Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

En Kaathal Kanaa

Aruna Kathirs en kaddhal kanaa 13

என் காதல் கனா 13 சுஜினிக்கு அன்று விவேக்கின் கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு உணவகத்தினுள் மீண்டும்  நுழையும் போது, வார இறுதியின் பரபரப்புக்கு மத்தியிலும், அவ்வப்போது வந்து சென்ற சதீஷின் உருவத்தை நினைத்து சிரிப்பு எழுந்தது. “மாஞ்சு மாஞ்சு ஒருத்தன் பேச ட்ரை பண்ணறான்…அவனை பத்தி நினைக்காம, பத்தடி தூரத்தில நின்னு ஒன்னு ரெண்டு தடவை திரும்பி பார்த்தவனை இவ்வளோ தூரம் நினைச்சுப்பாக்கற சுஜி…. இதெல்லாம் நியாயமா? அதுலையும் உன் நினைப்பெல்லாம் கொஞ்சம் கூட உராங்குட்டானுக்கு […]


Aruna Kathirs en kaadhal kanaa 12

என் காதல் கனா 12 சதீஷிடம் கேட்க நிறைய விஷயங்கள் இருப்பினும், “தூங்கப் போகிறேன்”என்று விடைபெற்றுச் சென்றவனை ஏதும் செய்ய இயலாமல் தன்  அறைக்குள் முடங்கிய விவேக்கிற்கு மனம் அமைதியாகவே இல்லை. சுஜினியின் மேல் தான் காட்டும் ஆர்வம் அவனுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்த போதிலும், அதே ஈடுபாடு சதீஷிற்கும் இருக்குமோ என்ற சந்தேகத்தை விவேக்கால் மறக்க முடியவில்லை. “ஒருவேளை சதீஷிற்கு சுஜி மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்குமோ….இது எப்படி கரெக்டாகும்? அதுலையும் அவன் ப்ரேக்கப் […]


Aruna Kathir en kaadhal kanaa 11

என் காதல் கனா 11 சதீஷ், விவேக் இருவருமே அமைதியான மனநிலையுடன் மீத பயணத்தைத் தொடர்ந்தனர். கல்லூரி டார்ம் அறைக்கு நுழைந்ததும் அவரவர் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டனர். டார்மிட்டரியில் சதீஷிற்கும் விவேக்கிற்கும் வேறு வேறு அறைகள் கொடுக்கப்பட்டிருந்தன. முதலில் கொஞ்சம் அசெளகரியமாக இருந்த போதிலும், உறங்கும் நேரம் தவிர இருவரும் ஒன்றாகவே இருந்த காரணத்தினால் இந்த சிறு அசெளகரியம் பழகிப் போயிற்று. ஆனால் இன்று, சதீஷிற்கு தனியறை இருந்ததை எண்ணி பெருமூச்சு விட்டான். தன் உணர்வுகளை […]


Aruna Kathirs en kaadhal kana 10

என் காதல் கனா 10 தோழிகளுடன் அரட்டையை முடித்துக் கொண்டு விடுதி அறைக்குத் திரும்பிய சுஜினி, வேகமாக தயாராகி “சிம்பிளி ஏஸ்யா” நோக்கி நடந்தாள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உணவகத்தில் கணிசமான கூட்டம் எதிர்பார்க்கப்படும். உணவகத்தை நடத்தும் வில்கின்சன் தம்பதியினருக்கு சுறுசுறுப்பாக தன் வேலையை செய்யும், அடுத்தவர் விஷயங்களில் குறுக்கிடாத பாங்கு கொண்ட “சூ”வை மிகவும் பிடித்திருந்தது. சுஜினி என்ற பெயர் அவர்களுக்கு அழைக்க கடினமாக இருந்ததால் சுஜினியை சுருக்கி “சூ”ஆக்கியிருந்தனர் மார்க் வில்கின்சன்னும், அவரது மனைவி […]


Aruna Kathirs en kaadhal kana 9

என் காதல் கனா 9 சுஜினி அமெரிக்கா வந்து இன்றுடன் ஒருமாத காலம் காற்றில் கரைந்திருந்தது. முதல் இரண்டு நாட்களை தோழி சரண்யாவுடன் கழித்தாள். இரண்டாம் நாள் மாலையே சுஜினிக்கு உரிய விடுதி அறை கொடுக்கப்பட்டுவிட்டது. தன் உடைமைகளுடன் டார்மிடரி அறையில் குடியேறினாள். அறை சிறியதாகவே இருந்தது. சுஜினியின் நல்ல காலமோ என்னவோ, சிறிய அறையாக இருப்பினும் தனி அறை கிடைத்தது வசதி என்றே நினைத்தாள். சுஜினியின் அதிர்ஷ்டம் அத்துடன் நின்றுவிடவில்லை. ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த வித்யா ரெட்டியை […]


