “உட்காரு. கால் வலிக்கும்ல உனக்கு. உட்காரு…” என தாயை அமர செய்து அவரின் காலடியில் அமர்ந்துகொண்டாள். “தெரியட்டும் இவர் லட்சணம் என்னன்னு எல்லாருக்கும்…” என்றவள் சங்கரை பழி வெறியுடன் திரும்பி பார்த்தாள். “எனக்கு கூட கல்யாணம் வேண்டாம்னு தோணுச்சு. ஆனா […]


சின்ன மூக்குத்தி பூ – 15 (1)

பூ – 15 கோவிலில் இப்படி பிரச்சனை ஆனதும் பூஜை முடிந்து சித்ராவின் வீட்டிற்கு வந்தவர்கள் வந்த சில நிமிடங்கள் கூட அங்கே இருக்கவில்லை. உடனே கிளம்பினர். “ஒன்னும் சாப்பிடாமலா போவீங்க? பத்து நிமிசத்துல சாப்புட்டுட்டு கிளம்பறது தான? சங்கரு சித்தி சொல்லுதத கேளுப்பா…” என சித்ரா சொல்ல, “சித்தி ப்ளீஸ். சாப்பிட்டு போற அளவுக்கு பொறுமையும் இல்லை. எனக்கு மனநிலையும் இல்லை. கிளம்பறேன்…” என்றவன் மகனோடு வெளியேறிவிட்டான். கோவிலில் தூக்கிக்கொண்ட குழந்தையை அவன் இறக்கவே இல்லை. […]


சின்ன மூக்குத்தி பூ – 14 (2)

“ப்ச், அதுக்கென்ன? மிச்சத்தை செக்யூரிட்டிட்ட குடுத்துடலாம். எல்லாத்தையும் பேக் பண்ணு…” என சொல்லிவிட்டு வேகமாய் சாப்பிட்டவன் கிளம்பிக்கொண்டே அமலாவிற்கு அழைத்து தாங்கள் வருவதை பற்றி சொல்லிவிட்டு கிளம்பினான். இப்போதெல்லாம் வாசமல்லி ஓரளவு பழகி இருந்தாள் மலை பகுதி பயணத்திற்கு. பழக்கிவிட்டான் அவளை ஒருவழியாக்கி. எப்போதாவது தான் தலைசுற்றல் அப்படி என்று வரும். ஜீப்பில் கிளம்பிவிட செல்லும் வழி எங்கும் ஷ்ரவனுக்கு ஒரே யோசனை. அனுசுயா வருவதை பற்றி இன்னும் தாய்க்கு தெரியுமா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. ஆனால் […]


சின்ன மூக்குத்தி பூ – 14 (1)

பூ – 14 திடீரென்று சங்கர் வந்து நின்றதும் அபர்னிதா அவனை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் வாயடைத்து நிற்க, “நாளைக்கு கோவிலுக்கு போகனும். அதனால அபியை கூட்டிட்டு போகலாம்னு வந்திருக்கேன்…” என்று சங்கர் சொல்லவும் ஷ்ரவன் அழுத்தமாய் அபியை பார்த்தான். “நாளைக்கு தான் நாங்க வரப்போ கூட்டிட்டு வந்திருப்போம்ல அண்ணே. அத்தை போன போட்டு சொன்னாங்க மதினியை கூட்டிட்டு வர சொல்லி…” என வாசமல்லி சொல்லவும், “இருக்கட்டும்மா, எனக்கும் அங்க ஆதவ் இல்லாம ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் […]


சின்ன மூக்குத்தி பூ – 13 (2)

“நீ எப்போ அங்க போன அபி?…” என்றார் அமலாவும் எதுவும் கேட்டதாக காட்டிக்கொள்ளாமல் பேச, “இன்னைக்குத்தான்ம்மா. ஆதவ்க்கு ஆஃப் டே தான். அதான் கூட்டிட்டு வந்துட்டேன்…” “சங்கர் வரலையா?…” “அவருக்கு நான் வந்ததே தெரியாது. போன் பண்ணி சொல்லனும். அவர் என்ன சொல்ல போறார்ம்மா?…” “இது தப்பு அபி. சங்கருக்கு சொல்லாம வரது என்ன பழக்கம்?…” என கண்டிப்புடன் கேட்க, “ம்மா…” என்றாள் இறங்கிவிட்ட குரலில். அவர் அப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. திடீரென்று இப்படி பேசி […]