Aruna Kathirs en kaadhal kanaa 7

என் காதல் கனா 7 அமெரிக்கா. அந்த பெரிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆர்கன் மாகாணத்தில் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் தரையிரங்கிய போது அன்றைய தின நள்ளிரவு மணி ஒன்று முப்பது என காட்டியது. சில்லென்று முகத்தில் மோதிய பனிக்காற்றும், ஊசி போல் ஊடுருவிச் சென்ற குளிரும் சுஜினிக்கு புதிதாகவும், பரவசமாகவும் இருந்தது. அணிந்திருந்த கரிய நிற லெதர் கோட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். கோட் மூடியிறாத கைவிரல்கள் மெல்லிசாக குளிரில் நடுங்கத் துவங்கியது. குளிரினை விடவும் […]


Aruna Kathirs en kaathal kanaa – 6

என் காதல் கனா 6 இதற்குள் துபாய் விமானத்திற்கான இமிக்ரேஷன் அழைப்பு மீண்டும் ஒரு முறை ஒலிக்க, தன் கைப்பையை சுமந்து கொண்டு, தாயிடம் விடைப் பெற்று நகர்ந்தாள். விவேக் பொதுவாக அனைவரிடமும் விடைபெற்று சுஜினியைத் தொடர்ந்து நடக்கலானான். அவளுக்கு இரண்டு அடி இடைவெளியில் அவளுடன் நடந்த விவேக்கை மறந்தும் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. கவுண்ட்டரின் அருகில் நின்றிருந்த சதீஷின் அருகில் நிற்பதா, அல்லது தனி வரிசையில் நின்றிருந்த சுஜினியின் அருகில் செல்வதா என குழப்பமாக இருந்தது. […]


Aruna Kathirs என் காதல் கனா 5

என் காதல் கனா 5 ஒரு மாதம் கழித்து, சென்னை விமான நிலையம் அந்த நள்ளிரவு நேரத்திலும் பரபரப்புடன் காட்சியளித்தது. சுஜினி தன் தாய் லக்ஷ்மியுடன் வாடகைக் காரில் இருந்து இரண்டு பெரிய பெட்டிகளை டிராலியில் அடுக்கினாள். இரவு மூன்று மணி விமானத்திற்கு, இரவு பதினொரு மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டிருந்தனர். “இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சே வந்திருக்கலாம்மா…பாரு மணி பதினொன்னு தான் ஆகுது.” என்று தாயிடம் கூறினாள் சுஜினி. லக்ஷ்மிக்கு விமான நிலையத்திற்கு வருவது […]


Aruna Kathirs என் காதல் கனா 4

என் காதல் கனா 4 விவேக் விவேக் கடலூரைச் சேர்ந்தவன். பதினொன்றாவது படிக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். இறந்துவிட்டார் என்றால் சாதாரணமாக போகவில்லை. சொத்து பத்து என சல்லிக்காசு விட்டுப் போகாவிடினும், தனக்குப் பின் பேர் சொல்ல ஐந்து பிள்ளைகளையும், இரண்டு மனைவிகளையும் விட்டுச் சென்றிருந்தார். “அதெப்படி இரண்டு மனைவி?” என ஆச்சர்யப்படாதீர்கள். விவேக்கின் அப்பா இறந்த போது தான், இன்னொரு குடும்பம் இருக்கும் விஷயமே இரு குடும்பத்திற்கும் தெரியவந்தது. அவ்வளவு சாமர்த்தியமாக, ஒரு குடும்பத்தை கடலூரிலும், […]


என் காதல் கனா 3

என் காதல் கனா 3 சதீஷ் சதீஷ் தன் கரிய நிற பல்சரை சைட் ஸ்டாண்ட் இட்டு அந்த காம்பவுண்டின் உள்ளே நிறுத்தினான். தலையில் இருந்து ஹெல்மெட்டை கழற்றியபடிக்கே, முதல் மாடி நோக்கி படிகளில் தாவி ஏறியவனை, அபார்ட்மெண்டின் நிலைவாசலின் முன்னால், காலையில் அன்னை போட்டிருந்த சிறிய அளவிலான காவி கோலம் வரவேற்றது. “காலையில போட்ட கோலம்… துளி கலையாம அப்படியே இருக்கு…இனி அடுத்த வார வெள்ளிக்கிழமை வரைக்கும் இதே கோலம் தான்….” என மனதிற்குள் முனுமுனுத்தவண்ணம் […]